இரத்த ஓட்டத்தைக் கண்டுபிடித்தவர் யார்?

heartrelatedproblems

Research paper No 1947

Written by London swaminathan

Date: 22 June 2015

Uploaded in London at 9-12 காலை

இது என்னப்பா? எப்போது பார்த்தாலும் பழங் கதைகளைப் பேசிக் கொண்டு இருக்கீறீர்கள்?  எதைக் கண்டுபிடித்தாலும் இது எங்கள் இந்து மதத்தில் அன்றே சொல்லி விட்டோம்!! என்று அங்கலாய்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். இப்படி கதைத்துக் கதைத்து என்னதைக் கண்டீர்கள்? உங்கள் இந்து மதம் மொபைல் போனைக் கண்டுபிடித்ததா? இன் டெர் நெட்டைக் கண்டு பிடித்ததா? எங்கே உங்கள் நூல்களில் ஆதாரம் காட்டுங்கள். அட! அது சரி, தொலைந்து போகட்டும்! இனி அடுத்த 25 ஆண்டுகளில் என்ன நடக்கப் போகிறது என்பதையாவது சொல்லித் தொலையுங்களேன் – என்று உங்களில் பலர் நினைக்கலாம். இந்துக்களின் எதிர் காலக் கண்டு பிடிப்புகள் என்ற தலைப்பில் நான் ஒரு வருடத்துக்கு முன்பாகவே ஆங்கிலத்தில் 2 கட்டுரைகளை எழுதிவிட்டேன். படியுங்கள். நிற்க.

இரத்த ஓட்டத்தைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி (கி.பி 1578- 1657) என்று நாம் எல்லோரும் பள்ளிக்கூடத்தில் படித்தோம். அது தவறு. இரத்த ஓட்டம், இருதயத்தின் பணி ஆகியவற்றைக் கண்டு பிடித்தது இந்தியர்களே என்பது இப்போதைய மொழி ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

சம்ஸ்கிருதத்தில் இதயத்தின் பெயர் ஹ்ருதயம். இதிலிருந்து “ஹார்ட்” என்ற ஆங்கிலச் சொல்லும் இருதயம் என்ற தமிழ்ச் சொல்லும் பிறந்தன. இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளும், ஐரோப்பாவிலுள்ள எல்லா பெரிய மொழிகளும் ஹ்ருதயம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் வடிவங்களையே பயன்படுத்துகின்றன. வேறு சொல் கிடையாது!!

ஹ்ரு — என்றால் உள்ளே இழு, த- என்றால் வெளியே கொடு, ய – என்றால் சுற்று. ஆக இந்துக்களுக்கு இந்த உடல் உறுப்பு இவ்வாறு ரத்தத்தை உள்ளே இழுத்து வெளியேற்றி சுழலச் செய்கிறது என்பது தெரிந்தே இப்படிப் பெயர் வைத்தனர். ஏனெனில் சம்ஸ்கிருதம் விஞ்ஞான ரீதியில் செம்மை செய்யப்பட்ட – பண்பட்ட மொழி. ஆகையால் எல்லா சொற்களும் 2700 ஆண்டுகளுக்கு முன், பாணீனி என்னும் மாமேதை பட்டியலிட்ட 2000 வேர்ச் சொற்களில் இருந்தே பிறக்கும். அகராதியே இல்லாமல் ஓரளவு அர்த்தத்தைப் புரிந்து கொண்டு விடலாம்.. எடுத்துக் காட்டாக மரங்களுக்குப் பல பெயர்கள் உண்டு. அதில் ஒரு பெயர் பாதபா: — அதாவது கால்களின் வழியே நீரைக் குடிக்கும் – என்பது பொருள். மரங்கள் கால்களின் / வேர்களின் – வழியே தண்ணீரை உறிஞ்சுகிறதல்லவா! ஆகவே இருதயம் என்பதற்குத் திடீரென்று புதுப் பொருள் கண்டு பிடித்துவிட்டதாக யாரும் குற்றம் சொல்ல முடியாது.சம்ஸ்கிருதத்தில் எல்லாச் சொற்களும் 2000 வினைச் சொற்களில் இருந்தே பிறந்தன.

இந்த விஞ்ஞான அணுகுமுறை அதர்வண வேதத்திலேயே இருக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முன் உருவானதாகக் கருதப்படும் தொல்காப்பியத்தில் உயிரினங்களை ஆறுவகையாகப் பிரித்துப் பாடியிருக்கிறார். ஆனால் அதற்கு குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தவரங்களைப் பலவகையாகப் பிரித்துப் பேசும் பாடலும் நோய்களைப் பலவகைப் படுத்தும் பாடல்களும் உள. இதே போல பிராணிகளையும் ஜராயுஜ, அண்டஜ, ஸ்வேதஜ, உத்பீஜ என்று நால்வகையாகப் பிரித்தனர். இன்று இவை எல்லாம் பயனற்றதாகத் தோன்றலாம் ஆயினும் அவர்களுடைய அறிவியல் சிந்தனைக்கு இவை எல்லாம் எடுத்துக் காட்டுகள் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை. அவர்கள் தோற்றுவித்த இந்த அறிவியல்- ஆய்வியல் நோக்கு உலகம் முழுதும் பரவி இன்று மேலை நாட்டிற்குக் குடியேறிவிட்டது!!

நான் 45 ஆண்டுகளுக்கு முன் பி.எஸ்சி. பாடனி (தாவரவியல்) வகுப்பில் சேர்ந்தபோது எனக்கு லின்னேயஸ் என்பவர் உருவாக்கிய தாவரப் பகுப்பு முறை கற்றுத் தரப்பட்டது. அதற்கு முன் கிரேக்கர்கள் இத்துறையில் சில ஆராய்ச்சிகளைச் செய்திருந்தனர். அதற்கும் முன்பாக நாம் ஆராய்ச்சி செய்தோம். மாற்றம் என்பது இயற்கை நியதி. உலகில் எல்லாம் மாறிக் கொண்டே இருக்கும். அந்த வகையில் நாம் விதைத்த அறிவியல் வித்து வளர்ந்து பலன் தருகிறது.

பாரத நாடு 700 ஆண்டு முஸ்லீம் ஆட்சியிலும் 300 ஆண்டு கிறிஸ்தவ ஆட்சியிலும் இருந்தபோது (“ஆயிரம் வருஷ அன்பிலா அந்நியர் ஆட்சி”—சுப்ரமண்ய பாரதி) நமது ஆய்வுகள் எல்லாம் முடங்கிப் போயின. நூலகம் எல்லாம் தீக்கிரையாக்கப்பட்டன. அதன் விளைவே வெளிநாட்டினர் நம்மை முந்திச் சென்றமைக்குக் காரணம். ஆனால் அந்த அறிவு மழுங்கி விடவில்லை என்பதற்கு ஒரு சான்று — இன்று உலகம் முழுதும் நம்முடைய டாக்டர்களும் கணித மேதைகளும் கம்ப்யூட்டர் வல்லுநர்களும் வேலை செய்வதாகும்.

 atharva-veda-8

அதர்வண வேத தகவல்கள்!

நான்கு வகையான தாவரங்கள் இருக்கின்றன. அவையாவன: வனஸ்பதி-பெரிய மரங்கள்; வானஸ்பத்ய – சிறிய மரங்கள்; வீருத்த – கொடிகளும் புதர்களும் ஓஷதி- மூலிகைகள்.

மூலிகைகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம் என்று கல்பம் கூறும்:ஆதர்வணீ- சாந்தி மற்றும் பௌஷ்டிக கர்மாக்களில் பயன்படுபவை,  , ஆங்கிரஸி- மயக்கம் கொடுக்கவும், ஆளைக் கொல்லவும் பயன்படும் தாவரங்கள், தைவி –மனிதர்களுக்கு நரை, மூப்பு, மரணம் வராமல் பாதுகாக்கும் மூலிகைகள், மனுஷ்யஜா- நோய் தீர்க்கும் மருந்துகள்.

கோணல் பார்வையும், காமாலைக் கண்களும்,மனத்தில் கருப்பும், மனைவி மீது கணவனுக்கே சந்தேகம் உண்டாக்கும் ஜோடனைகளில் வல்லவர்களுமான வெளிநாட்டுக்காரர்கள் நம்முடைய பங்கு பணியை எல்லாம் மட்டம் தட்டிவிட்டனர்.

அதர்வண வேதம் ஒன்பது வகையாக ஜுரம்—காய்ச்சல் பற்றியும் கூறுகிறது. இப்படி பிரித்துப் பார்த்ததே அவர்கள் இத்துறையில் எவ்வளவு காலம் ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும் என்பதைக் காட்டும்:

ரூர:, சியவ:, நோதன:, த்ருனு:,  சீதா:, பூர்வக்ரத்வாத், அந்யேத்யு, உபவேத்யு, அவ்ரதா: என்பன அவை.

அதர்வனம்

டாக்டர் கடவுள்!

உலகில் வேறு எந்த மத நூலும் கடவுளை டாக்டர் என்று வருணிக்கவில்லை. ஆனால் இந்து மதவேத வேதங்கள் இந்திரன், ருத்ரன், அக்னி முதலிய தெய்வங்களை (பிஷக்), அதாவது மருத்துவன் என்று பாடுகின்றன. அவன் உடல் நோய்க்கு மட்டுமின்றி, பிறவி என்னும் நோய்க்கும் மருந்து ஆனவன்!

அபாலா என்பவளின் மலடித்தனமையைப் போக்கியதாக வேதங்களில் இந்திரன் புகழப்படுகிறான்.

அஸ்வினி தேவனைத் தான் வேதங்கள் மிகவும் புகழ்கின்றன. முதுமையைப் போக்கி இளமை தருபவன், விஸ்பலா என்பவளுக்கு செயற்கைக் கால் தந்ததாக அஸ்வினி தேவர்கள் புகழப்படுகின்றனர்.

மருத்துக்கள் எனப்படும் வாயு தேவனுக்கு மலைகளில் வளரும் அத்தனை மூலிகைகளும் தெரியும் என்றும் வேதங்கள் துதிபாடும்

இவை எல்லாம், அக்காலத்தில்  மக்களின் உடல்நலத்தில் எவ்வளவு அக்கறை இருந்தது என்பதைக் காட்டும். இதே போல சோமரசம் என்பதும் பல நோய்களுக்கு மருந்தாக விளங்கியது. மனோசுத்த சோமயாஜி என்று ஒரு பார்ப்பனனைப் புகழிகிரது பாண்டியர் செப்பேடு. ஆகவே இன்றைய மருத்துவத்தின் தந்தை ஹிப்போக்ரடீஸ் அல்ல, தன்வந்திரியே என்று அடித்துச் சொல்லலாம்.

(மேல் விவரங்களுக்கு இது பற்றிய ஆங்கிலக் கட்டுரையை நாடவும்)