
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 11 November 2018
GMT Time uploaded in London –15-44
Post No. 5652
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
மநு நீதி நூல் – பகுதி 32
பிறப்பு, இறப்பு தீட்டு யார் யாருக்கு? எவ்வளவு காலம்? (Post No.5652)

மானவ தர்ம சாஸ்திரம் என்றும் மநு ஸ்ம்ருதி என்றும் அழைக்கப்படும் மநு நீதி நூலின் ஐந்தாவது அத்தியாயத்தைத் தொடர்ந்து காண்போம். ஸ்லோகம் 57 முதல் 110 வரையுள்ள முக்கிய அம்சங்களை முதலில் எடுத்துரைப்பேன்.
பிறப்பு இறப்பினால் வரக்கூடிய தீட்டின் காலம் என்ன, யாருக்குத் தீட்டு என்பன பற்றி செப்பிய பின், இந்தப் பகுதி அரசன் என்பவனை இறைவனுக்குச் சமமாகக் கூறுகிறது.
என் கருத்துக்கள்
இது ஆரிய திராவிடம் பேசுவோருக்குச் செமை அடி, தொகை அடி ,வகை அடி கொடுக்கும் பகுதி. இந்தியாவில் ஆரியர், திராவிடர் என்று இரு வேறு பிரிவினர் உண்டு என்ற வெள்ளைக்காரன் வாதத்துக்கு ஆப்பு வைக்கும் அருமையான பகுதி.
எப்படி ஆப்பு அவைக்கிறார்?
1.பிறப்பு, இறப்பு தீட்டு, பிண்டக் கிரியைகள், திதி என்பன காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பின்பற்றப்படுகின்றன. புறநானூற்றிலும் பிண்டம் என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல் உண்டு சங்க இலக்கியத்தில் 12 இடங்களில் வருகிறது இது உலகில் வேறு எந்த கலாசாரத்திலும் இல்லாமல் இமயம் முதல் குமரி வரை மட்டுமே காணப்படுவதால் இந்துக்கள் வெளியே இருந்து வந்தனர் என்று சொல்லுவோரின் முகத்தில் கரி பூசப்படுகிறது.
2.பிறப்பு, இறப்பு தீட்டுப் போக குளியல் முறையைக் கூறுவதால் இந்துக்கள் இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்களேயன்றி குளிர்ப் பிரதேச நாடுகளில் இருந்து வரவில்லை என்பது நிரூபணமாகிறது.
3.ஏழு தலை முறை பற்றி மனுவும் சங்க இலக்கியமும் திருக்குறளும் செப்புவது இமயம் முதல் குமரை வரை ஒரே கலாசாரம் எனபதைக் காட்டி, ஆரிய திராவிடம் பேசும் பேய்மானிகளின் வாயில் வாக்கரிசி போடுகிறது.
4.தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் அரசனை இறைவன் என்று போற்றுகின்றனர். மநு சொன்னதையே வள்ளுவனும் பகர்வான். இறை,கோ என்ற தமிழ் சொற்கள் அரசனையும் இறைவனையும் குறிக்கும் கோயில் என்பது கடவுளின் கோயிலையும் மன்னன் அரண்மனையையும் குறிக்கும், மநு, மன்னனை வேத காலக் கடவுளருடன் ஒப்பிடுகிறான். இது சங்க இலக்கியத்திலும் உளது. எகிப்து போன்ற சில கலாசாரங்களில் மன்னனை கடவுள் என்று போற்றியபோதும் தமிழ் ஸம்ஸ்க்ருதத்தில் உள்ளது போல இருவருக்கும் ஒரே சொற் பிரயோகம் இல்லை. தேவ என்பது கடவுளையும், மன்னனையும் குறிக்கும் ஸம்ஸ்க்ருதச் சொல்.
தேவி என்பது மஹாராணியையும் இறைவியையும் குறிக்கும் சொல்.
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப்படும் -குறள் 388
அதிகாரத்தின் பெயர் இறைமாட்சி (மன்னரைப் பற்றியது)
பொருள்
முறையாக ஆண்டு மக்களைக் காப்பாற்றும் ன்னன், மக்களால் இறைவன்/ கடவுள் என்று கருதப்படுவான்
செங்கோண்மை என்னும் அதிகாரத்திலும் மன்னனுக்கு இறை என்றே வள்ளுவன் சொல்லுவான்
- இந்தப் பகுதியில் பிணங்களை எடுத்துச் செல்லும் திசைகள் பற்றி மநு புகல்வதும் தற்கொலை பற்றி சொல்வதும் விநோதமான விஷயங்கள். இது, மநு மிகமிக முற்காலத்தவன் என்பதைக் காட்டும். ஏனெனில் நமக்குத் தெரிந்த வரலாற்றுக் காலத்தில் பிணங்களுக்கான திசை பின்பற்றப்பட்ட செய்திகள் கிடைத்தில.
- எண்.105 முதல் 110 வரையுள்ளஸ்லோகங்கள் அருமையான பொன்மொழிகள் மநுவின் தூய்மைக் கொள்கை இதில் தெரிகிறது. படித்து மகிழ்க.
8.ஸ்லோகம் 75ல் வெளிநாட்டு மரணச் செய்திக்கான தீட்டு பற்றி மொழிவதால். மநு எழுதிய காலத்திலேயே பல ஜாதிக்காரகளும் வெளிநாட்டில் வசித்தது தெரிகிறது
அமங்கலமான விஷயங்கள் பின்பகுதியில் வருவதற்காக பக்கங்களை மாற்றிக் கொடுத்துள்ளேன். படித்து மகிழ்க.










ஐந்தாம் அத்தியாயம் இன்னும் வரும்………………..
TAGS- பிறப்பு- இறப்பு தீட்டு, அரசன் கடவுள், தூய்மை அடையும் முறை
..சுபம்—