
Written by London swaminathan
Date: 9 JUNE 2018
Time uploaded in London – 8-40 am (British Summer Time)
Post No. 5091
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
ஜி.யு. போப் பற்றிய புரளி– கல்லறையில் உபநிஷத் மந்திரம் (Post No.5091)

Picture of G U Pope
பாகிஸ்தானில் லாகூரில் ஒரு கல்லறையில் உபநிஷத் மந்திரம் பொறிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஆங்கிலேயர் கல்லறையில்!
ஆக்ஸ்போர்டில் ஜி.யூ. போப் கல்லறையில் ‘நான் ஒரு தமிழ் மாணவன்’ என்று பொறிக்கப்பட்டுள்ளதாக பல, திராவிடங்கள் எழுதிக்கொண்டே இருக்கும்; ஆனால் அங்கு போய் வந்த தமிழர்கள் எனக்கு போன் செய்து, ‘ஸார் அப்படி அங்கு ஒன்றும் இல்லையே’ என்பர். என் நண்பர்கள் ஆண்டுதோறும் அங்கு சென்று கல்லறைக்கு மாலை போட்டு அஞ்சலி செய்துவருகின்றனர். அவர்களும் பார்த்ததில்லை- நான் ஒரு தமிழ் மாணவன்’ கல்லறைப் பதிவை. நிற்க.
அதே ஆக்ஸ்போர்டு நகரில் இருந்து வந்த மற்றொரு பெரியார் வூல்னர் (A C Woolner). ஜி.யு.போப், தமிழில் இருந்த திருவாசகம், நாலடியார், பல புற நானூற்றுப் பாடல்கள், திருக்குறள் ஆகியவற்றை மொழிபெயர்த்தார். அது போல வூல்நரும் பல ஸம்ஸ்க்ருத நூல்களை மொழி பெயர்த்தார். அவர் ஸம்ஸ்க்ருதம், ப்ராக்ருதம், பாரசீக மொழி, சீன மொழி ஆகியவற்றைக் கற்றவர். பஞ்சாப் (பாகிஸ்தானின் லாகூரில் உளது) பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பணிற்றியவர்.
டாக்டர் ஆல்ப்ரெட் கூப்பர் வூல்னர் 1878 மே 13ம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். 1936ல் இறந்தார். இந்த ஆண்டுகளுக்குள் அவர் அழியாத புகழுடைய பல நூல்களைப் படைத்தார்.
ஆக்ஸ்போர்ட் பலகலைக்கழகத்தில் பாலி, ஸம்ஸ்க்ருத மொழிகளைப் பயின்ற அவருக்கு பல விருதுகள், மான்யங்கள் கிடை த்த பின்னர் லாகூரில் ஓரியண்டல் கல்லூரியில் பிரின்ஸிபாலாக வேலைக்குச் சேர்ந்தார்
33 ஆண்டுகளுக்கு பஞ்சாப் பலகலைக்கழகத் துணைவேந்தராக பணியாற்றினார்.
அவர் எழுதிய ஆங்கில நூல்கள்

Picture of A C Woolner
1.ப்ராக்ருத மொழிக்கு ஓர் அறிமுகம்
2.அசோகர் கல்வெட்டு மொழி
3.பாஷா-வின் 13 ஸம்ஸ்க்ருத நாடகங்களின் மொழிபெயர்ப்பு
4.குண்டமாலா (மல்லிகை மலர் மாலை) மொழிபெயர்ப்பு
5.இந்திய மாணவர்களுக்கு மொழிநூல் கையேடு
இது தவிர ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகள்!
நல்ல ஆஜானு பாஹூவான ஸரீரம் படைத்த வூல்நர் மிகவும் உயரமானர்; புகழிலும் உயர்ந்தவர். அடக்கமானவர். அவரது சிலைகள் லாகூரில் பல்கலைக் கழக வளாகம், அதன் முன்னுள்ள சாலைகளில் இடம்பெற்றுள்ளது.
அவர் மால்டா ஜூரம் எனப்படும் ஒரு வகை பாக்டீரியா தாக்கி இறுதியில் நிமோனியாவால் 1936ல் இறந்தார். அவருடைய கல்லறை லாகூரில் உளது. அதில் பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷத்தின் புகழ் பெற்ற வாக்கியங்கள் தேவ நாகரி லிபியில் பொறிகப்பட்டுள்ளதாக 1940 ஆண்டு வெளியான நினைவு நூல் கட்டுரை ஒன்று விளம்புகிறது:-

அஸதோ மா ஸத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய— என்பதே அந்த மந்திர வாக்கியங்கள்.
இதன் பொருள் என்ன?
மாயத் தோற்றத்தில் இருந்து என்னை உண்மை நிலைக்கு இட்டுச் செல்வாயாக
இருளிலிருந்து ஒளிமயமான பாதைக்கு அழைத்துச் செல்வாயாக
மரணத்திலிருந்து மரணமிலாப் பெருவாழ்வுக்கு கொண்டு போவாயாக
சுருக்கமான பொருள்- வீடு பேற்றினை அருள்வாயாக; அதற்கான பாதையில் செல்ல எனக்கு அருள் புரி; வழி காட்டு

–சுபம், சுபம்-