
Written by London Swaminathan
Date: 7 October 2016
Time uploaded in London: 11-12 AM
Post No.3226
Pictures are taken from various sources; thanks.

கால்டுவெல் பாதிரியார் (BISHOP CALDWELL) அதிபயங்கர உளறல் பேர்வழி. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற அவருடைய நூலுக்கு எவ்வளவு பாராட்டுதல்கள் கிடைத்ததோ அவ்வளவுக்கு மறுப்புரைகளும் எழுந்தன. ஆனால் இரண்டையும் படித்தறியாத அசடுகள் இன்று வரை அவரைப் புகழ்ந்துகொண்டு நிற்கும்.
கால்டுவெல்லின் மிகப்பெரிய உளறல் சம்ஸ்கிருதம் பற்றியதாகும். அவரது நூலை வெளியிட்ட எல்லோரும் அடிக்குறிப்பில் மன்னிப்புக் கேட்கும் தொனியில் “இது கால்டுவெல்,அறியாமையின் காரணமாக எழுதியது” என்று எழுதிச் சேர்த்துள்ளனர். சம்ஸ்கிருதத்தில் இலக்கியம் எதுவும் இல்லை என்று அந்த அசடு உளறி வைத்தது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். பிஷப் கால்டுவெல்லின் அறியாமைக்கு வேறு உதாரணங்களும் தருவேன். சாணார் ஜாதியினர் பேயை வணங்கு கின்றனர் என்றும் தமிழர்கள் அனைவரும் பேயை வனங்குவோர் என்றும் ஆரியர் னைவரும் தெய்வங்களை வணங்குவோர் என்றும் அது எழுதிவைத்துள்ளது.
சம்ஸ்கிருதத்திலுள்ள எல்லா கடவுள் பெயர்களும் தெய்வத்தைக் குறிக்கும் பெயர்கள் என்றும் தமிழில் உள்ள எல்லா தெய்வப் பெய ர்களும் “பேய்” அடிப்படையில் அமைந்தவை என்றும் இதை திருநெல்வேலி சாணார் வழிபாட்டின் மூலம் கண்டுபிடித்ததாகவும் கால்டுவெல் பாதிரியார் ‘திருவாய் மலர்ந்து அருளி’ இருக்கிறார். இதை அவர் எழுதிய சில வருடங்களுக்குள்ளேயே ஈ. கோவர் (E Gower) என்ற வெள்ளைக்காரர் அவருக்கு சம்மட்டி அடி கொடுத்துவிட்டார். தென்னிந்திய நாட்டுப்புற பாடல்களை எல்லாம் தொகுத்து 1871 ஆம் ஆண்டில் கோவர் வெளியிட்ட நூலின் முன்னுரையில் செமை அடி — சொல்லடிதான் — கல்லடி அல்ல — கொடுத்து இருக்கிறார்.
பேய் என்பது “பே, பிணம்” என்பதுடன் தொடர்புடைய சொல் என்றும் ஆனால் ஆரியர்களின் “தெய்வ என்பது தேவ” என்ற சொல்லுடன் தொடர்புடையதென்றும் கால்டுவெல் பிதற்றினார்.
கோவர் மறுப்புரையில் பேய் என்பது “பை—சாச” என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து பிறந்தது என்றும் பெண், பெண்ணு என்பது ஒளியைக் குறிக்கும் என்றும் எழுதினார். கோண்ட் இனப் பழங்குடியினர் “பூரா பெண்ணு, பெல்லா பெண்ணு, தாரி பெண்ணூ” என்றெல்லாம் கடவுள் பெயர்கள் வைத்துள்ளனர். அதில் பெண்னு என்பது ஒளி என்பதாகும் பெல்லா பெண்ணு என்பது சூரியனைக் குறிக்கும் என்றும் கோவர் எழுதினார்.
அத்தோடு நில்லாமல் கால்டுவெல் தூய தமிழ்ச் சொல் என்று கொடுத்துள்ள பட்டீயல் முழுதும் வடமொழிப் பெயர்கள் என்பதை வேறு ஒரு வெள்ளைக்காரர் மறுத்து எழுதியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேவன் DEVA (கடவுள்) என்பதும் டீமன் DEMON (பேய்) என்பதும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய சொல்லே. ஒன்றிற்குப் பதிலாக மற்றொன்றைப் பயன்படுத்தலாம் (INTER CHANGEABLE); இரண்டும் ஒளி எனப் பொருள்படும் என்பதும் அவரது துணிபு.
“பா” என்ற சம்ஸ்கிருதச் சொல் ஒளியைக் குறிக்கும்.

எனது கருத்து
நான் கோண்டு இன ஆராய்ச்சியில் இறங்கியிருக்கும் தருணத்தில் எனக்கு கோவரின் 1871ஆம் ஆண்டு புத்தகம் கிடைத்தது வியப்பை உண்டாக்கியது. ஏனெனில் எனது கருத்தை வலுப்படுத்துல் சில வாக்கியங்களை அதில் கண்டேன். அவர் சம்ஸ்கிருதத்திலிருந்து இவை தமிழுக்கு வந்ததா? அல்லது தமிழில் இருந்து சம்ஸ்கிருதத்துக்குப் போனதா என்று தெரியாது என்று எழுதியுள்ளார்.
நான் சிவனின் உடுக்கை ஒலியின் ஒரு புறத்திலிருந்து சம்ஸ்கிருதமும் மற்றொரு புறத்திலிருந்து தமிழும் வந்ததாகவும் அதனால்தான் வட இமய வெள்ளிப் பனித் தலையனான அகத்தியனை தமிழுக்கு இலக்கணம் எழுத சிவன் அனுப்பினான் என்றும் எழுதினேன். அது மட்டுமல்ல; தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் மூல மொழி ஒன்று உண்டென்றும் உ லகிலுள்ள பழைய மொழிச் சொற்கள் அனைத்தும் இந்தியர்கள் கற்பித்ததே என்றும் எனது ஆராய்ச்சி முடிபை எழுதினேன். இதனால்தான் ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள் இருக்கிறது என்றும் எழுதினேன். அது எல்லாம் இப்பொழுது வலுப்பட்டு வருகிறது.
இதை எல்லாம் ஆராயும் போது இன்னொரு பேருண்மை வெளிச்சத்துக்கு வந்தது. எகிபது நாட்டின்ன பிரமிடுகளில் திருமூலர் கருத்துகள் இருப்பதை ஒரு கட்டுரையில் தந்தேன். வேத மந்திரங்களின் மொழி பெயர்ப்பு இருப்பதி ந்னும் சில கட்டுரைகளில் ஹந்தேன். எகிப்திய பிரமிடு கட்டினோர் சூத்ர (நூல் பிடித்தல்) முறை கொண்டு கோணததை அலந்தௌ வடமொழியில் இருப்பதை எல்லாம் ஆதாரம் காட்டினேன். கோவர் கட்டுரையை படித்துவிட்டு கடவுள் பெயர் கலைக் களஞ்சியத்தைத் திரந்து பார்த்தால் அங்கேயும் பெண்ணு என்ற கடவுள் ஒளிக்கடவுள்– சூரியனைக் குறிப்பது- என்று என்சைக்ளோபீடியா சொல்கிறது.
பேனு
எகிப்தியரின் சூரிய கடவுள்.— கி.மு. 2500 வாக்கில் எகிப்திய பிரமிடுகளில் காணப்படும் பெயர். — பறவை வடிவத்தில் குறிக்கப்படுகிறது.— ஹீலியோபாலிஸில் (Heliopolis) ஆதம் ATUM என்ற சூரியக்கடவுளுடன் தொடர்பு படுத்தபடும் சொல். ஆதிகா ல கடலில் இருந்து படைக்கப்பட்டது. மறுபிறப்பையும் பரலோக வாழ்வவையும் குறிப்பது. ஒருவேளை தீயிலிருந்து மீண்டும் உயிர்த்தெ ழும் பீனிக்ஸ் PHOENIX என்ற பறவைக் கதை இதிலிருந்துதான் உருவானது போலும். ஏனெனில் முதலில் வாலாட்டிக் குருவிப் பறவையாகவும், பின்னர் நாரையாகவும் காட்டப்படுகிறது. UPPER EGYPT “மேல் எகிப்து” மன்னர் கிரீடத்தில் இரண்டு இறக்கைகளாகக் காட்டப்படுகிறது.

பூரா பெண்ணு
இது ஒரிஸ்ஸா மாநிலத்தில் கோண்ட் இன மக்களின் ஒளிக்கடவுள். பூமிக்கடவுளான தாரிப் (தரை = தரணி == தாரி=Terra = Terrain) பெண்ணையும் பல கடவுளரையும் உண்டாக்கியது. மரியா என்னும் சடங்கில் நரபலி கொடுக்கப்பட்ட தெய்வம் இது.
இவை இரண்டும் கடவுள் பெயர் என்சைக்ளோபீடியாவிலிருந்து (Encyclopaedia) எடுக்கப்பட்டவை. எல்லா விஷயங்களும் வேதத்திலும் தமி ழிலிலும் உள்ள சொற்கள்.
வேதத்தில் ‘சுபர்ண’ SUPARNA என்ற பொன்னிறப் பறவையை சூரியனுடன் ஒப்பிடுவர். அதுவே பிற்காலத்தில் விஷ்ணுவின் வாஹனம் ஆகியது.
பெண் என்பவளை “மனைக்கு விளக்கு” என்று புறநானூறு ம் மனு தர்ம சாத்திரமும் போற்றுகின்றன. பெண் என்பதை விளக்கு, ஒளி என்று இந்துமதமும் பாராட் டுகிறது. “பெண்”ணு என்பது பேணுதல் என்ற சொல்லிலிருந்து வந்ததாகவும் கருதலாம்.
எது எப்படியாகிலும் பெண்ணு என்பது ஒளி என்பது கோண்ட் இனத்திலும் எகிப்திலும் இருக்கி ற து. மரியா என்ற சொல் ம்ருத்=மரணம் MORTAL என்பதுடன் தொடர்புடையதால் நரபலிக்கு கோண்ட் இன மக்கள் ‘மரியா’ சடங்கு என்பர். அவர்களை திராவிட இனம் என்று வெள்ளைக்கார எழுதுவர். சிந்து சமவெளி, எகிப்து நரபலி முதலியன குறித்து நான் எழுதிய விஷ்யங்களையும் படித்து ஒப்பிடுக.
கால்டுவெல் எழுதிய தூய தமிழ் சொற்கள் எப்படி வடமொழிச் சொறள் என்று நிரூபிக்கப்பட்டதோ அதே போல பைபிளிலுள்ள கபி, துகி என்பன தமிழ்ச் சொற்கள் என்று கென்னடி கூறியது தவறு என்று நானும் நிரூபித்து கட்டுரை எழுதினேன். நீர் என்ற ரிக்வேதச் சொல் கிரேக்கத்திலும் இருப்பதால் அது தமிழ் சொல் என்று சுநீத் குமார் சாட்டர்ஜி எழுதியது தவறு என்றும் ஒரு கட்டுரையில் காட்டினேன்.
இப்பொழுது எல்லாவற் றை யும் மறந்துவிட்டு உலக மொழிகள் அனைத்தும், தமிழ்–சம்ஸ்கிருத மூல மொழியில் இருந்து வந்தன என்று பார்த்தால் அதுவே சரி என்று தோன்றுகிறது. கி.மு 2500ஆம் ஆண்டிலேயே எகிப்திய பிரமிடுகளில் “பெண்ணு” இருப்பதால் என் கருத்து மேலும் வலுப்படுகிறது.
–subham—
You must be logged in to post a comment.