
Written by London swaminathan
Date: 21 March 2017
Time uploaded in London:- 9-43 am
Post No. 3743
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
எகிப்து நாட்டின் வரலாற்றை 5000 ஆண்டுகளுக்கு முன்னரே துவக்கி, அதை ஆஹா ஓஹோ என்று வெளிநாட்டினர் புகழ்கின்றனர். எகிப்து சுற்றுலாத் தொழில் (Tourism Industry) உலகில் மிகப்பெரிய சுற்றுலாத் தொழில். அங்குள்ள பிரமிடுகள் (Pyramids) உலகின் ஏழு அதிசயங்களில் எஞ்சி நிற்கும் ஒரே அதிசயம். ஆயினும் எகிப்து நாட்டின் வரலாறோ சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன் மனீதோ (305-285 BCE) எழுதிய குறிப்புகளில் இருந்து கிடைத்ததுதான். அதுவும் முழுதும் கிடைக்காததால் ‘அவர் சொன்னார், இவர் சொன்னார்’ என்றெல்லாம் கிடைத்தனவற்றை ஒட்டுப்போட்டு, தட்டிக்கொட்டி ஆயிரக்கணக்கில் புத்தகம் எழுதி, அதை மில்லியன் கணக்கில் விற்பனை செய்து, பில்லியன் கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர் மேலை நாட்டினர்.
ஆனால் கரிகால் சோழன் 83 ஆண்டுகள் ஆண்ட பாடலை மு. ராகவ அய்யாங்கார் எடுத்துக் காட்டியும் நாம் இன்னும் பழைய வெள்ளை க்காரன் எழுதிய அசோகன் காலம் முதலான வரலாற்றைப் படித்துக் கொண்டிருக்கிறோம்!
எகிப்து நாட்டு அரசர்களின் ஆட்சிக் காலத்தைப் பாருங்கள்!

Picture of King Narmer
இரண்டாம் பெபை (Pepi II ) 94 ஆண்டுகள் ஆண்டார்
இரண்டாம் ராமசெஸ் ( Ramsess I I ரமேசன்) 64 ஆண்டுகள் ஆண்டார்
நர்மெர் (Narmer நர மேரு) 64 ஆண்டுகள் ஆண்டார்
ஆஹா (AHA ஹோர்/HOR ஹரன்) 64 ஆண்டுகள் ஆண்டார்!
இவ்வாறு பல அரசர்களுக்கு 60 ஆண்டுகளுக்கு அல்லது 50 ஆண்டுகளுக்கு மேலாக தாராளமாக வாரி வழங்கியுள்ளனர்! அப்படியும் கிறிஸ்துவுக்கு முந்தைய 3000 ஆண்டுகளுக்கு மன்னர் பெயர்கள் கிடைக்கவில்லை. வம்சாவளிகளின் (1 to 30 Dynasties) ஆட்சிக்கு இடைப்பட்ட ( INTERMEDIATE PERIOD குழப்ப) காலம் என்று நிறைய ஆண்டுகளை ஒதுக்கி ஒரு வாராகத் தட்டிக்கொட்டி, பூசி மெழுகி, கட்டி முடித்து, ஒரு “முழு” வரலாற்றைத் தருகின்றனர்!!!
யாரோ ஒருவர் நீண்ட காலம் ஆண்டார் என்றால் எல்லோரும் ஒப்புகொள்வர். ஏராளமான மன்னர்கள் இப்படி ஆட்சி செய்ததாகச் சொன்னால் நம்ப முடியுமா?
கரிகால் சோழன் 83 ஆண்டுகள் ஆண்டானா?
இதை இப்பொழுது இந்தியாவுடன் ஒப்பிடுவோம். கல்யாண சோழன் 63 ஆண்டு ஆட்சி செய்ததாகவும் கரிகால் சோழன் 83 ஆண்டு ஆட்சி செய்ததாகவும் நாம் அறிகிறோம். ஆனால் இவை எல்லாம் இன்று வரை சரித்திரப் புத்தகத்தில் இடம்பெறவும் இல்லை, மூன்று கரிகால் சோழ மன்னர்கள் பற்றி முறையான ஆராய்ச்சியும் நடை பெறவில்லை. பதிற்றுபத்து என்னும் சங்க நூலில் சேர மன்னர்களின் காலம் கொடுக்கப்பட்டுள்ளது
((என்னுடைய பழைய கட்டுரையில் முழு விவரம் காண்க; பழைய கட்டுரையின் தலைப்பு– வெளியிடப்பட்ட தேதி :–
நீண்ட காலம் ஆண்ட மன்னன் கரிகாலன்? கட்டுரையாளர் லண்டன் சுவாமினாதன்; ஆராய்ச்சிக் கட்டுரை எண் – 1592; தேதி- 21 ஜனவரி 2015))
Longest Ruling Indian Kings! Post No: 1593: Dated 21 January 2015

Picture of King Ramsess
எகிப்துக்கு ஒரு நீதி! இந்தியாவுக்கு அநீதி!!
எகிப்திய மன்னர்களுக்கும் சுமேரிய மன்னர்களுக்கும் அதிக காலம் ஒதுக்கிவிட்டு இந்திய மன்னர்களுக்கு மட்டும் சராசரி ஆட்சிக் காலம் 18 அல்லது 20 ஆண்டுகள்தான் என்று கணக்கிட்டுள்ளனர். அப்படியும்கூட நந்தர்கள், மௌர் யர்களுக்கு முந்தைய மன்னர்களின் பெயர்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை. ஆகையால் நமது வரலாற்றுப் புத்தகங்களை விரைவில் முழு அளவுக்குத் திருத்தி எழுதவேண்டும்
நமது ராமாயண, மஹாபாரத இதிஹாசங்களிலும் புராணங்களிலும் அராஜக காலம் பற்றி — ராஜா இல்லாத காலம் KINGLESS PERIODS – பற்றிய ஸ்லோகங்கள் நிறைய உள்ளன. இது பயங்கரமானது, கொடூரமானது என்று வருணித்துள்ளனர். முன்னர் இப்படி குழப்ப காலங்கள் இருந்ததால்தான் இது பற்றி இவ்வளவு எச்சரிக்கை.– ஆனால் இது பற்றி நமது வரலாற்று புத்தகங்களில் ஒரு குறிப்பும் இல்லை. எகிப்தில் மட்டும் சேர்த்துள்ளனர். இதையும் நாம் கருத்திற்கொண்டு புது வரலாறு எழுத வேண்டும்.
இன்னும் சில இடங்களில் ஒரே நேரத்தில் 2 சேர மன்னர் வம்சங்கள், 5 பாண்டியர்கள், 2 சோழர்கள் என்றும் ஆட்சி செய்துள்ளனர். இதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
இவையும் குப்த மன்னர்களின் ஆட்சிக் காலமும் நம்முடைய மன்னர்களும் 40 முதல் 60 ஆண்டுகள் ஆ ண் டதை உறுதி செய்கின்றன. மேலும் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாரசீகர் படையெடுத்தது முதல் 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் போர் வரை, இந்தியா தொடர்ந்து வெளிநாட்டாரின் தாக்குதலுக்கு உள்ளாகி வந்துள்ளது. கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னர் ஒவ்வொரு மன்னரும் 60 முதல் 80 ஆண்டுகள் வரை ஆட்சி செ ய் துள்ளனர்.
காளிதாசன் எழுதிய ரகு வம்ச காவியத்தில் மன்னர்கள் தாங்களாக ஆட்சியை ஒப்படைத்துவிட்டு வனத்தில் தவம் (வானப் பிரஸ்தம்) செ ய்யச் சென்றதாகவும், புகழ் பெறுவதற்காக மட்டும் போர் செய்ததாகவும் எழுதி இருக்கிறான். அதவது எதிரி நாட்டு அரசனைக் கொல்லாமல் தோற்கடித்துவ்ட்டு அவன் கையிலேயே அரசை ஒப்பைத்துவிட்டு கப்பம் மட்டும் வசூலித்தனர். இதனால் இந்திய மன்னர்கள் மற்ற நாட்டு மன்னர்களைவிட நீண்ட காலம் வசித்தனர்; ஆண்டனர். இதையெல்லாம் கணக்கிற் கொள்வோமானால் கலியுகம் முதலான அரசர்களை கால வரிசைப்படுத்திவிடலாம்.
ஆர்.மார்டன் ஸ்மித் (Dates and Dynasties in earliest India by R Morton Smith) எழுதிய புத்தகத்தில் புராண அரசர்களின் பட்டியலை ஒருவாறு கால வரிசைப்படுத்தியுள்ளார். அவர் நம் மன்னர்களுக்கு கி.மு 1800 முதல் வரிசையாகக் கொடுக்கிறார். ஆனால் இதையே ஒரு மன்னருக்கு 40 ஆண்டு சராசரி ஆட்சி என்று வைத்தால் கி.மு 3600-க்குப் போய்விடும். அராஜக – அரசன் இல்லாத — காலத்துக்குக் கொஞ்சம் ஒதுக்கினால், நம் வரலாறு கி.மு 4000 க்குப் போய்விடும்.
எல்லாப் பல்கலை,க் கழகங்களும் இந்த கால ஆராய்ச்சிக்கு– வரலாற்று ஆராய்ச்சிக்குத் தனித் துறைகளை ஏற்படுத்த வேண்டும். கல் ஹணர் என்பவர் எழுதிய ராஜத்தரங்கிணி என்ற நூல்தான் இந்தியாவின் முதல் வரலாற்று நூல் என்று வெள்ளைக்காரகள் கதைத்தனர். அவர் கலியுகம் துவக்கம் கி.மு.2600 என்று காட்டி புதிர் போடுகிறார். இவையெல்லா வற்றையும் தீர ஆராய்தல் வேண்டும்.

King Pepi
ராமாயணத்திலும் மஹாபரதத்திலும் பரசுராமர் பங்கு பணி பற்றி வருகிறதே! இது எப்படி முடியும்? பல அகத்தியர்கள், பல வசிட்டர்கள் இருந்தது போல பல பரசுராமர்கள் இருந்தனரா என்றும் ஆராய்தல் வேண்டும்.
எகிப்து நாட்டில் ராமசெஸ் (ராம சேஷன் அல்லது ரமேசன்) என்ற பெயரில் மட்டும் குறைந்தது பதினோரு பெயர்கள்.
ராம்செஸ் என்ற பெயரில் 11 மன்னர்கள் இருந்தது போல இந்தியாவில் ஏராளமான விக்ரமாதித்தன்கள் இருந்தனர். அவர்களைப் பிரித்து ஆராய்ந்தால் காளிதாசன் போன்றோரின் காலக் குழப்பம் அகலும்.
வரலாற்றில் ஏராளமான புதிர்கள்
இந்திய உள்ளன. உலகில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய சரித்திரத்தைப் படிக்கும் ஒரே இனம் இந்திய இனம் மட்டும்தான். உலகில் மற்ற எல்லா நாடுகளும் அதனதன் வரலாற்றை அழகாக மாற்றி எழுதிப் பெருமை பேசுகின்றனர். ஆனால் வெள்ளைக்காரர் எழுதிய சரித்திரத்தை இன்று வரை படிக்கும் முட்டாள்கள் இந்தியர்கள் மட்டுமே.
மாயன் நாகரீகம் 5000 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது என்று எழுதி எல்லா மன்னர் பெயர்களையும் வரிசைக் கிரமமாகப் போட்டு புத்தகம் வந்து விட்டது. இதுபோல எகிப்திய, சுமேரிய, பாபிலோனிய, சீன நாகரீகங்களில் கூட கி.மு.2000த்தில் ஆண்டவர் யார், கி.மு. 3000ல் ஆண்டவர் யார் என்றெல்லாம் புத்தகம் எழுதி உலகமே படித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்திய சரித்திரம் மட்டும் புத்தர் கால (சுமார் கி.மு.600) மன்னர் முதல்தான் துவங்குகிறது. அதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி, அதற்கு முன்னர் சரஸ்வதி சமவெளி நாகரீகத்தில் ஆண்டவர்கள் யார்? 2000 ஆண்டுகளுக்கு இந்தியாவில் மன்னரே இல்லையா?
இருந்தார்கள்!! வெள்ளைக்காரர்கள் எழுதாததால் நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை!!!!

உண்மையில் உலகில் முதல் முதலில் சரித்திரத்தை எழுதியவர்களே இந்துக்கள்தான். புராணங்களில் 5 பகுதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். அதில் ஒரு பகுதி மன்னர் வம்சாவளி. இதில் தெளிவாக மன்னர் வரிசை கொடுக்கப்பட்டுள்ளது. 2300 ஆண்ட்களுக்கு முன் வந்த மெகஸ்தனீஸ் கூட தனக்கு முன் வாழ்ந்த 140-க்கும் மேலான மன்னர்களின் பெயர்களைக் கொண்ட பழமையான நாடு என்று எழுதிவைத்திருக்கிறான். நமது பஞ்சாங்கத்திலும், பல கல்வெட்டுகளிலும் கலியுக ஆண்டு குறிக்கப்பட்டுள் ளது. இதன்படி கி.மு 3102ல் கலியுகம் துவங்கியது. ஆக அத்தனை அரசர் பெயர்களும் வரிசையாக புராணத்தில் உள்ளன. விரைவில் வரலாற்றைப் புதுப்பிப்போம்!
–Subham–
