
Written by London swaminathan
Date: 2 APRIL 2017
Time uploaded in London:- 14-00
Post No. 3781
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
இரண்டாம் ஆர்சினோ ARSINOE II (கி.மு.270)
தந்தை பெயர் முதலாம் டாலமி; தாயின் பெயர் பெர்னிஸ் (BERENICE I ).
இவள் முதலில் அலெக்ஸாண்டரின் வாரிசுகளில் ஒருவரை மணந்தாள்; அவர் பெயர் லிஸிமாகஸ் LYSIMACHUS . அவர் இறந்த பின்னர், டாலமி செரானஸ் PTOLEMY SERANUS என்பவரை மணந்தாள். அவர் அந்தப் பெண்ணின் குழந்தைகளைக் கொலை செய்தார்; ஒரே நாளில் திருமணம் முறிந்தது. எகிப்துக்கு ஓடிவந்து தன்னுடைய சகோதரன் இரண்டாம் டாலமி பிலடெல்பஸை (PTOLEMY II PHILADELPHUS) கல்யாணம் செய்துகொண்டாள்.
மிகவும் புத்திசாலி; அரசாங்கப் பணிகளில் தீவிரப் பங்கேற்றாள்.; உயிர் வாழ்ந்த காலத்திலேயே தெய்வம் ஆக்கப்பட்டாள்.

மூன்றாம் ஆர்சினோARSINOE III (கி.மு.221-205)
கணவரின் பெயர் நாலாம் டாலமி பிலோபேடர் (PTOLEMY IV PHILOPATOR) . அவர் தானே கடவுள் டயோனிஸிஸ் (DIONYSIS) என்று சொன்னதை ஆர்சினோ ஏற்கவில்லை. ஆனால் அவள் மட்டும் தன் கனவில் ஐஸிஸ் (ISIS) தேவதை வருவதாகச் சொன்னாள்!
அர்த்ததமா (ARTA TAMA) (கி.மு.1400-1390)
இவள் ஒரு இந்து அரசனின் புதல்வி. தற்போது துருக்கி- சிரியா என்ற பெயரிலுள்ள துலுக்க நாடுகள் முன்னர் மிட்டன்னி (MITANNI) வம்ச இந்து அரசர்களின் கைகளில் இருந்தது. மன்னர்களின் பெயர்கள் தசரதன், பிரதர்தனன் என்று தூய சம்ஸ்கிருதத்தில் இருந்தன. அவர்கள் செய்த உடன்படிக்கையில் வேத கால தெய்வங்களின் பெயரில் சத்தியம் செய்து இருந்தனர். ஒரு மிட்டனி அரசனின் புதல்விதான் அர்த்ததாமா. அவளுடைய கணவர் பெயர் நாலாவது தட்மோசி (THUTMOSE IV)
பேனர் – இப் (BENER- IB (கி.மு.3100)
ஆஹா (AHA) என்ற மன்னரின் மனைவி. ஒரு பெட்டியில் கிடைத்த தந்தத்தில் இவளது பெயர் இருப்பதால் அந்த மன்னரின் மனைவியாக இருக்கலாம் என்று எகிப்தியவியலாளர் (EGYPTOLOGIST) கருதுவர்.

முதலாவது பெர்னிஸ்(BERENICE I (கி.மு.279)
டாலமி வம்சத்தை ஸ்தாபித்த முதலாம் டாலமியின் மனைவி. (PTOLEMY I SOTER) அவளுடைய மகன் இரண்டாம் டாலமி, தன்னுடைய தாயும் தந்தையும் தெய்வங்கள் என்று கி.மு.239-ல் பிறப்பித்த கனோபஸ் கட்டளையில் (CANOPUS DECREE) அறிவித்தார்.
பெட் ரெஸ்ட் BETREST (கி.மு. 2925)
இவள் மன்னர் சமர கேதுவின் (SEMERKHET) தாய். மன்னர் அனட்ஜெப்பின் (ANEDJIB ஆனந்தஜீவி) மனைவி. 5000 ஆண்டுகளுக்கு முன்னரே மன்னரின் தாயார் பெயரரிக் கூட எழுதிவைத்திருப்பது அதிசயமே. பெண்வழி அரசு — அதாவது மகள் யாரை மனக்கிறாரோ அவரே அரசன் — என்ற முறை இருந்ததை இது காட்டும்.
பிண்ட் ஆனத் BINT- ANATH(கி.மு 1279-1213)
விந்த்யா அனந்த் என்ற இந்த ராணி நீண்ட காலம் அரசாண்ட இரண்டாம் ராமசெஸ்ஸின் (ரமேசன் அல்லது ராம சேஷன் RAMESSES II)முத்த மகள். அபு சிம்பெல் (ABU SIMBEL) கோவிலில் இவள் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. முந்தைய மஹாராணி இறந்தவுடன் இவள் மஹாராணி ஆனார். இவளுடைய அழகிய சமாதி, VALLEY OF THE QUEENS மஹாராணி பள்ளத்தாக்கில் உள்ளது.
புனிபர் BUNEFER (புனிதவதி- கி.மு.2500
மன்னர் ஷெப்சிகாவின் (சிவசிகாமணி SHEPSHEKAF) மனைவி. நாலே ஆண்டுகளில் அந்த மன்னர் இறந்தவுடன், இவளே இறுதிச் சடங்குகளை நடத்தினாள். இது ஒரு அசாதாரணமான நிகழ்வு.

Picture: Valley of the Queens
இந்துக்களைப் போல எகிப்த்திலும் மன்னரின் மகனோ அல்லது நெருங்கிய உறவினரான ஒரு ஆணோதான் இறுதிச் சடங்குகளைச் செய்வர். அப்படியிருக்க இப்பெண்மணி, அந்திமக் கிரியைகளைச் செய்தது, இருவரிடையேயுள்ள நெருக்கத்தைக் காட்டுவதாக எகிப்தியவியலாளர் கருதுவர்.
இதற்கு முந்தைய ராணி! மஹாராணி!! என்ற கட்டுரையையும் படிக்கவும்.
–மேலும் பல மஹாராணிகளைத் தொடர்ந்து காண்போம்.