
Post No.7835
Date uploaded in London – 16 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
சித்தர்கள் என்போர் யார்?
முதலில் இதை புரிந்து கொள்ள சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும்.
சித்தி அடைந்தவர்கள் சித்தர்கள்.
அது என்ன சித்தி?
அஷ்டமா சித்திகள். அதாவது எட்டுவகை அதிசய சக்திகள்.
அணுவாகவும் மாறலாம். மலைபோல எடை கூடலாம். கூடு விட்டு கூடும் பாயலாம்.
இவை எப்படி கிடைக்கும்?
பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி யோக முறைகள் மூலம் கிடைக்கும்.
இது தவிர வேறு சக்திகள் உண்டா ?
அவர்கள் ‘காயகல்பம்’ செய்து நீண்ட காலம் வாழும் முறையைக் கண்டுபிடித்தனர். மூலிகைகளின்
அபூர்வ குணங்களைக் கண்டுபிடித்து அகஸ்தியர், போகர் முதலிய பெயர்களில் மருத்துவ நுல்களைப் படைத்தனர்.
ரசவாதம் செய்து இரும்பு, ஈயம் முதலிய சாதாரண உலோகங்களை தங்கமாக மாற்றினர்.
இவைகளை எதற்காக செய்தனர்?
சமுதாயத்துக்கு உதவ, சீடர்களைக் கவர, அற்புத சக்திகளை பயன்படுத்தினர்
அவர்களின் நோக்கம்தான் என்ன?
இறைவனை, குறிப்பாக சிவபெருமானை அடைந்து முக்தி பெறவேண்டும்.
மண், பெண், பொன் ஆகிய மூன்றும் சிற்றின்பமே தரும். அவைகளை மறந்து பேரின்பம் பெறுவதே குறிக்கோள்.
இதை எப்படிச் சொல்ல முடியும்?
அவர்கள் விட்டுச் சென்ற பாடல்களால் அறிகிறோம். அவர்கள் உட்கார்ந்து நூல்கள் என்று எதுவும் எழுதி அரங்கேற்றவில்லை. அவர்களுடைய சீடர்கள் பிற்காலத்தில் இவைகளை எழுதினார்கள் .
அவர்களின் வாழ்க்கை வரலாறு கிடைக்குமா?
பெரிய புராணத்தை சேக்கிழார் பெருமான் உட்கார்ந்து எழுதியதால் 63 நாயன்மார்கள் சரிதமும் திருவாதவூர்ப் புராணம் முதலியவற்றால் மாணிக்க வாசகர் சரிதத்தையும் நாம் அறிய முடிகிறது. தேவாரம், திருவாசகம் அதற்கு உறுதுணையாக நிற்கிறது. ஆனால் சித்தர் வரலாறுகள் அப்படி முறையாக எழுதப்படவில்லை. தற்காலத்தில் சிலர் செவி வழிச் செய்திகளைப் புஸ்தகமாகப் போட்டுள்ளனர். சித்தர் பாடல்களையும் அச்சேற்றியுள்ளனர்

எவ்வளவு சித்தர்கள் இருந்தனர்?
18 சித்தர்களும் அவர்கள் சமாதி அடைந்த இடங்களும் அதன் அருகில் எழுந்த புகழ் பெற்ற கோவில்களையும் நாம் அறிவோம். ஆனால் நுற்றுக்கணக்கான சித்தர்கள் உளர். அதை அந்தந்த ஊர் மக்களே அறிவர். ‘தருமமிகு சென்னை’ என்று ராமலிங்க சுவாமிகளால் போற்றப்பட்ட சென்னையைச் சுற்றிலும் நூற்றுக்கும் மேலான சித்தர் சமாதிகள் இருக்கின்றன.
சித்தர்கள் எப்போது வாழ்ந்தனர்?
பொதுவாக பக்தி இலக்கிய காலம் முடியும் தருவாயில் , அதாவது எட்டு, ஒன்பது நுற்றாண்டுகளுக்குப் பின்னரே இவர்கள் வாழ்ந்தனர்.
இவர்களுடைய பாடல்களின் சிறப்பு என்னவென்றால் பாமர மனிதனின் பேச்சுத் தமிழில் இவர்கள் பாடினர் . ஆயினும் யோகம், தியானம், குண்டலினி, சமாதி ஆகியன பற்றி அறிந்தவர்களே முழு அர்த்தத்தையும் உணர முடியும்.
இவர்களுக்கு முன்னர் வாழ்ந்த நால்வர் அடங்கிய நாயன்மார்களுக்கும் இவர்களுக்கும், வேறுபாடு உண்டா?
நிறையவே உண்டு. அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார் ஆகியோர் கோவில்களையும், சடங்குகளையும், அவற்றைப் பற்றிய ஆகம நுலகளையும் மதித்தனர். சித்தர்களோவெனில் அவைகளை உடைத்தறிந்து பேசினர் ; பாடினர்.
மேலும் அவர்களைப் போல ஸ்னாநம் , பூஜை, புனஸ்காரம் என்ற கட்டு திட்டங்களில் இவர்கள் வாழவில்லை. தெருவிலுள்ள குப்பை கூலங்களில் உருண்டனர்.
பேச்சுத் தமிழில் பாடினார. ஆனால் நாயன்மார்கள் பாடியதோ செந்தமிழ்.
இவர்களில் பெரும்பாலோர் சிவனைப் பாடினாலும் நாதமுனிகள் போன்ற சில வைஷ்ணவப் பெரியார்களை யோகி என்றும் சித்தர் என்றும் குருபரம்பரை நூல்கள் பகர்கின்றன,
சைவர்கள் இவர்களை ஒதுக்கினார்களா?
ஆமாம். பல சைவ நூல்கள் இவர்களை பகிரங்கமாகவே சாடின. ஆயினும் திருமூலர், கருவூர் சித்தர், திருமாளிகைத் தேவர் போன்ற சில சித்தர்களின் பாடல்களை பன்னிரு திருமுறைகளில் ஏற்றிப் போற்றுகின்றனர்.
இவர்களின் சிறப்புத் தன்மை என்ன?
ரிக்வேத ரிஷிகளைப் போல மறைபொருளில் பாடுவர் . வேதங்களை சங்க காலத் தமிழர்கள் நான்’மறை’ என்று போற்றினர். ‘மறை’பொருளில் இறைபொருள் பற்றிப் பாடியதால் இப்படி அழைத்தனர். அதாவது சொல்ல வரும் பொருளை நேரடியான மொழியில் சொல்லாமல் அடையாள சொற்களால், சங்கேதக் குறியீடுகளால் (Symbolic language, coded language) சொல்லுவார்கள்.
வேதகால ரிஷிகள் நாங்கள் இப்படித்தான் படுவோம் என்று மந்திரங்களில் பகிரங்கமாகவே கூறியுள்ளனர். குறிப்பாக எண்களை — நம்பர்களை — அதிகம் பயன்படுத்துவர்.
அந்த ஒரு அம்சத்தைக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
சித்தர்கள் மூலிகைகளின் பெயர்களைக் கூட சங்கேத மொழியில் உரைத்தனர். கண்ட கண்ட தோழான் , துருத்தி எல்லாம் டாக்டர் என்று சொல்லிக்கொண்டு திரியக்கூடாது, ஈ னர்கள் எல்லோரும் காவி உடை போட்டுக்கொண்டு தத்துவம் பேசக்கூடாதென்பதற்காக இப்படிச் செய்தனர் போலும்.
திருமூலர், திருவள்ளுவர் போன்றார் ‘ஐந்து அடக்கு’ என்றால் அவர்கள் ஐம்புலன்களை குறிப்பிடுகின்றனர் என்று தெரியும். ஆனால் ஒரேயடியாக எண்களாகப் பாடினால், நமக்கு உரைகார ர்களின் பாஷ்யம் இல்லாவிடில் எதுவும் புரியாது .
ரிக்வேதம் போன்றவற்றுக்கு அர்த்தம் பார்க்கத் தேவையில்லை; அவைகளின் மந்திர சக்தியே பலன்தரும் என்ற பாரம்பர்ய நம்பிக்கை காரணமாக, சாயனர் போன்றோர் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய உரையைக் கூட சங்கராச்சார்யார்கள் பயன்படுத்துவதில்லை.இதை அப்படியே ஆங்கிலத்தில் , பிரெஞ்சில்,ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தோரும், இடையிடையே தங்களுடைய கருத்துக்களைப் புகுத்தி உளறிக்கொட்டி இருக்கின்றனர் .
வேதத்தில் உள்ள 30 குட்டி தெய்வங்களுக்கு (அஜ ஏக பாத, அபாம் ந பாத் , வ்ருஷாகபி) வெள்ளைக்காரர்கள் பத்துப் பதினைந்து வெவ்வேறு விளக்கங்களைக் கூறுவது நமக்கு நகைப்பை உண்டாக்கும்.

ரிக்வேதத்தில் முதல் மண்டலத்தில் உள்ள அந்தகக் கவிஞர் (blind poet) தீர்க்க தமஸின் பாடல்கள் மிகவும் பேசப்படுகினறன. RV.1-164 பாடலில் இறைவன் ஒருவனே; அவனை அறிஞ ர்கள் பல பெயர்களால் அழைப்பர் என்ற வரிகள் வருவதால் எல்லோரும் மேற்கோள் காட்டுவர் . ஆயினும் அதிலுள்ள 52 மந்திரங்களுக்கும் பொருள் கூற முடிவதில்லை. சாயனர்கூ ட ‘புரியவில்லை’ என்று சில மந்திரங்களுக்கு உரை எழுதினார். அதில் முதல் மூண்று மந்திரங்களில் வரும் எண்களை சிவவாக்கியர் என்னும் சித்தர் பாடலுடன் ஒப்பிடுவோம்.
(18 சித்தர்களின் பட்டியல், அஷ்டமாசித்திகள் பட்டியல் பற்றித் தனியே கட்டுரைகளை முன்னரே இங்கு வெளியிட்டதால் அவைகளை இன்று விளக்கவில்லை)
xxxx

சிவவாக்கியரும், ரிக் வேதமும்
எட்டும் எட்டும் எட்டுமாய் ஓர் ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதிதேவனே
எட்டும் ஆய பாதமோடு இறைஞ்சி நின்ற வண்ணமே
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் அல்லல் நீங்கி நிற்பரே — சிவவாக்கியர் பாடல்
இதிலுள்ள எண்களை யார் எப்படி வேண்டுமானாலும் வியாக்கியானம் செய்ய வாய்ப்புண்டு. மேலும் இதே பாடல் ஒரு சிறிது மாற்றத்தோடு திருமழிசை ஆழ்வார் பாசுரங்களில் வருவதால் இருவரும் ஒருவரா? சமயம் மாறினார்களா? என்ற சர்ச்சைகளும் இருக்கின்றன.
சிவவாக்கியரும் ஆழ்வாரும் ஆறு, ஐந்து, பத்து முதலிய எண்களைக் கொண்டும் அடுத்தடுத்துப் பாடினார்.
இவர்களுக்கு எல்லாம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தீர்க்கதமஸும், ரிக் வேதத்தில் இப்படி பாடி இருக்கிறார்.
ரிக்.1-164-1 முதல் 1-164-3 வரை
“இந்த நன்மைதரும் புரோகிதன் சாம்பல் நிறத்தவனின் நடு சகோதரன் எங்கும் பரவியுள்ளான் . மின்னல் போல ஒளி வீசுகிறான் . மூன்றாவது சகோதரன் நெய் முதுகு உடையவன். நான் இந்தச் சகோதரர்களிடையே ஏழு புதல்வர்களோடுள்ள தலைவனைக் காண்கிறேன்.
ஏழு பேரும் ஒரே சக்கரமுள்ள தேரை ஏந்துகிறார்கள். ஏழு பெயர்களைக் கொண்ட குதிரை அதை இழுக்கிறது. சக்கரத்துக்கு மூன்று நாபிகள் – இருசுகள் – உண்டு. சக்கரம் தேயாது, தளராது மக்கள் அனைவரும் அங்கே ஜீவிக்கிறார்கள்.
ஏழு சக்கரங்கள் கொண்டதும் , ஏழு குதிரைகளால் இழுக்கப்படுவதுமான இந்த தேரிலே ஏழு பேர் அமர்ந்திருக்கிறார்கள். இதன் முகப்பில் ஏழு சகோதரிகள் வருகிறார்கள். இதில் பசுக்களின் ஏழு நாமங்கள்/பெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.”
இதன் பின்னர் வரும் 49 மந்திரங்களில் மேலும் 20 எண்களைப் பயன்படுத்துகிறார் . அதில் 1000, 720, 360 முதலிய எண்கள் அடக்கம் . எளிய தமிழில், நமது காலத்துக்கு நெருக்கமான காலத்தில், பாடிய சிவவாக்கியர்/ திருமழிசை ஆழ்வாரின் பாடலுக்குப் பொருள் காணவே நாம் திணறும் போது சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய பாடலுக்கு வெள்ளைத் தோலினர் சொல்லும் பொருளை நம்பலாமா ?
அஷ்டமா சித்திகள் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › அஷ்டமா-சித…
29 May 2018 – ஆருஷத் திருமணம் மூலம் பிறக்கும் குழந்தைகளின் முன், … திருமண வகைகள் | Tamil and Vedas · https://tamilandvedas.com › tag › திருமண-வக… 1. 9 Apr 2015 …
Missing: அஷ்டமாசித்திகள் | Must include: அஷ்டமாசித்திகள்
சித்தர்கள் செய்த எட்டு வகை …
tamilandvedas.com › 2018/02/13 › சித்தர்க…
13 Feb 2018 – Date: 13 FEBRUARY 2018. Time uploaded in London- 8-43 am. Compiled by London swaminathan. Post No. 4738. PICTURES ARE TAKEN from various sources. WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T …
Missing: அஷ்டமாசித்திகள் | Must include: அஷ்டமாசித்திகள்
பதினெட்டு சித்தர் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › பதினெட்டு-ச…
6 Nov 2018 – தமிழ் சித்தர்கள் 18 பேர் என்று சொல்லுவர். ஆனால் அந்த பதினெட்டு பேர் யார் என்பதில் கொஞ்சம் கருத்து வேறுபாடு இருக்கும்.
‘பாரதி கண்ட சித்தர்கள்’ | Tamil and Vedas
tamilandvedas.com › tag › பாரதி-கண்ட-ச…
21 Aug 2018 – 1837ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுவாமிகள் ஜீவ சமாதி எய்தினார். இன்றும் அவரது குருபூசை ஆண்டு …
Missing: பதினெட்டு | Must include: பதினெட்டு
நெரூர் மஹான் சதாசிவ … – Tamil and Vedas
tamilandvedas.com › 2019/05/01 › நெரூர்-…
1 May 2019 – … swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) … சித்தர், சாங்கு சிவலிங்க சித்தர், சானு முனிவர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதிகள்.
அற்புதங்கள் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › அற்புதங்கள்
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) … சித்தர், சாங்கு சிவலிங்க சித்தர், சானு முனிவர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதிகள். 8.
6 நாட்களில் 30 கோவில்கள்! | Tamil and Vedas
tamilandvedas.com › tag › 6-நாட்களில்-…
4 Apr 2019 – கருவூர் சித்தர், சாங்கு சிவலிங்க சித்தர், சானு முனிவர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதிகள். 8.தேர்தல் (Election Inscription) …
tags – சித்தர் பாடல்கள் , எண்கள்; ரிக் வேதம்
–சுபம்-