
Written by London swaminathan
Date: 15 APRIL 2017
Time uploaded in London:- 8-18 am
Post No. 3820
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com

உலகப் புகழ்பெற்ற கிளியோபாட்ரா ( Cleopatra VII) , உண்மையில் ஏழாவது கிளியோபாட்ரா. அவளுக்கு முன்னிருந்த ஆறு பேர் பற்றி அதிகம் பிரஸ்தாபிப்பதில்லை. ஏழாவது கிளியோபாட்ரா கி.மு.51 முதல்- கி.மு.30 வரை ஆண்டார். இவர் எகிப்தை டாலமி வம்ச மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் 12-ஆவது டாலமியின் (Ptolemy XII) மகளாகப் பிறந்தாள். கணவர் 13-ஆவது டாலமியுடனும், சகோதரனுடனும் சேர்ந்து சிறிது காலம் ஆண்டார். அவர்கள் கி.மு.48-ல் எகிப்திலிருந்து அவரை வெளியேற்றினர். அவர் உடனே ரோமாபுரி மன்னர் ஜூலியஸ் சீசரிடம் (Julius Caesar) உதவி கோரினார். அதில் பலன் கிடைத்தது. மீண்டும் பட்டமேறினார். மற்றொரு சகோதரரான 14-ஆவது டாலமி அவருடன் சேர்ந்து ஆண்டார். கிமு.47-ல் அவருக்கு சிசேரியன்(Caesarean) என்ற மகன் பிறந்தார். அந்தப் பிள்ளை சீசருடன் மகனே என்று அவர் சாதித்தார். அவரை எகிப்தின் 15-ஆவது டாலமியாக அறிவித்தனர்.
ஜூலியஸ் சீசர் இறந்த பின்னர் ஆண்டனியுடன் (Antony) உறவு கொண்டு இரட்டைப் பிள்ளைகளைப் (Twins) பெற்றார். அவர் கிளியோபாட்ராவை ராணிகளுக்கெல்லாம் ராணி (Queen of Queens) என்று அறிவித்து தன்னை அரசர்க்கெல்லாம் அரசன் (King of Kings) என்றும் அறிவித்துக் கொண்டார்.
ஜூலியஸ் சீசரின் வாரிசான ஆக்டேவியஸ் சீசர் (Octavius Caesar) –கிளியோபாட்ரா ரோம சாம்ராஜ்யத்துக்கு எதிரி என்று கருதினார். கி.மு 30-ல் ஆக்டியம் (Actium) போரில் ஆண்டனி தோற்கடிக்கப்பட்டார். அவர் உடனே தற்கொலை செய்துகொண்டார். கிளியோபாட்ராவும் ஒரு பாம்பைக் கடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டார்.

Stamps on Cleopatra ( Statues in Museums)
இவருடைய அழகு பற்றி இலக்கியங்களில் எழுதப்பட்டபோதிலும் சிலையில் அவ்வளவு அழகு இல்லை. இவர் கறுப்பு நிறத்தவர் என்றும் சொல்லுவர். தான் தற்கொலை செய்யாவிடில் தன்னை ரோம் நகருக்குக் கொண்டுசென்று துன்புறுத்துவர் என்று அஞ்சியதால் அவர் தற்கொலை செய்து கொண்டார். இவர் தனது அழகைப் பராமரிக்க கழுதைப் பாலில் குளிப்பார் என்றும் சொல்லுவர்.
கிளியோபாட்ராவுடன் எகிப்தின் 5000 ஆண்டுக் கால ஆட்சி முடிவுற்றது. எகிப்து, ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக மாறியது. இதனாலும் எகிப்திய வரலாற்றில் கிளியோபாட்ராவை ஒரு மைல் கல் (Mile Stone) என்று சொல்லலாம்.
ஏடி ராணி (யதி Queen Eti)

இவர் பண்ட் (Punt) என்னும் தேசத்தின் ராணி. கி.மு.1470 வாக்கில் இருந்தவர். பண்ட் என்னும் தேசம் எது என்பது பற்றி நிறைய ஆராய்ச்சி நடந்திருக்கிறது. அந்த தேசத்துக்குப் போன ஒரு பயணம் குறித்து எகிப்தில், ஹட்செப்சுட் Hatshepsut (சதாசிவ சுதா) கல்லறையி ல் ஒரு ஓவியம் உள்ளது அது தேர் எல் பஹரி என்னும் இடத்தில் இருக்கிறது. அதில் இந்த ராணி ஒரு கூனல் நோயுடன் காணப்படுகிறார். மிகவும் கஷ்டப்பட்டு நடந்து வருகிறார். அவர் பூதாஹார உடல் படைத்தவராக இருக்கிறார். அவருடைய கணவர் பெயர் பெரெக்.(Pereh).
பண்ட் என்னும் தேசம், எகிப்துக்கு தென் கிழக்கு திசையில் இருந்தது. அங்கிருந்து எகிப்துக்கு வாசனைத் திரவியங்களும் பலவகை மிருகங்களும் இறக்குமதி செய்யப்பட்டன.

ஹட்ஷெப்சுட் HATSHEPSUT (சத் சிவ சுதா)
ஆட்சி செய்த காலம் கி.மு.1473-1458.
எகிப்திய ராணிகளிலேயே மிகவும் கீர்த்தி பெற்றவர். திறமைசாலி. பெரிய நிர்வாகி. மன்னர் தத்மோசியின் (THUTMOSE I ) மகள்; தனது ஒன்றுவிட்ட சகோதரனை மணந்து கொண்டாள்; எகிப்தில் சகோதர-சகோதரி மணம் மிகவும் பிரசித்தம். அவ்ர்களுக்கு ஒரே மகள் நெபரூரே ( NEFERURE நவரரி). ஆனால் ஒன்றுவிட்ட சகோதரர் வேறொரு பெண் மூலம் ஒரு ஆண் மகவை ஈன்றார். அவர் மூன்றாவது தத்மோசியாக பதவி ஏற்றபோது , சிறு பையன் என்பதால் ஹ ட்ஷெப்சுட் (சத் சிவ சுதா), பதவிவகித்தார். தன்னை பெண் ஹோரஸ் ( Female Horus–சூர்ய தேவி என்னும் கடவுள்) அறிவித்துக் கொண்டார். எகிப்திய மன்னர்கள் இந்துக்களைப்போல மன்னரை கடவுளாகக் கருதினர் (தமிழில் இறைவன், கோ என்றால் அரசன், கடவுள்; கோவில்= கோ+ இல் என்றால் அரண்மனை, ஆண்டவன் குடிகொண்ட இடம்)

இந்த ராணியின் அதிர்ச்டம் எகிப்தில் வளம் கொழித்தது. நல்ல அதிகாரிகள் உதவினர். அவர்களில் ஒருவர் சேனென் முட் ( சேன முத்து). அவர் பெரிய மேதாவி; கட்டிடக் கலை நிபுணன். கர்னாக் (Karnak) என்னும் இடத்திலுள்ள ராணியின் கட்டிடங்களும் தேர் எல் பஹ்ரி (Deir el Bahri) என்னும் இடத்திலுள்ள சமாதியும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. இதில்தான் பண்ட் என்னும் தேசத்தின் கூனல் ராணி ஏட்டியின் (யதி) சித்திரம் உள்ளது.

–Subham–