
Written by London Swaminathan
Date: 20 MARCH 2018
Time uploaded in London – 16-24
Post No. 4834
Pictures shown here are taken by London swaminathan
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
வெள்ளைக்காரனுக்கு காட்சி கொடுத்த இராமபிரான்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளைக்கார கலெக்டருக்கும் முஸ்லீம் ஆட்சியாளருக்கும் மேலும் இருவருக்கும் இராம பிரான் காட்சி கொடுத்தது பற்றி இதே பிளாக்-கில் எழுதினேன்; அவற்றில் ஏரி காத்த இராமபிரான் கதையை மட்டும் மீண்டும் கீழே கொடுத்துள்ளேன்.
யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதும் காலம் இது. கொட்டாம்பட்டி சுப்பையா நியூயார்க் செல்லாமலேயே மற்றவர் எழுதியதை தனது பெயரில் போட்டு எழுதலாம்; மலையனூர் மாடசாமி ஜப்பானின் ப்யூஜியாமா எரிமலை பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். அவருக்கு ஜப்பான் எங்கு இருக்கிறது என்றுகூட தெரியாமல் இருக்கலாம். அப்படித்தான் நானும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் மதுராந்தக சோழன் எழுப்பிய ஏரியின் கரை மீதுள்ள கோதண்ட ராமன் பற்றி, புத்தகத்தில் படித்ததை எழுதினேன்; அது முதற்கொண்டு அங்கு நேரில் சென்று தரிசிக்க ஆவல் கொண்டேன். அந்த ஆசை மார்ச் 7, 2018-ல் நிறைவேறியது.
அர்ச்சகர் ஆராவமுதன் எங்களுக்கு தீபாராதனை காட்டிவிட்டு பக்கத்திலுள்ள பிளேஸ் துரை கல்வெட்டையும் பார்த்துச் செல்லுங்கள் என்றார். அப்படியே செய்தோம். பிளேஸ் துரை புதுப்பித்த சீதையின் (ஜனகவல்லி) சந்நிதியையும் தரிசித்தோம். அத்தோடு எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவிலையும் அங்கு வரையப்பட்ட தற்கால ஓவியங்களையும் படம் எடுத்தோம். கோவிலில் இருந்த முரசையும் கண்டோம்.

சென்னையிலிருந்து சுமார் 50 மைல் தொலைவில் உள்ள இந்த ஊர் அனைவரும் காண வேண்டிய ஊர். ராமர் கோவிலாலும், மாபெரும் ஏரியாலும் புகழ் அடைந்த ஊர்.
இந்த ஸ்தலத்துக்கு இன்னும் ஒரு பெருமையும் உண்டு; ராமானுஜர் இங்கே பஞ்ச சம்ஸ்காரம் எனும் வைணவச் சடங்கைச் செய்து இராமானுஜராக ஆனது இங்குதான்.

கீழேயுள்ளது மூன்றாண்டுக்கு முன்னர் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி
கட்டுரை எண்:- 1951
Written by London swaminathan
Date: 24 June 2015
Uploaded in London at 9-32 காலை
தென் இந்தியாவில் இரண்டு அதிசய சம்பவங்கள் நடந்தன. இரண்டுக்கும் நல்ல ஆதாரங்களும் உள்ளன. செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள மதுராந்தகம் ஏரிகாத்த இராமர் கோவிலின் கதை பலருக்கும் தெரிந்திருக்கும். இதே போல 12 ஆண்டு சிறையில் இருந்த பத்ராசலம் இராமதாசர் செலுத்த வேண்டிய வரிப்பணத்தை முஸ்லீம் மன்னரிடம் இராம லெட்சுமணர் வந்து செலுத்திய கதையும் பலருக்குத் தெரிந்திருக்கும். இதிலிருந்து பக்தர்களுக்குக் கிடைக்கும் செய்தி என்ன என்பதையும் இது போன்ற வேறு இரண்டு சமபவங்களையும் சேர்த்து நான்கு கதைகளைச் சுருக்கமாகக் காண்போம்:
கதை 1

செங்கல் பட்டுக்கு அருகில் மதுராந்தகத்தில் கடல் போலப் பரந்து விரிந்து காட்சி அளிக்கும் மதுராந்தகம் ஏரி உளது. ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை வந்துவிட்டால் இந்த ஏரி நிரம்பும். எந்த நேரத்திலும் கரையை உடைத்து ஊருக்குள் பாயும் அபாயம் ஏற்படும். 1795 முதல் 1799 வரை அந்தப் பகுதியில் கர்னல் லியோனல் பிளேஸ் (Colonel Lionel Place Durai) என்பவர் கலெக்டராக இருந்தார். இப்படி ஏரி நிரம்பி உடையும் தருவாயில் கரையைப் பலப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடு பட்டார். ஊரிலுள்ள ராமர் கோவிலில் மண்டபம் கட்டுவதற்காக வைக்கப்பட்ட கற்களைக் கண்டவுடன் அதையும் ஏரிக் கரையைப் பலப்படுத்த பயன்படுத்த எண்ணினார். கோவில் பட்டர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தக் கற்களின் மீது கைவைக்க வேண்டாம் என்றும் அப்போது ராமனே ஏரியைக் காப்பார் என்றும் அர்ச்சகர்கள் கூறிவிட்டனர்.
அர்ச்சகர்களின் வாதம் ஆங்கிலேய கலெக்டர் பிளேசுக்கு திருப்தி தரவில்லை. உங்கள் இராம பிரான் ஏரியைக் காக்க முடியுமானால் ஏன் இப்படி அ டிக்கடி ஏரிக்கரை உடைகிறது? என்று எள்ளி நகையாடியவாறு சென்றுவிட்டார். அன்று இரவு ஏரி முழுதும் நிரம்பி வழிந்தோடும் அல்லது கரை உடையும் அபாயம் இருந்ததால் கலெக்டர் விழித்திருந்து கரைகளைப் பாதுகாக்கும் பணியில் எல்லோரையும் ஈடுபடுத்தி இருந்தார். அப்பொழுது கலெக்டர் ஒரு அதிசயக் காட்சியைக் கண்டார்.
ஏரிக் கரையின் மீது, கையில் வில்லும் அம்புமாக இரண்டு உருவங்கள் நடந்து சென்று கொண்டிருந்தன. பளிச்சிடும் ஒளியுடன் அவர்கள் நடந்து சென்றனர். அதற்குப் பின்னர் மழையும் நின்றவுடன் கலெக்டர் பெருமூச்சுவிட்டார். மறுநாள் இந்த அதிசயத்தை அவரே சொல்லி, வந்தவர்கள் இராம லெட்சுமணரே என்றும் உணர்ந்தார். வெள்ளைக்காரர்கள் எங்கு போனாலும் முதலில் ஊர்க் கதைகளை அறிந்து அதை டயரி அல்லது கடிதம் அல்லது புத்தகமாக எழுதிப்போட்டு விடுவர். ஆகையால் அவருக்கு இராம லெட்சுமணர் கதை, தோற்றம் எல்லாம் அத்துபடி.

இதுபோல பல அதிசய சம்பவங்கள் செங்கல்பட்டு காஞ்சீபுரம் பகுதியில் நடந்ததால் கர்னல் பிளேஸ், ராபர்ட் கிளைவ் போன்றவர்கள் அங்குள்ள கோவில்களுக்கு நகைகளை அளித்து அவை இன்றுவரை அவர்கள் பெயரிலேயே உள்ளன. கர்னல் பிளேஸின் பெயர் மதுராந்தகம் கோவிலிலும் உளது. சாதாரண ராமர் – ஏரி காத்த ராமர் ஆகி இன்றும் நமக்கு அருள் பாலிக்கிறார்.
((மற்ற மூன்று கதைகளை எனது பிளாக்-கில் காண்க))





Anjaneya pictures are from the Hanuman Temple opposite the main shrine.
–subham–