
Written by London Swaminathan
Date: 4 MARCH 2018
Time uploaded in London – 7-36 am
Post No. 4808
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
பாரத நாடு இமயம் முதல் குமரி வரை ஒன்றாக இருந்ததோடு அதன் பண்பாடும் நம்பிக்கைகளும் ஒன்றாகவே இருந்துள்ளது. இன்று நேற்றல்ல. 2500 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சிந்தனையுடன் இருந்து வருவது சாணக்கிய நீதி நூல் மூலமாகத் தெரிகிறது. வெளிநாட்டார் வந்து நம்மை இமயம் முதல் குமரி வரை ஒன்றாக்கினர் என்பதெல்லாம் பொய் என்பதற்குப் பல சன்றுகளில் ஓரிரு விஷயங்களைக் காண்போம்.
2300 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் என்னும் மஹா மேதை இயற்றியது சாணக்கிய நீதி. அதற்கு சுமார் 300 முதல் 500 ஆண்டுகளுக்குகள் தோன்றியது சங்கத் தமிழ் இலக்கியம்.
இதோ சாணக்கிய நீதி ஸ்லோகம்:-
தர்ச த்யான ஸம்ஸ்பர்ப்சைர் மத்ஸீ கூர்மி ச பக்ஷிணீ
சிசும் பாலயதே நித்யம் ததா ஸஜ்ஜன ஸம்கதிஹி
-சாணக்கிய நீதி 4-3
மீன்கள், பார்வையின் மூலமே எப்படித் தன் குஞ்சுகளை வளர்க்கின்றனவோ, ஆமைகள் எப்படி நினைப்பதன் மூலமே தன் குட்டிகளை வளர்க்கின்றனவோ, பறவைகள் எப்படித் தொடுவதன் முலமே தன் குஞ்சுகளை வளர்க்கின்றனவோ அப்படியே நல்லோர் சேர்க்கையின் மூலம் பலன் கிடைக்கும். அதாவது அவர்களுடைய நினைவும், பார்வையும் ஸ்பர்சமும் நமக்கு நற்பலன்களைத் தரும்.

ஆமைகளும், மீன்களும் தன் குஞ்சுகளை வளர்க்கும் இந்த விநோத நம்பிக்கை உலகில் இந்தியாவைத் தவிர வேறு எங்கும் கிடையாது. மதுரை மீனாட்சி தேவிக்கு இதே போல அருள்புரியும் சக்தி உண்டு என்பதலேயே அவள் மீன்+ அக்ஷி என்று அழைக்கப்படுகிறாள்; தமிழில் அம் + கயல்/மீன் + கண்ணி= அங்கயற்கண்ணி என்று அழைக்கப்படுகிறாள்; அதாவது மீன் எப்படித் தன் குஞ்சுகளைக் கண் பார்வையில் காப்பாற்றுகிறதோ அதே போலக் கடைகண் பார்வையாலே பக்தர்களுக்கு அருள் பாலிப்பாள் என்பது இதன் பொருள். ஆக சாணக்கியன் ஸ்லோகத்தில் கண்டதை சங்கம் வளர்த்த மதுரைக் கோவிலிலும் காண்கிறோம்.
ஆமைகள் தன் பார்வையில் குஞ்சுகளைக் காப்பது பற்றி சங்கப் புலவர்களும் பாடினர்; இதோ சில பாடல்கள்:
குறுந்தொகையில் (152) கிள்ளிமங்கலங்கிழார் பாடுகிறார்,
யாவதும் அறிகிலர், கழறுவோரே
தாய் இல் முட்டை போல, உட்கிடந்து
சாயின் அல்லது, பிறிது எவன் உடைத்தே
யாமைப் பார்ப்பின் அன்ன
காமம் காதலர் கையற் விடினே

பொருள்
தாய் முகம் நோக்கி வளரும் தன்மையை உடைய ஐங்குறு நூறு யின் பார்ப்பைப் போலத் தலைவரைக் காண்பதால் வளரும் தன்மையுடையது காமம். அந்தக் காமம், தலைவர் நம்மைப் பிரிந்து கைவிட்டதால் தயில்லாத ஆமை முட்டை மண்ணுக்குள் கிடந்து அழிவது போல உள்ளத்துள்ளே கிடந்து மெலிவதன்றி வேறு என்ன பயனை உடையது? இடித்துரைப்போர் இதனைச் சிறிதும் அறிந்திலரே.
ஐங்குறு நூறு என்னும் இன்னொரு சங்க தமிழ் நூலில்,
யாமை இளம்பார்ப்புத்
தாய்முகம் நோக்கி வளந்தி சிணாங்கு (ஐங்குறு நூறு -44) என்று தாய் முகம் நோக்கி வளரும் ஆமை பற்றிப் பாடுகிறார் புலவர் ஓரம்போகியார்.
பெண் ஆமை இட்ட முட்டையை ஆண் ஆமை பாதுகாப்பது பற்றி அகநானூற்றில் (160) நப்பசலையாரும் பாடியுள்ளார்.
இது போன்ற நம்பிக்கைகளும் நாகப்பாம்பின் தலையில் நாகரத்னம் இருக்கிறது என்பதும், தோற்றுப்போன மன்னனின் நிலத்தை கழுதை ஏர் பூட்டி உழுவது என்பதும், கிரகணம் என்பது ராகு, கேது பாம்புகள் சந்திர சூரியனை விழுங்குவது என்பதும் ஸம்க்ருத நூல்களிலும் சங்கத் தமிழ் இலக்கியத்திலும் காணப்படுகிறது.
ஆக இமயம் முதல் குமரி வரை ஒரே கருத்து!.
வாழ்க பாரதம்! வளர்க தமிழ்!
–சுபம்–