

WRITTEN BY London swaminathan
swami_48@yahoo.com
Date: 1 JULY 2019
British Summer Time uploaded in London –7-27 AM
Post No. 6621
Pictures are taken from various sources including Facebook, google,
Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
பாஹு பலம் – தோள் வலிமை (உடல் பலம்);
அமாத்ய பலம் – மந்திரி பலம் (சாதாரண மனிதர்களுக்கு அறிஞர்களின் துணை).
தன பலம் – பண பலம்;
அபிஜாத பலம் – நல்ல குலத்தில் பிறந்த பலம்;
பிரக்ஞா பலம் – அறிவு பலம்.
பலம் பஞ்சவிதம் நித்யம் புருஷாணாம் நிபோதமே
,,,,,,,,,,,,,,,,,,,,,
யத் பலானாம் பலம் ஸ்ரேஷ்டம் தத்ப்ரக்ஞா பலம் உச்யதே
–விதுர நீதி 52-5
Xxx
ப்லீத தோஷ – மண்ணீரல் நோய்கள்
வாத, பித்த, கப, சந்நிபாத, சோனித (இரத்தம்)
சந்நிபாத என்பது வாத பித்த கப தோஷங்களின் கலப்பு/ சேர்க்கை.
சரக சம்ஹிதை- 19-4
xxx
பஸ்திபலம் – எனிமா விளைவு
சரீர உபசய- உடல் நலம் ; பலம்- உடல் வலு; வர்ணம் – உடலின் நிறம்; ஆரோக்யம் – நோய் வராமை; ஆயுஹு- நீண்ட ஆயுள்
சுஸ்ருத சம்ஹிதை- 35-4
xxxx


hedgehog
வால்மீகி ராமாயணத்தில் மிருகங்கள்
செதா- முள்ளம் பன்றி; கோதா- பல்லி, ஓணான் வகை; கச்சப- ஆமை; சல்லக – மற்றொரு வகை முள்ளம் பன்றி; சசஹ – முயல்
–கிஷ்கிந்தா காண்டம் 17-37-8
Xxxx
பிக்ஷு வ்ரத- சந்யாசிகளின் 5 விரதங்கள்
அஸ்தேய- திருடாமை; பிரம்மசர்யம்- புலனின்பம் நாடாமை; தியாக- இன்பம் துறத்தல்; அலோப- பேராசை இன்மை; அஹிம்சா- உயிர்நலம் காத்தல்
அஸ்தேயம் ப்ரஹ்மசர்யம் ச த்யாகோஅலோபஸ்ததைவ ச
வ்ரதானி பஞ்ச பிக்ஷூணாமஹிம்ஸாபராமாணி வை
–மார்கண்டேய புராணம் 38-16
Xxxx
5 ம- காரம்
மத்ய- கள்; மாம்ஸ- இறைச்சி; மத்ஸ்ய- மீன்; முத்ரா- முத்திரைகள்; மைதுனம்- புணர்ச்சி
(வாமாசார வழிபாடு கொண்டோருக்கு இவை உண்டு என்று சொல்லப்படும்)
சப்த கல்ப த்ரும 3-7
xxx
மந்திர படன விதி
பிராஹ்மண – மந்திரம்; விநியோக- செயல்பாடு; சந்தஸ்- யாப்பு இலக்கணம்; ஆர்ஷ- ரிஷியின் பெயர்; தேவதா- தெய்வத்தின் பெயர்.
இந்த ஐந்தையும் சொல்லி, அந்த மந்திரத்தை ஜபிப்பதைத் துவக்க வேண்டும். இல்லாவிடில் பலன் கிடைக்காது
ப்ராஹ்மணம் விநியோகம் ச சந்தம் ஆர்ஷஞ்ச தேவதம்
அக்ஞாத்வா பஞ்ச யோ மந்த்ரே ந தத்பலமஸ்னுதே
–subham–
