
Research Article Written by London swaminathan
Date: 3 December 2016
Time uploaded in London: 8-25 am
Post No.3412
Pictures are taken from various sources; thanks. They are representational.
contact; swami_48@yahoo.com
English version of this article is also posted.
கண்ணாடி என்பது நம் நாட்டிலும் உலகில் ஏனைய பழைய நாகரீகங்களிலும் நீண்ட நெடுங்காலமாக புழக்கத்தில் உள்ளது. இது இந்தியாவில்தான் தோன்றியிருக்க வேண்டும். ஏனெனில் மஹாபாரதத்திலுள்ள பகவத் கீதை முதல் ஆண்டாள் பாடிய திருப்பாவை வரை (தட்டொளி) கண்ணாடியைக் காண்கிறோம். தமிழில் மிகப் பழைய நூல் என்று கருதப்படும் தொல்காப்பியம் முதல் கேரளத்தில் பெருந்தலைவர் நாராயண குரு கண்ணாடிக் கோவில் வைத்தது வரை இது நமது வாழ்வில் இரண்டறக் கலந்திருப்பதையும் காணலாம்.
திருவிழாக் காலங்களில் கன்யாப் பெண்களை வீட்டுக்கு அழைத்து கண்ணாடி, குங்குமச் சிமிழ், சீப்பு கொடுக்கும் வழக்கமும் உளது. தீபாவளி, விஷுக் கனி காணுதலின் போது கண்ணாடியில் முகம் பார்க்கும்/ விழிக்கும் வழக்கமும் உளது.
கண்ணாடி உடைவது அபசகுனம் முதலிய பல சகுன சாத்திர தகவலும் உள.
மெக்சிகோவில் அஸ்டெக் நாகரீகத்தில் ஒருவர் பெயர் ‘புகைக் கண்ணாடி’. ஜப்பானில் ஆட்சியாளர் மாறும்போது கண்ணடி கொடுப்பர். கண்ணாடி தேவதை அமர்தரேசுவும் இருக்கிறது. எட்ருஸ்கன் நாகரீகக் கண்ணடிகளின் பின்னால் அற்புதமான வரைபடங்கள் உள்ளன.
முதலில் வான்புகழ் வள்ளுவன் தேனினும் இனிய தமிழில் செப்பியதைக் காண்போம்
அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் (குறள் 706)
பொருள்:-
தன்னை அடுத்த பொருளைக் கண்ணாடி காட்டும்; அதுபோல ஒருவனுடைய உள்ளத்தில் எழும் உணர்வுகளை அவன் முகமே காட்டிவிடும்.

திருவள்ளுவமாலையில்
தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட
பனயளவு காட்டும்படித்தால் – மனையளகு
வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி
-திருவள்ளுவ மாலை, கபிலர்
பொருள்:-
மனையில் வளர்க்கப்படுகின்ற பறவைக் குஞ்சுகள், உலக்கைப் பாட்டால் கண் உறங்குகின்ற வளம் பொருந்திய நாட்டை உடைய மன்னவனே! திரு வள்ளுவனின் குறட்பா அளவில் சிறிது; ஆனால் அது காட்டும் பொருள் மிகப்பெரிது. எப்படியென்றால், புல் நுனியில் படிந்துள்ள பனித்துளி, ஒரு தினையரிசிக்கும் சிறியது; ஆயினும் பக்கத்திலுள்ள பனைமரத்தை அதன் உள்ளே (கண்ணாடி போல) பார்க்கலாம் அல்லவா? -திருவள்ளுவ மாலை, கபிலர்
xxx
ஒல்காப் புகழ் தொல்காப்பியன் பகர்வதையும் பார்ப்போம்
சூத்திரம்தானே ஆடி நிழலின் அறியத் தோன்றி
நாடுதல் இன்றி பொருள் நனி விளங்க
யாப்பினுள் தோன்ற யாத்து அமைப்பதுவே
தொல்காப்பியம், பொருளதிகாரம் (1425)
பொருள்:-
சூத்திரம் என்பது, கண்ணாடிக்குள் அதன் பிரதிபலிப்பில் ஒரு பெரிய மலையே தோன்றுவது போல, ஆராய்தல் இல்லாமலேயே, கூறப்பெற்றுள்ள பொருள் தெளிவாக விளங்குமாறு அமையும். யாப்பினுள் ஏதாவது ஒன்று வடிவமைத்து அமைப்பதாகும்.
xxx

5000 ஆண்டுப் பழமையான பகவத் கீதை கூறுவதைக் கேளுங்கள்
பகவத் கீதையில் (3-38)
தூமேனாவ்ரியதே வஹ்னிர் யதா தர்சோ மலேன ச
யதோல்பேனாவ்ருதோ கர்ப்பஸ் ததா தேனேதமாவ்ருதம்
பொருள்:–
எப்படித் தீயானது புகையால் மறைக்கப்படுகிறதோ, கண்ணாடி அழுக்கால் மறைக்கப்படுகிறதோ, எப்படி கருவானது கருப்பையால் மறைக்கப்படுகிறதோ, அப்படியே காமத்தால், இந்த ஞானம் மறைக்கப்படுகிறது. (3-38)
விவேக சூடாமணியில்
ஆதிசங்கரர் தனது விவேக சூடாமணியில் கூறுகிறார்:
யத்ரைச ஜகதா பாஸோ தர்ப்பணாந்தபுரம் யதா
தத் ப்ரஹ்ம்மமிதி ஞாத்வா க்ருத க்ருத்யோபவிஷ்யசி
பொருள்:-
ஒரு கண்ணாடியில் ஒரு நகரத்தின் பிரதிபலிப்பைக் காண்பது போல நீயே பிரம்மம்; இதை உணர்ந்துவிட்டால் பூரணத்துவம் பெறுவாய். பிரபஞ்சமே உன்னிடத்தில் பிரதிபலிக்கிறது.(ஆதி சங்கரர்)

Etruscan Mirror
காளிதாசனில்
ராஜரிஷி வம்சஸ்ய ரவி ப்ரசூதேருபஸ்தித: பஸ்யத கீத்ருசோயம்
மத்த சதாசார சுசே: கலங்க: பயோதவாதாத் இவ தர்பணஸ்ய
பொருள்:-
மக்களின் ஆர்வங்களையும் உணர்ச்சியையும் மன்னன் பிரதிபலிக்கிறான். ஆதலின் அரசன் அழுக்கற்ற கண்ணாடியாகத் திகழ வேண்டும் (ரகுவம்சம் 14-37
ரவிப்ரஸூதே= சூர்யனிடமிருந்து உண்டானதும்
சதாசார சுசே:= நன்னடத்தையால பரிசுத்தமாக இருப்பதுமான
ராஹர்ஷிவம்சஸ்ய= ராஜ ரிஷியான இக்ஷ்வாகுவின் வம்சத்திற்கு
மத்த:= என்னிடமிருந்து
தர்பணஸ்ய = கண்ணாடிக்கு
பயோதவாதாத் இவ = மேகத்திலிருந்து வந்த காற்றினாலே (மாசு ஏற்படுவது) போல
கீத்ருச: = எப்படிப்பட்ட
அயம் கலங்க: = இம் மாசு
உபஸ்தித: = ஏற்பட்டது
பஸ்யத= பாருங்கள்
எப்போதும் தூயதாய் விளங்கும் என் குலத்துக்கு என்னால் அவப்பெயர் வந்துவிட்டதே (மேகம், காற்றினால் வரும் அசுத்தம் எப்படி எளிதில் கண்ணாடியிலிருந்து நீங்குமோ அது போல இதுவும் எளிதில் போய்விடும் என்பது உட்பொருள்; அதாவது நிரந்தர களங்கம் இல்லை)

Greek Mirror
காளிதாசன் சாகுந்தலம் நாடகத்திலும் ரகு வம்சத்தில் பிற இடங்களிலும் கண்ணாடி உவமையைக் கூறுவதால் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வீடு தோறும் கண்ணாடி இருந்ததும், அதில் நம் குலப் பெண்கள் முகம் பார்த்து அலங்கரித்ததும் நம் மனக் கண் முன் வரும்.
இது போன்ற கண்ணாடி உவமைகள் பிற்கால இலக்கியங்களிலும் இருக்கின்றன. அவைகளைப் பின்னர் காண்போம்.
Mirror Temples! Hindu Wonders!! (Posted on 3 October 2013)
-Subham-









You must be logged in to post a comment.