Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
Agastya in Kallanai, Tamil NaduAgastya in London V and A Museum
Pictures are taken from various sources;
beware of copyright rules; don’t use them without permission; this is a non-
commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com
simultaneously. Average hits per day for both the blogs 11,000.
உலகில்
ஸம்ஸ்க்ருத மொழி பரவிய அளவுக்கு வேறு எந்த மொழியும் பரவியதில்லை என்பதற்கு
கல்வெட்டுகளே சான்று பகர்கின்றன. அலெக்ஸாண்டர் படையெடுப்பால் பரவிய கிரேக்க மொழியையும்
விட சம்ஸ்க்ருத மொழியின் தாக்கம் அதிகம். ஏனெனில் துருக்கியில் உள்ள பொகைஸ்கான்
களிமண் படிவக் கல்வெட்டுகள் முதல் வியட்நாம் கம்போடியா, இந்தோநேஷியா வரை சம்ஸ்க்ருதக்
கல்வெட்டுகளும் இலக்கியங்களும் உள்ளன. துருக்கி கல்வெட்டு முழுதும் சம்ஸ்க்ருதம்
இல்லாவிடினும் 3400 ஆண்டுகளுக்கு முன்னர் வேத கால
தெய்வங்களின் பெயரில் கைச்சாத்திட்ட களிமண் கல்வெட்டு உளது. கிக்குலி எழுதிய
குதிரை சாஸ்திரம் ஸம்ஸ்க்ருத எண்களுடன் உள்ளது.
ஆகையால் காலத்தால் முந்தியவை. அளவிலும் ஸம்ஸ்க்ருத்தைத் தோற்கடிக்க எந்தக்
கல்வெட்டும் இல்லை. சம்பா எனப்படும் வியட்நாம், காம்போஜம்
எனப்படும் கம்போடியா, சாவகம் எனப்படும் இந்தோநேஷியாவில்
சுமார் 1000 ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் உள்ளன.
உப்பு, புளி, எண்ணைக் கணக்கு எழுதிய சுமேரிய கல்வெட்டுகள் எண்ணிக்கையில் அதிகம்
எனினும் அவை ஒரே இடத்தில் குவிந்துள்ளன. மேலும் இலக்கிய நயமற்றவை.
கல்வெட்டுகளில் உள்ள 800 ஸம்ஸ்க்ருத புலவர்களின் பெயர்கள் அடங்கிய புஸ்தகம் பற்றி சென்ற மாதம் எழுதினேன். இப்போது கம்போடியக் கல்வெட்டுகளில் இருந்து வடித்தெடுத்த அழகிய கவிதைகளைக் காண்போம். இவை சென்னை பல்கலைக்கழக ஸம்ஸ்க்ருதத் துறை ரீடர் சி.எஸ். சுந்தரம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம்.
இவை
வழக்கமாகக் கல்வெட்டுகள் தரும் தகவலுடன் வேறு பல புராண இதிஹாசக் கதைகளையும் உவமைகளையும்
தருகின்றன. மேலும் சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள கம்போடியாவில்
ஸம்ஸ்க்ருதம் புழங்கியதையும் புலமை பரவியதையும் காட்டும். காம்போஜ கல்வெட்டுகள்
என்ற பெயரில் ஆர்.சி.மஜூம்தார் எழுதிய நூலிலிருந்து சுந்தரம் எடுத்தாண்டுள்ளார். ஆகையால் பக்க
எண்கள் அந்தப் புஸ்தத்தைக் குறிக்கும். செம்மையான ஸம்ஸ்க்ருதத்தில் அமைந்த
அற்புதக் கவிதைகள் அவை-
1.கம்போடிய மன்னர்களின் மேதாவிலாசம்
மன்னரின்
மனதில் ஒரு பெட்டிக்குள் பொக்கிஷம் போல அறிவு பாதுகாக்கப்பட்டதாம். அதைக்
காப்பாற்றும் பொருட்டு ஸரஸ்வதி தேவி வாயிலில் ( அம்மன்னரின் வாயில்) காத்து
நிற்கிறாளாம். அதாவது மன்னர் கற்ற விஷயம் எல்லாம் தொலைந்து போகாமல் இருக்க சரஸ்வதி
தேவி அருள் பாலிக்கிறாள்.