உலகு இன்பக் கேணி என வேதம் சொல்கிறதா ? பாரதியார் கூற்றுக்கு ஆதாரம் எங்கே ? (Post.15,622)

Written by London Swaminathan

Post No. 15,622

Date uploaded in London –15 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

Mantras are taken from wisdomlib.org; Thanks.

ரிக் வேதம் போலவே பாரதி பாடல்கள் முழுதும் ஆக்கபூர்வ எண்ணங்களையும், சிந்தனையையும் தூண்டும் வரிகளையும், சொற்களையும் அடைமொழிகளையும் காணலாம் . அவரே வேதம் பற்றி அக்னி என்ற நூலையும் எழுதியுள்ளார். ‘வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசேவேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே’ என்றும் பாடுகிறார்.

ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்

உலகின்பக் கேணி என்றே—மிக

நன்று பல் வேதம் வரைந்த கை பாரத

நாயகி தன் திருக் கை” —தேசிய கவி சுப்ரமண்ய பாரதி.

இதில் கடவுள் ஒருவரே என்பதை ஏராளமான பேர் ரிக் வேத மந்திரத்தை மேற்கோள் காட்டி எழுதிவிட்டனர் ;

“ஏகம் சத் விப்ராஹா பஹுதா வதந்தி” (Ekam Sat Vipra Bahudha Vadanti) என்பது ரிக் வேதத்தின் மிகப்பிரபலமான மந்திரமாகும். இதன் பொருள், “உண்மை (இறைவன்) ஒன்றே, ஆனால் அறிஞர்கள் (ஞானிகள்) அதை பல பெயர்களில் அழைக்கிறார்கள்”  ரிக் வேதம் (1.164.46 ) .

வேதங்கள் சொன்னபடிக்கு  மனிதரை

மேன்மையுறச் செய்தல் வேண்டும்’

நூறு வயது புகழுடன் வாழ்ந்து உயர்

நோக்கங்கள் பெற்றிட வேண்டும்’

என்ற பாரதியார் வரிகளுக்கும் வேதங்களில் பல ஆதாரங்கள் கிடைக்கின்றன.

ஆனால் உலகு இன்பக் கேணி என்றும் வேதம் சொல்வதாக பாரதியார் பாடியதற்கு ஆதாரம் எங்கே? என்ற கேள்வி எழுகிறது ; அதர்வண வேத பூமி சூக்தம், யஜுர் வேத சாந்தி மந்திரம் போன்றவற்றில் பூமியை, இயற்கையை, நற்குணங்களை எல்லாம் போற்றிப் பாடினாலும் உலகு இன்பக் கேணி என்ற வரிகளைக் காணமுடியவில்லை! கீழ்கண்ட வேத மந்திரங்கள் பாரதியாரின் கூற்றுக்கு வலுச் சேர்க்கின்றன.

வேத கால இலக்கியம் என்பது நான்கு பகுதிகளைக்கொண்டது ; அவையாவன :

1.சம்ஹிதை – மந்திரங்கள் உடைய பகுதி ;

2.பிராமணங்கள் – மந்திரங்களை விலாக்கும் பகுதிகள் ; அவற்றின் பிரயோகமும் உண்டு;

3.ஆரண்யகங்கள் –  கானக வாழ்க்கையில் எழும் தத்துவ சிந்தனைகள் உள்ள பகுதி;

4.உபநிஷத்துக்கள் – முழுக்க முழுக்க தத்துவம், வேதாந்தம் உள்ள பகுதி ; வேத + அந்தம் = வேதாந்தம் என்றாலேயே, இவைதான் வேதங்களின் துணிபு , கண்டுபிடிப்பு என்ற பொருள் தரும் .

நாம் காணப்போகும் பகுதிகள் வேதத்திலிருந்தும் மற்றும் பிராமணங்கள் என்னும் நூல்களிலிருந்தும் வருகின்றன ; வேத சம்ஹிதை செய்யுள் வடிவில் உள்ளன ; பிராமணங்கள் பெரும்பாலும் உரை நடை வடிவில் உள்ளன ; செய்யுளுக்கு அடுத்த காலத்தில்தான் உரை நடை வரும் என்பதை உலக இலக்கியங்களின் வரலாறு காட்டுகிறது ஆகையால் பிராமணங்களை 1000 BCE  என்று மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் முத்திரை குத்துகிறார்கள் . இதோ சில மேற்கோள்கள் :

நாங்கள் ஆனந்தமாக , மகிழ்ச்சி தரும் மந்திரங்களோடு எல்லோரிடத்திலும் அன்பாக இருப்பவனும் தூய்மைப்படுத்தும் ஒளியோடு வேள்வியில் இருப்பவனுமான அக்கினியைப் போற்றுகி ன்றோம் – ரிக் வேதம்  8-43-31

இதைப் பாடிய ரிஷியின் பெயர் விரூப ஆங்கிரசன் ;

We venerate with cheerful hearts the cheerful Agni , dear to all,

Burning with purifying flame RV 8-43-31

अ॒ग्निं म॒न्द्रं पु॑रुप्रि॒यं शी॒रं पा॑व॒कशो॑चिषम् । हृ॒द्भिर्म॒न्द्रेभि॑रीमहे ॥

अग्निं मन्द्रं पुरुप्रियं शीरं पावकशोचिषम् । हृद्भिर्मन्द्रेभिरीमहे ॥

agnim mandram purupriyaṃ śīram pāvakaśociṣam | hṛdbhir mandrebhir īmahe ||

இந்த மந்திரம் ஐதரேய பிராமண நூலிலும் அரணிக்கட்டைகளைக் கடைந்து தீயை உருவாக்கும்போது சொல்லப்படுவதை வேத உரைகாரர் சாயனர் சுட்டிக்காட்டுகிறார்.

****

மரணத்துக்குப் பின்னர் ஒருவர் மேலுலகம்  செல்வதும்  அங்கே சொர்க்கத்தில் எப்போதும் ஒளிவீசும் என்றும் எதுவும் வாடாது, அழியாது என்றும் , அந்த இடத்தில் ஆனந்தம் தவிர வேறு எதுவும் இல்லை என்பதும் ரிக்வேதத்திலேயே உள்ளது; இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பாடப்பட்ட சங்க இலக்கியப் பாடல்களிலும் உள்ளது!

ரிக் வேதத்தில் வரும் இந்த காஸ்யப மாரீசன் ரிஷி பாடிய மந்திரம், 

ஓ பவமான சோமனே

எந்த இடத்தில் சொர்க்கத்தின் ஒளி நிலைநிறுத்தப்பட்டுள்ளதோ, எந்த இடத்தில் எப்போதும் ஒளிமயமுள்ளதோ அந்த மரணமற்ற, அழியாத  உலகத்தில் என்னை நிறுத்து ; ஓ இந்துவே, நீ இந்திரனுக்காக பெருகுவாயாக.

விவஸ்வானுடைய மகன்  அரசனாக இருக்கும் இடத்தில் என்னை அழியாதவன் ஆக்குக;

சொர்க்கத்தின் மர்மமான கோயில் எங்குள்ளதோ,

 புதிய நிர்மலமான நதிகள் துள்ளிக்குதித்து ஓடுகின்றனவோ அங்கே என்னை நிறுத்து; ஓ இந்துவே, நீ இந்திரனுக்காக பெருகுவாயாக”

–RV 9-113-7/8

7. O Pavarnana, place me in that deathless, undecaying world

     Wherein the light of heaven is set, and everlasting lustre shines. Flow, Indu, flow for Indra’s sake.

8. Make me immortal in that realm where dwells the King, Vivasvan’s Son,

     Where is the secret shrine of heaven, where are those waters young and fresh. Flow, Indu, flow for Indra’s sake.

RV 9-113-7/8

यत्र॒ ज्योति॒रज॑स्रं॒ यस्मिँ॑ल्लो॒के स्व॑र्हि॒तम् । तस्मि॒न्मां धे॑हि पवमाना॒मृते॑ लो॒के अक्षि॑त॒ इन्द्रा॑येन्दो॒ परि॑ स्रव ॥
यत्र ज्योतिरजस्रं यस्मिँल्लोके स्वर्हितम् । तस्मिन्मां धेहि पवमानामृते लोके अक्षित इन्द्रायेन्दो परि स्रव ॥
yatra jyotir ajasraṃ yasmim̐l loke svar hitam | tasmin māṃ dhehi pavamānāmṛte loke akṣita indrāyendo pari srava ||

यत्र॒ राजा॑ वैवस्व॒तो यत्रा॑व॒रोध॑नं दि॒वः । यत्रा॒मूर्य॒ह्वती॒राप॒स्तत्र॒ माम॒मृतं॑ कृ॒धीन्द्रा॑येन्दो॒ परि॑ स्रव ॥
यत्र राजा वैवस्वतो यत्रावरोधनं दिवः । यत्रामूर्यह्वतीरापस्तत्र माममृतं कृधीन्द्रायेन्दो परि स्रव ॥
yatra rājā vaivasvato yatrāvarodhanaṃ divaḥ | yatrāmūr yahvatīr āpas tatra mām amṛtaṃ kṛdhīndrāyendo pari srava || 9-113- 7 and 8.

**

இந்திரன் என்றால் அரசன், தலைவன் என்று பொருள் ; இது ஒரே தேவனுடைய  பெயர் அல்ல என்பதைக் காஞ்சி பரமாசார்யார் (1894–1994) தெளிவு படுத்தியுள்ளார் ; வெள்ளைக்காரர்களோ வெனில் இது இயற்கைக் சக்திகள் என்றும் அல்லது ஒரே நபரின் பெயர் என்றும் பிதற்றியுள்ளனர்

ரிக் வேதத்தில் இந்திரன் ஏறத்தாழ முப்பது அசுரர்களைக் கொன்றதாக வருகிறது; அதாவது தீமையை அல்லது தீயவர்களை அழிப்பவன் . பகவத் கீதையின் பரித்ராணாய ஸ்லோகத்திலும் இதே கருத்து காணக்கிடக்கிறது

ரிக் வேதத்தில் இரண்டு மந்திரங்களில் தீயவர்கள், சொந்தக்காரர்களாக இருந்தாலும் அழிக்கப்பட வேண்டியவர்களே என்று சொல்கிறது.

 அர்ஜுனன், சொந்தக்காரர்களையும் குருமார்களையும் எப்படிக் கொல்வேன் என்று கேட்டபோது கிருஷ்ணன் சொன்ன பதிலையும் பாரதியார் அழகாகக் கொடுத்துள்ளார்; முதலில் ரிக் வேத மந்திரம் ,

எங்களைக் கொல்ல வருபவன் நட்பில்லாத சொந்தக்காரனாக இருந்தாலும் அந்நியனாக இருந்தாலும் அவனை எல்லாத் தேவர்களும் அழிக்கட்டும்;  பிரார்த்தனையே (பிரம்மமே) என்னுடைய சிறந்த கவசம். RV 6-75-19

यो न॒: स्वो अर॑णो॒ यश्च॒ निष्ट्यो॒ जिघां॑सति । दे॒वास्तं सर्वे॑ धूर्वन्तु॒ ब्रह्म॒ वर्म॒ ममान्त॑रम् ॥

यो नः स्वो अरणो यश्च निष्ट्यो जिघांसति । देवास्तं सर्वे धूर्वन्तु ब्रह्म वर्म ममान्तरम् ॥

yo naḥ svo araṇo yaś ca niṣṭyo jighāṃsati | devās taṃ sarve dhūrvantu brahma varma mamāntaram ||

English translation:

“Whoever, whether an unfriendly relative or a stranger, desires to kill us, may all the gods destroy him; prayer is my best armour” – RV 6-75-19

சத்ரபதி சிவாஜி சைன்யத்திற்குக் கூறியது– பாரதியார்

இது ஒரு நீண்ட பாடல். ஆனால் ஒவ்வொரு மாணவனையும் சிறு வயதிலேயே மனப்படம் செய்யச் சொல்லவேண்டிய பாடல். இதில் கீதையின் சாரம் வருகிறது. உத்திஷ்ட! யசோ லப= எழுந்திரு! புகழடை! என்ற வீர வாசகம் வருகிறது. இது கண்ணன் கீதையில் இட்ட உத்தரவு. இதையே வள்ளுவனும் “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்று பாடினான்.

“முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று
தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட
மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்
காதலின் நண்பர் கலைதரு குரவரென்று

இன்னவர் இருத்தல்கண்டு, இதயம்நொந் தோனாய்த்
தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர்
ஐயனே! இவர்மீ தம்பையோ தொடுப்பேன்?
வையகத் தரசும் வானக ஆட்சியும்
போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன்.

………………………..

சோர்வோடு வீழ்ந்தனன், சுருதியின் முடிவாய்த்
தேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான்
வில்லெறிந் திருந்த வீரனை நோக்கி
புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால்
அறத்தினைப் பிரிந்த சுயோதனா தியரைச்

செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய்,
உண்மையை அறியாய் உறவையே கருதிப்
பெண்மைகொண் டேதோ பிதற்றிநிற் கின்றாய்
வஞ்சகர்தீயர்மனிதரை வருத்துவோர்,
நெஞ்சகத் தருக்குடை நீசர்கள்இன்னோர்

தம்மொடு பிறந்த சகோதரராயினும்
வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்.
ஆரிய நீதிநீ அறிகிலை போலும்!
பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்

பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை?
பேடிமை யகற்று! நின் பெருமையை மறந்திடேல்! 
ஈடிலாப் புகழினாய்! எழுகவோ எழுக! என்று 
மெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூறக்
குன்றெனும் வயிரக் கொற்றவான் புயத்தோன் —பாரதியார்.

***

அக்கினி செளசீக ரிஷி பாடியது

“அஸ்மாந்வதீ நதி ஓடுகிறது ; நண்பர்களே , ஜாக்கிரதை; உயரமாக எழுந்து நின்று கடப்போம்; வருவதற்கு விருப்பமில்லாதவர்களை விட்டுச் செல்வோம் ; அப்போதுதான் மங்களமான செல்வங்களைப் பெறுவோம் (நல்ல உணவினைப் பெறுவோம்).” 10.53.8

अश्म॑न्वती रीयते॒ सं र॑भध्व॒मुत्ति॑ष्ठत॒ प्र त॑रता सखायः । अत्रा॑ जहाम॒ ये अस॒न्नशे॑वाः शि॒वान्व॒यमुत्त॑रेमा॒भि वाजा॑न् ॥

अश्मन्वती रीयते सं रभध्वमुत्तिष्ठत प्र तरता सखायः । अत्रा जहाम ये असन्नशेवाः शिवान्वयमुत्तरेमाभि वाजान् ॥ Rig Veda 10.53.8

aśmanvatī rīyate saṃ rabhadhvam ut tiṣṭhata pra taratā sakhāyaḥ | atrā jahāma ye asann aśevāḥ śivān vayam ut taremābhi vājān || Rig Veda 10.53.8

English translation:

“The aśmanvatī flows along; be alert; rise up, cross over, may friends; here let us leave those who are unhappy, so that we may cross over to auspicious sacrificial viands.” Rig Veda 10.53.8

***

கர்மவினைக் கொள்கை

சதபத பிராமண 2-2-27 நூலில் கர்ம வினை பற்றிய தெளிவான குறிப்பு வருகிறது ,

முந்தைய பிறப்பில் ஒருவன் செய்த செயல்களுக்கு ஏற்ப உலகத்தில் பிறக்கிறான் .

அதையடுத்தது மிகப்பழைய உபநிஷத்தான பிருஹத் ஆரண்யக உபநிஷத்திலும் வருகிறது:

Now as a man is like this or like that,

according as he acts and according as he behaves, so will he be;

a man of good acts will become good, a man of bad acts, bad;

he becomes pure by pure deeds, bad by bad deeds;

And here they say that a person consists of desires,

and as is his desire, so is his will;

and as is his will, so is his deed;

and whatever deed he does, that he will reap.

— Brihadaranyaka Upanishad,

ஜனகர் கூட்டிய அறிஞர்கள் கூட்டத்தில் யாக்ஞவல்க்ய ரிஷிக்கும் ஏனைய அறிஞர்களுக்கும் இடையே நடந்த உரையாடல்கள்  உள்ளன. அங்கே ஜரத்கார்வ ஆர்த்தபாக  கூறுகிறார் ,

ஒரு மனிதன் இறந்தவுடன் அவனுடைய சொற்கள் அக்கினியில் கலந்து விடுகின்றன; அவனுடைய மூச்சுக் காற்று , காற்றினில் கலந்து விடுகின்றது. கண்கள் சூரியனுக்குள்ளும், மனது சந்திரனுக்குள்ளும் புகுந்து விடுகிறது.”

இப்படி அவர் சொன்னவுடன் அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு  யாக்ஞவல்க்ய ரிஷி கேட்கிறார் ,

பின்னர் மனிதன் என்ன ஆகிறான்?

இதற்கு ரிஷி கொடுத்த பதில்,

இதை நாம் இருவரும் தனியாக விவாதிப்போம்; இதை பொது இடத்தில் விவாதிக்கக்கூடாது .

இதற்குப்பின்னர் அவர்கள் இருவரும் பேசியது என்ன என்ற முழு அறிக்கை இல்லை. ஆனால் அவர்கள் சொன்னது கர்மம்அவர்கள் புகழ்ந்தது கர்மம் என்று மட்டும் இருக்கிறது. பின்னர் வந்த உபநிஷத்துக்குக்கள் இன்னும் கூடுதலான விவரங்களைத்  தருகின்றன .

இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் வேத காலத்திலேயே மரணத்துக்குப் பின்னர் உள்ள மறுவாழ்வு  பற்றிய சிந்தனை எழுந்து அதற்கு முடிவும் கண்டனர் என்பதாகும். வேதங்களை ஆழமாகப் படித்தால் இதற்கான வித்துக்கள் வேதங்களிலேயே இருப்பதையும் அவை மறை பொருளில் உரைக்கப்பட்டதையும் அறியலாம் .

—subham—

Tags- உலகு இன்பக் கேணி,  பாரதியார் கூற்றுக்கு,  ஆதாரம் எங்கே?,  Mantras , wisdomlib.org, மறுபிறப்பு, கர்ம வினை, மரணத்துக்குப் பின்னர், மறு வாழ்வு

நமக்குத் தொழில் கவிதை! (Post No.10,657)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,657
Date uploaded in London – – 14 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

நமக்குத் தொழில் கவிதை!
ச.நாகராஜன்

நமக்குத் தொழில் கவிதை என்றான் மஹாகவி பாரதி.

ஒரே ஒரு கவிதை இயற்றுவது என்பதே இமாலய கஷ்டம்.

இதில் கவிதையையே தொழிலாகக் கொண்டால் கவிஞன் படும் பாடு எவ்வளவு கஷ்டமானது என்பது புரியும்.

ஆசார்ய ஹேமசந்த்ர கவிதை இயற்றுவது எவ்வளவு கஷ்டம் என்பதை நன்கு உணர்ந்து அதை தன் ‘காவ்யானுசாஸன’த்தில் கூறுகிறார்.

முதலில் கவிதை இயற்ற பிரதிபா வேண்டும்.

பிரதிபா என்றால் புதியன உருவாக்கும் மேதையாக இருப்பது, மிகுந்த கற்பனை வளத்தைக் கொண்டிருப்பது, ஆழ்ந்த கருத்தை அனாயாசமாக அழகுறத் தருவது.

இந்த இயற்கையான அதி புத்திசாலித்தனத்தை, ஏராளமான காவியங்களைப் படிப்பதாலும் தன்னைச் சுற்றி இருப்பதை உற்று நோக்குவதாலும் மேம்படுத்திக் கொள்ளலாம்.
இந்த பிரதிபா இல்லையேல் கவிஞனும் இல்லை; காவியமும் இல்லை.
இந்த பிரதிபா என்பது இருவகைப் படும் என்கிறார் ஆசார்ய ஹேமசந்திரர்.
ஒன்று : இயற்கையாக அமைவது
இரண்டாவது : வெளிப்புறக் காரணங்களால் அமைவது

இந்த இருவகையான பிரதிபாவை மிக அதிக ஒளியுடனும் அதிக சக்தியுடனும் தருவதற்கு இரு வழிகள் உண்டு.
ஒன்று வியுத்பத்தி எனப்படும்
இரண்டாவது அப்யாஸம் எனப்படும்.
வ்யுத்பத்தி என்றால் மனித குலத்தில் இருக்கக்கூடிய பரந்த அறிவையும் நம்மைச் சுற்றி இருக்கும் பரந்த உலகில் நடப்பது அனைத்தையும் கூர்ந்து கவனித்து அறிவதாகும்.
வ்யுத்பத்தி என்பது படித்துப் படித்து தன் அறிவை சிகரத்தில் ஏற்றுவதையும் குறிக்கிறது.

எத்தனை இலக்கியங்கள்! அதில் தான் எத்தனை வகைகள்! அனைத்தையும் ஒருவன் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்,
யாப்பிலக்கணம், மொழியின் நுட்பங்கள், பழக்க வழக்கங்கள், சொற்களின் வல்லமை, வேத, இதிஹாஸ புராணங்கள், மகத்தான காவியங்கள் அனைத்தையும் முதலில் முறைப்படி கற்று உணர வேண்டும். வரலாறு, பூகோளம், பொருளாதாரம், தேசீய நிலவரம், தர்க்கம், சிருங்கார சாஸ்திரம், இதர மனித உணர்வுகளைத் தூண்டும் ரஸங்கள், யோகா உள்ளிட்ட அனைத்தையும் கற்று வல்லவனாதல் வேண்டும்.

ஹேமசந்திரர் கூறுகிறார்:-
“ந ச ஷப்தோ ந ததாச்சயம் ந ஸ ந்யாயோ ந ஸா கலா|
ஜாயதே யன்ன காவ்யாங்கமஹோ பாரோ குரு: கவே||”

இதன் பொருள் : வெறும் சப்தம் இல்லை. வெறும் ஒரு முதுமொழி இல்லை, வெறும் ஒரு கலை இல்லை – அனைத்துமே ஒரு காவியம் எழுதத் தேவை.
ஒரு கவிஞனின் சுமை சொல்ல முடியாத அளவு பெரிது.

மாயவித்தை என்று இந்த்ர ஜால கலையை ஒரு கவிஞன் வெறும் வார்த்தையால் குறிப்பிட்டு விட்டால் அது கவிதை ஆகாது.
அந்தக் கலையின் நுட்பத்தை உணர்ந்து அதில் ஒரு அம்சத்தைக் கோடிட்டுக் காட்டி கேட்பவனை பிரமிக்க வைத்து உயரத்தில் ஏற்ற வேண்டும், அது தான் கவிதை!

எதிலும் ஒரு ஒழுங்குமுறை, நியாயம், நேர்மை, பொருத்தம் வேண்டும் – அவன் உலகுக்கு அளிப்பதில்!
லோகாதிநிபுணதா என்று கூறுகிறார் ஹேமசந்திரர்.
இது கவிஞனுக்கு முக்கியம்.

எதையோ பார்த்தோம், பாடினோம் என்று இருக்கக் கூடாது.
ஒவ்வொரு சிறு விஷயத்திலும் அவனது பார்வை கூர்மையாக இருப்பதோடு அதில் நிபுணத்வத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

இது தான் ஐயா கவிதை!

சரி, இதை எல்லோரும் கொண்டிருக்க முடியுமா, கற்றுத் தேற முடியுமா?

இடைவிடாத முயற்சி, ஒரு கவிஞனான ஆசானின் பூரண வழிகாட்டுதல் – இந்த இரண்டும் இருந்தால் கவிஞன் ஆகலாம்.
Practice Makes Perfection என்பது ஆங்கிலப் பழமொழி.
அப்யாஸோ ஹி கௌஸலம் என்பது சம்ஸ்கிருத மொழி.
அப்யாஸம் எனப்படும் இடைவிடா முயற்சியினால் திறமை மேம்படும் என்பது இதன் பொருள்.

ஒரு துளி நீர் ஒரு கல்லைக் கரைக்காது.

“True ease in writing comes from art, not chance,
As those move easiest who have learned to dance.”
என்றார் அலெக்ஸாண்டர் போப் (Alexander Pope, Sound and Sense)
ஆகவே கவிதை எழுத ஆசை கொண்டிருப்பவர் முதலில் ஏராளமான காவியங்களையும், காவிய உத்திகளையும் , கவிஞனின் நுட்பமான பார்வையையும் முதலில் படித்து ரஸித்து, உணர்ந்து அனுபவித்து மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.
பிறகு சொற்கள் செய்யும் ஜால உலகத்தில் நுழையலாம்.

ஆகவே, முதலில் காளிதாஸனையும், கம்பனையும், பாரதியையும் கற்போம்;

பின்னர் கவிதை ஒன்றையும் சற்று முயன்று இயற்றிப் பார்க்கலாம்! நன்கு திறன் கூடி விட்டால் நாமும் சொல்லலாம் – நமக்குத் தொழில் கவிதை என்று!


tags– கவிதை, ஹேமசந்திரர்

‘மயிரும் பயிரும்’- ஒரு பெண் புலவர் பாடிய பாட்டு ! (Post No.10054)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,054

Date uploaded in London – 4 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகிலேயே பழைய நூல் ரிக்வேதம். 6000 ஆண்டுகளுக்கு முந்தைய புஸ்தகம் என்கிறார்கள் ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும், சுதந்திரப் போராட்ட வீரர் பலகங்காதர திலகரும். பிரிட்டிஷ் கைக்கூலியாக கிழக்கு இந்திய கம்பெனியின் மொழிபெயர்ப்பாளராக அமர்த்தப்பட்ட பிரிட்டன் வாழ், ஜெர்மன் ஆள் மாக்ஸ்முல்லர் முதலில் கி.மு 1200 என்று உளறிவிட்டு , பேராசிரியர் வில்சன் முதலியோர் கொடுத்த அடி தாங்காமல் ரிக் வேதம் கி.மு 1500 அல்லது அதற்கு முன் உண்டானது; எவரும் இதன் காலத்தைக் கணக்கிடவே முடியாது என்று கதறினார். இப்போது அமெரிக்காவில் இந்துக்களை  எதிர்த்துப் பேசிவரும் விட்சல் இது கி.மு 1700 என்கிறார். இந்துக்களோவெனில் இதை நாலாக வேத வியாசர் பிரித்தது கி.மு. 3150ல் என்கின்றனர். அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் (BARC) மற்றும் அமெரிக்க விண் வெளி நாசா (NASA) நடத்திய அராய்ச்சிகளோ இதில் குறிப்பிடும் சரஸ்வதி நதி கி.மு 2000க்கு முன் ஓடியதாக சொல்கின்றனர். இவ்வாறு பல்லாயிரம் ஆண்டுப் பழமையான ரிக் வேதத்தில் 20-க்கும் மேலான பெண் புலவர்கள் இருக்கின்றனர். அதுவும் உலக சாதனை. இவ்வளவு பெண் புலவர்களின் பட்டியல் அக்காலத்தில் வேறு எங்கும் இல்லை.

ரிக் வேதத்தில் எட்டாவது மண்டலத்தில் 91-ஆவது துதியாக வருகிறது (RV.8-91)அபாலா என்னும் பெண்மணி பாடிய கவிதை. அவர் இந்திரனை நோக்கி வேண்டுகிறார்.

இதில் பல அதிசய விஷயங்கள் உள்ளன. சோம லதா என்னும் அதிசயக் கொடி மலையில் விளைகிறது, அதை பருந்து கொண்டு தருகிறது என்றெல்லாம் பல புலவர்கள் பாடுகின்றனர் . ஆனால் அபாலா அதை  தான் போகும் வழியில் தண்ணீர் (நீரோடை) அருகில் காண்கிறாள்.அதைச் சாப்பிட்டு குணமும் அடைகிறாள். அவள் தனக்கும் தன்  தந்தைக்கும் இளமை திரும்ப வேண்டுகிறாள் . எப்படி தனக்கும் தத்தையின் வழுக்கைத் தலையிலும் முடி வளருகிறதோ அதே போல பயிரும் செழித்து வளர வேண்டும் என்கிறாள். மூன்று முறை அவளை இந்திரன் தேரின் சக்கரத் துளைகள் வழியாக இழுத்த பின்னர் அவளிடம் இருந்த தோல் வியாதி குணமாகி முடி வளர்ந்தது.

ஆண்டாளும் அபாலாவும்

இங்கு அபாலா  நமக்கு ஆண்டாளை நினைவுபடுத்துகிறார். அபாலாவுக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த ஆண்டாளும் தேச பக்தி உணர்ச்சி பொங்க , “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து

ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள” என்று வேண்டுகிறார்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து

ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!—திருப்பாவை

XXXX

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் தந்தை மீது அவள் கொண்டுள்ள பாசம் மற்றும் விவசாயத்தில் முனைப்பு. ஆக, வெள்ளைக்காரன் சொன்ன நாடோடி விஷயம் பொய்யாகப் போனது ! வேத கால இந்துக்களை விவசாயம் செய்யாத நாடோடி என்று வெள்ளைக்காரர்கள் ‘கப்ஸா’ விட்டனர். அவர்களது முகத்திரையைக் கிழித்து விட்டது அபாலாவின் ரிக்வேதக் கவிதை

அவளுக்கு தோல் வியாதி இருந்ததால் கணவன் அவளை வெறுத்தான் என்பதும் கவிதையில் வருகிறது. ஆகையால் வியாதியுள்ள பெண்களின் அவல நிலையும் நமக்குத் புரிகிறது .

மூன்று முறை தேரின் துளை வழியாக இழுத்தனர் என்பது ஒரு சடங்காக இருக்கலாம்.  தேரின் 3 துளை பற்றி ரிக் வேத முதல் மண்டலத்திலும் வருகிறது (1-164)

XXXX

இதோ பாடலின் சுருக்கம் (RV.8-91)

8-91-1.நீரோடைக்குச் சென்ற ஒரு இளம்பெண்  சோம லதை  என்னும் செடியைக் கண்டாள். அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றாள் . இந்திரனே உனக்கு இதன் ரசத்தைப் பிழிந்து தருவேன் என்றாள்.

2.நீ வீரன், ஒளியுடன் பிரகாசிப்பவன்; வீடு வீடாகச் செல்பவன். என் பற்களால் கடித்துப் பிழியப்பட்ட  இந்த சோம ரசத்தை யவ /பார்லி பொரியுடனும், கரம்பைக் கஞ்சியுடனும், புரொடச ரொட்டிகளுடனும் சாப்பிடு .

XXXX

இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்; இராம பிரானுக்கு சபரி என்னும் வேடுவ குலக் கிழவி இலந்தைப் பழத்தைக் பல்லால் கடித்து ருசி பார்த்துவிட்டு நல்ல கனிகளை மட்டும் கொடுத்தாள்; அது போல இங்கு ஒரு இளம் பெண் தன் பல்லால் கடித்து பிழியப்பட்ட சோம ரசத்தைக் கொடுக்கிறாள் . அது மட்டுமல்ல. அத்தோடு அவள்  கொடுக்கும் எல்லா உணவு வகைகளும் ‘வெஜிட்டேரியன்’ VEGETARIAN DISHES பண்டங்கள் என்பதையும் கவனிக்க வேண்டும் .XXXX

3. நாங்கள் உன்னை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டோம். ஆனால் நீயே இங்கு வந்து இருப்பதை அறியவில்லை ; சோம ரசமே முதலில் மெதுவாகவும் பின்னர் வேகமாகவும் பாய்ந்து போ.

4.இந்திரன் எங்களுக்கு அடிக்கடி பலத்தையும் செல்வத்தையும் தருக; கணவனால்  வெறுக்கப்பட்ட பெண்கள் இந்திரன் உதவியை நாடுவோமாகுக.

5. இந்திரனே, மூன்று இடங்களை செழிப்பாக் குவாயாக. என் தந்தையின் வழுக்கைத் தலையையும், பாழாய்ப் போன நிலத்தையும், என் அங்கத்தையும் செழிப்பாக்குக ,

6. இந்திரனே, மூன்று இடங்களை செழிப்பாக் குவாயாக.. என் தந்தையின் வழுக்கைத் தலையையும், பாழாய்ப் போன நிலத்தையும், என் இடுப்புக்கு கீழேயுள்ள வியாதியுள்ள இடத்தையும் செழிப்பாக்குக ,

8-91-7.சதக்ரதுவே; நீ அபலையின் உடலை சகடத்தின் துளையிலே மூன்று முறை செலுத்தி சுகப்படுத்தினாய். அவளுக்கு சூரியனைப் போல ஒளிவீசும் தோலையும் தந்தாய்.

XXXX

இது ஒரு அருமையான, நிறைய தகவல் உள்ள கவிதை. சோமம் என்பது வெள்ளை க்காரன் சொல்லும் போதை பொருள் அல்ல. நோய் தீர்க்கும் ,மருந்து; ஆயுளை நீட்டிக்கும் அபூர்வ மூலிகை ; தோல் வியாதிகளைக் குணப்படுத்தும் .

என்பதையும் இக்கவிதை உறுதிப்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அக்காலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கவிபாடினர். 3000, 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கிரேக்க, பாபிலோனிய, சுமேரிய , சீன, பாரசீக ,எகிப்திய நாகரீகங்களில் பெண் கவிஞர்கள் அரிதிலும் அரிது!

இந்தக் கவிதைகளை நமக்குத் தொகுத்தளித்த வியாசருக்கு வணக்கங்கள்; அதைப் பாதுகாத்து வாமொழியாகவே பரப்பி வரும் பிராமணர்களுக்கும் நமஸ்காரம்.

-SUBHAM-

tags- மயிர், பயிர், அபாலா , ஆண்டாள், வழுக்கைத் தலை, ரிக் வேதம், கவிதை , சபரி

அருமையாக இந்த நாள் கழிந்ததா?! (Post 9422)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 9422

Date uploaded in London – –  26 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

 by ச.நாகராஜன்

தினசரி படிக்க வேண்டிய அழகிய ஆங்கிலக் கவிதை ஒன்று உண்டு. At Day’s End என்ற அந்தக் கவிதையை எழுதியவர் ஜான் ஹால் (JOHN HALL) என்பவர்.

அதை அப்படியே கீழே காணலாம்:

At Day’s End by John Hall


Is anybody happier because you passed his way?
Does anyone remember that you spoke to him today?
Is there anyone to utter now a kindly word of you?

Tags- John Hall, கவிதை, ஜான் ஹால்

ஹிந்தி படப் பாடல்கள் – 38 – கவிதையைக் கொண்டாடுவோம்! (Post No.7984)

   

WRITTEN BY R. NANJAPPA                          
Post No.7984  
Date uploaded in London – – – 16 May 2020   
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.      

ஹிந்தி படப் பாடல்கள் – 38 – கவிதையைக் கொண்டாடுவோம்!                            
  R. Nanjappa  

சமூக நிகழ்ச்சிகள் நடக்கும் சில இடங்களில் ‘காலணிகளை வெளியே விடவும்’ என  எழுதிவைத்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். கவிதையை வெளியே விட்டு வாருங்கள் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோமா?  உண்மையில் இப்படியும் நடந்தது!.   அயர்லாந்து நாட்டில் அந்த நாட்டு மக்கள் (ethnic Irish) வருடந்தோறும் ஒரு விழா நடத்துகிறார்கள். Tralee என்ற ஊரில் நடக்கும் இந்த விழாவுக்கு “Rose of Tralee” என்று பெயர். 4-5 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் கவிதையும் படிப்பார்கள். 2016ல் திடீரென்று இதை நிறுத்தினார்கள், 2017லும் இது தொடர்ந்தது. கவிதை வாசித்தால் நிகழ்ச்சிகளின் விருவிருப்பு குறைகிறது என்றார்கள். இதைப் பற்றி ஒரு அரைகுறை கவிதையும்  எழுதினார்கள்:   

There once was a time in the Dome
When Roses would recite the odd poem
Then times, they did change
Other things, now the rage
So we’ve asked them to leave poems at home.  
 

ஆம், கவிதையை வீட்டிலேயே வைத்துவிட்டு வாருங்கள் என்றார்கள்! இங்கிலாந்து நாட்டுக் கவிஞர் டென்னிஸன் பற்றி ஒரு நிகழ்ச்சி. அவர் புகழ் ஓங்கி, அவரை, அவர் வீட்டைப் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாம். அவரால்  சமாளிக்க முடியவில்லை. 1869ல் வீட்டையே மாற்றிவிட்டார்!  இப்போது இப்படி நடக்குமா?  

கவிதைக்குக் குறையும் மதிப்பு  
கவிதைக்கு மதிப்பு குறைந்து வருகிறது.. ஏப்ரல் 2015.  அமெரிக்க “வாஷிங்க்டன் போஸ்டு” பத்திரிகையில் ஒரு கட்டுரை வந்தது. Christopher Ingraham எழுதிய இக்கட்டுரையின் தலைப்பு: “Poetry is going extinct”.  அமெரிக்க அரசின் கணிப்புப்படி, 1992ல் 17% மக்கள் வருடத்தில் ஒருமுறையாவது ஏதோ கவிதை படித்தார்கள்; 2012ல் (20 ஆண்டுகள் கழித்து) இத்தொகை 6.7% ஆகக் குறைந்தது!    நம்மிடம் புள்ளி விவரம் இல்லையென்றாலும் நம் நாட்டின் நிலவரம் தெரிந்தது தான்! மரபுக் கவிதை எழுதுவோர் இன்று அதிகம் இல்லை. இருக்கும் கவிதையையே படிக்கத் தெரியவில்லை. சொல்லுக்குச் சொல் பிரித்து எழுதினால் தான் படிக்கமுடியும்.    இதற்கும் திரை இசைக்கும் என்ன சம்பந்தம்? திரையிசைக்கு ஒரு வடிவம் கொடுப்பது சாஹித்யம், அது கவிதை நடையில் இருப்பது சிறப்பு. சொல்லுடன் சேர்ந்தால் தான் இசை மனதில் பதியும்.

அச்சொல் கவிதை நடையில் இருந்தால் இன்னும் விசேஷம்,  நினைவில்  கொள்வதும் சுலபம். நம் பழைய இலக்கியங்கள் அனைத்தும்- எந்தப் பொருள் பற்றியதானாலும் – கவிதை நடையிலேயே அமைந்திருக்கின்றன. அவற்றை எளிதில் மனப்பாடம் செய்யலாம்.   நம் திரைஉலகிலும் 60-70கள் வரை இப்படித்தானிருந்தது. பழைய பாடல்கள் எல்லாம்- காமெடியன் பாடும் பாடல்கள் கூட-இப்படிதானிருக்கும். இப்போது கவிதை எழுதுவதில்லை. எதை எழுதினாலும் புதுக்கவிதை என்பார்கள். ஹிந்தித் திரை இசையிலும் இந்த நிலைதான் நிலவுகிறது. 50-60 களில் இருந்த கவிகள் போல இன்று இல்லை. அன்று நாசூக்காகச் சொன்னதை இன்று வெளிப்படையாகச் சொல்கிறார்கள். சொல்லத் தயங்கியதையும் துணிந்து சொல்கிறார்கள். சென்சார் போர்டிலுள்ள பொறுப்புள்ள மனிதர்கள் தூங்குகிறார்கள்!
எல்லாவற்றிற்கும் அடிப்படை, இன்று வாழ்க்கையே வியாபார மயமாகிவிட்டது தான். வேறு பரபரப்பு, கிளுகிளூப்பு அம்சங்கள் பெருகிவிட்டன.

கவிதையைப் படித்து, கேட்டு ரசிக்கும் திறமையை பள்ளிக்கல்வி தருவதில்லை. அதற்கேற்ற பொறுமையும், மன நிலையும் இல்லை. இதையெல்லம் 250 ஆண்டுகளுக்கு முன்பே கணித்தார் ஆங்கிலக் கவி ஆலிவர் கோல்ட்ஸ்மித் (Oliver Goldsmith). நவீன நாகரிகத்தின் பிடியில் கவிதைக்கு மதிப்பில்லாமல் போகும் என்று எழுதினார்.    



And thou, sweet Poetry, thou loveliest maid, Still first to fly where sensual joys invade; Unfit in these degenerate times of shame, To catch the heart, or strike for honest fame; Dear charming nymph, neglected and decried, My shame in crowds, my solitary pride; Thou source of all my bliss, and all my woe, That found’st me poor at first, and keep’st me so; Thou guide by which the nobler arts excell, Thou nurse of every virtue, fare thee well!  

பொற்காலத் திரைக் கவிதைகள்   நல்ல வேளை ! பொற்காலத் திரையிசைப் பாடல்கள் இருக்கின்றன. இவை முக்காலும் இலக்கியத்தரம் வாய்ந்த கவிதைகள். பாடல்களைக் கேட்டு மகிழலாம், கவிதைகளைப் படித்து ரசிக்கலாம். வாருங்கள், இரு கவிதைகளைப் பார்ப்போம்.  


  कभी तो मिलेगी, कहीं तो मिलेगी
बहारों की मंज़िल राही
बहारों की मंज़िल राही
लंबी सही दर्द की राहें
दिल की लॅगन से काम ले
आँखो के इस तूफान को पी जा
आहों के बादल थाम ले
दूर तो है पर, दूर नही है
नज़ारों की मंज़िल राही
बहारों की मंज़िल राही 
  माना की है गहरा अंधेरा
गुम है डगर की चाँदनी
मैली ना हो धुंधली पड़े ना
देख नज़र की चाँदनी
डाले हुए है, रात की चादर
सितारों की मंज़िल राही
बहारों की मंज़िल राही     

கபீ தோ மிலேகீ, கஹீ(ன்) தோ மிலேகீ பஹாரோ(ன்) கீ மன்ஃஜில், ராஹீ பஹாரோ(ன்) கீ மன்ஃஜில், ராஹீ   பயணி! நீ விரும்பும் அந்த அழகிய  இடம்- எப்போதாவது கிடைத்துவிடும், எங்கேயாவது கிடைத்துவிடும்! நீ விரும்பும் அந்த இடம் கிடைத்துவிடும்!   லம்பீ ஸஹீ தர்த் கீ ராஹே(ன்) தில் கீ லகன் ஸே காம் லோ ஆங்கோ கே இஸ் தூஃபான் கோ பீஜா ஆஹோ(ன்) கே பாதல் தாம் லோ தூர் தோ ஹை, பர் தூர் நஹீ ஹை நஃஜாரோ(ன்) கீ மன்ஃஜில் ராஹீ பஹாரோ(ன்) கீ மன்ஃஜில் ராஹீ     துன்பம் நிறைந்த இந்தப் பாதைகள் நீண்டவை தான்- ஆனால் மனதில் தைரியத்துடன் செயல்படு கண்ணில் ஒளிரும் (அவநம்பிக்கை) என்ற புயலை அடக்கு பெருமூச்சு என்னும் மேகத்தைத்   தடுத்து நிறுத்து

நீ விரும்பும் அந்த அழகிய இடம்- தூரத்தில் தான் இருக்கிறது- ஆனால் அவ்வளவு தூரமில்லை! அந்த அழகிய காட்சிகள் அதிக தூரத்தில் இல்லை! ஒரு நாள் அவற்றை அடைவாய், எங்காவது அடைவாய்  


மானா கீ ஹை கஹ்ரா அந்தேரா கும் ஹை டகர் கீ  சாந்த்னீ மைலீ  நா ஹோ துந்த்லீ படே நா தேக் நஃஜர் கீ சாந்த்னீ டாலேஹுயே ஹை ராத் கீ சாதர் ஸிதாரோ(ன்) கீ மன்ஃஜில் ராஹீ பஹாரோ(ன்) கீ மன்ஃஜில், ராஹீ     இருள்  அடர்ந்து கவ்விக்கொண்டிருக்கிறது- நான் அறிவேன் வழியில் நிலவொளியும் இல்லை! இருந்தாலும், அழுக்கு சேரக்கூடாது, பாதை நழுவக் கூடாது- ஆம், கண்ணின் ஒளி என்னும் நிலவின் வெளிச்சம் இருக்கிறதல்லவா! இரவு என்னும் சால்வை எங்கும் போர்த்தி இருக்கிறது அந்த தாரகை மின்னும் இடம்-  நீ விரும்பும் அந்த அழகிய இடம்- என்றாவது ஒரு நாள் கிடைத்தே தீரும் எங்காவது கிடைத்தே தீரும்!

  Song: Kabhie to milegi  Film: Aarti 1962 Lyrics : Majrooh Sultanpuri Music: Roshan  Singer: Lata    




What a lovely inspirational poem this is, tuned into a lovely melody! The character to whom this is sung is himself a poet, so the song is full of the poetic essence : many expressions go beyond their literal meanings. The ‘Baharon ki manzil , the nazaron ki manzil the sitaron ki manzil he is seeking is not a physical place at all, or entirely! It is partly his wish, partly dream or imagination, poetic fancy!. We all have or did have such dreams, after all! Not that everything was realised, but the practical way to deal with it is to treat the difficulties as guideposts, and not to lose heart.

(dil ki lagan se kaam lo) The darkness of the night stands for more than physical darkness daalen huve hai raath ki chadar; so we should not get dirty, or lose the way! (maili na ho, dundli pade na) This is possible by  a clear mental sight (dekh nazar ki chandni). Aankhon ke is toofan-

what meaning can you give? This song is full of such profound suggestions and makes it a grand poem, though small. The deeper the meaning we get, the more closely we study! On the whole, the message is one of hope!   The lyricist, music director and the singer match wits here! What a nice offering! This poem can be enjoyed as a stand alone. Roshan was a sensitive composer, he knew the mood and spirit of the poem!  

கிஸீகி முஸ்குராஹடோ(ன்) மே ஹோ நிஸார்   किसी की मुस्कुराहटों पे हो निसार
किसी का दर्द मिल सके तो ले उधार
किसी के वासते हो तेरे दिल में प्यार
जीना इसी का नाम है

माना अपनी जेब से फ़कीर हैं
फिर भी यारों दिल के हम अमीर हैं
मिटे जो प्यार के लिए वो ज़िन्दगी
जले बहार के लिए वो ज़िन्दगी
किसी को हो ना हो हमें तो ऐतबार
जीना इसी का नाम है…


रिश्ता दिल से दिल के ऐतबार का
ज़िन्दा है हमीं से नाम प्यार का
के मर के भी किसी को याद आयेंगे
किसी के आँसुओं में मुस्कुराएँगे
कहेगा फूल हर कली से बार-बार
जीना इसी का नाम है…  
   

கிஸீ கி முஸ்குராஹடோ(ன்) பே ஹோ நிஸார் கிஸீ கா தர்த் மில் ஸகே தோ லே உதார் கிஸீ கே வாஸ்தே தேரே தில் மே ப்யார் ஜீனா இஸீ கா நாம் ஹை  

பிறர் மகிழ்ச்சியைக் கண்டு நாமும் மகிழ்ச்சியடைதல், பிறருக்குக் கஷ்டம் வந்தபோது அதைக் குறைத்தல், பிறருக்காக மனதில் அன்பு பாராட்டுதல்-  இப்படி வாழ்வது தான் வாழ்க்கை!
    மானா அப்னீ ஜேப் ஸே ஃபகீர் ஹை ஃபிர் பீ யாரோ தில் கே ஹம்  அமீர் ஹை மிடே ஜோ ப்யர் கே லியே ஓ  ஃஜிந்தகீ ஜலே பஹார் கே லியே ஓ ஃஜிந்தகீ கிஸீ கோ  ஹோ நா ஹோ ஹமே தோ ஐத்பார் ஜீனா இஸீ கா


நாம் ஹை   கையில் பொருள் இல்லை -அதனால் என்ன? மனதை நல்லதாக வைத்துக்கொள்ளலாமே! அன்புக்காக யார் வாழ்கிறார்களோ, வாழ்க்கையை மேம்படுத்த யார் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறாரோ-  அப்படி வாழ்வது தான் வாழ்க்கை!  வேறு யாருக்கு இருக்கிறதோ இல்லையோ, இதுதான் என் நம்பிக்கை- இப்படி வாழ்வதுதான் வாழ்க்கை!  

ரிஸ்தா தில் ஸே தில் கே ஐத்பார் கா ஃஜிந்தா ஹை ஹமீ ஸே நாம் ப்யார் கா கே மர்கே பீ கிஸீ கோ யாத் ஆயேகீ கிஸீகே ஆன்ஸுவோ மே முஸ்குராயேங்கே கஹேகா ஃபூல் ஹர் கலீ ஸே பார் பார் ஜீனா இஸீ கா

நாம் ஹை       மனதோடு மனது பொருந்தி எழும் உறவு- அதைத்தான் அன்பு என்று சொல்லுவேன்! அதுவே வாழவைக்கிறது! இறந்த பின்பும் அவரை எவராவது நினைத்துக் கொள்வார்கள்! அவர் நினைவு அழுகையினிடையிலும் சிலரை முறுவலிக்கச் செய்யும்! மலர் ஒவ்வொரு மொட்டிடமும் சொல்லும்: இப்படி வாழ்வதுதான் வாழ்க்கை!

  Song: Kisi ki muskurahaton   Film: Anari 1959  Lyrics: Shailendra Music: Shankar Jaikishan   Singer: Mukesh    



எளிய ஹிந்திச் சொற்கள் தான்- எத்தனை பெரிய விஷயத்தைச் சொல்லிவிட்டார்! இது கவி ஷைலேந்த்ராவுக்குக் கை வந்த கலை! இந்த கொள்கைகளை Humanism என்பார்கள். சமய அடிப்படையிலும் இவை முக்கியமே! இந்த உடல் பிறருக்கு நன்மை செய்யவே கொடுக்கபட்டிருக்கிறது: பரோபகாரார்த்தம் இதம் சரீரம்!


பொருளில்லாதவர்கள் மனதால், உடலால் நன்மை செய்யலாமே! மிடே பஹார் கே லியே ஓ ஃஜிந்தகீ, ஜலே பஹார் கே லியே ஓ ஃஜிந்தகீ, – அருமையான வரிகள். “அன்புடையார் என்பும் உரியர் பிறற்கு ” என்ற குறளை நினைவு படுத்தும் ரிஸ்தா தில் ஸே தில் கே ஐத்பார்கா: இந்த வரி “நெஞ்சத்து அகம் நக  நட்பது நட்பு” என்ற குறளை நினவுபடுத்தும்! கஹேகா ஃபூல் ஹர் கலீ ஸே- மொட்டு தன் லட்சியத்தை இன்னும் எட்டவில்லை! மலர்ந்து, மணம் பரப்பி பிறரை மகிழச்செய்வதுதான் மொட்டின் இலக்கு! அந்த இலக்கைத் தொட்ட மலர், மொட்டுக்கு அதன் இலக்கை நினைவுபடுத்துகிறது! உலகில் பெரியோர்கள் செய்வதும் இதுதானே! ‘

சான்றோர் பலர் யான் வாழும் ஊரே” என்பார் புறநானூற்றில்!  இப்படி ஒரு எளிய கவிதையில் அரிய விஷயங்களைச் சொல்லிவிட்டார் கவிஞர் ஷைலேந்த்ரா! அருமையான இசையில் இக்கவிதையை தோய்த்திருக்கிறார்கள் ஷங்கர்-ஜெய்கிஷன்! மறக்க இயலாத வகையில் பாடியிருக்கிறா முகேஷ்!   இந்த இரண்டு கவிதைகளும் நற்செய்தியுடன் நம்பிக்கையை வளர்ப்பதாக இருக்கின்றன! கவிதையைக் கொண்டாடுவோம்!                                   ***      


tags — ஹிந்தி படப் பாடல்கள் – 38 , கவிதை


tags — ஹிந்தி படப் பாடல்கள் – 38 , கவிதை

போஜ மன்னன் ரசித்த ஒரு காதல் கவிதை! (Post No.7948)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7948

Date uploaded in London – – – 10 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ச.நாகராஜன்

சம்ஸ்கிருதத்தில் பல்லாயிரக்கணக்கான காதல் கவிதைகள் உள்ளன. அவற்றை ரசிக்காதோர் இல்லை – (சம்ஸ்கிருதத்தின் பால் வெறுப்பில்லாதவர்கள் நிச்சயம் படித்து அல்லது கேட்டு ரசித்திருப்பர்)

இந்தக் காதல் கவிதைகளின் தொகுப்புகள் பலவும் பல்வேறு அறிஞர்களால் தொகுக்கப்பட்டு வேறு இருக்கின்றன.

போஜ மன்னன் தான் எழுதிய சரஸ்வதி கண்டாபரணம் நூலில் சிறந்த பாடல்களை எடுத்துக் காட்டாகக் காட்டுவது வழக்கம்.

உக்தி என்ற கவிதை இலக்கணத்தை விளக்க வந்த போஜ ராஜன் அருமையான கவிதை ஒன்றை எடுத்துக் காட்டாக காட்டுகிறான்.

கவிதை இது தான் :

குஷலம் தஸ்யா ஜீவதி

  குஷலம் ப்ருஷ்டாஸி ஜீவதீத்யுக்தம் |

புனரபி ததேவ கதயஸி

  ம்ருதாம் நு கதயாமி யா ஸ்வசிதி ||

குஷலம் – அவள் நன்றாக இருக்கிறாளா?  (Is she well and cheerful?)

தஸ்யா ஜீவதி – அவள் உயிரோடு இருக்கிறாள்! (She lives)

குஷலம் – நான் கேட்டது அவள் நன்றாக இருக்கிறாளா என்று! (“I ask you, “is she well?”)

ப்ருஷ்டாஸி  ஜீவதீத்யுக்தம் –  நான் பதில் சொன்னேன் – அவள் உயிரோடு இருக்கிறாள் என்று (I have replied , “She lives”)

புனரபி ததேவ கதயஸி –  நீ சொன்னதையே திருப்பிச் சொல்கிறாய்! (You are saying again the same thing)

ம்ருதாம் நு கதயாமி யா ஸ்வசிதி – அவள் இன்னும் சுவாசித்துக் கொண்டிருக்கும் போது அவளை இறந்து விட்டாள் என்று சொல்லச் சொல்கிறாயா?

(“Am I to say she is dead when she still breathes?”)

(English Translation : A.A.R)

ஆர்யா சந்தத்தில் அமைந்துள்ள இது காலத்தை வென்ற ஒரு காதல் கவிதை.

தோழியிடம் அவன் காதலியைப் பற்றி தலைவன் ஆவலுடன் நலம் விசாரிக்கிறான்.

தோழியோ அவள் மூச்சு மட்டும் நிற்கவில்லை – உன்னைப் பிரிந்து என்பதை அழுத்தம் திருத்தமாக, “தஸ்யா ஜீவதி” என்று சுருக்கமாகச் சொல்லி விடுகிறாள்.

அவளுடைய எல்லா நலன்களும் அழிந்தொழிந்தன; நடைப்பிணமாக இருக்கிறாள் (கோமா ஸ்டேஜிலோ?!) – மூச்சு மட்டும் ஓடுகிறது என்று இப்படிச் சிறப்பாகச் சொல்வது காவிய சொற்குணங்களில் உக்தி என்ற பெயரை அடையும்.

இப்படி 24 சொற்குணங்கள் உள்ளன. 23ஆவதாக அமைவது உக்தி. எப்படிப்பட்ட மஹா ரஸிகனாக இருந்திருந்தால் போஜன் தான் இதை ரஸித்ததோடு காலம் காலமாக உலக மக்கள் அனைவரும் ரஸிக்கத் தக்க ஒரு உதாரணக் கவிதையாகக் காட்டி இருப்பான்?!

கவிதா ரஸிகர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு நூல் போஜ மஹாராஜனின் சரஸ்வதி கண்டாபரணம்!

tags — போஜ மன்னன் , காதல், கவிதை

கம்போடியக் கல்வெட்டுகளில் அழகிய கவிதைகள்- பகுதி 2 (Post No.7017)

Tamil at the bottom


WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 26 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 7-54 am

Post No. 7017

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

கம்போடியக் கல்வெட்டுகளில் அழகிய கவிதைகள்- பகுதி 1 (Post No.7000)

WRITTEN BY London swaminathan

swami_48@yahoo.com


 Date: 22 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 10-17 am

Post No. 7000


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

உலகில் ஸம்ஸ்க்ருத மொழி பரவிய அளவுக்கு வேறு எந்த மொழியும் பரவியதில்லை என்பதற்கு கல்வெட்டுகளே சான்று பகர்கின்றன. அலெக்ஸாண்டர் படையெடுப்பால் பரவிய கிரேக்க மொழியையும் விட சம்ஸ்க்ருத மொழியின் தாக்கம் அதிகம். ஏனெனில் துருக்கியில் உள்ள பொகைஸ்கான் களிமண் படிவக் கல்வெட்டுகள் முதல் வியட்நாம் கம்போடியா, இந்தோநேஷியா வரை சம்ஸ்க்ருதக் கல்வெட்டுகளும் இலக்கியங்களும் உள்ளன. துருக்கி கல்வெட்டு முழுதும் சம்ஸ்க்ருதம் இல்லாவிடினும் 3400 ஆண்டுகளுக்கு முன்னர் வேத கால தெய்வங்களின் பெயரில் கைச்சாத்திட்ட களிமண் கல்வெட்டு உளது. கிக்குலி எழுதிய குதிரை சாஸ்திரம் ஸம்ஸ்க்ருத எண்களுடன் உள்ளது. ஆகையால் காலத்தால் முந்தியவை. அளவிலும் ஸம்ஸ்க்ருத்தைத் தோற்கடிக்க எந்தக் கல்வெட்டும் இல்லை. சம்பா எனப்படும் வியட்நாம், காம்போஜம் எனப்படும் கம்போடியா, சாவகம் எனப்படும் இந்தோநேஷியாவில் சுமார் 1000 ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் உள்ளன. உப்பு, புளி, எண்ணைக் கணக்கு எழுதிய சுமேரிய கல்வெட்டுகள் எண்ணிக்கையில் அதிகம் எனினும் அவை ஒரே இடத்தில் குவிந்துள்ளன. மேலும் இலக்கிய நயமற்றவை.

கல்வெட்டுகளில் உள்ள 800 ஸம்ஸ்க்ருத புலவர்களின் பெயர்கள் அடங்கிய புஸ்தகம் பற்றி சென்ற மாதம் எழுதினேன். இப்போது கம்போடியக் கல்வெட்டுகளில் இருந்து வடித்தெடுத்த அழகிய கவிதைகளைக் காண்போம். இவை சென்னை பல்கலைக்கழக ஸம்ஸ்க்ருதத் துறை ரீடர் சி.எஸ். சுந்தரம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம்.

இவை வழக்கமாகக் கல்வெட்டுகள் தரும் தகவலுடன் வேறு பல புராண இதிஹாசக் கதைகளையும் உவமைகளையும் தருகின்றன. மேலும் சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள கம்போடியாவில் ஸம்ஸ்க்ருதம் புழங்கியதையும் புலமை பரவியதையும் காட்டும். காம்போஜ கல்வெட்டுகள் என்ற பெயரில் ஆர்.சி.மஜூம்தார் எழுதிய நூலிலிருந்து  சுந்தரம் எடுத்தாண்டுள்ளார். ஆகையால் பக்க எண்கள் அந்தப் புஸ்தத்தைக் குறிக்கும். செம்மையான ஸம்ஸ்க்ருதத்தில் அமைந்த அற்புதக் கவிதைகள் அவை-

1.கம்போடிய மன்னர்களின் மேதாவிலாசம்

மன்னரின் மனதில் ஒரு பெட்டிக்குள் பொக்கிஷம் போல அறிவு பாதுகாக்கப்பட்டதாம். அதைக் காப்பாற்றும் பொருட்டு ஸரஸ்வதி தேவி வாயிலில் ( அம்மன்னரின் வாயில்) காத்து நிற்கிறாளாம். அதாவது மன்னர் கற்ற விஷயம் எல்லாம் தொலைந்து போகாமல் இருக்க சரஸ்வதி தேவி அருள் பாலிக்கிறாள்.

இதோ கவிதை:-

நயஸ்தம் ஞானதனம் யஸ்ய மனஹ கோசே ஸரஸ்வதீ

நித்யம் ரக்ஷிதுகாமேவ முகத்வாரே ஸ்திதா பவத் (P.63, v,23)

மன்னருக்குப் புகழ்மாலை

ஆதிபகவான் போல சாஸ்திரங்களிலும், சில்ப சாஸ்திரத்திலும், மொழி, லிபி, நாட்டியம், சங்கீதம், விஞ்ஞானம் ஆகியவற்றிலும் மன்னர் வல்லவராம்.

யஸ் ஸர்வசாஸ்த்ரேஷு சில்ப பாஷா லிபிஸ்வபி

ந்ருத்த கீதாதி விஞ்ஞானேஷ்வாதிகர்தேவ பண்டிதஹ (P.83, v.51)

XXX

மற்றொரு கவிதை சைவ சமயத்தில் மன்னருக்குள்ள ஈடுபாட்டைக் காட்டுகிறது. இதை வருணிக்கும் அழகே தனி.

தேன் போல சைவ சாஸ்திரத்தைப் பருகுவார். அதை புத்தி என்னும் மத்தைக் கொண்டு கடைவார். அதுமட்டுமல்லாமல் அதை எல்லோருக்கும் பகிந்தளிப்பார்

சிவசாஸ்த்ராம்ருதம் பீத்வா புத்திமந்தரேண விமத்ய யஹ

ஸ்வயம் ஞானாம்ருதம் பீத்வா தமயா அன்யானபாயயத் (P.153, v.20)

–SUBHAM — லோகா சமஸ்தா சுகினோ பவந்து

மைல் கல் பற்றிய 1921 ஆம் ஆண்டு கவிதை

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Compiled  by London swaminathan

Date: 30  September 2015

Post No: 2200

Time uploaded in London :– 5-50 (காலை)

(Thanks  for the pictures) 

bhavnagar milestone

1920 ஆம் ஆண்டுகளில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான செய்யுள் தொகுப்பில் வழக்கமான தமிழ் செய்யுட்களுடன் தனியாரின் சில கவிதைகளும் இடம் பெற்றன. அதில் ஒன்று சாலைகளில் காணப்படும் மைல் கல் பற்றியது. இப்பொழுது வெளிநாடுகளைப் போல உயரத்தில் தொங்கும் போர்டுகள் வந்துவிட்டதால் அடுத்த தலை முறைக்கு மைல் கல் என்றால் என்ன என்றே தெரியாது. ‘கூகுள்’ மூலம் கிடைத்த சில படங்களை இணத்துள்ளேன். அவை தற்காலத்தியவை. அந்தப் பழைய நூலுக்கும் இவைகளுக்கும் தொடர்பு இல்லை.

கவிதையை இயற்றியவர் ஆனைமலை ஸ்ரீ ஸ்ரீநிவாச முதலியார் . ஷேக்ஸ்பியரின் ரோமியோ அண்ட் ஜூலியட்டைப் பாடல் வடிவில் தமிழில் மொழிபெயர்த்தவர்!! இப்போது பெரிய பல்கலைக்கழகங்களும் சாதிக்க முடியாத பணிகளைப் பல தமிழ் ஆர்வலர்கள் 1900- 1940 ஆண்டுகளில் சாத்தித்துள்ளனர். புத்தகம் இருப்பிடம்: பிரிட்டிஷ் லைப்ரரி, லண்டன்.

IMG_6263 (2)

IMG_6367 (2)

IMG_6368 (2)

IMG_6369 (2)

KM-Milestone_On_the_Munnar_Road

IMG_6370 (2)

–சுபம்—

விநோதக் கனவுகள்; கனவில் வந்த கதைகளும் கவிதைகளும்

the-polygamy-slippery-slope

Article No. 2042

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 4  August  2015

Time uploaded in London : –13-04

கனவுகள் பற்றி எவ்வளவோ அதிசயச் செய்திகள் உள்ளன. கணித மேதை ராமானுஜம் கனவில் கடவுளிடமிருந்து பெற்ற கணித விஷயங்கள் முதல் பென்ஸீன் அமைப்பை கனவில் கண்ட விஞ்ஞானிகள் வரை எழுதிவிட்டேன். இப்பொழுது  கனவில் கதைகளையும் கவிதைகளையும் பெற்ற ஓரிரு சம்பவங்களைப் பார்ப்போம்.

திருமதி அமோஸ் பிஞ்சொட் என்பவர் ஒரு கவிஞர். ஒரு நாள் அவருக்கு கனவில் ஒரு கவிதை வந்தது. அது பலதார திருமணம் பற்றிய கவிதை. கனவில் கவிதை வந்தவுடன் பக்கத்தில் மேஜை மீதிருந்த பென்சிலையும் பேப்பரையும் எடுத்து அவசர அவசரமாகக் கிறுக்கி வைத்தார். காலையில் எழுந்தபோது மறந்தே போய்விட்டார். பின்னர், மேஜை மீது காகிதக் கிறுக்கலைப் பார்த்தபோது அதை எடுத்துப் படித்தார். அசந்தே போனார்.

அவர் எழுதிய கவிதை

ஹோகமஸ் ஹைகமஸ்

மென் ஆர் பாலிகமஸ்

ஹைகமஸ் ஹோகமஸ்

விமன் ஆர் மானொகமஸ்

பாலிகமஸ்=பல மனைவியரை மனத்தல்

மானோகமஸ் = ஒருவரை மட்டும் மணத்தல்

“Hogamus Higamus

Men are Polygamous

Higamus Hogamus

Women Monogamous.

(நான் நினைவில் கண்டவை: மறுநாள் காலையில் எழுத வேண்டிய கட்டுரைத் தலைப்பு பற்றி எண்ணியவாறே நான் தூங்குவேன். இரவில் முழிப்பு வரும்போது திடீரென்று சில புதிய ஐடியாக்கள்- அதாவது அந்தக் கட்டுரைக்குத் தொடர்புடைய விஷயங்கள் – மனதில் தோன்றும். உடனே படுக்கைக்கு அருகில் வைத்திருக்கும் சிட்டையில் எழுதிவைப்பேன். காலையில் அவைகளைத் தொகுத்து எழுதுவேன். ஆனால் இதுவரை கனவில் எதுவும் கிடைக்கவில்லை!!)

மேலை உலகத்தில் மிகப்பெரிய உளவியல் நிபுணர்கள் என்று கருதப்படும் பிராய்ட், யங் ஆகியோர் கனவுகளைப் பற்றி சொல்லும் கொள்கைகள் சரியென்று தோன்றவில்லை. அடி மனதில் புதைந்து கிடக்கும் நிறைவேறாத ஆசைகள்தான் இரவில் கனவுகளாக பரிணமிப்பதாக அவர்கள் கூறுவர். ஆனால், புத்தர், மஹாவீரர் ஆகியோரின் தாய்மார்கள் கண்ட சுபக் கனவுகள் பற்றி அவர்களுடைய சாத்திரங்கள் சொல்லுகின்றன. இந்து மத நூல்களிலும் ரிக் வேத காலம் முதல் கனவுகளின் பொருள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

கனவுகளின் விளக்கம் என்ற நூல் சம்ஸ்கிருததில் உள்ளது. இது வியாழ பகவான் எழுதியது. இது தவிர, பொன்னவன் எழுதிய கனா நூல் ஒன்றுளது. தமிழ் என்சைக்ளோபீடியாவான சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணியில் ஏழு பக்கங்களுக்கு கனவுகள் பற்றி விளக்கங்கள் உள்ளன.

stevenson

கனவில் வந்த கதை

ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன் என்ற கதாசிரியரை, ஆங்கிலம் படித்த எல்லோருக்கும் தெரியும். அவர் எழுதிய ‘ட்ரெஷர் ஐலண்ட்’, ‘கிட்நாப்ட்’ – முதலிய கதைகள் மிகவும் பிரசித்தமானவை. ஒரு நாள் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது பயத்தில் ஓலமிட்டார். அவருக்கு ஏதோ பயங்கரக் கனவு எற்ற்பட்டிருக்கிறது என்று எண்ணி, அவருடைய மனைவி, லூயிஸைத் தட்டி எழுப்பினார். அவருக்கு ஒரே கோபம்; ஏன் என்னை எழுப்பினாய்? அருமையான ஒரு பயங்கரக் கதையைப் பார்த்துக்கொண்டிருந்தேன் – என்று சொல்லி திட்டினார். பின்னர் இதை “டாக்டர் ஜெகில், மிஸ்டர் ஹைட்”  என்ற கதையாக எழுதினார்.

லிங்கன் கண்ட கனவு

அமெரிக்காவின் 16ஆவது ஜனாதிபதியான ஆப்ரஹாம் லிங்கன் ஒரு கனவு கண்டது பற்றி அவரே எழுதிவைத்து  இருக்கிறார்: “நான் ஒரு பெரிய சபையில் பலரைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். யாரோ ஒருவர் என்னைப் பார்த்து “இவனைப் பார்த்தால் சாதாரண ஆசாமி போலத் தோன்றுகிறது” – என்றான். நான் உடனே அவனைப் பார்த்து சொன்னேன்: “நண்பரே! கடவுளுக்கு சாதாரண ஆசாமிகளைத்தான் அதிகம் பிடிக்கும். அதனால்தான் அவர், சாதாராண மனிதர்களை அதிகம் படைத்திருக்கிறார்.”

rat

கனவில் வந்த எலிகள்

ஒரு ஜெர்மன் இளவரசனுக்கு எலிக் கனவு வந்தது. அந்தக் கனவில் மூன்று எலிகள் வந்தன. ஒன்று கொழுத்த எலி; இன்னொன்று நலிந்து மெலிந்து போன எலி; மூன்றாவதோ குருட்டு எலி. அவருக்கு இந்தக் கனவின் பொருளை அறிய ஆசை. உடனே எல்லோரும் “ஜிப்ஸி இன ஆரூடக்காரியிடம் கேளுங்கள்” – என்று சொன்னார்கள். அவரும் ஜிப்ஸி குறத்தியிடம் குறி கேட்டார். அந்தப் பெண் சொன்னாள்: “கொழுத்த எலி இருக்கிறதே – அதுதான் உன்னுடைய பிரதம மந்திரி, மெலிந்த எலி இருக்கிறதே – அது உன் நாட்டு மக்கள்; மூன்றாவது குருட்டு எலி யார் தெரியுமா? அது நீயே தான்!!

american indian

செவ்விந்தியர் கனவு

ஒரு 500 ஆண்டுகளுக்கு முன் வரை உலகிலேயே பணக்கார நாடு இந்தியாதான். இதனால் உலகம் முழுதுமுள்ள பேராசைக்காரர்கள் எல்லாம் இந்தியாவை நோக்கி 2000 ஆண்டுகளாகப் படை எடுத்து வந்தனர். இப்படிப் புறப்பட்ட ஒரு ஆள்தான் கொலம்பஸ். அவர் கண்டுபிடித்ததோ மேற்கிந்தியத் தீவுகள். அதை இந்தியா என்று நினைத்து அனைவரையும் இந்தியர் என்று பெயரிட்டார். இப்படிப்பட்ட அமெரிக்க இந்தியர்களுக்குப் பொறுப்பாக சர் வில்லியம் ஜான்சன் என்பவரை பிரிட்டன் நியமித்தது. அப்பொழுது அமெரிக்காவின் ஒரு பகுதி அவர்களிடம் இருந்தது.

சர் வில்லியம் நல்ல ஜரிகை வேலைபாடுமிக்க உடைகளை இங்கிலாந்திலிருந்து தரவழைத்திருந்தார். இந்தியாவில் பல பழங்குடி மக்கள் இருப்பது போலவே, இந்தியாவைவிடப் பெரிய நாடான அமெரிக்காவில், நிறைய பழங்குடி இன மக்கள் இருக்கின்றனர். அதில் ஒரு இனம் மொஹாக் இனப் பழங்குடியினர். அவர்களின் தலைவன் ஹென் ட் ரிக்.

வில்லியமைச் சந்திக்கவந்தபோது அவரும் இந்த வெளிநாட்டு உடைகளைப் பார்த்து புகழ்ந்துவிட்டுச் சென்றார். சில நாட்களுக்குப் பின் திரும்பிவந்து தான் கண்ட கனவை வில்லியமிடம் கூறினார். அந்தக் கனவில், விலையுயர்ந்த வெளி நாட்டு உடைகளில் ஒன்றை வில்லியம் தனக்குக் கொடுப்பது போல கனவு கண்டதாகச் சொன்னார். உடனே சர் வில்லியமும் குறிப்பறிந்து ஒழுகினார். ஒரு உடையை அந்த செவ்விந்தியத் தலைவரிடம் கொடுத்தார். அவரும் மகிழ்ச்சியுடன் விடை பெற்றார்.

IF

IF

சில காலம் கழிந்தது. ஹென் ட் ரிக் மீண்டும் வில்லியமைக் காண வந்தார். இப்பொழுது வில்லியம், தான் கண்ட ஒரு கனவை ஹென் ட் ரிக்கிடம் சொன்னார். மோஹாக் நதிக்கரையில் விலை மதிக்கமுடியாத 5000 ஏக்கர் நிலப்பரப்பை பழங்குடி இனம் தனக்குக் கொடுப்பதாகக் கனவு கண்டதாகச் சொன்னார். உடனே அந்த இனத்தின் தலைவன் கொஞ்சமும் தயங்காமல், 5000 ஏக்கர் நிலப்பரப்பை வெள்ளைக்காரரிடம் கொடுத்துவிட்டார்.

போகும்போது அவர் சொன்னார்: வில்லியம், இனி உங்களைக் கனவில் காணும் ஆசையே போய்விட்டது. ஏனெனில் உங்கள் கனவெல்லாம் கொஞ்சம் ஜீரணிக்கக் கடினமானவை”.

(வெள்ளைக்காரனிடம் விலையுயர்ந்த ஆடையை வாங்கியதால் 5000 ஏக்கர் விலையுயர்ந்த நிலப்பரப்பை இழந்தது மோஹாக் இனம்! வில்லியம் கண்ட கனவு, உண்மைக் கனவோ பொய்க் கனவோ, யாம் அறியோம் பராபரமே!)

mohack indian

My previous Research Articles on Dreams:

Role of Dreams in Tamil Saivite Literature (posted on July 4, 2013)

Do our Dreams have Meaning? (Posted on December 29, 2011)

God’s Note Book (posted on March 16, 2014)

Strange Dreams, posted on 27 July 2015Inauspicious Dreams: Dreams in Vedas and Upanishads, Posted on 28th July 2015

Vedic Echo in Sumerian and Egyptian Concept of Dreams, Posted 31 July 2015

–சுபம்—