
Research Article written by London Swaminathan
Date: 22 August 2016
Time uploaded in London: 15-54
Post No.3082
Pictures are taken from various sources; thanks for the pictures.
குறத்தி கருவுற்ற காலத்தில் குறவன் மருந்து சாப்பிட்டான் – என்று ஒரு தமிழ்ப் பழமொழி உள்ளது. இதன் உண்மைப் பொருள் என்ன?
குறத்தி கருவுற்றபோது அவளைப் போலவே கணவனும் மருந்து (காயம்) உண்டான் என்பது இதன் பொருள். இது கிண்டலாக எழுந்த பழமொழியா அல்லது உண்மைப் பொருளுடைத்தா?
அரசமரத்தைச் சுற்றிவிட்டு அடிவயிற்றைத்தொட்டுப் பார்த்தாள் (பார்த்தாளாம்) என்று ஒரு தமிழ்ப் பழமொழியும் இருக்கிறது. அதாவது அரச மரத்தைச் சுற்றினால், மகப்பேறு இல்லாதோருக்கு மகப் பேறு (குழந்தைகள்) கிட்டும் என்றும் சொல்லலாம். உடனடி பலனை எதிர்பார்ப்பது மடமை என்றும் பொருள் சொல்லலாம்.
இதே போல குறத்தி கர்ப்பமுற்றதற்கு குறவன் மருந்து சாப்பீட்டானாம் என்று கிண்டலாகவும் நினைக்கலாம்.
ஆனால் உண்மைப் பொருள் : குறவன் மருந்து சாப்பிட்டான் என்பதே!
இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் இந்தப் பொன்மொழி சம்ஸ்கிருத்த்திலும் உண்டு. “மகனைப் பெறுகிறாள் நிஷாதப் பெண்; மருந்தைக் குடிக்கிறான் நிஷாத தந்தை” — என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு பொன்மொழி இருக்கிறது.
இதைவிட வியப்பான விஷயம் வடகிழக்கு மலையில் வாழும் நாகா இன மக்களும் இப்படியே சொல்லுவர்
“நாகாவின் மனைவி குழந்தை பெற்றாளாம்; நாகன் மருந்து சாப்பிட்டானாம்” என்று.
இப்படிப்பட்ட வழக்கம் உலகம் முழுதும் இருக்கிறது. இதை கூவேட் (couvade) என்ற பிரெஞ்சு மொழிச் சொல்லால் குறிப்பிடுவர். அந்தச் சொல்லின் பொருள் பறவைகள் முட்டையை ‘அடைகாப்பது’ ஆகும்.
மனைவிக்கு பேய் பிசாசுகளால் எந்தப் பாதகமும் வரக்கூடாது என்று பேய் பிசாசுகள், துர் தேவதைகள், அணங்குகளை ஏமாற்ற கணவன் இப்படி பிரசவ வேதனைப்படுவது போல நடிக்கும் வழக்கம் எகிப்து, கிரேக்கம் முதலான நாடுகளில் ஆதிகாலத்தில் இருந்தது. ஆயினும் கணவன்” மருந்து உண்ணல்” என்பது இந்தியாவில் பல இடங்களில் காணப்படுகிறது.
இதிலிருந்து தெரியும் விஷயங்கள் என்ன?
1.நிஷாதர்கள், தமிழ்க் குறவர், குறத்தியர், நாகா இனப் பழங்குடிகள் யாவரும் ஒன்றே.
2.அவர்களும் இந்துக்களே. ஏனெனில் நிஷத நாட்டு மன்னன் நளன் சரிதம் மஹாபாரதத்திலேயே உள்ளது. அவன் மிகச் சிறந்த தேரோட்டி, மிகச் சிறந்த சமையல்காரன்.
3.நிஷாதர்கள் என்னும் வேடர் குடியைச் சேந்தவர்தான் வால்மீகி, குஹன், கண்ணப்ப நாயனார், சபரி என்னும் தவசி.
4.நான் முன்னர் கட்டுரைகளில் குறிப்பிட்டது போல நகர நகரீகம் நிலவியபோதே அவர்கள் கானகத்தில் சுகமான– இயற்கையோடு இணைந்த வாழ்வு நடத்தினர். இதற்கு ராமாயணம், மஹாபாரத, சிலப்பதிகார சான்றுகளை ஏற்கனவே கொடுத்துள்ளேன்
- வெளிநாட்டு வெள்ளையர்கள், இவர்களை திராவிடர்கள் என்றும், மலைகளுக்கு விரட்டி அடிக்கப்பட்டவர்கள், இந்துக்கள் அல்லாதவர் என்றும் எழுதியது எல்லாம் பொய்ப் புனைச் சுருட்டு என்பதை சங்கத் தமிழ் இலக்கியமும், சம்ஸ்கிருத இலக்கியமும் விளக்குகின்றன.
- தமிழர்கள் நகர நாகரீகம் வாழ்ந்த காலத்திலேயே குறிஞ்சி நிலத்தில் கானவர் வாழ்க்கை நடந்ததை சங்க இலக்கியம் பறை சாற்றூம்.
7.இப்போது நிஷாதர்களின் ஒரு பிரிவு “பில்” என்ற இன மக்கள் ஆவர். அவர்கள் வில்லும் கையுமாகத் திரிவதால் ‘வில்’ என்பதே ‘பில்’ என்று மாறியதாகச் சொல்லுவர். ஆனால் அவர்கள் இப்போது பேசும் மொழி வடக்கத்திய மொழிகளே (குஜராத்தி, மராத்தி).
8.நிஷாதப் பெண்களை மணந்த அந்தணர் பற்றிய குறிப்புகளும் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. இதே போல நாக கன்னிகைகள் மணந்ததையும் இதிஹாச புராணங்களில் காண முடியும். ஆக ஜாதி, இனம் என்பது கடுமையான விதியாக இருக்கவில்லை.

ஆக, நாகா இன மக்கள், நிஷாதர்கள் (பில்/வில்லவர்), குறிஞ்சி நிலக் குறவர், குறத்தியர் ஆகியோர் ஒரே மாதிரி சிந்திப்பது — “இமயம் முதல் குமரி வரை ஒன்று” — என்பதை நி லைநாட்டுகிறது.
வெளி நாட்டினர் எழுதிய பல விஷயங்கள் வடிகட்டிக் கொடுக்கப்பட்ட செய்திகளே (filtered information) அன்றி முழு உண்மை அல்ல என்பதை
பழங்குடி மக்கள் பற்றிப் படித்தால் புரிந்துகொள்ளலாம். அவர்களும் கண்ணப்பர், சபரி, வால்மீகி போல தீவிர இந்துக்களே.
வாழ்க நிஷாதர்கள்! வளர்க இந்து மதம்!!
You must be logged in to post a comment.