
WRITTEN BY KATTUKKUTY
Post No. 8948
Date uploaded in London – – 19 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
FOR VOICE REGARDING GO TO FACEBOOK.COM/GNANAMAYAM
16-11-2020 திங்கள்கிழமை அன்று லண்டனிலிருந்து இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்ட உரை!
XXXX
கோவில்கள் – திரு நள்ளாறு, கொள்ளிக்காடு,திருநெல்வேலி
அருகில் உள்ள ஸ்தலங்களான,குன்னத்தூர் என்ற திரு வேங்கடநாதபுரம் , திருக்குளந்தை
என்ற பெருங்குளம், சென்னையில் உள்ள பொழிச்சலூர்,
மதுரை அருகில் உள்ள குச்சனூர்,
சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள சனீஸ்வரன் கோவில்
கன்னி மாதம் என்ற புரட்டாசி மாதம் விஷ்ணுவிற்கு விசேஷமான
மாதம்.அதே மாதத்தில் முதல் சனிக்கிழமையன்று ரோகிணி
நடசத்திரத்தில் பிறந்தவரே சனீஸ்வரன்!!! ஆகையால், புரட்டாசி
மாத த்தில் விரதம் இருந்தவர்களையும், ரோகிணி நட்சத்திரத்தில்
பிறந்தவர்களையும் அவர் ஒன்றும் செய்ய மாட்டார்!!!

ஏழரை நாட்டு சனி
ஏழரை நாட்டு சனி, முதல் இரண்டரை வருடம், மங்கு சனி, இரண்டாவது இரண்டரை வருடம்
பொங்கு சனி, மூன்றாவது இரண்டரை வருடம் இறுதிச்சனி- நடுங்க வைத்துவிடும்
அனைவரையும்!!!
சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டு வளர்ந்ததினால், தண்டிப்பதில்
கடுமையான நீதிபதி!!!
தண்டிப்பதில் அவருக்கு நிகர் அவர் தான்,,அவர் சிவனாக இருந்தாலும்
சரி, சொந்த சகோதரன் யமனாக இருந்தாலும்சரி……விடமாட்டார்!!!
அவர் அள்ளிக் கொடுப்பதில் வள்ளல், பிடிக்காதவர்க்கு கொள்ளி
வைக்கும் சூரர்!!!
உதாரணமாக இவரைப் போலவே ஈஸ்வரப் பட்டம் பெற்றவன்
ராவணேஸ்வரன்!!! நவகிரகங்களையும் படிக்கட்டுகளாக்கி
அதன் மீது ஏறி சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிந்த அவனை
நாரதர் பார்த்தார், ஒரு வழி செய்தார் அலனுக்கு…..
ராவணா,”முதுகில் மிதித்து சிம்மாசனம் ஏறி என்ன புகழ்???
உனக்கு இருக்கும் பெருமைக்கு அவர்கள் நெஞ்சில் மிதித்தல்லவா
நீ சிம்மாசனம் ஏற வேண்டும்”.???
அத்தனை நவகிரகத்தையும் திருப்பி நெஞ்சில் மிதித்து அவன் ஏறினான்.
சனீஸ்வரபகவானின் பார்வை பட்டு அவன் அழிந்தான், குடும்பமே
அழிந்தது, ஏன், நாடே அழிந்தது!!
அஸ்வ ரகசியத்தை தெரிந்தவன், சிறந்த ஆட்சியாளன்,அழகான
ராஜ குமாரன், சமையல் கலை வல்லுனன், நளன்!!!
காலை சரியாக கழுவ வில்லை என்ற ஒரே காரணத்திற்காக,
நாட்டை விட்டு ஓட்டி, மனைவியைப் பிரிந்து, தனது ஆடையை இழந்து ,
மனைவியின் புடவைத் தலைப்பில் அலைய விட்டு,
கடைசியில் தனது க்ஷேத்திரமான திருநள்ளாறுக்கு வந்து தன்னை வழிபட்ட பின்னரே
அவனுக்கு விடுதலை அளித்தார் சனீஸ்வர பகவான்!!!

கறுப்பு ஆடை
சனீஸ்வர பகவானுக்குப் பிடித்த கறுப்பு ஆடை அணிந்து, அல்லது கரு நீல ஆடை
அணிந்து 45 நாட்கள் விரதம் இருந்து, தரையில்
படுத்து, உயரமான மலையிலேற்றி ஐயப்ப பக்தர்களுக்கு திருப்திகரமாக தரிசனம்
செய்வித்து திருப்பி அனுப்புகிறார்
சனீஸ்வர பகவான் !!!
சிறை வாசம், தீராத நோய், கடும் கடன், அவமானம், ஆயுளுக்கு
அதிபதி இத்தனை அதிகாரமும் கொண்டவர் சனி!!!
நமது உடல் முழுவதும் பரவி இருக்கும் நரம்புக்கு அதிபதி சனி!!.,
சனியில் பலமில்லாததினால் வரும் வியாதியே காக்காய் வலிப்பு!!!
கர்ம வியாதி என்றும், தீராத நோய் என்று ஜோதிடர்களினால் வரணிக்கப் படுகிறது இது ……
சனியின் உலோகமான இரும்பைக் கொடுத்தவுடன் நிற்கிறது……
இவ்வளவு பெருமையும், கடூரமான, கண்டிப்பான, தலைவிதிப்படி
தண்டிப்பதில் தனக்கு நிகரற்ற அனைவரையும் நடுநடுங்க
வைக்கும் சனீஸ்வரரை பணியவைக்கும் தெய்வம் ஆஞ்சனேயர்!!!
சனிக்கிழமை சனிஸ்வரனை எள் விளக்கேற்றி வணங்கி வழிபட்டாலும் சரி ஆஞ்சனேயரை
வடைமாலை அணிவித்து வழிபட்டாலும் சரி , கருணை வைத்து அருள்புரிவார்!!!
அனைவரும் சனீஸ்வரனை வணங்கி அவனருள் பெறுமாறு வேண்டி
விடை பெறுகிறேன் சீனிவாசன்!!! நன்றி , வணக்கம்!!!
XXXX
ஶ்ரீ சனீஸ்வர காயத்ரி
ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயா புத்ராய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோயதயாத்
XXXX
ச்லோகம்
நீலாஞ்சன சமாபாசம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் சாயா
மார்த்தாண்ட சம்பூதம் தம் நமாமி சனைச்சரம்
TAGS- சனீஸ்வர- 2, கறுப்புத் துணி-2
—- SUBHAM —-
