சும்மா கொஞ்சம் கலாய்க்கலாம் சார், வாங்க! – 2 (Post No.5792)

Written by S Nagarajan

Date: 17 DECEMBER 2018


GMT Time uploaded in London –7- 52 am


Post No. 5792

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

நாட்டு நடப்பு

சும்மா கொஞ்சம் கலாய்க்கலாம் சார், வாங்க! – 2

ச.நாகராஜன்

வாங்க, வாங்க! இன்னும் கொஞ்சம் கலாய்க்கலாமா, சார்?!

அரசியல்வாதிகளின் தொழில் என்ன?

அரசியல்வாதிகளின் தொழில் என்ன தெரியுமா? சொல்லுங்க!

சொல்றேனே! பிரச்சினை இல்லேன்னா ஏதாவது ஒரு பிரச்சினையை உருவாக்கனும். ஒரு பிரச்சின இருந்தாலோ அதை ஊதிப் பெரிசாக்கனும்.

அட இருக்கிற பிரச்சின அமுங்கிட்டு வரதுன்னா?

ஓ அப்படி கேக்கறீங்களா?

எதானாலும் ஒரு பொது தியரி இருக்குங்க! ஒண்ணு நீங்க Convince பண்ணுங்க, இல்லை confuse பண்ணிவிட்டுடுங்க! இப்படிச் செஞ்சா நிரந்தரமா நீங்க பொது வாழ்க்கையிலே இருக்க முடியுங்க! இது தாங்க இன்றைய Trend!

உதவி : Harry S.Truman

If you can’t convince them confuse them – Harry S. Truman

*

சரி, அரசியல்வாதி எப்படிப்பட்டங்க?

அவன் ஒரு நண்டு மாதிரி. வளைஞ்சு வளைஞ்சு தான் போகத் தெரியும். நேராகவே போக மாட்டான்!

உதவி : அரிஸ்டோபெனஸ்

Aristophanes : You cannot make a crab walk straight!

*

அண்ணே! என்னை ஒரு கமிட்டிலே போட்டிருக்காங்க! உங்க அட்வைஸ் தேவை!

ஆஹா! சொல்றேனே! நிறைய கமிட்டிங்களிலே நான் இருந்திருக்கிறதினாலே பல ரூல்களை ஃப்ரேம் செய்து வச்சிருக்கேன்! உனக்குச் சொல்லாம யாருக்குச் சொல்லப் போறேன்!

எப்பவுமே குறிப்பிட்ட நேரத்துலே கமிட்டி மீட்டிங்கிற்குப் போகாதே! அப்படிப் போனீன்னா நீ ஒரு கத்துக்குட்டின்னு நினைப்பாங்க!

மீட்டிங் ஆரம்பிச்சு பாதி நேரம் ஆகிற வரைக்கும் வாயையே திறக்காதே! அப்படி இருந்தா இந்த ஆள் விஷயம் தெரிஞ்ச ஆள்ன்னு நெனச்சிக்குவாங்க!

முடிஞ்ச மட்டும் எதுலயும் பட்டுக்காம பேசு; அப்ப யாரோட எதிர்ப்பும் உனக்கு வரவே வராது. எல்லாருக்கும் உன்ன பிடிச்சுப் போகும்!

ஏதாவது ஒரு விஷயம் பத்தி சந்தேகம் வந்தாக்க, உடனே ஒரு சப்-கமிட்டி போடச் சொல்லு. எல்லாருக்கும் அது பிடிக்கும்; இன்னும் பலபேரை உள்ள நுழைக்கலாம், இல்லையா! மீட்டிங்கை ஒத்திப் போடு அப்படீன்னு சொல்றதுலே முதல்லே நில்லு.அடடா! அப்புறம் பாரு!! அதுக்காகத் தான் எல்லாரும் வெயிட் பண்ணிட்டிருப்பாங்க! நீ ஃபேமஸ் ஆயிடுவே!

“அண்ணே! நீங்க தெய்வம்’ ண்ணே!”

உதவி : ஹாரி சாப்மேன்

Harry Chapman : Having served on various committees, I have drawn up a list of rules. Never arrive on time; this stamps you as a beginner. Don’t say anything until the meeting is half over, this stamps you as being wise. Be as vague as possible; this avoids irritating the others. When in doubt, suggest that a subcommittee be appointed. Be the first to move for adjournment ; this will make you popular; it is what everyone is waiting for.

*

அரசியல்வாதிக்கும் ராஜதந்திரிக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு ராஜதந்திரி, தான் தேசத்துக்குச் சொந்தம்னு நினைக்கிறான்; அரசியல்வாதியோ தேசமே தனக்குச் சொந்தம்னு நினைக்கிறான்; அவ்வளவு தான்!

உதவி : யாரோ சொன்னது.

Anonymous :A statesman thinks he belongs to the nation, but a politician thinks the nation belongs to him.

*

அரசியல்வாதிக்குச் சுதந்திரமாகச் செயல்பட உரிமை கொடுத்தால்?

அரசியல்வாதிகிட்ட போய் உன் கைகளை நான் கட்ட மாட்டேன்; சுதந்திரமாகச் செயல்படுன்னு சொன்னா, அவன் என்ன செய்வான், முதலில் உன் பாக்கட்ல தான் கையை விடுவான்.

Anonymous : Give a politician a free hand and he will put it in your pocket.

*

அரசியலில் மோசமான எதிரிகளை எப்படிச் சமாளிப்பது?

சொல்றேன். சில சமயங்களில் அரசியலில் நாத்தமடிக்கிற விலங்குகளோட சண்டை போட வேண்டியிருக்கும். ஆனா எந்த ஆயுதம் எடுக்கணுங்கறதை அந்த நாத்தமடிக்கிற விலங்குகள்கிட்ட விடற அளவுக்கு முட்டாளா இல்லாம நீ இருந்தா அது போதும்; ஜெயிச்சடலாம்! புரியுதா?

உதவி : ஜோ கனான்

Joe Cannon : Sometimes in politics one must duel with skunks, but no one should be fool enough to allow the skunks to choose the weapons.

*

இப்படி இன்னும் பல விஷயங்கள் பற்றிக் கலாய்த்துக் கொண்டே இருக்கலாம்,

கலாய்ப்புக்குப் பஞ்சமா என்ன? பிறகு பார்ப்போம்!

tags–கலாய்க்கலாம் – 2

****