கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன்
தேதி மார்ச் முதல் தேதி, 2014; கட்டுரை எண்-
மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் நாம் நினைப்பதைவிட அதிகமாகவே அறிவு உண்டு என்பதை பல சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன. இதுபற்றியும் சங்கத் தமிழ் இலக்கியத்தில் உள்ள கிளி வளர்ப்பு, வேதத்தைத் திருப்பிச் சொல்லும் கிளிகள், கிளி ஜோதிடம், பறவைகளில் சகுன சாஸ்திரம், காளிதாசனிலும் சங்கத் தமிழ் இலக்கியத்திலும் காணப்படும் பறவைகளின் அதிசயக் குடியேற்றம், திருக் கழுகுக் குன்றத்தின் கழுகு அதிசயம் ஆகியன குறித்தும் பல தலைப்புகளில் இந்த பிளாக்-கில் எழுதிவிட்டேன். இப்பொழுது கொலைகாரனைக் காட்டிக் கொடுத்த ஒரு இந்தியக் கிளி பற்றி லண்டன் பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகி இருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ராவில் ஒரு இந்தி பத்திரிக்கையின் ஆசிரியராக வேலை பார்ப்பவர் விஜய் சர்மா. அவருடைய மனைவி நீலம் சர்மாவையும் (45 வயது) வளர்ப்பு நாயையும் பிப்ரவரி மாதம் யாரோ கொலை செய்துவிட்டனர். அவர் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது மனைவியும் நாயும் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். துப்புத் துலக்கிய போலீசார், வீட்டுக்கு வந்து போகும் நெருக்கமான ஒருவர்தான் கொன்றிருக்க வேண்டும் என்று சொன்னார்கள் அவர் அதை நம்பத் தயாராக இல்லை.
அவர்கள் வீட்டில்ஒரு கிளியையும் வளர்த்து வந்தனர். கொலைச் சம்பவத்துக்குப் பிறகு கிளி ஒரே மௌன மாகிவிட்டது. விஜய் சர்மாவின் மருமான் பெயர் ஆசுதோஷ். ஒரு நாள் அவர் வீட்டூக்குள் வந்தபோது வழக்கமாக அமைதி காக்கும் கிளி, பெரிதாகக் கீச்சிடத் துவங்கியது. ஆசுதோஷ் வெளியே போனவுடன் அமைதி ஆகிவிட்டது.
பிறகு விஜயின் மகள், கிளியிடம் போய் நீலத்தைக் கொலை செய்தது யார்? என்று சொல்லு என்று சொல்லிவிட்டு வரிசையாகப் பல பெயர்களை வாசித்தார். ஆசுதோஷ் பெயர் வந்தபோது, கிளி பட பட வென்று இறக்கையை அடித்துக் கொண்டு கிரீச் என்று கத்தத் துவங்கியது.
போலிசாருக்கும் ஏற்கனவே நெருங்கிய உறவினர்கள் மீது ஒரு கண் இருந்ததால், ஆசுதோஷைக் கைது செய்தனர். அவருடைய போன் முதலியவற்றைச் சோதித்தபோது குற்றத்துடன் தொடர்புடைய பல தடயங்களும் சிக்கின. பின்னர் அவரை விசாரித்ததில் உண்மையை ஒப்புக் கொண்டார். தான் வேறு சிலர் உதவியுடன் விஜய் வீட்டில் திருடப் போனதாகவும், எதிர்பாராதவிதத்தில் அத்தை நீலம் அங்கே இருந்தவுடன் அவரைக் கொன்றதாகவும் ஒப்புக்கொண்டார்.
அவரை உயிருடன் விட்டால், தான் திருடன் என்பதை உலகத்துக்கே அறிவித்துவிடுவார் என்று எண்ணி இப்படிச் செய்ததாகவும் ஆசுதோஷ் சொன்னார். ஒரு வேளை நாயைக் கொண்டு அடையாளம் கண்டுபிடிக்கக்கூடும் என்று பயப்பட்டு நாயையும் தீர்த்துக் கட்டிவிட்டதாகச் சொன்னார்.
விஜய்—நீலம் தம்பதியினர் வளர்த்த கிளியின் பெயர் ஹீரா. இனிமேல் அதை ஹீரோ என்று அழைப்பதே பொருத்தம்!
London News papers compared this parrot with Hercule Poirot (Detective in Agatha Christie’s novel), punning with the words Parrot and Poirot, but later Indian newspapers clarified the role of the parrot in this murder case is minor. More over the name of the parrot is not Hercule, but Hera. Any how he is a Hero now!
பறவைகள் மிகவும் கெட்டிக்காரத்தனம் உடையவை. சில மாதங்களுக்கு முன்னால் பிரிட்டனில் ஒரு கிளி கள்ளக் காதலன் பெயரைத் திரும்பத் திரும்பச் சொன்னவுடன் கணவனுக்கு மனைவி மீது சந்தேகம் வலுத்தது. பின்னர் குட்டு வெளிப்பட்டது. மனைவியும் கள்ளத் தொடர்பை ஒப்புக்கொண்டாள். எல்லா பிரிட்டிஷ் பத்திரிக்கைகளும் அந்தக் கிளியின் படத்தைப் பிரசுரித்து அதை கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்த்திவிட்டன!
எச்சரிக்கை:- அடுத்தமுறை நீங்கள் ஏதேனும் தவறு செய்யப் போனால் பக்கத்தில் காக்கா, குருவி, நாய் ,பூனை இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்!!!!!
இதற்கு முன் இதே பிளாக்—கில் வெளியான பறவை- விலங்குக் கட்டுரைகள்:
Post No 813 மான் குட்டிக்குப் பால் கொடுத்த புலி ! Date 2-2-14
Post No. 814 Tigers and Deer—Friends in Hindu World ! Date 2-2-14
13 Saints in Nature!
இயற்கை போதிக்கும் 13 பாடங்கள்
Dogs at Sringeri and Kanchi Mutts
Hindu Eagle Mystery deepens
INDIAN CROW by Mark Twain
Can Humans communicate with Animals?
Birds for finding Direction: Sumer to Tamil Nadu via Indus Valley
Donkeys in Tamil and Sanskrit Literature
Amazing Andal: Where did she see the Lion?
Vedic Dog and Church Dog
The Great Scorpion Mystery in History-1
Who rides what Vahana (Animal or Bird)?
வேத நாயும் மாதா கோவில் நாயும்
தேள்— ஒரு மர்ம தெய்வம்!
Mysterious Messengers for Ajanta, Angkor Wat and Sringeri
The Mysterious Vedic Homa Bird: Does It Exist?
Gajalakshmi in Kalidasa and Tamil Literature
Bird Migration in Kalidasa and Sangam Tamil literature
Mysteriou Tamil Bird Man
அதிசயப் பறவைத் தமிழன்!!!
Four Birds at One Sloka
சிட்டுக்குருவியிடம் பாரதி கற்ற பாடம்
யானை பற்றிய நூறு பழமொழிகள்
கா! கா! கா! கா!
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை
தேள் தெய்வம்
வாகனங்கள் தோன்றியது எங்கே?
சுமேரியாவில் தமிழ்ப் பறவை
Double headed Eagle
Serpent Queen: Indus Valley to Sabarimalai
Can parrots predict your future?
When animals worship god why not men?
Animal Einsteins- Part 1
Animal Einsteins- Part 2



You must be logged in to post a comment.