கட்டுரையை எழுதியவர் :– ச.நாகராஜன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1512; தேதி 24 டிசம்பர், 2014.
தமிழ் என்னும் விந்தை! -14
சருப்பதோபத்திரம் – 3
ச.நாகராஜன்
யாழ்ப்பாணத்துக் கவிஞர் க.மயில்வாகனப் பிள்ளை இயற்றிய ஒரு சருப்பதோபத்திரம் இது:-
தேவா நாதா தாநா வாதே
வாரா தேதா தாதே ராவா
நாதே னாகா கானா தேநா
தாதா காயா யாகா தாதா
இதன் பொருள் :-
தேவா – பிரகாசம் உடையவரே!
நாதா – தலைவரே!
தாநா – வலிமையினை உடையவரே!
தாதா – பிதாவே!
வாநா – ஆகாயமானவரே!
தேன் நாகா – (கூண்டுகள் தூங்கும் கீரி) மலையை உடையவரே!
கானா – கீதப்பிரியரே!
தே – தெய்வமே!
காயா – திருமேனியை உடையவரே!
யாகா – யாகங்களுக்கு உரியவரே!
தாதா – கொடையாளரே!
வாது வாராதே – வாது வாராதபடி
தேரா – சேர்ந்து
நா தா தா – நா வன்மை தந்தருள்க!
இனி இதை 64 அறைகளில் பொருத்திப் பார்ப்போம்:
| தே | வா | நா | தா | தா | நா | வா | தே |
| வா | ரா | தே | தா | தா | தே | ரா | வா |
| நா | தே | னா | கா | கா | னா | தே | நா |
| தா | தா | கா | யா | யா | கா | தா | தா |
| தா | தா | கா | யா | யா | கா | தா | தா |
| நா | தே | னா | கா | கா | னா | தே | நா |
| வா | ரா | தே | தா | தா | தே | ரா | வா |
| தே | வா | நா | தா | தா | நா | வா | தே |
எந்த வாயில் வழியாக நுழைந்தாலும் பாடலைப் படிக்க முடிகிறது. அது தான் சருப்பதோபத்திர பந்தம்!
இனி கவிஞர் பா.முனியமுத்து (உவமைப்பித்தன்) இயற்றிய ஒரு சருப்பதோபத்திரத்தைப் பார்ப்போம்:-
பாகா நாதா தாநா காபா காவே நீகா காநீ வேகா நாநீ தாமா மாதா நீநா தாகா மாதே தேமா காதா!
இதை 64 கட்டங்களில் பொருத்திப் பார்த்தால் வரும் சருப்பதோபத்திரம் இது தான்:-
| பா | கா | நா | தா | தா | நா | கா | பா |
| கா | வே | நீ | கா | கா | நீ | வே | கா |
| நா | நீ | தா | மா | மா | தா | நீ | நா |
| தா | கா | மா | தே | தே | மா | கா | தா |
| தா | கா | மா | தே | தே | மா | கா | தா |
| நா | நீ | தா | மா | மா | தா | நீ | நா |
| கா | வே | நீ | கா | கா | நீ | வே | கா |
| பா | கா | நா | தா | தா | நா | கா | பா |
தமிழ் என்னும் அமுத சாகரம் பரந்து விரிந்த எல்லை காண முடியாத ஒன்று. முடிந்த வரை அதை அள்ளி அள்ளிப் பருகலாம்.
-தொடரும்

You must be logged in to post a comment.