செய்நன்றி:- நன்றியுள்ள யானையும், குடிகாரப் பாம்பும்!

panchatantra

கட்டுரை எண் –.1989

Compiled by London swaminathan

Date 12th July 2015

Time uploaded in London: காலை 6-46

 

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி மாட்டு

என ஆற்றுங்கொல்லோ உலகு –குறள் 211

இவ்வளவு மழை பெய்து பூமியை வளப்படுத்துகிறதே மழை. அதற்கு நாம் என்ன நன்றி செய்யமுடியும்? அதே போல பலனை எதிர்பார்க்காமல் செய்ய்யும் உதவியே சிறந்தது.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகற்கு – குறள்- 110

என்ன தப்பு செய்தாலும் அதற்கு எல்லாம் பரிகாரம் உண்டு. நன்றியை மறந்த ஜீவன்களுக்கு விமோசனமே இல்லை.

 9129e-elephant2b1

 

நமது பஞ்ச தந்திரக் கதைகளிலும், ஈசாப் கதைகளிலும் நன்றியுள்ள பிராணிகள் பற்றி நிறையவே படித்து இருக்கிறோம். இப்பொழுது பேஸ்புக், யூ ட்யூப் வீடியோ பதிவுகளைப் பார்க்கையில் அவை எல்லாம் கதை அல்ல, உண்மையே என்று தெரிகிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரு யானை முதலையின் வாயில் சிக்கியவுடன் குரல் கொடுத்தது. உடனே மற்ற யானைகள் வந்து அதைக் காப்பாற்றியது நமது கஜேந்திர மோட்சக் கதையை நினைவு படுத்தியது. ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் ஒரு பேராசிரியர் வளர்த்த ஹசிகோ என்ற பெயருடைய நாய் தினமும் பேராசிரியருடன் ஸ்டேஷனுக்குப் போய் அவரை வழியனுப்பிவிட்டு வரும். அவர் திடீரென இறக்கவே அதை அறியாத நாய் ஒன்பது ஆண்டுகள் ஒன்பது மாதம் அதே ஸ்டேஷனுக்கு அதே நேரத்தில் சென்று காத்திருந்துவிட்டு இறந்து போனது. டோக்கியோவில் இதற்கு வைத்த சிலையை அறியாத ஜப்பனியர் யாருமிலர். இப்படி எத்தனையோ கதைகளையும் ரிக் வேதத்தில் வரும் சரமா என்னும் நாய் பற்றியும் மஹாபாரதத்தில் தர்மனைப் பின்பற்றிச் சென்ற நாய் பற்றியும் முன்னரே எழுதிவிட்டேன். இரண்டு புதிய சம்பவங்களைப் பார்ப்போம்.

மவுன்ட் வில்சன் வானாராய்ச்சிக்கூட விஞ்ஞானி டாக்டர் வால்டர் ஆடம்ஸ் கூறிய விநோத சம்பவம்:

ஒரு காட்டில் வேட்டையாடச் சென்ற வேட்டைக்காரர் ஒரு யானை மிகவும் கஷ்டப்பட்டு நொண்டிக்கொண்டே செல்வதைப் பார்த்தார். அதைப் பின் தொடர்ந்து சென்றார். அது திடீரென்று கீழே சாய்ந்து விழுந்தது. அருகில் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது அதன் காலில் பெரிய முள் குத்தி காயம் புரையோடிப் போயிருந்தது. உடனே அவர் முள்ளை எடுத்துவிட்டு காயத்துக்கு மூலிகை மருந்து தடவி காட்டிற்குள் போக விட்டார்.

நீண்ட காலத்துக்குப் பின்னர் அந்த வேட்டைக்காரர் அந்த ஊருக்கு வந்த சர்கசுக்குச் சென்றார். கையில்  அதிகம் காசு இல்லாத வேட்டைக்கரர் தானே. மிகவும் விலை குறைவான டிக்கெட் வாங்கி பின்னால் அமர்ந்திருந்தார். அந்த சர்கஸில் யானைகள் சாஹசம் செய்யும் காட்சி வந்தது. அதில் ஒரு யானை திடீரென்று கூட்டத்தில் பாய்ந்து அந்த வேட்டைக் காரரை துதிக்கையினால் அலாக்காகத் தூக்கி வந்து அதிக பணம் கொடுப்போர் அமரும் ஆசனத்தில் உட்காரவைத்துவிட்டு ஒரு சலாம் போட்டது. பின்னர் சர்கஸ்காரன் கொடுத்த பணியை செவ்வனே செய்தது. மறு நாள், காரணம் அறிந்த பத்திரிக்கைக்காரர்கள், அந்தச் செய்தியை கொட்டை எழுத்தில் முதல் பக்கத்தில் வெளியிட்டனர். (உ.வே.சாமிநாத அய்யர் சொன்ன யானைக் கதைகளை, காஞ்சி மஹாசுவாமிகள் சமாதானப்படுத்திய யானை பற்றிய கதைகளை முன்னரே எழுதி இருக்கிறேன். கட்டுரையின் கடைசியில் உள்ள பட்டியலைக் காண்க).

46f37-snake-frog

நன்றியுள்ள பாம்பு!

ஒரு மீனவர் மீன் பிடிக்கச் சென்றார். கொஞ்ச நேரத்துக்குள் தூண்டிலில்மாட்டும் புழுக்கள் தீர்ந்துவிட்டன. அதிக மீன்களோ பிடிக்கவில்லை. ஏது செய்வதென்று அறியாது திகைத்தார். அப்பொழுது பூட்சுக்குப் பக்கத்தில் ‘உஸ்’ என்ற ஓசை கேட்டது. ஒரு குட்டிப் பாம்பு ஒரு சின்ன தவளையை வாயில் வைத்துக் கொண்டு நின்றது. மீன்பிடிக் கம்பால் அதைப் பிடித்து வாயிலிருந்த தவளையை எடுத்துக் கொண்டு அதைத் துண்டு துண்டாக்கி மீன் பிடிக்கத் துவங்கினார். பாம்போ அதே இடத்தில் நின்றது.

அடப் பாவமே! நம் உணவுக்காக அதன் உணவைப் பறித்துவிட்டோமே என்று பரிதாபபட்டு, தான் அவ்வப்போது சுவைத்துக் கொண்டிருந்த விஸ்கி மதுபானக் குப்பியிலிருந்து இரண்டு சொட்டு விஸ்கியை அதன் வாயில்விட்டார். பாம்பும் சென்றுவிட்டது

சிறிது நேரத்துக்குப் பின்னர் அதே பாம்பு மூன்று தவளைகளை வாயில் வைத்துக் கொண்டு அங்கே நின்றது!!

 hachiko

Picture of the most famous dog Hachiko  of Japan. The statue is in Tokyo. The dog went looking for his master every day for nine years and nine months.

I have given the famous stories of grateful dogs in my post, VEDIC DOG AND CHURCH DOG, posted on 18 January 2013(வேத நாயும் மாதாகோவில் நாயும்)

.Nature-India---Snakes---Gliding-Snake

Please read other animal stories posted earlier in this blog:

  1. Animal Einsteins (Part 1 and Part 2)
  2. Can parrots recite Vedas?
  3. Why do animals worship Gods?
  4. Mysterious Messengers for Ajanta, Angkor Wat and Sringeri
  5. Elephant Miracles

6). 45 Words for Elephant

  1. Can Birds Predict your Future?
  2. Two Little Animals That Inspired Indians
  3. Three Wise Monkeys from India
  4. Mysterious Tamil Bird Man

11.Alexander’s Dog and Horse, posted November 24, 2014

12.Vedic Sarama and Greek Hermes, posted on 24 June 2015

(இவை எல்லாம் தமிழிலும் மொழி பெயர்க்க ப்பட்டுள்ளன.)

Contact London Swaminathan at swami_48@yahoo.com