கிரேக்க நாட்டுத் தீவில் இன்பச் சுற்றுலா (Post No.4118)

Written  by London Swaminathan
Date: 1 August 2017
Time uploaded in London- 20-12
Post No. 4118
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நான் எனது குடும்பத்துடன் ஜூலை (2017) மாதம் கடைசி ஆறு நாட்களுக்கு கிரேக்க நாட்டின் தலை நகர் ஆதென்சுக்கும் (Athens) எரிமலைத் தீவான சாண்டோரினிக்கும் (Santorini Islands) சென்று வந்தேன். நமது இந்து மதம் தொடர்பான விஷயங்களை இரண்டு மூன்று கட்டுரைகளில் தருகிறேன்.

சாண்டோரினி தீவுகள் ஏதென்ஸிலிருரிந்து சுமார் 128 மைல் தொலைவில் உளது. இதன் சிறப்புகள்:

 

  1. இது எரிமலை சீறி, கடலிலிருந்து வீசிய கற்பாறைக் குவியலினால் உண்டான தீவு. வழி நெடுகிலும் கருகிய கற்கள், பெரிய கருமையான பாறைகள் இவைகளைத் தாண்டி மலையேறிச் சென்றால் புகை வெளியே வரும் பெரிய எரிமலைப் பாறையைக் கணலாம். ஆனால் தீப்பிழம்போ, உருகிய எரிமலைக் குழம்போ ( Lava லாவா) கிடையாது. அடுப்பை அணைத்த பின் எவ்வளவு புகையுமோ அவ்வளவுதான்!

 

  1. பின்னர் எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு கந்தக, அமிலப் பாறைகள் வழியே சென்று உடல்நலத்தைக் கெடுக்க வேண்டும் என்று கேட்கலாம். அவர்களே, கர்ப்பமான பெண்கள் வரக்கூடாது. கந்தகப் புகை கருவைப் பாதிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள். நாக்கில் நுரை தள்ள ஆயிரக் கணக்காண அடிகள் உயரே செல்லக் காரணம்……………….?

 

3.பிரமிப்பூட்டும் கண்கொள்ளா இயற்கைக் காட்சிகள். அதள பாதாளத்தில் கடலும் அதில் பவனி வரும் கப்பல்களும் படகுகளும் கண்கொள்ளாக் காட்சி. காமெரா உள்ளவர்கள் தொடர்ந்து படம் எடுத்த வண்ணம் இருப்பர். எத்தனை முறை படம் எடுத்தாலும் ஏதோ புதுப் புது காட்சிகளை எடுப்பது போலவே தோன்றுகிறது. இதில் சூரியனின் வண்ண ஜாலங்கள் வேறு! கடலே பொன்னிறமாக மாறிவிடும்.

 

 

4.இந்தத் தீவில் 90 சதவிகித கட்டிடங்கள் வெள்ளை நிற, நீல நிறக் கலவைதான். நாம் எப்படிக் கோவிலுக்கு சிவப்பு வெள்ளை பயன்படுத்துகிறோமோ அப்படி இவர்கள் வெள்ளை நிறச் சுவர்களின் மேலேயுள்ள கும்பம் போற இடங்களுக்கு நீல நிறம் அடித்திருக்கிறார்கள். இது கிரேக்கர்களுக்கு மிகவும் பிடித்த, புனிதமான வண்ணமாம்.

 

5.சூடான கடல் நீர்!

 

எரிமலையுள்ள இடத்துக்கு பெரிய படகில் சுமார் 100, 200 பேர்களை அழைத்துச் செல்லுவர். அதைப் பார்த்த பின்னர் சூடான வெப்ப நீர் ஊற்று உள்ள கடல் பகுதிக்கு அழைத்துச் செல்லுவர் . யார் யாருக்கு நீந்தத் தெரியுமோ அவர்கள் அனைவரும் கடலில் குதிக்கலாம் என்று அறிவித்தவுடன் அழகிகள், கிழவிகள், குமரன்கள், தொண்டுக் கிழங்கள் எல்லோரும் கடலில் குதிப்பார்கள். அவர்கள் கடலுக்கு அடியில் உள்ள எரிமலைகளால் சூடுபடுத்தப்பட்ட நீருள்ள பகுதிக்குச் சென்று நீந்துவார்கள். பத்து நிமிடம் ஆன பின்னர் அவர்கள் கப்பலுக்கு (படகுக்கு) திரும்பிவரவேண்டும்.

 

ஒரு இளம் காதல் ஜோடி அருகில் இருந்த கப்பலுக்கு நீந்திச் சென்று ஏறிவிட்டன. உடையோ உடலில் மிக மிகக் குறைவு. கணவன் எங்கள் கப்பலில் கு தித்துவிட்டான். அந்தப் பெண்ணோ பயந்து நடுங்கி ‘’மதில் மேல் பூனையாக’’ தவித்தாள். பின்னர் அனவைரும் வேடிக்கைப் பார்க்கையில் எங்கள் கப்பலுக்குள் குதித்தாள்.

 

இந்த இரண்டு இடங்களுக்குச் சென்று கப்பலில் திரும்பி வர தலைக்கு 20 (Euro) யூரோ கட்டணம். இது சாண்டோரினி தீவுகளில் ஒரு நிகழ்வு. இது போல பல வீரதீர செயல்கள் செய்யலாம்.

 

 

6.ஒவ்வொரு சர்ச் (Church)  மீதும் மணிகலைளை மூன்று அல்லது ஆறு அல்லது பத்து என்று ஒரு பிரமிடு வடிவத்தில் தொங்க விட்டிருக்கிறார்கள்

 

7.கடற்கரை ஓரம் நெடுகிலும் நூற்றுக் கணக்கான ஓலைக் குடைகள் அதற்குக் கீழே இரண்டு படுக்கைகள்; இவை அனைத்தும் வாடகைக்கு விடப்படுகின்றன. ஒரு ஜோடி படுக்கைக்கு பத்து யூரோ. கீழே அரை நிர்வாண,,,, இல்லை முழு நிர்வாண அழகிகள், கணவர்களுடன் (???) படுத்திருப்பர். அவ்வப்பொழுது கடலில் குதிப்பர். சன் க்ரீமைத் (Sun Cream)  தடவிச் சூரியக் குளியல் எடுப்பர். எதற்காக இப்படிச் செய்கின்றனர்? சன்கிரீமைத் தடவி சூரியக்(Sun bath) குளியல் எடுத்தால் தோலின் நிறம் தாமிரக் கலராக — Copperகாப்பர் கலராக மாறிவிடும். நம்முடைய கோவில் செப்புத் திருமேனிகள் போல அழகிகள் ஜொலிப்பர்!!

 

 

அடுத்த கட்டுரையில் கழுதைக்கு ஏற்பட்ட கிராக்கி, சூரிய அஸ்தமன தரிசனம், தொல்பொருட் துறை மியூசியம், கி.மு 1660 வாக்கில் ஏற்பட்ட (Volcanic Eruption) எரிமலை வெடிப்பு அதனால் ஒரு (Minoan Civilization) நாகரீகம் அழிந்த கதை, அது நமது நாகரீகத்தின் மீது ஏற்படுத்திய தாக்கம், சுனாமிப் பேரலைகளால் (Atlantis) அட்லாண்டிஸ் அழிந்த கதை, கிரேக்க அர்த்தடாக்ஸ் (Greek Orthodox Monastery) மொனாஸ் ட் ரீ, இயா (Oia) கிராமம், வரவு செலவுக் கணக்கு பற்றிச் சொல்லுகிறேன்

 

TAGS: சாண்டோரினி தீவு, எரிமலைப் பாறை, கருப்பு மணல், வெப்ப நீரூற்று

 

–Subham–