
Written by London Swaminathan
Date: 20 October 2016
Time uploaded in London: 6-21
Post No.3270
Pictures are taken from Wikipedia and other sources; thanks. (Picture is used only for representational purpose; no connection with the current article.)
Contact swami_48@yahoo.com

காலையில் பத்திரிக்கையில் ஒரு புகைப்படம் பார்த்தேன். சில அப்பாவிப் பள்ளிக்கூட பெண்கள் கைகளில் சில அட்டைகள். அதில் “பட்டாசு வேண்டாம், புறச்சூழலைப் பாதுகாக்கும் தீபாவளியைக் கொண்டாடுவோம்! பச்சை நிற தீபாவளியைக் கொண்டாடுங்கள் “என்றெல்லாம் எழுதப் பட்டிருந்தது. உடனே சில எண்ணங்கள் மனதில் எழுந்தன. இது சரியான அணுகு முறை அல்ல. பருப்பு இல்லாத கல்யாண சாப்பாடு எப்படி இல்லையோ அப்படி பட்டாசு இல்லாத தீபாவளி சோபிக்காது!
காரணம் ?
தீபாவளிப் பட்டாசு தொழிலில் முன்னனியில் நிற்கும் மாநிலம் தமிழ் நாடு. வறண்ட சிவகாசி, ராமநாதபுரம் கோவில்பட்டி பகுதிகளில் மிளகாய் வற்றல் காயப்போடுதல், பட்டாசு செய்தல், தீப்பெட்டி செய்தல் முதலிய தொழில்கள் மட்டுமே செய்ய முடியும். தண்ணீர் என்பது அபூர்வமான பொருள். சூரிய ஒளிதான் செல்வம். அவர்கள் வயிற்றில் அடிக்கக்கூடாது. மேலும் எதிர்காலத்தில், நா ம் பட்டாசு செய்யாமல் போனால் அந்த இடத்தை சீனப் பட்டாசுகள் நிறைவு செய்யும் அபாயம் உள்ளது.
ஒருகாலத்தில் களி மண்ணில் பிள்ளையார் செய்து ஆற்றில் கரைத்தோம்; இப்பொழுது கலர் பிள்ளையார், பெரிய பிள்ளையார் செய்யக்கூடாதென்றால் அதில் நியாயம் இருக்கலாம். ஆனால் பட்டாசே இல்லாமல் தீபாவளி வேண்டும் என்பதற்குப் பதிலாக நிதானத்தைக் கடைப்பிடிக்கும் விழிப்புணர்வை உண்டாக்கலாம். இரவு 11 மணிக்கு மேலாக சத்தம் கொடுக்கும் வெடிகளை வெடிக்காதீர்கள் என்று கேட்கலாம். அதுவும் இந்துக்களே முடிவு செய்ய வேண்டும். கோர்ட்டோ அரசாங்கமோ இதில் தலை இடக்கூடாது.
சர்ச்சுகளில் மெழுகுவர்த்திகள் ஏற்றுகின்றனர். பலருடைய
பகுத்தறிவுச் சமாதிகளில் ஜோதி எரிகிறது. இதெல்லாம் கூட புறச்சூழலைப் பாதிக்கக்கூடியதே. மரக்கறி உணவைவிட மாமிசம் உண்ணூவோரால் புறச்சூழல் பாதிப்படைவதாக விஞ்ஞான சஞ்சிகைகள் எழுதுகின்றன.

சிகரெட்டையும் பீடியையும் தடை செய்!
உலகில் ஒவ்வோரு நிமிடமும் பல கோடி சிகரெட்டுகளும் பீடிகளும் புகைக்கப்படுகின்றன. இவற்றால் புறச்சூழல் பாதிப்பதோடு புற்றுநோயும் பரவுகிறது. ஆகையால பீடிகளையும் சிகரெட்டுகளையும் தடை செய்க! மாமிச உணவுகளைத் தடை செய்க! என்றெல்லாம் கோஷம் எழுப்பினால் அதில் பசை இருக்கிறது. வருடத்தில் ஒரே ஒரு நாளோ, இரண்டே இரண்டு நாளோ வெடிக்கும் பட்டாசுகளுக்கு ‘நோ’ NO சொல்லுங்கள் என்பது மடமையிலும் மடமை.
ஒலிம்பிக் போட்டியின்போது வெடிக்கும் பட்டாசுகள், புத்தாண்டின்போது உலகெங்கிலும் வெடிக்கும் பட்டாசுகள் , அமெரிக்க சுதந்திர தினத்தின் போது வெடிக்கும் பட்டாசுகள் இவையெல்லாம் கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி வெடிக்கிறார்கள். நாம் ஒரு நாள் வெடிப்பதை விட இவை எல்லாம் நூறு மடங்கு அதிகம்!
ஆகையால் குடிசைத் தொழிலான பட்டாசுத் தொழிலாளர்களின் வயிற்றிலும் வாயிலும் அடிக்காமல், பட்டாசு வாங்கிக் கொளுத்துங்கள் நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். காசைக் கரியாக்குவதிலும் அர்த்தம் இருக்கட்டும். நாங்கள் எல்லோரும் சிறுவயதில் அனுபவித்த பட்டாசு மத்தாப்புகளை எதிர்கால சந்ததியும் அனுபவிக்கட்டும்.

நான், சிறுவயதில் ரசித்த பட்டாசுகளை, லண்டனில் வாழும் என் பிள்ளைகள் அனுபவிக்க முடியவில்லையே என்று வருந்தி ஒவ்வொரு முறை இந்தியா வருகையிலும் எங்கேயாவது பட்டாசுகளைத் தேடிப்பிடித்தது வெடித்திருக்கிறோம் அதாவது தீபாவளி கழிந்து ஆறு மாதங்களுக்குப் பின்னர்!
இனிமேல் கல்யாணங்களில் 10,000 வாலா சீனி பட்டாசு வேண்டாம் என்று சொல்லுங்கள் அது நியாயமே. இனிமேல் தேர்தல் வெற்றிக்கு பட்டாசு வெடிக்காதீர்கள் என்று சொல்லுங்கள் அது நியாயமே.. பீடி, சிகரெட் குடிப்போரின் தலையில் அடித்து அதைப் பிடுங்கி எறியுங்கள் அது நியாயமே. பக்ரீத் பண்டிகயின்போது ஆயிரக்கணகான மிருகங்களைப் பலி கொடுப்பதை நிறுத்துங்கள் அது நியாயமே; எல்லாக் கசாப்புக் கடை வாசல்களிலும் ம,றியல் செய்யுங்கள் அது நியாயமே: பட்டாசு வெடிப்பதைவிட மாமிச உணவு, புறச்சுழலை அதிகம் பாதிக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுங்கள் அது நியாமே.
முகமது நபி இஸ்லாமிய மத்ததைத் தோற்றுவித்தபோது ஒலிபெருக்கி ‘மைக்’ எதுவும் கிடையாது. அப்படி இருக்கையில் தினமும் 5 முறை கூப்பாடு போடுவதை —- ஒலிபெருக்கிகளால் கூச்சல் போடுவதை —-அனுமதிக்கிறோம் அதுபோல நரகாசுரனை கிருஷ்ணன் வதை செய்தபோது பட்டாசு இருந்ததோ இல்லையோ கவலை வேண்டாம். மக்களுக்கு மகிழ்ச்சி தருவதை வரவேற்போம்.
மாமிசம் சாப்பிடுவோரும் சிகரெட் குடிப்போரும் புறச்சூழல் பாதிப்பு பற்றிப் பேச என்ன நியாயம் இருக்கிறது?

பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடுங்கள்; சிறு தொழில்கள் சிறக்கட்டும்.
–SUBHAM—
You must be logged in to post a comment.