சிவ பெருமானுக்கு மீசை! விஷ்ணுவுக்கு ‘ஷேவ்’ ஏன்? (Post No.3215)

siva-ravi-varma

Written by London Swaminathan

Date: 3 October 2016

Time uploaded in London: 12-36

Post No.3215

Pictures are taken from various sources; thanks.

Contact swami_48@yahoo.com

வேதத்தில் உள்ள நூற்றுக் கணக்கான சொற்களை இன்றும் தமிழர்கள் உள்பட நாட்டிலுள்ள எல்லோரும் பயன்படுத்துவது வியப்புக்குரிய்து. உலகிலேயே பழமையான நாகரீகம் இந்து நாகரீகமே என்பதையும் உலகிலேயே பழைய மொழிகள் சம்ஸ்கிருதமும் தமிழும்தான் என்பதையும் இது காட்டும்.

 

கேசம் என்ற சம்ஸ்கிருதச் சொல் இன்றும் கூந்தல் வளர் தைல விளம்பரங்களிலும் பெயர்களிலும் இருப்பதை முந்தைய கட்டுரைகளில் கண்டோம்.

 

முடி என்பது தலை முடியையும், மன்னர் முடியையும் (கிரீடம்) குறிக்கும் என்பதுமிரு மொழிகளுக்கும் பொது. இது இரண்டு மொழிகளும் ஒரே மூலத்தில் பிறந்தவை என்பதைக் காட்டும். ஆரிய மொழிக் குடும்பம் – திராவிட மொழிக் குடும்பம் என்பதெல்லாம் பிதற்றல் என்பதையும் விளக்கும்.

indus-valley-priest

சிந்து சமவெளி யோகி முத்திரையில் காணப்படும் குருவின் தாடி விநோதமாக இருப்பது பலருக்கும் பெரும் புதிராக இருக்கிறது.

 

இதைவிட வேடிக்கை இந்துமதக் கடவுளரின் உருவங்களின் வரை படங்கள் வெவ்வேறாக இருப்பதாகும். புகழ் பெற்ற ரவி வர்மா வரைந்த ஓவியங்களில் சிவன் மீசையுடன் காட்சி தருவார். இன்னும் சில சிலைகளில், குறிப்பாக தென் கிழக்கு ஆசிய நாடுகளில் சிவன், இந்திரன் முதலியோர் மீசையுடன் காணப்படுவர். ஆனால் எல்லா இடங்களிலும் விஷ்ணு, கிருஷ்ணன் ஆகியோர் நல்ல ‘ஷேவ்’ (சவரம்) செய்த முகத்துடன் காட்டப்படுவர். இது ஏன் என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

 

இதை விட வியப்பான விஷயம் சிகை (குடுமி) என்ற வேத கால சம்ஸ்கிருதச் சொல்லாகும். பிராமணர்கள் இன்றும் இந்தச் சொல்லை பயன்படுத்துவதில் வியப்பில்லை.ஆனால் கிராமப்புறத் தமிழர்களும் இதை பயன்படுத்துவது தமிழும் சம்ஸ்கிருதமும் ஒன்றே என்பதைத் தெளிவாக்கும்.

 

சிகைக் காய் பொடி (சீயக்காய் பொடி) என்பதை அறியாதோர் இல்லை. எண்ணை தேய்த்துக் குளிப்போருக்கு இது அவசியம். சிகை+ காய் = சீயக்காப் பொடி. சிகை என்பது குடுமி என்னும் பொருள்படும் சம்ஸ்கிருதச் சொல்!

 

வேத காலத்தில் வாழ்ந்த இரண்டு குருமார்களின் பெயர் சிக, அனு சிக. இதைக் குடுமி, துணைக் குடுமி என்றும் மொழி பெயர்க்கலாம். சிக என்பது சிகரம் (உச்சி, மலை உச்சி), சிகாமணி போன்ற சொற்களிலும் புழங்குகிறது.

 

persian-2

சிகா (குடுமி, நீண்ட தலை முடி), புலஸ்தி (நேரான முடி), சிகண்ட (குடுமி), ஸ்மஸ்ரு (தாடி, மீசை Rig veda (2-11-17; 8-33-6 etc), சீமன் (தலை வகிடு) ஆகிய சொற்கள் வேதங்களிலும் பின் வந்த இலக்கியங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 

இந்தியர்கள் சாகும் வரை மீசை, தாடியை போற்றி வளர்த்ததாக மெகஸ்தனீஸ் 2300 ஆண்டுகளுக்கு முன் எழுதியுள்ளார்.

 

பாரசீகர்கள், தேன்கூடு போல தாடி வைத்திருப்பதை உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசன் சம்ஸ்கிருதத்தில் பாடிப் பரவியுள்ளான்.

 

persian-beard

—subham–