வெள்ளையன் ஹாலிடே வியந்த ‘சதி’! (Post No.4998)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 11 MAY 2018

 

Time uploaded in London –  7-37 AM   (British Summer Time)

 

Post No. 4998

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

வெள்ளையன் ஹாலிடே வியந்த சதி!

 

ச.நாகராஜன்

 

ஹிந்துக்களை கேலி செய்வதும் அவர்கள் வரலாறைக் கொச்சைப் படுத்துவதும் ஹிந்து துரோகிகளுக்கு ஒரு வாடிக்கையான பழக்கம்.

 

சமீபத்தில் சித்தூர் ராணி பத்மினியை அலாவுதீன் கில்ஜியுடன் தொடர்பு படுத்து எடுக்கப்பட்ட படம் ஹிந்துக்களின் கடும் எதிர்ப்பை எதிர் கொண்டது.

 

சஞ்சய் லீலா பன்சாலி எடுத்த பத்மாவதி படம் அக்ரமான வழியில் சரித்திரத்தைச் சிதைத்து மாற்றி எடுக்கப்பட்ட படம்.

மஹா தியாகியான சதி பத்மினியை கொச்சைப் படுத்தியதை எந்த ஒரு ஹிந்துவாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

சதியில் உடன்கட்டை ஏறியவர்களை ஹிந்துக்கள் தெய்வமாக மதித்தனர்.

 

அனைவரும் சதியாக வேண்டும் என்று ஹிந்து மதம் ஒரு நாளும் சொல்லியதில்லை. ஆனால் ஈருடல் ஓருயிராக இருந்தோர் கணவனுடன் உடன்கட்டை ஏற விரும்பினால் அதைத் தடை செய்யவும் இல்லை.

 

இந்த சதி பற்றிய நிஜ வரலாறு கூறும் ஆச்சரியமான விஷயங்களைக் கீழே பார்ப்போம்:

 

சதி என்பது அநாகரிகமான ஒரு பழக்கம் என்று தீர்மானித்த கார்ன்வாலிஸ் அதி 1805ஆம் ஆண்டு தடை செய்தான். அப்படி சதியாக விரும்பினால் மாஜிஸ்ட் ரேட்டின் அனுமதி பெற வேண்டும் என்று அவன் சட்டம் இயற்றினான். ஆனால் 1829இல் வந்த லார்ட் பெண்டிங் அதை இன்னும் கடுமையாக ஆக்கி சதி என்பது தற்கொலை என்று சட்டம் இயற்றினான்.

 

In 1805 Marquis of Cornwallis passed a regulation by which no one could become a Sati without the permission of the Magistrate. The law was made stricter in 1829 by Lord William Bentick who enacted Sati as a suicide and all who encouraged Sati in any way were made guilty of culpable homicide.

 

Halliday’s Testimony, 1829 – Buckland in his “Bengal under the Lieutenant Governors” writes: –

 

In 1829 just before the penalizing of Sati, Sir Fredierick Halliday, the first Lieutenant Governor of Bengal was the District Magistrate of Hoogly, on the bank of Ganges, where Sati, was frequent occurrence. The last case of Sati lawfully celebrated in Bengal is thus narrated by him :- “We tried our best to dissuade her, but all to no purpose ….. Seated close to me she looked up at my face with scorn and said,

 

BRING A LAMP”. THE LAMP WAS LIGHTED AND WITH SCORN AND DEFLANCE IN HER EYES, SHE PUT HER FINGER INTO THE FLAME. THE FINGER SCORCHED, BLISTERED AND BLACKENED AND FINALLY TWISTED UP. SHE REMAINED UNMOVED, NOT A MUSCLE TWITCHED AND NOT A SOUND ESCAPED.

 

 

“Are you satisfied?” she asked.

 

“Quite,quite satisfied,” was the reply. She asked my permission and I assented.

 

Cooly and calmly she mounted the funeral pyre and laid herself down beside a part of her husband’s clothing. The husband had died far away. She was covered with light brushwood and fire was set to the funeral pyre.”

 

The following true incident is given in Tavernier’s “Travels” (published in 1677) :-

 

The Raja of Vellore was killed in a battle with the King of Visapur. Eleven of his wives resolved to become Sati. The General of the Visapur army coming to know of it, imprisoned all of them together. They told the keeper at the time, “Imprisonment is futile, we shall die in three hours.”

 

After three hours all of them lay stretched on the floor dead, and were gone with their husband, without any mark of violence on their bodies.

 

ஆக சதியாக விரும்பினோர் உடல் மனம் ஆன்மாவினால் கணவனுடன் ஒன்று பட்டவர்கள்.

 

கண்டவுடன் காதல்; காமம் முடிந்தவுடன் டைவர்ஸ் என்ற நாகரிகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது பற்றி எதுவும் புரியாது என்பது தான் உண்மை!

 

ஆதாரம் : Truth, weekly Magazine Volume 86 Issue 1 dated 20-4-2018

நன்றி : ட்ரூத் வார இதழ்

*****

பேரழகி சித்தூர் ராணி பத்மினியின் தியாகம்! (Post No. 2683)

alauddin 3a

Compiled  by london swaminathan

Date: 1 April, 2016

 

Post No. 2683

 

Time uploaded in London :–  11-23 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

புறநானூற்றில் கணவன் சிதையில் தீக்குளித்த பூதப் பாண்டியன் தேவியைக் கண்டோம். சோழ மன்னன் கிள்ளிவளவன் மனைவியர் தீப்பாய்ந்து இறந்ததைக் கோவூர்க் கிழார் பாடக் கண்டோம். சிலப்பதிகாரத்தில், மாதரி என்னும் இடைக்குலப் பெண் தீயில்  பாய்ந்ததையும் எழுதிவிட்டேன். ஆயினும் சித்தூர் ராணி பத்மினி, நூற்றுக் கணக்கான பெண்களுடன் தீப்பாய்ந்ததைப் படிக்கையில் உடம்பில் புல்லரிக்கும்.

 

அலாவுதீன் கில்ஜி எனும் அயோக்கியனின் காமப்பசிக்கு இரையாவதைவிட, தீயில் குளிப்பது “மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே” என்று தீயில் குளித்தாள் பேரழகி பத்மினி; அவள் நூறு கிளியோபாட்ராவின் அழகுக்குச் சமமானவள்! இதோ அந்தக் கதை:–

ஏறத்தாழ 700 வருடங்களுக்கு முன், அலாவுதீன் கில்ஜி, டில்லியிலிருந்து அரசோச்சிய காலத்தில் ரஜபுதனத்திலுள்ள சித்தூரை பீமசிங்கன் என்பவன் ஆண்டுவந்தான். அவளுடைய மனைவியின் பெயர் பத்மினி. தாமரை போன்ற அழகிய முகம் வாய்ந்தவள். தைரியசாலி, நல்ல புத்தி சாதுர்யமிக்கவள். அவளுடைய அழகு பற்றிய செய்தி வட இந்தியா முழுதும் பரவியிருந்தது.

 

அலாவுதீன் கில்ஜிக்கு, எல்லா முஸ்லீம் மன்னர்களுக்கும் இருந்தது போல பல மனைவியர் இருந்தனர். அவன், சித்தூர் ராணி பத்மினியையும் அபகரிக்க விரும்பினான். ஆகவே பெரும்படையுடன் புறப்பட்டு ராஜஸ்தானுக்கு வந்து சித்தூரை முற்றுகையிட்டான். சித்தூரை வெல்ல முடியாதென்று தெரிந்தது. ‘கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற கதையாக, “நான் சித்தூரை வெல்ல வரவில்லை என்றும், பத்மினியின் அழகை ஒரே ஒரு முறை பார்த்துச் செல்லவே வந்ததாகவும்” பீம சிங்கனுக்குச் செய்தி அனுப்பினான்.

 

பீம்சிங்கன், அவன் வார்த்தையை நம்பி, ஓரிரு வீரர் துணையுடன் கோட்டைக்குள் வரலாமென்றும், ரஜபுத்ரப் பத்தினிப் பெண்கள் வேறு ஆடவரைப் பார்க்கக் கூடாதாகையால் நிலைக் கண்ணாடியில் மட்டும் அவள் உருவத்தைப் பார்க்கலாம் என்றும் நிபந்தனை போட்டான். உடனே அலாவுதீனும் இரண்டொரு வீரருடன் வந்து கண்ணாடியில், பேரழகி பத்மினியைப் பார்த்தான். ஏதேனும் சதி செய்து அவளைக் கவரவேண்டும் என்று எண்ணி, மனதில் சதித்திட்டம் தீட்டினான்.

 

“நான் உன்னை நம்பி, உன் கோட்டைக்குள், தனியே வந்தேனே. நீயும் என்னை நம்பி என் கூட வந்து வழியனுப்பக்கூடாதா?” என்று பீம சிங்கனிடம் அலாவுதீன் சொன்னான். ரஜபுத்ர இந்துக்கள், சத்ய சந்தர்கள்; உண்மை விளம்பிகள்; டில்லித் துலுக்கர்கள் போல உடல் முழுதும் விஷ ரத்தம் ஓடுபவரல்ல. ஆகவே அலாவுதீனை நம்பி அவன் கூட குதிரையில் செல்லுகையில், அலாவுதீன் உத்தரவிட்டவுடன் ஆப்கானியப் படைகள், பீமசிங்கனைச் சூழ்ந்து கொண்டன. அவனைக் கைது செய்து டில்லிக்குக் கொண்டு சென்றான் அலாவுதீன்.

 

“உன் மனைவியை என்னிடம் ஒப்புவித்தால் நான், உன்னை விடுவித்து, மீண்டும் சித்தூரின் மன்னனாக்குவேன்” என்று அலாவுதீன் சொன்னான். ஆனால் பீம சிங்கன் இணங்கவில்லை. இந்தச் செய்தி சித்தூர் வரை சென்றது.

 

பீமசிங்கனின் மனிவியான பத்மினி மஹா புத்திசாலி; வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும், முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்; வஞ்சனையை வஞ்சனையால்தான் வெல்ல வேண்டும் என்று கருதி, அலாவுதீன் கில்ஜிக்குச் செய்தி அனுப்பினாள். என் கணவனை நீ விடுவிப்பாயானால், நான் உன்னிடம் வரத்தயார். ஆயினும் ரஜபுதனப் பெண்கள், எல்லோரும் காணும்படி வெளியே உலவ மாட்டார்கள். ஆகவே என் பரிவாரம் புடை சூழ மூடிய பல்லக்குகளில் வருவோம்” என்றாள். அலாவுதீனும் ஆவலுடன் காத்திருந்தான்.

 

சித்தூர் கோட்டையிலிருந்து 70 மூடு பல்லக்குகள் புறப்பட்டன. ஒன்றில் கூட பெண்கள் கிடையாது. அத்தனையிலும், தேர்ச்சிபெற்ற 70 வீரர்கள் மறைந்திருந்தனர். ஆறு பல்லக்குத் தூக்கிகள், ஒவ்வொரு பல்லக்கையும் சுமந்தனர். அவர்கள் அனைவரும் வீரர்கள். பல்லக்குகளில் ஆயுதங்களை மறைத்து வைத்தனர். பாந்தால் என்பவன் அவர்களை டில்லியை நோக்கி அழைத்துச் சென்றான். அவன், “பத்மினி, கடைசியாக ஒரு முறை கணவனைப் பார்த்துவிட்டு உன்னிடம் வருவாள்” என்று அலாவுதீனிடம் சொன்னவுடன் “பத்மினியின் பல்லக்கை” கூடாரத்துக்குள் அனுப்பினான். அதிலிருந்த வீரன் வெளியே குதித்து பீமசிங்கனை குதிரையின் மேல் வைத்து தப்பிக்கச் செய்தான். உடனே பெரும் சண்டை நிகழ்ந்தது. இரு தரப்பும் வீரர்களை இழந்தன.

 

ஓரிரு ஆண்டுகள் உருண்டோடின. அலாவுதீனின் வெறி அடங்கவில்லை. எப்படியும் பத்மினியை அடைந்தே தீருவதென்று முடிவு செய்து, மீண்டும் படையெடுத்து சித்தூரை முற்றுகையிட்டான். இப்பொழுது பீமசிங்கன் பலவீனமான நிலையில் இருந்தான்; ஏனெனில் முந்தைய போர்களில் முக்கியப் படைத் தலைவர்களை இழந்துவிட்டான். ஒரு கட்டத்தில் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தது. தன் மகனை அருகாமையிலுள்ள ரஜபுதன ராஜ்யத்துக்கு அனுப்பி பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லிவிட்டு வீரதீரப் போரில் ஈடுபட்டு உயிர்துறந்தான் பீம சிங்கன்.

 

ரஜபுதனப் பெண்கள் வீராங்கனைகள்; அரண்மனையின் அந்தப் புரத்தில் மாபெரும் தீ வளர்த்தனர். அதில் நூற்றுக் கணக்கானோர், பேரழகி பத்மினியுடன் குதித்து சாம்பலாயினர். வெற்றிக் களிப்புடன் கோட்டைக்குள் நுழைந்த அலாவுதீனுக்கு, வீரர்களின் பிணங்களும், வீரத்தாய்மார்களின் சாம்பலுமே கிடைத்தது!

பாரத நாடு உள்ள வரை, பத்மினியின் புகழும் நீடிக்கும்! ரஜபுதனக் கோட்டை கொத்தளங்களும், பாலைவன மணல் துகள்களும் இன்றும் கூட பத்மினியின் புகழைப் பாடிக்கொண்டிருக்கின்றன!!

-சுபம்-

எனது முந்தைய கட்டுரை:

1.சங்கத் தமிழ் நூல்களில் “சதி” (உடன்கட்டை ஏறுதல்)

கட்டுரை எண்:–1108; தேதி 15 ஜூன் 2014.

 

-subham–