
சுபாஷித நூல்களின் பட்டியல்! – 2 (8938)
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8938
Date uploaded in London – – –17 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
15873 சுபாஷிதங்களைச் சுட்டிக் காட்டும் கட்டுரையின் முதல் பகுதியைப் படித்து விட்டவர்கள் அடுத்த இந்தக் கட்டுரையைப் படிக்கலாம். (முதல் கட்டுரை எண் : 8871 ; வெளியான தேதி : 30-10-2020) இந்தக் கட்டுரையில் உள்ள முதல் நூலிலேயே பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுபாஷிதங்கள் உள்ளன. ஆக 25873 என்ற எண்ணிக்கையைக் கடந்த பின்னர் அடுத்து சுட்டிக்காட்டப்படும் நூல்களில் ஆயிரமாயிரம் சுபாஷிதங்கள் உள்ளன. எண்ணிக்கை கடந்த நிலைக்குச் செல்லும் ஒரு அற்புத சுபாஷித பயணமாக அமைவது இந்தத் தொடர். அனைத்தையும் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்!
சுபாஷித நூல்களின் பட்டியல்! – 2
ச.நாகராஜன்

9. சுபாஷித ரத்ன பாண்டாகாரம்
(A Collection of more than 10000 Subhashitas)
சம்ஸ்கிருதத்தில் அமைந்துள்ள இந்த நூலில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுபாஷித ஸ்லோகங்கள் உள்ளன.
7 பிரகரணங்கள் (பகுதிகள்) கொண்ட நூல் இது.
- மங்களாசரண ப்ரகரணம்
- சாமான்ய ப்ரகரணம்
- ராஜ ப்ரகரணம்
- சித்ர ப்ரகரணம்
- அன்யோக்தி ப்ரகரணம்
- சங்கீர்ண ப்ரகரணம்
- நவரஸ ப்ரகரணம்
காசிநாத் சர்மா (Kashinath Sharma) அவர்களால் வெளியிடப்பட்டுள்ள நூல் இது.
முதல் பிரகரணமான மங்களாசரண ப்ரகரணத்தில் கணேசர், சரஸ்வதி, சிவபிரான், பார்வதி, விஷ்ணு, லக்ஷ்மி, ப்ரம்மா, தசாவதாரம், ந்ருசிம்ஹ,ராம்சந்த் ர, க்ருஷ்ண, சூர்ய, சந்திரன், பிருத்வி உள்ளிட்ட பல தலைப்புகளில் அழகிய சுபாஷித ஸ்லோகங்கள் உள்ள்ன.
அடுத்த ப்ரகரணமான சாமான்ய ப்ரகரணத்தில் மிகப் பெரும் கவிஞர்களின் நூல்களில் உள்ள மிக மிக அருமையான ஸ்லோகங்கள்/கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
மஹாகவி காளிதாஸ், அமரசிம்மன், கணேஷ்வர், ஜயதேவர், நரஹரி, பவபூதி,மயூரர், முராரி, வியாஸர், சாதவாஹனர், சுபந்து உள்ளிட்ட கவிஞர்களின் படைப்புகள் இந்த பிரகரணத்தில் காணலாம்.
ராஜ ப்ரகரணத்தில் அரசர்கள் சம்பந்தப்பட்ட கவிதைகள் அடங்கியுள்ளன.
கிருஷ்ணன், கர்ணன், போஜன், அக்பர், அர்ஜுன தேவ்,ஜன்கர் உள்ளிட்ட மன்னர்கள் இதில் இடம் பெறுகின்றனர்.
சித்ர ப்ரகரணம் புதிர்கள் அடங்கிய ஒரு பெரிய தொகுப்பு. அபூர்வமான எங்கும் காண முடியாத கவிதைகளின் தொகுப்பு இது. வெவ்வேறு சித்ர பந்தங்களின் அமைப்பை இதில் காண முடியும்.
அன்யோக்தி ப்ரகரணத்தில் சூர்யான்யோக்தி, சந்திரான்யோக்தி, மேதான்யன்யோக்தி, மேரு, மலய, மந்தர போன்ற ஏராளமான தலைப்புகளில் அமைந்துள்ள ஸ்லோகங்கள் அபூர்வமானவை.
சங்கீர்ண ப்ரகரணத்தில் ரத்னானி, ஜலசரான்யோக்த்ய, விருக்ஷான்யோக்த்ய உள்ளிட்ட தலைப்புகளில் ஸ்லோகங்கள் உள்ளன.
நவரஸ ப்ரகரணத்தில் பெயருக்குத் தக்கபடி நவ ரஸங்களைக் காண்பிக்கும் அபூர்வ ஸ்லோகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. சிருங்கார ரஸம் என்று எடுத்துக் கொண்டால் கண், நெற்றி, காது, கழுத்து, கைகள், நாபி, என இப்படி அங்கம் அங்கமாக வர்ணனைகளைக் காணலாம். காதல் சம்பந்தப்பட்ட கவிதைகள் படிப்பவர்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்.
புகழ்பெற்ற கவிஞர்கள் மன்னர்களின் சபைகளில் பாடிப் பரிசு பெற்ற கவிதைகள் தொகுத்துக் கொடுக்கப்பட்டிருப்பதால் ஒவ்வொன்றுமே சிறப்பான கவிதை என்று தான் சொல்ல முடியும்.
இதை கீழ்க்கண்ட தளத்திலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
https://archive.org/details/SubhashitaRatnaBhandagara
10-39 முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள்
அற்புதமான முப்பதுக்கும் மேற்பட்ட சுபாஷித நூல்களை டவுன்லோட் செய்து கொள்ள அன்பர்கள் நாட வேண்டிய தளம்
https://sanskritdocuments.org/sanskrit/subhaashita/
ஸ்லோகங்களின் எண்ணிக்கையைக் கூட்டிச் சொல்லும் எல்லையை நாம் இப்போது கடந்து விட்டோம்.
பல்லாயிரக் கணக்கில் சுபாஷிதங்கள்!!! எண்ணிக்கை கடந்த கவிதைகள்!
படிக்கவும் சுவைக்கவும் வாழ் நாள் போதுமா?

tags- சுபாஷித நூல்-2
***