கபிலதேவ நாயனார் போற்றிய செங்குன்றூர்! (Post No.6434)

Written by S Nagarajan

swami_48@yahoo.com


Date: 24 May 2019


British Summer Time uploaded in London – 8-29 am

Post No. 6434

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பாடல் இதோ:

Thiruchengodu Pictures

தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழாரின் பெருமை! (Post No.5367)

WRITTEN BY S NAGARAJAN

Date: 27 August 2018

 

Time uploaded in London – 7-25 AM (British Summer Time)

 

Post No. 5367

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழாரின் பெருமை!

.நாகராஜன்

உலகப் பொதுமறையாம் திருக்குறளை திருவள்ளுவர் அரங்கேற்றம் செய்யப் பட்ட பாடு அனைவரும் அறிந்த ஒரு வரலாறு.

அதைச் சுருக்கமாக இங்கு பார்ப்போம்.

ஒப்பிலாத திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் அதை அரங்கேற்ற மதுரையில் உள்ள தமிழ்ச் சங்கத்தாரிடம் சென்றார். அவர்கள் மிகுந்த கல்விச் செருக்கால் இதை ஒரு நூலாக மதிக்கவும் இல்லை; திருவள்ளுவரை அங்கீகரிக்கவும் இல்லை. சங்கப் பலகையில் அவரை அமர வைக்கவும் இல்லை.

நல்ல நூல்களை மட்டுமே சங்கப் பலகை தாங்கும். அந்த சங்கப் பலகையில் இந்தச் சுவடிக்காவது இடம் கொடுங்கள் என்றார் திருவள்ளுவர்.

அதற்கிணங்கி திருக்குறள் சுவடியை சங்கப் பலகையில் வைத்தனர். உடனே திருக்குறள் சுவடி அளவில் சங்கப் பலகை சுருங்க ஏனைய நூல்களும் புலவர்களும் கீழே விழுந்தனர்.

திருக்குறளின் மாண்பையும் சிறப்பையும் அனைவரும் உணர திருக்குறளை வள்ளுவர் அரங்கேற்றினார்.

அதைச் சிறப்பித்துப் பாட அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தனர். சங்கப் புலவர்கள்  ஆளுக்கொரு பாடலைப் பாடி நூலைச் சிறப்பித்தனர். அசரீரியாக – ஆகாயவாணியாக – ஒரு பாடல் மலர்ந்தது. இடைக்காடர் மற்றும் ஔவை ஆகியோர் ஆளுக்கொரு பாடல் தர மொத்தம் 55 பாடல்கள் ஆயின. இது திருவள்ளுவ மாலை என்ற சிறப்புப் பெயர் பெற்று இன்றும் இலங்குகிறது.

இந்த 55 பாடல்களில் தமிழாசிரியர் செங்குன்றூர் கிழாரும் ஒருவர். அவர் கீழ்க்கண்ட வெண்பாவைப் பாடினார் :

புலவர் திருவள்ளுவர் அன்றிப் பூமேல்          சிலவர் புலவர் எனச் செப்பல் – நிலவு       பிறங்குஒளி மாமலைக்கும் பெயர்மாலை மற்றும் கறங்குஇருள் மாலைக்கும் பெயர்.

அருமையான இந்தப் பாடலை அளித்த தமிழாசிரியர் கிழார் வாழ்ந்த செங்குன்றூர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஊர் என்று அவரைச் சிறப்பித்து கொங்கு மண்டல சதகம் 28ஆம் பாடல் கூறுகிறது:

பாடல் இதோ:

நிலவுல கத்திற் பலகலை தேர்ந்த நிபுணருளே புலவர் திருவள் ளுவரென நேயம் பொருந்தவுரை குலவு மதுரைத் தமிழா சிரியர்செங் குன்றூர்கிழார் வலிமை யுறவரு செங்கோடை யுங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் : பூவுலகத்தில் பல கலைஞானங்களில் சிறந்த புலவர், திருவள்ளுவர் என்று கூறிய மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர் கிழாருங் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரே என்பதாம்.

திருவள்ளுவ மாலையில் உள்ள அசரீரி கூறிய பாடல் இது:

திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோடு      உருத்தகு நற்பலகை ஒக்க – இருக்க         உருத்திர சன்மர் என உரைத்து வானில்    ஒருக்கஓ என்றதுஓர் சொல்

கலைமகள் திருக்குறளைப் புகழ்ந்து பாடிய பாடல் இது:

நாடா முதல்நான் மறைநான் முகன்நாவில்     பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன் – கூடாரை   எள்ளிய வென்றி இலங்கிலைவேல் மாறபின் வள்ளுவன் வாயதுஎன் வாக்கு.               இறையனார் திருக்குறளைப் புகழ்ந்து ஈந்த பாடல் இது:

என்றும் புலராது யாணர்நாள் செல்லுகினும் நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் – குன்றாத                                   செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்

ஆக திருவள்ளுவரின் தெய்வத் திருக்குறள் நிலைத்திருக்கும் வரை திருவள்ளுவ மாலைப் பாடல்களும் நிலைத்திருக்கும். அதில் ஒன்றைப் பாடியவர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்று கொங்கு மண்டல சதகம் பெருமையுடன் கூறுகிறது!

****