
Amathur Temple, Picture by C.Vedanarayanan
Compiled by London swaminathan
Date: 5 January 2017
Time uploaded in London:- 12-42
Post No.3516
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
Golden Sayings of Tamil saint Pattinathar- Part 1

முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவில் ஒரு
பிடிசாம்பராய் வெந்து மண்ணாவதும் கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்
அடி சார்ந்து நாம் உய்யவேண்டுமென்றே அறிவாரில்லையே
xx
பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும் மறந்தன உணரும்
x
வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன் மாதுசொன்ன
சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லன் தொண்டுசெய்து
நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன் நான் இனிச் சென்று
ஆளாவதெப்படியோ திருக் காளத்தி அப்பருக்கே
xx
மந்திக் குருளையொத் தேனில்லை நாயேன் வழக்கறிந்தும்
சிந்திக்குஞ் சிந்தையை யானென் செய்வேன் எனைத் தீதகற்றிப்
புந்திப் பரிவிற் குருளையை ஏந்திய பூசையைப் போல்
எந்தைக் குரியவன் காணத்தனே கயிலாயத்தானே
(மற்கட நியாயம், மார்ஜர நியாயம் பாடல்)
xx
வீடு நமக்கு திருவாலங்காடு விமலர் தந்த
ஓடு நமக்குண்டு வற்றாத பாத்திரம் ஓங்கு செல்வ
நாடு நமக்குண்டு கேட்டதெல்லாம் தர நன்நெஞ்சமே
ஈடுநமக்குச் சொலவோ ஒருவரும் இங்கில்லையே
xx

அம்பலத் தரசனை யானந்தக் கூத்தனை
நெருப்பினில் அரக்கென நெக்கு நெக்குருகித்
திருச்சிற்றம்பலத் தொளிரும் சிவனை
நினைமின் மனமே, நினைமின் மனமே
x
ஆசைக் கயிற்றிலாடும் பம்பரம்
ஓயா நோய்க்கிட மோடு மரக்கலம்
மாயா விகாரம் மரணப் பஞ்சரம்
சோற்றுத் துருத்தி கானப் பட்டம்
x
ஆசைக் கயிற்றிலாடும் பம்பரத்தைக்
காசிற் பணத்திற் சுழலுங் காற்றாடியை
மக்கள் வினையின் மயங்கும் திகிரியைக்
கடுவெளியுருட்டிய சகடக் காலை
x
மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன்வாயில் மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டுமே வழிக்கேது துணை
தினையா மன வெள்ளளவாகினும் முன்பு செய்த தவம்
தனை யாளவென்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே
(வீடு வரை மனைவி, வீதி வரை உறவு, காடு வரை யாரோ?)
xx
பாவச் சரக்கொடு பவக் கடல் புக்குக்
காமக் காற்றொடுத் தலைப்பக்
கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை
இருவினை விலங்கொடு இயங்கும் புற்கலனை
x

Amirthakateswarar Temple
எண்சாணுடம்பு மிழியும் பெருவழி
மண்பாற் காமம் கழிக்கும் மறைவிடம்
நச்சிக் காமுக நாய்தானென்றும்
இச்சித் திருக்கும் இடைகழி வாயில்
திங்கட் சடையோன் திருவருள் இல்லார்
தங்கித் திரியும் சவலைப் பெருவழி
xx
அண்டரண்டமும் அனைத்துள புவனமும்
கண்ட அண்ணலை கச்சியிற் கடவுளை
ஏகநாதனை இணையடி இறைஞ்சுமின்
போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே
xx
கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத் தச்சன்
வெட்டி முறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகி அப்பால்
எட்டி அடி வைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே
xx
நன்னாரில் பூட்டிய சூத்திரப் பாவைதன் நார்தப்பினால்
தன்னாலும் ஆடிச் சலித்திடுமோ அந்தத் தன்மையைப் போல்
உன்னாலி யானும் திரிவதல்லால் மற்றுனைப் பிரிந்தால்
என்னாலிங் காவதுண்டோ இறைவா கச்சி ஏகம்பனே
xx
பிறக்கும் பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்தது என்று கொடுக்க அறியா
திறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் கச்சி ஏகம்பனே
xx
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே
xx

ஆவியொடு காயம் அழிந்தாலும் மேதினியில்
பாவி என்று நாமம் படையாதே — மேவிய சீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டாம் மடநெஞ்சே
செத்தாரைப் போலே திரி
xx
பருத்திப் பொதியினைப் போலே வயிறு பருக்கத் தங்கள்
துருத்திக்கு அறுசுவை போடுகின்றார் துறந்தோர் தமக்கு
இருத்தி அமுதிட மாட்டார் அவரை இம்மாநிலத்தில்
வருத்திக்கொண்டேன் இருந்தாய் இறைவா கச்சி ஏகம்பனே
xx
ஈயா மனிதரை ஏன் படைத்தாய் கச்சி ஏகம்பனே
xx
கொன்றேன் அநேகம் உயிரை எல்லாம் பின்பு கொன்றுகொன்று
தின்றேன் அதன்றியும் தீங்கு செய்தேன் அது தீர்க என்றே
நின்றேன் நின் சந்நிதிக்கே அதனால் குற்றம் நீ பொறுப்பாய்
என்றே உனை நம்பினேன் இறைவா கச்சி ஏகம்பனே
xx
ஊட்டு விப்பானும் உறங்கு விப்பானும் இங்கொன்றோடொன்றை
மூட்டு விப்பானும் முயங்கு விப்பானும் முயன்றவினை
காட்டு விப்பானும் இருவினைப் பாசக் கயிற்றின் வழி
ஆட்டு விப்பானும் ஒருவனும் உண்டே தில்லை அம்பலத்தே
xx
பிறவாதிருக்க வரந்தரல் வேண்டும் பிறந்துவிட்டால்
இறவாதிருக்க மருந்துண்டு கானிது எப்படியோ
அறமார் புகழ்த் தில்லை அம்பலவாணர் அடிக்கமலம்
மறவாதிரு மனமே அதுகாண் நன் மருந்துனக்கே

–Subham–