சூரிய ஆற்றலின் நன்மைகள்! (Post No.5356)

India’s solar energy train.

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 24 August 2018

 

Time uploaded in London – 5-35 AM (British Summer Time)

 

Post No. 5356

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

சூரிய ஆற்றலின் நன்மைகள்!

சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் மாசைத் தவிர்க்க சூரிய ஆற்றல் பெரிதும் உதவியாக இருக்கும்.

படிம எரிபொருள் என்று கூறப்படும் ஃபாஸில் ஃப்யூயல்களைத் தவிர்த்து சூரிய ஆற்றலை பயன்படுத்துவதால் வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை முதலில் தவிர்க்கப்படும். கார்பன் டை ஆக்ஸைடு வளி மண்டலத்தை நச்சு மண்டலம் ஆக்காமல் தடுப்பதையும் உலகம் வெப்பமயமாதலிலிருந்து தவிர்ப்பதையும் இந்த சூரிய ஆற்றல் செய்கிறது.

அமெரிக்காவில் இன்று நிறுவப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மட்டுமே ஆண்டுக்கு 168 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான கார்பன் டை ஆக்ஸைடைத் தவிர்க்கிறது என்றால் உலகெங்கும் சூரிய ஆற்றல் பயன்படுத்தப்பட்டால் எவ்வளவு நச்சு வாயு வெளியேற்றம் தடுக்கப்படும் என்பதை எளிதில் ஊகிக்கலாம்.

 

Solar Energy station in Rajasthan

இதர அனைத்து உற்பத்தி முறைகளுக்கும் நீர் இன்றியமையாதது. ஆனால் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தும் போட்டோவொல்டைக் செல்களுக்கு  நீர் தேவையில்லை. ஆக அரிதான நீர் பெருமளவு சேகரிக்கப்படும். தெர்மல் பவர் நிலையங்களுக்கு அவற்றின் சாதனங்களைக் குளிர்விக்கவும் நீர் தேவை. ஆனால் சூரிய ஆற்றலின் உற்பத்திக்கோ இப்படிப்பட்ட நீரின் தேவை இருக்காது. சூரிய ஆற்றலின் மிகப் பெரும் ஆதாயம் சுற்றுப்புறச் சூழலுக்கு மாசே ஏற்படாது என்பது தான்!

 

அடுத்து சூரிய ஆற்றல் மறுசுழற்சிக்கு உள்ளாகக் கூடியது. உலகின் மிகப் பெரும் ஆற்றல் சக்தியாக இருப்பது சூரியன். 1,73,000 Terawattsஒரு லட்சத்து எழுபத்திமூன்றாயிரம் டெராவாட்ஸ் என்ற அளவிற்கு அது சூரிய ஆற்றலை ஒவ்வொரு விநாடியும் தருகிறது. இது உலகின் மொத்த தேவையான ஆற்றலைப் போல பத்தாயிரம் மடங்காகும்! அது மட்டுமல்ல, இந்த சூரிய ஆற்றலை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும், ஆனால் படிம எரிபொருளை ஒரு முறையே பயன்படுத்த முடியும் , அதன் நச்சு விளைவுகளுடன் கூட!

 

சூரிய ஆற்றல் இன்னும் பல கோடி ஆண்டுகளுக்குக் குறையாது, அழியாது. ஆனால் பெட்ரோல், டீஸல் ஆகிய எரிபொருள்கள் இனி கிடைப்பது அரிதாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை எடுத்து சுத்திகரிக்க ஆகும் செலவு கூடிக் கொண்டே போகிறது. ஆனால் இவற்றை ஒப்பிடும்போது சூரிய ஆற்றலின் செலவு மிக மிகக் குறைவானது என்பதும் ஒரு நல்ல செய்தி!

 

Solar energy is used by Indian Railways.

ஆக சூரிய ஆற்றலின் பயன்பாடு செலவைக் குறைக்கும்.பல கோடி ஆண்டுகளுக்கு நீடித்திருக்கும், சுற்றுப்புறச் சூழலின் மாசை அறவே தடுக்கும்.

***