
Written by London swaminathan
Date: 7 JULY 2018
Time uploaded in London – 11-59 am (British Summer Time)
Post No. 5191
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
‘அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்?’–
என்ற கண்ணதாசனின் பாடல் மிகவும் பிரஸித்தம்
(திரைப்படம்- அன்னை)
“மிதிலை எரிந்திட வேதப் பொருளை
வினவும் சனகன் மதி—தன்
மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது
வல்ல நம் அன்னை மதி”– (சுப்ரமண்ய பாரதி)
என்ற பாரதியின் பாடல் அதையும் விட பிரபலமானது.

Sita Devi Temple in Janakpur, Nepal
இப்பேற்பட்ட மிதிலா புரியைப் பற்றி- அன்னை ஜானகி பிறந்த ஊரைப் பற்றி- நிறைய சுவையான கதைகள் உண்டு. ஒவ்வொன்றாகத் தருவன்; சுவைத்து மகிழ்க.
மிதிலையின் தற்போதைய பெயர் ஜனக்பூர். இது நேபாள நாட்டில் உள்ளது. பீஹார் மற்றும் நேபாளத்தின் தென்பகுதி அந்தக் காலத்தில் விதேஹ தேசம் என்று அழைக்கப்பட்டது. அதை ஆண்ட ஜனகன் மாபெரும் தத்துவ ஞானி. அவனது சபையில் பெண் அறிஞர்களும் இருந்தனர். அப்போது அறிஞர் மஹாநாட்டில் தலை சிறந்த தத்துவ ஞானியான யாக்ஞவல்கியரை யாரும் கேள்வி கேட்க அஞ்சிய நேரத்தில் பெண்மணி கார்க்கி வாசக்னவி எழுந்து நின்று ‘ஐயரே!’ என்று துவங்கினாள். ஜனகர் பற்றிய கதைகளையும் வாசக்னவி பற்றிய உபநிஷத் கதைகளையும் முன்னரே எழுதிவிட்டேன்.
விதேஹ என்ற பெயர் ஏன் வந்தது என்ற சுவையான கதையைக் காண்போம். விஷ்ணு புராணக் கதை:-
வசிஷ்ட மஹரிஷி, இந்திரனுக்கு ஒரு யாகம் செய்து கொடுத்துவிட்டு விதேஹ நாட்டை நோக்கி விரைந்து வந்தார். காற்றினும் கடுகி வந்த முனிவர் ஐயாவுக்கு ‘ஷாக்’ அடித்தது. ஏனெனில் எந்த நிமி என்ற மன்னனுக்காக இவர் ஓடோடி வந்தாரோ அந்த நிமி, கௌதம ரிஷியைக் கொண்டு யாகத்தை நடத்தி விட்டு ‘ஹாயாக’ உறங்கிக் கொண்டு இருந்தார்.
“ஏன் பள்ளி கொண்டீர் ஐயா?” என்று பாடவா பாடுவார்? கொடுத்தார் ஒரு சாபம்!
“பிடி சாபம்; நீ விதேஹன் ஆகக் கடவது”
வி+தேக= உடலற்றவன்
அது முதற்கொண்டு அந்த நாட்டுக்கு விதேக ( உடலற்ற) என்ற பெயர் வந்ததாம்.
ஐயா நிமி என்ன இளிச்சவாயனா? அவர் சொன்னார்;
பிடி சாபம்!
தூங்கும் மன்னனுக்கு சாபம் இடுவது சட்டப் பு த்தகத்தின்படி தவறு! ஆகையால் நீவீரும் அழிவீராக! என்றார்.
நிமி இறந்தவுடன் அவர் உடலைக் ‘’’கடை’’ந்தனர். உடனே அதிலிருந்து ஒரு குழந்தை பிறந்தது. அதன் பெயர் மிதி; அவர் ஆட்சி புரிந்தவுடன் அந்தத் தலைநகருக்கு மிதிலா என்று பெயர் ஏற்பட்டது.
((இந்த உடலைக் கடைந்து பிள்ளை பெறும் சம்பவம் மநு சாஸ்திரத்தில் வேனன் கதையிலும் வருகிறது. இது ஒரு Technical Term) டெக்னிக்கல் டேர்ம்; அதாவது அறிஞர்கள் அகராதியில் செயற்கை முறைக் குழந்தை என்று பெயர். அதாவது CLONING க்ளோனிங். ; முனிவர்கள் இதைச் சொன்னாலும் புரியாது என்பதற்காக இப்படி’’கடை’’ந்து பிள்ளை பெற்றதாக விள்ம்புவர்.

Narendra Modi in Janakpur
இன்னொரு கதையைக் காண்போம்
சுருசி என்று ஒரு மன்னர் வாழ்ந்தார்; இறந்தார். அவருடைய மனைவியின் பெயர் சுமேதா. அவளுக்கு குழந்தை வேண்டும் என்று ஆசை. புத்தரின் அஷ்ட சீலக் கொள்கைகளைக் கடைப்பிடித்து நோன்பு நோற்றாள். உடனே சக்கா
(புத்தமத அகராதியில் இந்திரனின் பெயர்- சக்ரா)
அவள் முன் முனிவர் வடிவத்தில் வந்தார். ‘உன்னைப் பற்றி நீயே 15 துதிகள் பாடுக’ என்று கட்டளையிட்டார். அந்த அம்மையாரும் அப்படியே செய்ய ஒரு குழந்தை பிறந்தது என்று ஜாதகக் கதைகள் புகலும்.
இன்னொரு சுவையான கதை:-

விதேஹ நட்டின் மன்னன் தட்சசீல பல்கலைக் கழகத்தில் பயின்றான். அந்த மன்னனுக்கு அறிவுரை புகல நான்கு அமைச்சர் பெருமக்கள் இருந்தனர். அந்த மிதிலை நகரில் பிங்குத்தர என்று ஒரு பிரம்மச்சாரி இருந்தான. அவனும் பல்கலைக் கழக மேம்படிப்புக்காக தட்சசீல நகருக்குச் சென்றான். அங்கு ஒரு குருகுலத்தில் சேர்ந்த கற்கக் கசடறக் கற்றான். குருவுக்கு நன்றி சொல்லி கிளம்பினான்.
அவர் சொன்னார்_;
அன்புமிக்க மாணவா! என் குடும்பத்தில் ஒரு வழக்கம் உண்டு. பருவம் அடைந்த ஒரு மங்கை இருந்தால், அந்த நங்கையை மூத்த மாணவனுக்கு மணம் முடிப்பது வழக்கம். எனக்கொரு மகள் உண்டு அவளை உனக்குக் கன்னிகா தானம் செய்ய விழைகிறேன் என்றார். அடடா! ஒரு கல்லை விட்டு எறிந்தேன்! இரண்டு மாங்காய்கள் விழுகின்றனவே. வலியக் கிடைக்கும் அழகியை யார் நழுவ விடுவார் என்று சொல்லி அவளைக் கல்யாணம் கட்டி கிரஹஸ்தனாக விடு போய்ச் சேர்ந்தான்.
இன்னும் வரும்………………………………..
-சுபம்-
ரோம் எரிந்தபோது | Tamil and Vedas
tamilandvedas.com/tag/ரோம்…
மிதிலை எரிந்திட வேதப் பொருளை . … மிதிலை … //tamilandvedas.com/2013/03/24/%e0%ae%9c%e0%ae%a9 …