ஜோதிடக் கட்டுரை -நான் பார்த்ததிலே அவன் ஒருத்தனைத் தான்…! (Post.8586)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8586

Date uploaded in London – 28 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

  

நான் பார்த்ததிலே அவன் ஒருத்தனைத் தான்…!

Kattukutty

அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்

நான் கேட்டதிலே அவன் வார்த்தையைத் தான்

நல்ல கவிதை என்பேன், நல்ல கவிதை என்பேன்

உடனே அங்கே இருந்து ஒரு குரல் “நான் பார்த்திலே உன் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன், நல்ல அழகி என்பேன்”

நான் கேட்டதிலே உன் வார்த்தையைத் தான் நல்ல கவிதை என்பேன்

நல்ல கவிதை என்பேன்

திடீரென்று நண்பர் ஒருவர் ஓடி வந்தார்.

வாங்கோ, வாங்கோ என உட்கார வைப்பதற்குள் போதும் போதும்

என்றாகி விட்டது

அவர் பேச ஆரம்பித்தார்

2016 சென்ஸஸ் பிரகாரம் தமிழ்நாட்டில் 17 முதல் 24 வயது வரை உள்ள ஆண்களின் எண்ணிக்கை மூன்று கோடியே,59 லட்சத்து 8 ஆயிரத்து 596 பேர்கள்

பெண்களின் எண்ணிக்கை மூன்று கோடியே, 58 , லட்சத்து,8ஆயிரத்து 775 பேர்கள்

(உங்களுக்கு சந்தேகம் இருந்தால் www.mhrd.gov.in போகவும்)

இதையெல்லாம் ஏனையா எங்கிட்ட சொல்றீர்???

நான் என்ன தேர்தலுக்கா நிற்கப் போகிறேன்???

மூன்று கோடியே 59 லட்சம் பேரிலே இவன் ஒருத்தன் தான் கிடச்சானா??? நல்லழகன், நல்ல கவிதை??.

என் பொண்ணு சத்தம் போட்டு பாடராய்யா

உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்……

என் ஆலயத்தின் இறைவன்……

ஸபீகர்ல போட்டு கேக்குறய்யா என்பெண், அவன் பாடறதை???

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ…….

உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ

பார்வையிலே குமரியம்மா, பழக்கத்திலே குழந்தையம்மா நீ…….

.

“அவனை கண்டாலே எனக்குப் பிடிக்கல்லை”  -இது நண்பர்

இவ்வளவு நேரம் ஆயிற்று இந்த “லவ்”விஷயம்

என் மண்டேலெ ஏற……

ஜோதிடத்தில் 10 பொருத்தங்களில் ஓன்று

“வசியப் பொருத்தம்”. நிரம்பப்பேர் இதைப் பார்ப்பதில்லை.

முக்கியப் பொருத்தங்களான தினம் , கணம், ராசி, யோனி,

ரஜ்ஜூ, முதலிய 5 பொருத்தங்களோடு சம்பந்திகளாகி

விடுகின்றனர்

பார்த்தவுடன் “பிடிப்பு” , “வசியம் “எப்படி உண்டாகி விடுகிறது

என முன்னோர்கள் முன்பே கணக்கிட்டிருக்கிறார்கள்..

எந்தந்த ராசிக்காரர்கள் (பெண்கள்) எந்தந்த ராசிக்கார

(ஆண்களை) விரும்புவார்கள்????

மேஷ ராசிப் பெண்கள் கொஞ்சம் துடுக்கானவர்கள்!!!

அமைதியான சிம்ம ராசி ஆண்களை ரொம்ப பிடிக்கும்.

அவர்களை விரட்டி பிடிக்கும் குணம் உண்டு…….

ரிஷப ராசி பெண்கள் ரொம்ப உற்சாகமானவர்கள். அமைதியான

சாதுவான கடக ராசிகார்களை வசப்படுத்திக கொள்வார்கள்

கண்டவுடன் காதல் இப்படித்தான்….ஏனென்றால் மிக அழகானவர்கள்

நீங்கள்!!! உங்களுக்கு பலர் வலை வரிப்பார்கள் . ஆனால் நீங்கள் யாருக்கும் வசப்படாத துலாம் ராசிக்காரர்களை மை போட்டு இழுப்பது போல் இழுத்து கவர்ச்சிகரமாய் பணிய வைத்திடும் புத்திசாலிகள்!!!

மிதுனராசி பெண்கள் உங்கள் கண்களில காந்தம் வைத்திருக்கிறார் ஆண்டவன்!!! நீங்க சரி சமமாக எல்லோரையும் கருதினாலும்

கன்னி ராசிக்காரர்களைக் கண்டால் “டமால்” . பிறகென்ன

அவரை இரவு பகலாக படுத்தி விடுவீர்கள்!,,,

கடகராசி பெண்கள் அமைதி பூங்காவாக இருந்து படக் கென்று

ஒரு ஆளை பிடித்து விடும் குணம் உண்டு. அப்படியே யாரவது

ஒருவரை திருமணம் செய்து கொண்டாலோ, அவர்களுடன்

சுமுகமாக வாழ்க்கை!!! உங்களைப் போல் தயாள குணம்

வேறு யாருக்கும் கிடையாது ….கிடைக்காது!!!

சிம்ம ராசி பெண்கள் துலாம் மீன ராசி ஆட்களெல்லாம்

உங்களுக்கு தண்ணி பட்ட பாடு….இஷ்டப்பட்டவரை உயர்ந்த

நோக்கம் உள்ளவரை விரட்டி, மிகவும் கஷ்டப்பட்டு

“டாப் மோஸ்ட்” இடத்துக்குக் கொண்டு வந்து விடுவீர்கள்.

துலாம் ராசி ஆண் என்றல் நீங்கள் அவருக்கு அடிமை.

மீன ராசி ஆண் ஆனால் அவர் உங்களுக்கு அடிமை!,

கன்னி ராசி பெண்கள் உங்கள் விருப்பமே தனி மாதிரி.

வாழ்கை சரியாகவே அமையாமல் ஏதோ ஒரு ஆளை பிடித்து

திருமணம் பண்ணுவீர்கள் ஆனால் ரிஷப ராசி ஆண்களோ, மீன

ராசி ஆண்களோ உங்களுக்கு கிடைத்து விட்டால் உங்களை

போல பாக்கிசாலி உலகத்திலேயே கிடையாது.

துலாம் ராசி பெண்கள் தங்கத்தை உரசிப்பார்த்து வாங்கற

“க்ரூப்” நீங்க….குருட்டுத்தனமா மகர ராசிக்காரர்கள் மட்டும் கிடைத்தால் பேரம் பேசாமல் வாழ்கையை ஓட்டுவீர்கள். மற்ற ஆட்கள் யாராவது கணவனாக வந்து சிக்கினான்,

அவ்வளவுதான் நீங்க ராணி அவர் வாட்ச் மேன்!!!

விருச்சிக ராசி பெண்கள் கடகம் கன்னி ராசி ஆண்களைக கண்டால்

கையும் ஓடாது காலும் ஓடாது …… மற்ற ராசிக்காரர் சிக்கினால்

அவர்களுக்கு கையும் இருக்காது காலும் இருக்காது….அப்படி

வேலை வாங்கி விடுவார்கள் இந்த தேள் கொடுக்கு” பொண்ணுங்க

தனுசு ராசி பெண்களுக்கு ஏற்ற ஜோடி மீன ராசி ஆண்கள்

தான்……ஓருவரோடு ஈஷிக் கொள்வதும் பேசிக் கொள்வதும்

மற்றவர் பார்த்து பொறாமைப் படும் அளவுக்கு இருக்கும்

மற்றவர் கணவராக வந்தால் ஐயோ பாவம் ஏதோ வண்டி ஓடும்!

மகர ராசி பெண்களுக்கு மேஷம், கும்ப ராசி ஆண்களைக்

கண்டால் பக்கத்தில் யார் இருக்கிறார்கள், என்ன பேசக்கூடாது

என்றெல்லாம் தெரியாது. மனம் விட்டு குடும்ப நணபர்களோடு

பேசுவது போல் இருப்பார்கள். மற்ற ராசி ஆண்களென்றால்

கேட்ட கேள்விக்கு பதில்…………………….வாழ்க்கையும்

questions and answers மாதிரி இருக்கும்

கும்ப ராசி பெண்கள் வெரி ஸ்லோ ஆண்கள் “சிக்னல்”

கொடுத்தாக் கூட கண்டுக்க மாட்றீங்கறீங்க??? சரி மீன ராசி ஆம்புளைங்க வராங்க புடிச்சுக்கங்க உங்கள தெய்வம் மாதிரி

பாத்துப்பாங்க சரியா??? ரொம்ப சென்ஸிடிவாக இருக்காதீங்க

மீன ராசி பெண்கள் வினயம் தெரிந்தவர்கள். மரியாதை செய்வதில் அவர்கள் முறையே வேறு…மகர ராசி ஆண்களைப்

பார்த்தால் தன்னை அறியாமல் மயங்கி மாட்டிக் கொள்வாரகள்.

மற்ற ராசிக்காரரிடம் எப்படி இந்த மாதிரி மாட்டிக்

கொண்டோம் என விழிப்பீர்கள் .சரி, இனி மேல் எப்படியும் “ரிப்பேர் “ செய்து ஓட்டுவோம் என்ற தன்னம்பிக்கையுடன் வாழ்வீர்கள்

சரி பெண் ராசிக்கு பொருத்தமான ஆண் ராசி சொன்னீர்கள் கத்துக்குட்டி, ஆண்களுக்கு????

நமது முன்னோர்கள் சாமர்த்தியசாலிகள்…….

நம்ம பசங்க எப்படியும் “பொம்பள பசங்கள “தாஜா”

பண்ணி குடும்ப வண்டிய குப்பறக்க விழாம

பாத்துகுவாங்கன்னு அவங்களுக்கு தெரியுமாமே!!!!

TAGS– வசியப் பொருத்தம், வசியம், நான் பார்த்ததிலே, ஜோதிடக் கட்டுரை

***

நீ பாதி நான் பாதி கண்ணா! (ஜோதிடக் கட்டுரை)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8558

Date uploaded in London – 23 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

kattukutty

சரி, இப்போது பெண்கள் ஆண்களைப் பற்றி என்ன
நினைக்கிறார்கள் என்று பார்ப்போமா??

ஏ மேஷராசி பெண்களே, (நினைத்ததை முடிப்பவள்) நீங்க
கொஞ்சம் படபடப்புப் பேர்வழி — சரியாகச் சொன்னால் “முசுடு”.
எப்போதும் உங்களைப் பற்றியும் உங்கள் கணவரைப்
பற்றியும் உயர்வாகத்தான் நினைக்க வேண்டும் இந்த உலகம்.
உங்கள் கணவரை நீங்கள் சரியான முறையில் “ரிப்பேர்”
பண்ணி முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என வேகமாக
இறங்கி விடுவீர்கள்

ஏ ரிஷப ராசி பெண்களே (உல்லாச உலகம் எனக்கே சொந்தம்)
உல்லாசம், உற்சாகம், சந்தோஷம் எல்லாவற்றையும் அனுபவிக்க
வேண்டும் என வெறி கொண்ட நீங்கள் எதையும் ஊகித்தறியும்
செம intelligent!!!! அப்படி இப்படி என புருஷனை உங்க வழிக்கு
கொண்டு வந்து விடுவீர்கள். பார்க்கறவர்கள் அவ அப்பிடி இப்பிடின்னு
புருஷனை மயக்கி தன் வழிக்கு கொண்டு வந்துட்டாளே,
என உலகமே மெச்சும் உங்களை!!!



ஏ மிதுன ராசி பெண்களே, நீங்க பாடற பாட்டு என காதுல விழுது
நீ பாதி நான் பாதி கண்ணா!!!எல்லாவற்றிலும் சம உரிமை, ஆனால்
புருஷன் வேறு பக்கம் செல்வதாக கொஞ்சம் தெரிந்தாலும் சரி
உங்கள் கை வரிசையைக் காட்டி இரண்டில் ஒன்று பார்த்து விடுவீர்கள்……

ஆல் அவுட் இல்லே, ஆளே அவுட்!!!

ஏ கடக ராசி பெண்களே உங்கள் ஜால்ரா மிகமிக பெரிசு!!!
என் புருஷன்னா புருஷன் தான் அவர மாதிரி உண்டா???என்ற
நீங்கள் புருஷன்மார் தப்பு ஏதாவது செய்தால் ஏன் தான் இப்படி
புத்தி போகிறதோ என சலித்துக் கொள்வீர்கள். சலிப்புடன் வாழ்க்கையும் ஓடும் அப்புறம் என்ன நண்டு மாதிரி கொட்டி
சரி செய்து விடுவீர்கள்.



ஏ சிம்ம ராசி பெண்களே நான் பார்த்திலே அவன் ஒருவனைத்தான்
நல்ல அழகனென்பேன் என்று சரியாக எடை போட்டு தான்
உங்கள் ஜோடியை நீங்களே தேர்ந்தெடுப்பீர்கள்.உயர்ந்த நோக்கம் உள்ளவரையே விரும்பும் நீங்கள் அவரது வாழ்க்கையை
வெற்றி பெறச் செய்வீர்கள் அவருக்கு உறு துணயாய் இருந்து!!!
ஒவ்வொரு வெற்றி பெற்ற ஆணுக்கும் பின் ஒரு பெண் இருக்கிறாள்
என்றால் அது நீங்கள் தான்!!!!

ஏ கன்னி ராசி பெண்களே இந்த ஆம்பளைக் கண்டாலே பிடிக்காது
ஒருத்தன் வாழ்ந்தால் இன்னொருத்தனுக்கு பிடிக்கவில்லை….சரி
யாரையாவது கட்டி தொலைப்போம்……பிறகு அவன் எப்படிப்
பட்டவனானாலும் சரி கணவனே. கண்கண்ட தெய்வம் என சிறப்பாக பிறர் மெச்சும் படி வாழ்க்கை நடத்துவீர்கள்


ஏ துலாம் ராசி பெண்களே, எதோ என் புருஷனும் நாலு காசு
சம்பாதிக்கத் தெரிந்தவர். நான்சொல்வதைக் கேட்டுக்கொண்டு
சமர்த்தா இருப்பார். என் கணவன் தவிர மற்ற ஆண்களெல்லாம்
தில்லு முல்லு கூட்டம்.என் புருஷன் உத்தம புத்திரன் என
புகழ்ந்து கொண்டே வாழ்க்கையைச் சிறப்பாக, ஓட்டுவீர்கள்.
ஆளை எடை போட்டு சமயம் பார்த்து வேலை வாங்குவதில்
உங்கள் சாமர்த்தியம் யாருக்கும் வராது

ஏ விருச்சிக ராசி பெண்களே என் புருஷனா அதுக்கு ஒண்ணுமே
தெரியாதே! பாவம்….படபடன்னு ஏதாவது செஞ்சுட்டு வந்து நிக்கும்.
நான் தான் போய் “கரக்‌ஷன் பேக்டர்”சரி செய்வேன். ஏதோ புருஷன்
ஒரு மக்கு மாதிரியாகவும் நினைத்துக் கொண்டு தன் தலையில் தான் உலகம் சுற்றுவதாகவும், பெரிதாக நினைத்துக் கொண்டு பீத்திக்கொண்டு கொண்டு வாழ்கையை ஓட்டுகிறீர்கள் நீங்கள்…….
ஆனாலும் உங்களிடம் “அட்ஜஸ் மெண்ட் “ ஜாஸ்தி எல்லா
விஷயத்திலும் !!!!

ஏ தனுசு ராசி பெண்களே நீங்க ரொம்ப ஆக்டிவாக புருஷனை
பிறாண்டி, பிறாண்டி எல்லா விஷயங்களயும் தெரிந்து கொண்டு
தன் விஷயங்ளையும் புருஷனிடம் சொல்லி நல்லது கெட்டது
தெரிந்து வாழ்க்கையை சூப்பராக, எல்லோரும் பொறாமைப்
படும் படியாக நடத்துபவர்கள்! நீங்கள் ஒரு லேடி ஜேம்ஸ் பாண்ட்!!!

ஏ மகர ராசி பெண்களே கணவனே கண்கண்ட தெய்வம் என பய
பக்தியோடு பணிவிடை செய்து சொன்னபடி கேட்டு அவர் பக்கமே பேசி தன் காரியத்தை சாதித்துக்கொள்ளும் தந்திரமான பெண்!
சாமர்த்தியமாக தக்க நேரத்தில் சரியான முடிவு எடுத்து ,உலகமே போற்றும் அளவுக்கு உயர்ந்து விடுவீர்கள்



ஏ கும்ப ராசி பெண்களே நாங்க இல்லையென்றால் நீங்கள்
வாழ முடியாது என்று சேலஞ்ஜ் விடும் நீங்க அடிக்கடி புருஷனை
யாரும் உங்களை தப்பாகவே எடுத்துக் கொள்ளக் கூடாதென்று
விழுந்து விழுந்து உதவி செய்து புருஷனை டாப் பொஸிஷனுக்கு
கொண்டு வந்து நிறுத்துவீர்கள் விடா முயற்சியின்
சின்னம் நீங்கள்!!!!!

ஏ மீன ராசி பெண்களே இந்த ஆம்புளைங்களை மொதல்ல சரி
செய்யணும்….இவங்க அப்பா, அம்மாவும் இவர எப்படிதாள்
வளர்த்தாங்களோ???? அவர்கள் குறையை சொல்லிச் சொல்லி
மாற்றி தங்கள் வழிக்கு மாற்றி ஒரு வழி செய்து விடுவீர்கள்
கிட்ட தட்ட அது உண்மையாகவும் இருக்கும். உங்களை மாதிரி
யாரும் பிளானிங் பண்ணமுடியாது்!!!

இதோ, பெண்களே, உங்களுக்கென்றே ஒருத்தர்
போட்டிருக்கிறார் ஒரு பாட்டு
T.N.தஞ்சை ராமய்யா தாஸ்
படம்- மிஸ்ஸியம்மா

இசை- S.ரஜேஸ்வர ராவ்

பாடியது ஏ.எம்.ராஜா

1955இல் வெளி வந்த படம்

பழக தெரிய வேணும் உலகில்

பார்த்து நடக்க வேணும் பெண்ணே

பழக தெரிய வேணும்..

பழங்காலத்தின் நிலை மறந்தி

வருங்காலத்தை நீ உணர்ந்து (பழக)

பிடிவாதமும் எதிர்வாதமும்

பெண்களுக்கே கூடாது..

பேதமில்லா இதயத்தோடு

பெருமையோடு பொறுமையாக (பழக)

கடுகடுவென முகம் மாறுதல்

கர்னாடக வழக்கமன்றோ

கன்னியர்கள் ஆடவரை

புன்னகையால் வென்றிடவே (பழக)

                                ***

 tags –நீ பாதி நான் பாதி ,ஜோதிடக் கட்டுரை