டாக்டர்கள், ஜோதிடர்கள், நடிகர்களுக்கு மநு தடை! (Post No.5236)

WRITTEN by London swaminathan

Date: 19 JULY 2018

 

Time uploaded in London – 8-37 am (British Summer Time)

 

Post No. 5236

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

மநு நீதி நூல்- Part 23

 

மூன்றாம் அத்யாயத் தொடர்ச்சி

 

3-150 முதல் உள்ள  3-182 வரை உள்ள ஸ்லோகங்களில்

யார் யாரை சிராத்தத்துக்குச் சாப்பிட அழைக்கக்கூடாது என்றும் சிரார்த்தச் சாப்பாட்டுக்கு தவறானவரை அழைத்தால் என்ன பாவம் நேரிடும் என்றும் குண்டன், கோளகன் என்ற இரு வகைப் புதல்வர்கள் யார் என்றும், சிரார்த்தச் சாப்பாடு சாப்பிடுவோரைத் தகாதவர்கள் கண்டால் என்ன நேரிடும் என்றும் மநு விளக்குகிறார்.

 

இதில் வியாதிக்காரர்கள் முதலியோருடன் டாக்டர்கள், சோதிடர்கள் ஆகியோரையும் மநு சேர்த்திருப்பது அக்காலத்தில் உள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. மேலும் இது மூன்று வருணத்தார் செய்யும் சிரார்த்தம் ஆதலால் பல தொழில்துறையினரின் பெயர்கள் இதில் வருகின்றன. குண்டன், கோளகன் என்பதன் விளக்கம் சுவையானது.

 

 

அண்ணன் இருக்கையில் தம்பி கல்யாணம் செய்து கொள்வதையும் மநு எதிர்க்கிறார்.

இப்போது யாரும் மநு தர்ம சாஸ்திரத்தைப் பின்பற்றுவதில்லை; இப்பொழுது அம்பேத்கர் தலைமையில் வந்த இந்திய அரசியல் சாசன சட்டப் புத்தகத்தையே, அதற்குப் பின்னர் இயற்றப்பட்ட, திருத்தப் பட்ட சட்டங்களையே பின்பற்றுகிறோம்.

 

அமெரிக்கா முதலிய நாடுகளிலும் கூட மாநிலத்துக்கு மாநிலம் வேறு வேறு சட் டங்கள் உள; ஒரு மாநிலத்தில் கொலை செய்தால் மரண தண்டனை; இன்னொரு மாநிலத்தில் மரண தண்டனை கிடையாது.

 

அயர்லாந்து போன்ற கிறிஸ்தவ தேசங்களும் ஒரு இந்துப் பெண்மணி கொடூரமாக இறக்க நேரிட்டவுடன் சட்டத்தை அண்மையில் திருத்திவிட்டது.

 

மநு முதல் அதிகாரத்தில் சொன்னதைப் போல சட்டம் என்பது கால, தேச, வர்த்தமானத்தைப் பொறுத்தது; அதற்கும் மேல் சந்தேகம் வந்தால் அப்போதைய பெரியோர்கள் என்ன சொல்கிறார்களோ அதுவே சட்டம் என்கிறார்.

 

அது மட்டுமல்ல மநு தர்ம சாஸ்திரத்தைப் பின்பற்றி கீழ் ஜாதியினர் தண்டிக்கப்பட்டத்தாக உள்ள சான்றுகள் மிகக் மிகக் குறைவு; அத்தகைய பிழைகள் எந்த நாட்டிலும் எக்காலத்திலும் நடைபெறுகின்றன. கிரேக்க நாட்டில் ஊருக்கு ஊர் வேறு வேறு சட்டங்களும் அடிமைகளுக்கு எதிராக வேறு சட்டங்களும் இருந்ததை வரலாறு படித்தோர் அறிவர். இந்தியாவுக்கும் பின்னரே பெண்களுக்கு பிரிட்டன் வோட்டுரிமை அளித்தது என்பதையும் நினைவிற்கொண்டால் சிலர் மநு தர்மத்தை எதிர்த்து அவ்வப்போது போராடுவது அரசியல் பித்தலாட்டம் என்பது தெள்ளிதின் விளங்கும்.

அவர்கள் செத்த பாம்பை அடிக்கும் வீரர்களே! மநு சொன்ன பல நூறு விஷயங்களை பிராஹ்மணர்களே பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்டுவிட்டனர்!!!

 

ஆட்டாங்கொடி

 

சோம பானம் தரும் சோம லதையை 100 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்டாங்கொடி என்று மொழி பெயர்த்து இருப்பதும் சுவையானது. வெள்ளைக்கார்கள் உளறிக்கொட்டியது போல போதை தரும் காளான் (mushroom) அல்ல சோம லதை என்பதை கொடி (creeper) என்ற சொல்லே விளக்கும். உண்மையில் வெள்ளைக்கார்கள் சோம லதையை அடையாளம் கண்டிருந்தால் இவ்வளவு காலம் அதைப் புட்டியிலும் டப்பாவிலும் அடைத்து விற்பனை செய்து கோடி கோடியாய்ச் சம்பாதித்து இருப்பர்!

 

சிரார்த்தத்து அழைக்கக்கூடாத பட்டியல் பற்றி பல கேள்விகள் தொக்கி நிற்கின்றன. பிரஹ்மணர்களில் இவ்வளவு தொழில் செய்தவர்கள் இருந்தனரா? அல்லது மூ வருணத்தார் சிரார்த்தம் பற்றி மநு உரைப்பதால் இவ்வளவு தொழில் செய்வோர் பெயர்கள் வருகின்றனவா? மநு தர்ம சாஸ்திரத்துக்குப் பல வியாக்கியானங்கள் உண்டு கற்றறிந்தோர் கண்டு கொள்க!

 

 

–subham–