தண்ணீர், தண்ணீர்- தமிழ்ப் பழமொழிகள் (Post No.3804)

Compiled by London swaminathan

 

Date: 10 APRIL 2017

 

Time uploaded in London:- 9-06 am

 

Post No. 3804

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

நீர் இன்று அமையாது உலகம் என்பது சங்க இலக்கிய நூலான நற்றிணையில் கபிலர் (பாடல் 1) உதிர்த்த பொன்மொழி. அவருக்குப் பின்னர் வந்த வள்ளுவனும் அதை வான் சிறப்பு என்னும் அதிகாரத்தில் பயன்படுத்தினான்.

 

நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான் இன்று அமையாது ஒழுக்கு (Kural 20)

 

பொருள்:-

இந்தப் பூமியில் வாழும் எல்லா உ யிரினங்களும் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது அது போலவே தர்மமும் மழை இல்லாமல் வாழ முடியாது.

 

 

மழை இல்லாவிடில் வறட்சி மிகும்; வறட்சி ஏற்பட்டால் பசிப்பிணி பெருகும்; பசி வந்தால் பத்தும் பறந்து போம் – என்பது பழமொழி. அதாவது மனிதனுடைய அடிப்படை நற்குணங்கள் அழிந்து, தர்மம் அழியும்.

 

இதை நன்கு அறிந்த இந்துக்கள் 3000 ஆண்டுகளுக்கு முன் சதபத பிராமணத்தில் சொல்லிவைத்தனர்.

 

சதபத பிராமணம் (கி.மு.850) கூறுவதாவது:

“தண்ணீர் தான் சட்டம்/தர்மம். ஆகையால்தான் உலகிற்கு எப்போதும் தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. எல்லாம் விதிகளின்படி நடக்கிறது. மழை தவறிவிட்டால் பலவீனமானவரை பலமுள்ளோர் தாக்குவர். ஏனெனில் தண்ணீர்தான் சட்டம்”.

இதையே வள்ளுவனும் கூறியிருப்பது (குறள்-20) கவனிக்கத்தக்கது.

 

மழையிலிருந்து உணவு உண்டாகிறது என்று கீதையில் பகவான் கிருஷ்ணனும் கூறுவார் (கீதை 3-14).

 

தமிழர்களின் தண்ணீர்ப் பழமொழிகளைப் படித்தால் அவர்களின் ஆழ்ந்த அனுபவ அறிவு புலனாகும்:–

 

1.நீரையும் சீராடு

2.நீரைச் சிந்தினையோ சீரைச் சிந்தினையோ?

3.நீரைத் தொட்டாயோ, பாலைத் தொட்டாயோ

 

4.நீராலே விலகினாய், நான் நெருப்பாலே விலகினேன்

5.நீரில் அமிழ்ந்த சுரைக்காய் போல

6.நீரில்லா நாடு நிலவில்லா முற்றம்

7.நீரும் கொல்லும், நெருப்பும் கொல்லும்

8.நீரும் பாசியும் கலந்தாற்போல

9.நீரை அடித்தால் நீர் விலகுமா?

10.நீரைக் கழுவி நிழலைப் புதைப்பதுபோல

11.நீரை அடித்தால் வேறாகுமா?

12.நீரோட்டத்தில் தெப்பம் செல்லும் தன்மை போல (புறம்.192 லும் உளது)

 

13.நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காணப்படாது

14.நீர் உயர நெல் உயரும்

15.நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்

16.நீர் உள்ள மட்டும் மீன் துள்ளும், நீர் போனால் மீன் என்ன துள்ளுமா?

17.நீர் என்று சொல்லி நெருப்பாய் முடிந்தது

18.நீர் என்று சொன்னால் நெருப்பு அவிவதும், சர்க்கரை என்று சொன்னதினால் வாய் இனிப்பதும் உண்டா?

19.நீர் என்று சொன்னால் நெருப்பு அவியுமா?

 

20.நீர்க்கடன் நிழற்கடன் கொடுத்துவைத்தமட்டும் இருக்கும்

21.நீர்ச்சோறு தின்று நிழலுக்கு அடியில் நின்றால் மலடிக்கும் மசக்கை வரும்

22.நீர் போனால் மீன் துள்ளும்

23.நீர் மேல் எழுத்துபோல

24.நீர்மேல் குமிழி போல நிலையில்லாக் காயம்

 

 

25.தண்ணீரிலே அடி பிடிக்கிறது

26.தண்ணீரிலே தடம் பிடிப்பான்

27.தண்ணீரிலேயோ தன் பலம் காட்டுகிறது?

28.தண்ணீரிலே விளைந்த உப்பு தண்ணீரிலே கரைய வேண்டும்

29.தண்ணீரில் அமுக்கின முட்டை உப்பு போட கிளம்பும்

30.தண்ணீரில் இருக்கிற தவளை  நீர் குடித்ததைக் கண்டது யார்? குடியாததைக் கண்டது யார்?

31.தண்ணீரில் இருக்கிற தவளையை தரையில் விட்டாற் போல

 

32.தண்ணீரில் இறங்கினால் தவளை கடிக்கும் என்கிறான்

 

33.தண்ணீரில் இறந்தவரிலும் சாராயத்தில் இறந்தவர் அதிகம்

 

34.தண்ணீரின்றினும் தண்மை பிரியுமோ, தீயினின்ன்றும் வெம்மை பிரியுமோ?

 

35.தண்ணீரின் கீழே குசு விட்டால் தலைக்கு மேலே

 

36.யாருக்கும் தெரியக்கூடாதென்று எண்ணி தண்ணீரின் கீழே குசு விட்டாற்போல

 

37.தண்ணீரும் கோபமும் தாழ்ந்த இடத்திலே

 

38.தண்ணீரும் பாசியும் கலந்தாற்போல

 

39.தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும்

40.தண்ணீரயும் தாயையும் பழிக்கலாமா?

41.தண்ணீர் குடித்த வயிறும் தென்னோலையிட்ட காதும் சரி

42.தண்ணீர் குடம் உடைந்தாலும் ஐயோ! தயிர்க் குடம் உடைந்தாலும் ஐயோ!

43.தண்ணீர், வெந்நீர் ஆனாலும் நெருப்பை அவிக்கும்

 

நீர் என்றும் தண்ணீர் என்றும் துவங்கும் பழமொழிகளை மட்டும் கண்டோம். பழமொழிகளுக்கு இடையே இதே சொற்கள் வரும் பழமொழிகள் நிறைய உண்டு. அத்தனையையும் அர்த்தத்தோடு தொகுத்து வெளியிடுவது நலம் பயக்கும்.

 

தமிழ் வாழ்க! பழமொழிகள் பயன்பெறுக!!

 

xxxx

எனது பழைய கட்டுரைகள்:-

தமிழன் கண்ட செயல்முறை அறிவியல்! தண்ணீர்! தண்ணீர்!!

Research Article No. 1685; Dated– 2 March 2015.

பாலைவனத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பது எப்படி?

Research Article No.1656; Dated 17th February 2015.

சூரியனிடத்தில் ஆரோக்கியத்தைக் கேள்: ஆரோக்கியம் தொடர்பான பொன்மொழிகள்

 

–subham–