ஆரியக் கழைக் கூத்தாடி

acrobat chennai

கட்டுரை எழுதியவர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் :- 1081; தேதி ஜூன் 3, 2014.

தமிழ் நாட்டில் பல நகரங்களிலும் தெருக்களில் வித்தை செய்து காட்டும் கழைக் கூத்தாடிகளைப் பார்க்காதவர் யாரும் இருக்கமுடியாது. இது தமிழ் நாடு மட்டும்மின்றி வட இந்தியா, பாகிஸ்தான் முதலிய இடங்களிலும் நடை பெறுகிறது. ஆப்பிரிக்கா, ஐரோப்பா கண்டங்களிலும் இப்படி தெரு வித்தை செய்வோர் உண்டென்றபோதிலும் உத்திகள் மாறுபடும். ஆனால் இதியா முழுதும் இது ஒரே மாதிரி இருப்பது வியப்புக்குரியது. அதைவிட வியப்பான விஷயம் இது சங்க காலம் முதல் தமிழ் நாட்டில் நடை பெற்று வருவதாகும். அதையும் விட வியப்பான விஷயம் இவர்களை ஆரியக் கூத்தாடிகள் என்று அழைப்பதாகும்.

சங்க இலக்கியத்தில் திராவிட என்ற சொல் எங்குமே இல்லை. ஆயினும் ஆரியர் என்ற சொல் மிகச் சில இடங்களில் கையாளப்படுகிறது. ஆரிய என்ற சொல்லுக்கு வெள்ளைக்கரன் கொடுத்த புதிய இனத்வேஷ பொருள் கிடையாது. ‘வட பகுதி’, ‘இமயம்’, ‘முனிவர்’கள் என்ற நற்பொருளில் மட்டுமே பயிலப்படும் சொல். ஆனால் கூத்தர்களுக்கு முன்னும், பொருநர்களுக்கு ( மல்யுத்த வீரர்கள் ) முன்னும் இரண்டு இடங்களில் ‘’ஆரிய’’ என்ற சொல் முன்னொட்டாக வருகிறது. வடக்கே இருந்து வந்த பொருநனை ஆரியப் பொருநன் என்று அழைப்பதில் வியப்பொன்றும் இல்லை.

PakIndia056

கழைக்கூத்தை ஆரியக் கூத்து என்று அழைப்பது ஏன்? இது பழமொழியிலும் இப்படி வருகிறது. உ.வே.சாமிநாத ஐய்யர் போன்றோரும் அப்படியே உரை கண்டுள்ளனர். தமிழ் நாட்டில் இவ்வகைக் கூத்தே இல்லையா? இதில் குறவன், குறத்தி இனத்தாரே பெரும்பாலும் ஈடுபட்டும் இதை ‘’ஆரிய’’ என்ற சொல்லுடன் தொடர்புபடுத்தியது ஏன் என்று தெரியவில்லை.

2000 ஆண்டுகளாக இது தமிழ் நாட்டில் நடந்து வருவதை அறியும் போது இதைப் பாடியுள்ள சங்கப் புலவர் இருவரும் நம் நெஞ்சில் நீங்கா இடம் பெறுகின்றனர். இதோ முதல் பாட்டு:–

குறுந்தொகை 7 ,பெரும்பதுமனார்

வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர்
யார் கொல்? அளியர்தாமே ஆரியர்
கயிறாடு பறையின் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெல் ஒலிக்கும்
வேல் பயில் அழுவம் முன்னியோரே.

பொருள்: ஆரியக்கூத்தர் கழையில் கட்டிய கயிற்றின் மேல் நின்று ஆடும்பொழுது கொட்டப்படும் பறையைப் போல, மேல் காற்று வீசியதால் நிலைகலங்கி வாகை மரத்தினது வெள்ளிய நெற்றுகள் ஒலிக்கும், மூங்கில் மரங்கள் நிறைந்த, பாலை நிலப்பரப்பைக் கடக்கும் இந்த வில்லேந்திய ஆடவன் காலில் வீரக் கழல்களும் தோள்வளை அணிந்த பெண்ணின் காலில் சிலம்பும் இருப்பதால் இவர்களுக்கு திருமணம் ஆகவில்லை என்பது தெளிவு. இவர் யாரோ?

acrobat domaba
விளக்கம்:—“ஆரியர்—ஆரிய நாட்டிலுள்ள ஒருவகைக் கூத்தர்; அவர் இயற்றும் கூத்து ஆரியக் கூத்தெனப்படும். “ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலே கண்”– என்ற பழமொழி அக்கூத்தின் அருமையைப் புலப்படுத்தும்”. (ஆதாரம்: குறுந்தொகை மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சமிநாதையர் பதிப்பு)
இது பதினான்கு வகைக் கூத்துகளில் ஒன்று. சிலப்பதிகார உரையாசிரியர் இது பற்றி விவரித்துள்ளார்.(சிலப்.3-12-25,அடியார்க்கு நல்லார்).

ஆடியற் பாணிக் கொக்குமாரிய வமிதப் பாடற், கோடியர் –(கம்பராமாயணம். கார் காலப்.33) என்று கம்பரும் இக்கூத்து பற்றிக் கூறியுள்ளார்.

dip_girl_1772571gvishak

நற்றிணை 95, கொட்டம்பலவனார்

கழைபாடு இரங்க, பல் இயம் கறங்க
ஆடு மகள் நடந்த கொடும்புரி நோன் கயிற்று
அதவத் தீம்கனி அன்ன செம்முகத்
துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க,
கழைக்கண் இரும்பொறை ஏறி விசைத்து எழுந்து
குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக்
குன்றகத்ததுவே……………………….

பொருள்: ஒரு பக்கத்தில் புல்லாங்குழல் ஒலிக்கிறது; மறு பக்கத்தில் இசைக் கருவிகள் முழங்குகின்றன.முறுக்கான புரிகளால் ஆன வலிமையான கயிற்றில் கழைஏறி விளையாட்டுகள் நடத்தி விளையா யாடினாள். இனிய அத்திப் பழம் போல சிவந்த முகத்துடைய குரங்குக் குட்டி அதைப் பார்த்துக் கொண்டிருந்தது; மெல்லிய தலை உடைய பெண் குரங்கின் வலிமையான அக்குட்டி கயிற்றில் தொங்கி விளையாடியது. மலைவாழ் குறவரின் சிறு பிள்ளைகள் மூங்கில் கணுக்கள் மீது ஏறி தாளம் கொட்டினர்.
street-performer_1527213i

ஆரியக் கூத்தைக் கண்டு நாமும் மகிழ்வோம்; ஆரிய—திராவிட பிரிவினை இனவாதப் பேச்சைக் கண்டு நகைப்போம்!