திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள்! – 2 (Post No.10069)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,069

Date uploaded in London – 8 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள்! – 2

சதகம் என்றால் நூறு என்று பொருள் நமக்கு தயா சதகத்தில் இன்று அதனுடைய  பலஸ்ருதியையும் சேர்த்து 102 ஸ்லோகங்கள் கிடைத்துள்ளன. அவற்றின் அருமை சொல்லுக்கு அப்பாற்பட்டது. எடுத்துக் காட்டாக ஒரே ஒரு ஸ்லோகத்தைப் பார்ப்போம்.

தயா சதகத்தில் 91வது ஸ்லோகம் இது:-

ஸ்மரணம் ப்ரணாமகரணம் ததாமிதா, கதனம் ச ஜாதுசிதனங்கவைரிண: !

பரமம் பவாதிர்ஹரமன்ப தேஹினாம், த்வதயே கதிஸ்தவ தயே கரியஸி ||

ஜாதுசித் – எப்போதோ ஒரு கணம், அனங்கவைரிண: ஸ்மரணம் – சிவனுடைய நினைவு, ப்ரணாம் கரணம் – சிவனுடைய வணக்கம், ததா அபிதாகஹனம் -சிவனுடைய பேரைச் சொல்வது – ஆகிய இவை அயே அம்ப – ஏ தாயே!, த்வத் – உன் காரணத்தால், தேஹினாம் – மனிதருக்கு, பரமம் – மேலான, பவ ஆர்த்தி ஹரம் – பிறவிக் கஷ்டத்தைத் தவிர்ப்பதாக ஆகின்றன. ஹே தயே – ஹே, சிவ தயா தேவியே! த்வ – உன்னுடைய, கதி: – போக்கே, கரியஸி மேலானது

ஒரு முறை கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை அலங்கரித்து அவர் வாழ்ந்த வீதி வழியே சென்ற ஊர்வலத்தில் இருந்தவர்கள் அவரை அவமதிக்கும் விதத்தில் அவர் வீட்டில் நிற்காமல் அவர் வீட்டை வேகமாகக் கடந்து சென்றனர். ஆனால் அடுத்த வீட்டிற்குச் சென்ற ஊர்வலத்தினர் கிருஷ்ணரின் படத்தைக் காணாமல் திகைத்தனர். அது ஐயாவாளின் வீட்டில் இருந்தது. அவர் தாயார் பாவத்தில் இருந்து, டோலா நவரத்னமாலிகா என்ற துதியை இயற்றிப் பாடினார்.

ஒரு முறை வேஷதாரியாக வந்து கோவிந்தசாமி என்பவர் அவரை அவமதித்தார். அவரைக் காவேரிக் கரையில் இறைவன் சொப்பனத்தில் விரட்டவே, அவர் மனம் திருந்தி அவரை வணங்கிப் போற்றி அவரது பக்தராகவே ஆனார்.

ஒரு சமயம் திருட்டுக் கொள்ளைக்காரர்களுக்காக அவர் பஜனை செய்ய அவர்கள் திருடிய நவரத்னக் குவியலை அவர்கள் ஐயாவாளிடம் கொடுத்துச் சராணகதி அடைந்தனர்.  அவற்றை மஹாலிங்க மூர்த்திக்கு நாகாபரணமாகச் செய்து அணிவித்தார்.

இப்படிப்பட்ட அற்புதங்கள் எல்லாம் எங்கும் பேசப்படவே அவர் புகழ் பரவியது.

தனது வாழ்நாளில் அவர் சம்ஸ்கிருதத்தில் ஏராளமான நூல்களை இயற்றியுள்ளார். காவேரியின் எல்லையற்ற மஹிமையை அவர் அருமையாக விவரித்துள்ளார்.

“காவேரி கங்கையை விடப் புனிதமானது. காவேரி திருமாலின் தலை, இடை, கடை என்ற மூன்று இடங்களிலும் பெருமை பெற்று விளங்குகிறாள். மைசூர் ஸ்ரீரங்கபட்டணம், ஸ்ரீரங்கம்,  கொள்ளிடக்கரை அரங்கம் எனற மூன்று அரங்கங்களும் காவேரி நதியைப் புனிதமாக்குகின்றன. காவேரி நீரானது அன்பையும், அறிவையும், அருளையும் பெருக்குகின்றது. உலகில் உள்ளோர் தொடர்ந்து செய்யும் எல்லா பாவங்களையும் காவேரியில் ஸ்நானம் செய்த ஒரு நொடிப்பொழுதில் இறைவன் அருளே காவேரியாக இருந்து நீக்கி விடுகிறது. என்று இப்படி அவர் காவேரியின் மஹிமையைப் பாடிப் போற்றுகிறார்.

ஒரு சமயம் திருவிசைநல்லூரும் அதைச் சுற்றி இருந்த பகுதிகளும் மழையின்றி பெரிதும் வறண்டிருந்த போது மக்கள் நீரின்றி வருந்தினர். உடனே ஐயாவாள் திருவிசைநல்லூரில் எழுந்தருளியிருக்கும் கர்கடேஸ்வர மீது குளீராஷ்டகம் என்ற ஸ்துதியை இயற்றிப் பாட மழை கொட்டோ கொட்டென்று பெய்து அனைவரையும் மகிழச் செய்தது.

ஐயாவாளின் மனைவி அவருக்கு முன்னமேயே இறைவன் திருவடி சேர்ந்தார்.

தனது 85ஆம் வயதில் ஒரு நாள் தனது இறுதிக் காலம் நெருங்குவதை தனது சீடர்களுக்குக் குறிப்பால் உணர்த்தினார் ஐயாவாள்.

ஒருநாள் வழக்கம் போல மஹாலிங்க ஸ்வாமியை வழிபடச் சென்ற ஐயாவாள் சந்நிதியில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்யும் போது மறைந்து பகவானுடன் ஐக்கியமானார். இறைவனுடன் இப்படி அவர் ஐக்கியமானதைக் கண்ட உலகம் வியந்து பிரமித்தது.

ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் மடம் கங்காவதரண மஹோத்ஸவத்தை பத்து நாள் உற்சவமாக ஆண்டு தோறும் தொடர்ந்து நடத்தி வருகிறது. கார்த்திகை மாதம் அவரது இல்லத்தில் அமாவாசை தினத்தை ஒட்டி பெருந்திரளான பக்தர்கள் குழுமுவது வழக்கம்.

வடமொழியில் வல்லவரான ஐயாவாளின் முக்கியமான நூல்களுள் ஆக்யாசஷ்டி, சிவன் மீது பாடப்படும் தயா சதகம், மாத்ருபூத சதகம், ஸ்துதி பத்ததி, சிவ பக்தி கல்பலதிகா, சிவ பக்த லக்ஷணம், தாராவலீ ஸ்தோத்ரம், ஆர்த்திஹர ஸ்தோத்ரம், குளீ ராஷ்டகம், ஜம்புநாதாஷ்டகம், தோஷ பரிஹாராஷ்டகம், க்ருஷ்ண த்வாதச மஞ்சரி, அச்சுதாஷ்டகம், டோலா நவரத்ன மாலிகா, நாமாம்ருத ரஸாயனம் உள்ளிட்டவை குறிப்பிடத் தகுந்தவையாகும். இவை அனைத்தையும் அன்பர்கள் https://www.sriayyaval.org/works.html என்ற தளத்திலிருந்து தரவிறக்கம் – டவுன்லோட் – செய்து கொள்ளலாம். அவர் இயற்றிய பகவன் நாம பூஷணம் இன்று நமக்குக் கிடைக்கவில்லை.

காவேரி தீர மஹான்களில் பெரிதும் போற்றப்பட்ட மஹான்களில் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள் மிக உயர்ந்த உன்னத ஸ்தானத்தைப் பெற்றிருக்கும் மஹான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை! நன்றி, வணக்கம்.

                        ***                 

முற்றும்

Tags- தயா சதகம், ஸ்ரீதர வெங்கடேச, ஐயாவாள், சிவ பக்தி,

நவரத்ன மாலிகா, கோவிந்தசாமி

கலியுக அறிகுறி- குருமார்கள் குலிங்க பக்ஷி போலத்திரிவர்!! 8 வயதில் குழந்தை பெறுவர்!

PloverCrocodileSymbiosis

Research Article written by London swaminathan

Post No. 1774; Date 4th April 2015

Uploaded from London at  13-10 (லண்டன் நேரம்)

கல்கி புராணம்

சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் கு.அனந்தாசாரியார் – 1903 — விலை12 அணா

 

சென்ற வாரம் லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரிக்குச் சென்று கல்கி புராணத்தைப் படித்தேன். அதிலுள்ள சில சுவையான விஷயங்களைத் தருகிறேன். கூடிய மட்டிலும் கு.அனந்தாசாரியார் 1903-ல் பயன்படுத்திய சொற்களை அப்படியே தருகிறேன். குலிங்க பக்ஷி பற்றி கல்கி புராணம் கூறுவது முன்னர் நான் எழுதிய “மஹா பாரதத்தில் ஒரு அதிசயப் பறவை” (ஜூலை1, 2014) என்ற கட்டுரையில் சொன்ன பூலிங்கப் பறவையே என்பதும் தெரிந்தது. இது பற்றி வைஷ்ணவப் பெரியார் ஸ்ரீ வேதாந்த தேசிகன் (கி.பி 1268—1370) எழுதிய தயா சதகத்தில் வரும் சுவையான விஷயத்தையும் கீழே படியுங்கள்:–

ஓ, சூத முனிவரே! மனிதர்கள் முப்பதடிப் பிரமாணமுள்ளவர்கள்,கலி யுகத்தில் முடிவில் மூன்றங்குலப் பிரமாணமாகி விடுவர்.

கலியுகத்தில், ஜனங்கள் அன்ன விக்ரயம் (விற்பது) செய்வார்கள்; அந்தணர்கள் மந்திரங்களை விற்பார்கள்; ஸ்த்ரீகள் பதிவ்ரதா தர்மத்தை (கற்பை) விற்பார்கள்.

பிராமணர்கள், வேதங்களைக் கீழ்ப்பட்ட ஜாதியினருக்குச் சொல்லிப் பிழைப்பர். பிராமண ஸ்த்ரீகள் மோர், தயிர், பால் விற்பார்கள்; வைஸ்யர்கள் எல்லோரும் மாமிசம் விற்பார்கள்

symbiosis

மானுக்குதவி செய்யும் பறவை

கலியுகத்தில் பிராமணாதி மூன்று வர்கத்தினர் ஸ்வதர்மத்தை இழந்து வயிறு நிறைப்பதிலும், மாதர்களைப் புணர்வதிலும் ஆசை கொள்வர்.  சூத்திரர்கள் நற்செய்கை, நல்லொழுக்கம் உள்ளவர்களாயிருப்பார்கள்.

ஸ்த்ரீகள் (பெண்கள்) எல்லோரும் எட்டாவது வருஷத்தில் புத்திரர்களைப் பிரசவிப்பார்கள்- நியாயாநியாயாயமில்லா மல் (நியாயம்+ அநியாயம்) புருஷர்களைப் புணருவார்கள்.

மாதர்கள் யாவரும் பன்றிபோல் பத்து எட்டு குழவிகளைப் பெறுவார்கள். இரு கரத்தாலும் சிரத்தை (தலையை) சொறியப்போகிறார்கள்.

ஓ, புத்திமானே, மாதர்கள் புருஷனை வஞ்சனை செய்து, புருஷனுக்கு முன் உண்ணுதலும், உறங்குதலும் செய்யப்போகிறார்கள்

பூமிகளெல்லாம் சுரமில்லாமல் சுவல்பப் பலனாய் பலிக்கப்போகிறது. கொடிகள் யாவும் செழிப்பாக வளர மாட்டா.

Kalki

கல்கி அவதாரம்

விவாக ரத்து அதிகரிக்கும்!

ஜனங்களைப் பிணிகள் பீடிக்கப் போகிறது. விதவைகள் ஒரு புருஷனை மணந்து சந்ததியுண்டு பண்ணுவர். சுமங்கலி ஸ்த்ரீக்கள் புருஷனோடு சண்டையிட்டு விதவைகளைப் போல் ஆவர் (டைவர்ஸ்- விவாக ரத்து அதிகரிக்கும் என்று சொல்வதாக நான் அர்த்தம் செய்கிறேன். பம்பாய், கலகத்தா, டில்லி, சென்னை ஒவ்வொரு நகரத்திலும் ஆண்டுக்கு 8000 விவாகரத்து வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. இதை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வைத்த நம் முன்னோர்களை எண்ணி வியக்கிறேன்)

கலியுகத்தில் கொடையாளிகள், தரித்திரர்களாகவும் கிருபணன், தனிகனாகவும், பாபி, தீர்க்கயுஸ் உடையவனாகவும், நல்லவன் அல்பாயுஸ் உள்ளவனாகவும், அல்ப ஜாதிகள் மஹாராஜாவாகவும், உத்தம குணத்தினர் அவர்களுக்குப் பணிவாகவும் இருப்பர்

பெருங்காற்று- சுவல்ப மழை- க்ஷாமம் உண்டாகும்

எல்லா ஜனங்களும் வேதாந்தம் பேசுவர்- ஒருவரும் தத்துவத்தை அறியார். அந்தணர்கள் வெகுவாக வாதம் பண்ணுவர். வேஷத்தில் மட்டும் அந்தணர்களாக இருப்பர்.

கலியுகத்தில் மனிதர்கள் பொய்யை சத்தியமாகவும், மெய்யை அசத்தியமாகவும் செய்வர். வேத மார்க்க கர்மங்களை தூஷிப்பர் – நீதியை அனுசரியார்.

Hippo and Oxpeckers - Highly Commended - Paula Martin

நீர் யானைக்குதவும் பறவைகள்

குலிங்கப் பறவைகளும் குருமார்களும்

கலியுகத்தில் சில குருமார்கள், நித்திய கர்மங்களை இழந்து இதரர்களுக்கு மாத்திரம் ஞானத்தைப் போதித்து குலிங்க பக்ஷிக்கள் போல் சஞ்சரிப்பார்கள்.

எனது கருத்து

குலிங்க பறவை பற்றிய ஒன்றிரண்டு கதைகள் மஹாபரதத்தில் வருகின்றன. ஆனால் அவை மேற்கூறிய குருமார்கள் விஷயத்தில் பொருந்தாததால் ஸ்ரீ வேதாந்த தேசிகர் எழுதிய தயா சதக மேற்கோளைப் பார்த்தேன். மிகவும் பொருத்தமாக இருக்கிறது. இதோ அந்த ஸ்லோகமும் அதன் விளக்கமும்:–

மாசாஹசஸ் உக்தி கந கஞ்சுக வஞ்சித அந்ய

பத்யத்ஸு தேஷு விததாமி அதி சாஹசானி

பத்மா சஹாய கருணே ந ருணத்ஸி கிம் த்வம்

கோரம் குலிங்கம் சகுநே: இவ சேஷ்டிதம் மே (ஸ்லோகம் 94)

பொருள் விளக்கம்:

தயாதேவியே! சாஹசச் செயல்களைச் செய்யாதே என்று மற்றவர்களிடம் சொல்லிவிட்டு – உத்தமன் போல வேஷம் போட்டு —  அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நான் சாஹசச் செயல்களில் இறங்குகிறேன். குலிங்கப் பறவை போல நான் செய்யும் சாஹசச் செயல்களை நீ கண்டிக்காமல் இருப்பது ஏன்? (என்னை சரியான பாதையில் செலுத்துவது தாய் போன்ற உனது கடமை இல்லையா?)

குலிங்கம் என்னும் பறவை கத்துவது — மா ஸாஹஸம் குரு—

சாகசம் செய்யாதே – என்று சொல்லுவது போல இருக்குமாம். இப்படிச் சொல்லிக்கொண்டே, கொட்டாவி விடும் சிங்கத்தின் வாயில் புகுந்து அதன் பற்களில் சிக்கியுள்ள மாமிசத் துண்டுகளை இழுக்குமாம். சிங்கம் வாயை மூடினால் அதற்கு என்ன நேரிடும்?

(வேதாந்த தேசிகர் மிகப் பெரிய மஹான். பணிவின் காரணமாகவும் நம்மைப் போன்றோருக்கு அறிவுறுத்தவும் தன்னைக் குலிங்க பறவைக்கு ஒப்பிடுகிறார். மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் தன்னை நூற்றுக்கும் மேலான பாடல்களில் நாயுடன் ஒப்பிட்டுப் பாடியிருப்பதை நினைவிற் கொள்ளுதல் பொருத்தம்)

இரு வகை பிராணிகள் இடையே நிலவும் ஒத்துழைப்பை உயிரியல் விஞ்ஞானிகள் ‘’சிம்பியாஸிஸ்’’ என்று அழைப்பர். முதலையின் வாயில் சிக்கும் மாமிசத் துண்டுகளை எடுத்து சுத்தம் செய்யும் ப்ளோவர் பறவைகளின் வரவுக்காக முதலைகள் வாயைத் திறந்துகொண்டு காத்திருக்கும். அவைகளுக்கு ஒரு தீங்கும் செய்யா. ஆனால் சிங்கம் புலி போன்ற மிருகங்களிடையே இப்படி நடப்பதாக பதிவு செய்யப்படவில்லை. இந்தியக் காடுகளில் இத்தகைய செயல்கலைக் கண்ட நம் முன்னோர்கள் தக்க இடத்தில் அதை உவமையாகப் பயன்படுத்துவது சிறப்புடைத்து.

time1

ஏற்கனவே ஆதி சங்கரர் ஒரு நாலு வரிப் பாட்டிலேயே நான்கு பறவைகளை உவமையாக்கியது பற்றியும் தத்தாத்ரேயர் இருபதுக்கும் மேலான பறவை, விலங்குகள், பூச்சிகளிடமிருந்து தான் கற்ற போதனைகளை பாகவத புராணத்தில் சொல்லியிருப்பதையும், மரத்தின் மீது ஏறும் அதிசய அங்கோல மர விதைகள் பற்றி ஆதி சங்கரர் பாடியிருப்பது பற்றியும் பல கட்டுரைகளில் தந்துள்ளேன். படித்து இன்புறுக.

இனி, கல்கி புராணத்தில், மேலும் உள்ள விஷயங்களைக் காண்போம்:–

கலியுகத்தில் பிராமணாதி வர்ணத்தினர் நித்திய கர்மங்களை இழந்து, அதர்மங்களைச் செய்து சாராயம், கள், மாம்ஸம் முதலான தாமஸ பதார்த்தங்களைப் புசித்து உலகத்து ஜனங்கள் (அவர்களை) நிந்திக்கப் போகிறார்கள்.

கலியுகத்தில் வித்தியா குருவென்றும், மந்திரோபதேசக்  குருவென்றும், சிஷ்யன் என்கிற பேதமுமில்லாமல் நாம வாசகத்தால் மட்டும் பேதத்தை அடைந்து ஆசார்யப் பத்தினியை சீஷனும், சிஷ்ய பத்தினியை குருவும் அனுபவிக்கப் போகிறார்கள்.

கலியுகத்தில் எவன் தனிகனோ (பணக்காரன்) அவன் நல்ல குலத்தில் பிறந்தவனாகிறான் (கருதப்படுவான்). தரித்ரனானவன் துஷ் குலத்தில் பிறந்தவனாகிறான் (கருதப்படுவான்).சிலவிடங்களில் ஜாதி பேதமில்லாமல் இருக்கும்.

கலியில் மிருகங்கள் முதலிய ஜந்துக்களின் வயிற்றில் விசித்திர கர்மமும், கலியுக முடிவில் மனுஷ்ய யோனியில் அல்ப மிருகங்களும் உண்டாகப் போகின்றது.

kaliyuga_spencer_sass

யோகிகளுக்குள் சிறந்தவரான சூத புராணிகன், கலியுக தர்மம் யாவையும் ரிஷிகளுள் சிறந்தவரான  வியாச மாமுனியிடத்தில் கேட்டு, பரம ஆச்சரியத்தை அடைந்து மறுபடியும் கிருத யுக தர்மத்தைக் கேட்டார்.

(இதற்குப் பின்னர் கிருதயுக தர்மம் பற்றி வருகிறது. இது 1903 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அடைப்புக் குறிக்குள் இருப்பது எனது விளக்கங்கள்).