அறிஞர்க்கழகு கற்றுணர்ந்து அடங்கல்- 2 கதைகள் (Post No.5350)

Modi with Bhutanese King.

WRITTEN BY London swaminathan

Date: 22 August 2018

 

Time uploaded in London – 8-57 AM (British Summer Time)

 

Post No. 5350

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

அறிஞர்க்கழகு கற்றுணர்ந்து அடங்கல்- வெற்றி வேற்கை/ நறுந்தொகை (அதிவீர ராம பாண்டியன்)

மிதிலை நகரில் ஒருவன் மாமிசக் கடை வைத்திருந்தான். அவன் ஒரு வேடன்; காட்டுப் பன்றியின் மாமிசம் காட்டு எருமை மாட்டின் மாமிசம் முதலியவற்றை அவன் அவன் விற்று வந்தான். இப்படிச் செய்பவனுடைய பெயர் தர்ம வியாதன். அதாவது அறநிலை வேடன். ஏனென்றால் அவன் சத்தியம் தவறாதவன். வேத சாஸ்திரங்களைக் கற்றவன். வைத்திருப்பதோ கசாப்புக் கடை; பெயரோ தர்ம வியாதன். ஆயினும் அவன் தன் புகழை தம்பட்டம் அடிக்கவில்லை. ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்பதற்கிணங்க வாழ்ந்து வந்தான்.

 

 

அவனிடம் பிராஹ்மண ஸ்ரேஷ்டர்களும் வந்து ஐயம் தெளிந்தனர். கௌசிகன் என்ற அந்தணன் அவரிடம் வந்து பெற்றோர்களைக் கவனிப்பதே முக்கியம் என்று தர்ம வியதனைப் பார்த்துக் கற்றுக் கொண்டார். அப்போதுதான் அவர் தான் அப்படிக் கவனிக்காமல் போனதும் தவறு என்றும் புரிந்தது. இந்தக் கதை மஹாபாரதத்தில் இருக்கிறது

அடக்கம் காரணமாக அவன் புகழ் தானாகப் பரவியது. வள்ளுவனும் அடக்கத்தின் – பணிவின் பெருமையை திருக்குறளில் விதந்து ஓதுகிறான்.

Prince Charles in India

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து (குறள் 125)

 

பொருள்

பணிவு- அடக்கம் என்பது எல்லோருக்கும் நன்மை தரும்; பணக்காரர்களிடத்தில்  அது இருந்தால், அவர்களுக்கு மேலும் செல்வம் கிடைத்தது போல இருக்கும்.

 

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது  (குறள் 124)

 

எந்த நிலையிலும் மாறுபடாமல் இருப்பவனின் பணிவு, மலையை விடப் பெரியது, உயர்வானது.

 

இதோ இன்னொரு கதை!

அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் (GEORGE WASHINGTON). அவருடைய படம் பொறித்த பத்து டாலர் தங்கக் காசு (700 ரூபாய்) அமெரிக்காவில் 137 லட்சம் பவுன் மதிப்புக்கு ஏலம் போனதாகப் பிரிட்டிஷ் பத்திரிக்கைகள் 20-8-2018ல் செய்தி வெளியிட்டுள்ளன. ஏன் இவ்வளவு மதிப்ப?. அதை ஜார்ஜ் வாஷிங்டன் தனது பைக்குள்ளேயே வைத்திருந்தாராம். அவர் ஏன் சட்டைப் பைக்குள் வைத்திருந்தார்?

 

அங்குதான் ரஹஸியம் இருக்கிறது எனது படம் பொறித்த நாணயங்களை வெளியிட வேண்டாம் என்று சொல்லி அதைப் பைக்குள் போட்டுக்கொண்டார். உடனே அதை முன் மாதிரியாக அடித்த கம்பெனியும் அந்த மாடலைக் கைவிட்டு ஒரு புறம் சுதந்திர தேவி மறு புறம் அமெரிக்காவின் சின்னமான கழுகு ஆகியவற்றைப் பொறித்து புதிய நாணயங்களை வெளியிட்டனர்.

 

இந்த ஏலத்தில் இன்னொரு சுவையான செய்தியும் உளது. ஏலத்துக்கு வந்த நாணயம் எரிக் நியூமான் (ERIC NEWMAN) என்பவருக்குச் சொந்தமானது; அவர் அமெரிக்காவின் மிகப்பெரிய நாணய சேகரிப்பாளர். அது மட்டுமல்ல எழுத்தாளர்; அத்தோடு அறக்கொடையாளர் (PHILANTHROPHIST) . அவர் 106 ஆண்டுகள் வாழ்ந்து சாதனை புரிந்து, சென்ற ஆண்டு இறந்தார். அவரது நாணயங்களை ஒவ்வொன்றாக ஏலம் விட்டு கல்விப் பணிகளுக்கும் நாணய ஆராய்ச்சிக்கும் நன்கொடையாகத் தருகின்றனர். எவ்வளவு பெரிய மனது!

அவரது மகன் ஆண்டி (ANDY)  சொல்கிறார்,

எனது தந்தை நியூமானுக்கு, ஜார்ஜ் வாஷிங்டன் என்றால் மிகவும் பிடிக்கும். அவரைப் போற்றித் துதிபாடுவார். வாஷிங்டன் தனது உருவத்தை நாணயத்தில் பொறிக்ககூடாது என்று சொன்னது அவரது மகத்தான (HUMILITY) பணிவைக் காட்டுகிறது.

 

இதுவரை அறக்கொடைப் பணிகளுக்கு நியூமான் நாணய ஏலம் முதல் 560 லட்சம் பவுன் கிடைத்துள்ளது. இது வள்ளுவனின் குறளை நினைவு படுத்துகிறது:

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்கணவர் – குறள்228)

பொருள்

பொருளைச் சேர்த்துவிட்டு, அதைத் தானும் அனுபவியாமல், பிறருக்கும் கொடுக்காமல் இருக்கிறார்களே; ஐயோ பாவம்! அவர்களுக்கு கொடுப்பதில் உள்ள இன்பம் என்னவென்றே தெரியவில்லையே!

 

–சுபம்-