
இரண்டே கோவில்களில் 304 ராமர் சிலைகள்! (Post no.5042)
WRITTEN by London Swaminathan
Date: 24 May 2018
Time uploaded in London – 6-26 am (British Summer Time)
Post No. 5042
PICTURES ARE FROM BHARAT KALYAN; THANKS
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
தாய்லாந்தில் இந்துக் கடவுள்கள்- 1

தாய்லாந்தில் ஏராளமான இந்துக் கடவுளரின் சிலைகளும் ஓவியங்களும் உள. பிள்ளையார், பிரம்மா முதல் குபேரன், காலா வரை உண்டு. குறிப்பாக காலத்தால் அழியாத காவிய நாயகன் ராமனுக்குப் பல சிலைகள், ஓவியங்கள்! எண்ணிலடங்கா விக்ரஹங்கள், சித்திரங்கள்!!
தாய்லாந்திய கலைச் செல்வங்களைக் கண்டு ரஸிக்க அந்த நாட்டின் ஏழு வரலாற்றுக் காலங்களை அறிதல் இன்றியமையாதது; அவையாவன:–
த்வாராவதி காலம் – 6 முதல் 11 நூற்றாண்டு வரை
ஸ்ரீ விஜய காலம் – 8 முதல் 13 நூற்றாண்டு வரை
லோப் புரி காலம் (லவ புரி) –11 முதல் 13 நூற்றாண்டு வரை
சுகோதையா காலம் –13 முதல் 14 நூற்றாண்டு வரை
அயுத்தயா காலம் (அயோத்யா)- 17 முதல் 18 நூற்றாண்டு வரை
தோன்புரி (தன புரி) காலம்- 1767 முதல் 1782 வரை
பாங்காக் காலம் (அண்மைச் செல்வங்கள்)- 1782 முதல் இன்று வரை.
ஒரே நேரத்தில் வெவ்வேறு பகுதிகளில் கலை வளர்ச்சி நடந்தது. குறிப்பாக கம்பபோடியாவிலுள்ள க்மேர் (KHMER) இந்து அரசர்களின் செல்வாக்குப் பெருகப் பெருக இந்துக் கலை வளர்ச்சி பெற்றது.

ராமாயண சிற்பங்கள் உள்ள கோவில்கள்:
1.ப்ரஸாத் பனம் ரங் கோவில்
2.பிமை கோவில்
3.வாட் ப்ரா கியவோ (மரகத புத்தர் கோவில்)
- வாட் ப்ரா ஜெதுபோன் (ஜேத வன) கோவில்
- வட் நங் பியாக விஹார
இவைகளில் கடைசி இரண்டு ( வாட் ப்ரா ஜெதுபோன் (ஜேத வன) கோவில்,
வட் நங் பியாக விஹார) கோவில்களில் 152+ 152= 304 சிற்பங்கள் ராமாயணக் காட்சிகளைச் சித்தரிப்பதாக அங்கு இரண்டு ஆண்டுக் காலம் தங்கி ஆராய்ந்த தில்லிப் பலகலைக் கழக ஸம்ஸ்க்ருதப் பேராசிரியர் ஸத்ய வ்ரத சாஸ்திரி சொல்கிறார்.
ஒரு கோவிலில் சலவைக் கற் சிற்பங்கள் அது தவிர மரச் சிறபங்கள். மற்றொரு கோவிலில் கற் சிலைகள். இவை அனைத்தும் கோவிலைச் சுற்றி செதுக்கப்பட்டுள்ளன அல்லது வரையப் பட்டுள்ளன.
பர்மா செய்த அட்டூழியம்

1767 ஆம் ஆண்டில் பர்மியர்கள் புகுந்து கிடைத்த நூலகங்கள், கோவில்கள் எல்லாவற்றையும் தீயிட்டுக் கொளுத்தினர். அதனால் பழைய செல்வங்கள் அழிந்தன. அவர்கள கைப்படாத இடங்களில் உள்ள கலைப் பொக்கிஷங்கள் தப்பிப் பிழைத்தன.
பெரும்பாலும் 300 ஆண்டுப் பழமை உடைத்து. ஏனைய பழைய சிற்பங்களை பர்மியர்கள் தீக்கிரையாக்கிவிட்டனர். அசுர சக்தியின் ஆவிர்பாகங்கள்; நாளந்தா பல்கலைக் கழகத்தைத் தீக்கிரையாக்கிய துலுக்கப் படைகள் போன்ற தீய சக்திகள்!

தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் நகரில் தேசீய மியூசியம் உளது. அந்த அருங் காட்சியகத்தில் இந்திரஜித், ராவணன் முதல் இராமன் வரை பல கலைப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ‘தாய்’ மக்களின் இதய கீதம் இராமாயணம். பௌத்த மத நாடானானும் ஏதோ ராமாயணம் தமது நாட்டிலேயே நடந்ததாக நினைக்கின்றனர். வால்மீகிக்கும் கம்பனுக்கும் தெரியாத புதிய ராமாயண கதா பாத்திரங்களையும் படைத்துள்ளனர். அனுமானின் இரண்டு மனைவிகளில் ஒருத்தி மீன் தேவதை; அவர்களுக்குப் பிறந்த பிள்ளையும் உடல் மனித முகத்துடனும் வால் (கால் பகுதி) மீனின் துடுப்புகளாகவும் காட்டப்பட்டுள்ளன. வர்ண ஜாலம் ஜொலிக்கும் ராமர், லெட்சுமணர், அனுமார் ஓவியங்களைப் பார்க்க விநோதமாக இருக்கும்.
கட்டுரையின் இரண்டாவது பகுதியில் வேத கால இந்திரன், யமன், குபேரன் வருணன், பிரம்மா, விஷ்ணு, சிவன் சிலைகள் பற்றிக் காண்போம்.
இத்துடன் இணத்துள்ள ஆங்கிலப் பக்கங்களைப் படியுங்கள்; ராமாயண கதாபாத்திரங்களின் பெயர்கள் எப்படித் திரிக்கப்பட்டுள்ளன என்பது விளங்கும்




தொடரும்……….
சுபம்










