
Research Article Written by London swaminathan
Date: 25 December 2016
Time uploaded in London:- 6-01 AM
Post No.3480
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
திரு என்ற சொல்லுக்கு செல்வம், அதிர்ஷ்டம், வளமை, லெட்சுமி, ஒளி— என்று பல பொருள் உண்டு. தற்காலத்தில் பெயருக்கு முன்பாகவும் கோவில், புனித நூல்கள், ஊர்கள், நாடுகளுக்கு முன்பாகவும் இதைப் பயன்படுத்தி வருகிறோம்.

மொழி இயல் ரீதியில் பார்த்தால் இது ‘ஸ்ரீ’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லிலிருந்து (S=T) வந்தது தெரியும். அது மட்டுமல்ல; இதுவே ஆங்கிலத்தில் ஸர் SIR என்னும் பட்டத்தையும் ஸார் Sir (ஐயா) என்ற சொல்லையும் கொடுத்தது என்பதும் புலப்படும். திரு என்ற சொல்லுக்கு என்ன பொருள் உண்டோ, என்ன என்ன உபயோகம் உண்டோ அது அததனையும் சம்ஸ்கிருதத்திலும் ஸ்ரீ — என்ற சொல்லுக்கும் உண்டு. 3000 ஆண்டுகளுக்கு முன் இரண்டு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து பிரிந்து இரண்டு பெரிய மொழிகளாக உருவாயின. பிரித்தாளும் சூழ்ச்சியுடைய வெளி நாட்டார் திராவிட மொழிக் குடும்பம் என்ற ஒன்றை செயற்கையாக உருவாக்கி புதுக் கதைகளை எட்டுக்கட்டிவிட்டனர். உலகிலுள்ள பழைய மொழிகளின் சொற்களை தமிழ் அல்லது சம்ஸ்கிருத மூலத்துடன் எளிதில் தொடர்பு படுத்தலாம். ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள் இருப்பதே இதற்கு எடுத்துக்காட்டு.
ஆங்கில நாட்டில் ஒரு காலத்தில் வீரதீரச் செயல்கள் செய்தோருக்கு ‘ஸர்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. இதற்கு 13-ஆம் நூற்றாண்டிலிருந்து சான்றுகள் உள. ஆனால் பிற்காலத்தில் சிறப்பான செய்கைகள் சாதனைகள் புரிந்தோர் அனைவருக்கும் இப்பட்டம் கொடுக்கப்பட்டது. பிரிட்டிஷார் ஆட்சியிலுருந்து வெளியேறி பின்னர் காமன்வெல்த்COMMON WEALTH என்னும் அமைப்பிலுள்ள நாட்டு சாதனையாளருக்கும் இப்பட்டம் வழங்கப்படுகிறது.
‘ஸ்ரீ’ என்ற சொல்லின் இடமாறு தோற்றப் (Sri = Sir) பிழைதான் ஸர். நாம் எப்படி மதுரை என்பதை மருதை, குதிரை என்பதை குருதை, வாயில் என்பதை இல்வாய் என்றெல்லாம் மாற்றிச் சொல்ல்கிறோமோ அது போலத்தான் ச்ரீ என்பது ஸர் ஆகியது. இந்தியில் கூட தர்ம என்ற சொல்லை தரம் என்பர்.
இதற்கு இன்னொரு முறையிலும் விளக்கம் உண்டு. திரு என்பதே ஸர்(ரு) ஆனது என்று. ‘ச’ அல்லது ‘ஸ்’ என்பத ‘த’ அல்லது ‘த்’ ஆக மாறும். ஆழ்வார்களும் நாயன்மார்களும் வி’த்’தை என்பதை வி’ச்’சை என்பர். த்யூதம் என்ற சொல் தமிழில் சூது எனப்படுகிறது. ஆங்கிலத்தில் எடுகேடியான் EDUCATION என்று எழுதி அதை எடுகேஷன் என்று உச்சரிப்பர். இவ்வாறு நூற்றுக்கணக்கான சொற்கள் டியான் TION என்று எழுதபட்டாலும் ஷன் SION என்றே உச்சரிக்கப்படும் அங்கும் டி என்பது ஷ ஆக மாறியதைக் காணலாம்.
ஆங்கிலத்தில் ஸர் SIR பட்டம் சாதனை புரிந்தோருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. நமது நாட்டிலும் திரு, ஸ்ரீ என்பன எல்லாம் புனித அல்லது சாதனையாளருக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. இப்போழுது சர்வ சாதாரணமாக திருவாளர், திருமதி என்று எல்லோர் பெயர்க்கு முன்னாலும் போடத் துவங்கி விட்டோம். ஸர் என்பதும் ஒருவரை மரியாதையாக ஸார் (ஐயா Sir) என்று கூப்பிடுவதும் தொடர்புடைய சொற்களே. எப்படி நாம் திரு என்பதை மலிவான சரக்காக்கி எல்லோருக்கும் பயன் படுத்துகிறோமோ அப்படி அவர்களும் ஸார் என்பதை பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.

அது சரி, உங்கள் இஷடப்படி இப்படி வியாக்கியானம் செய்கிறீர்களே. ஆங்கிலத்தில் ஆக்ஸ்போர்ட் (ETYMOLOGICAL) அகராதி போன்ற நூல்கள் இந்த சொல்லின் பிறப்பு (etymology) பற்றி என்ன கூறுகிறது? என மொழியியல் அறிஞர் வினவலாம். அவர்களும் பேந்தப் பேந்த முழிக்கிறார்கள். இது லத்தீன் மொழியில் அல்லது பழைய பிரெஞ்சு மொழியில் (Latin or Old French) இருந்து வந்திருக்கலாம் என்று ஆயிரம் ஆண்டுக் கதையை மட்டுமே சொல்லுவர். அதற்கு முன் லத்தீனும் அதிலிருந்து தோன்றிய பிரெஞ்சு முதலிய மொழிகளும் சம்ஸ்கிருத மூலத்தை உடையவை என்பதை அவர்களே ஒப்புக்கொள்ளுவர். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையே! என்போர் கதையாக சம்ஸ்கிருதம் என்பதை நேராக ஒப்புக்கொள்ளாமல் அதற்கும் ஒரு மூல மொழி இருந்ததாகவும் அதிலிருந்து பிரிந்ததாக்கும் என்றும் தட்டி மழுப்புவர்!
மேலும் அவர்கள் கூறும் பழைய சொற்கள் இன்றும் உலகில் புழக்கத்தில் உள்ளன. அவர்கள் இது செரி SERE என்பதிலிருந்து ஸர் SIR ஆகி இருக்கலாம் என்பர். இன்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஸ்ரீ என்பதை செரி SERE என்றுதான் எழுதுகின்றனர். இன்னும் சிலர் செயுர், சிர், சிரி என்பனவற்றிலிருந்து மருவியிருக்கலாம் என்பர். அதையும் இலங்கையில் காணலாம அவர்கள் ஸ்ரீ மாவோ என்பதை சிறீ (siri) மாவோ என்பர். சிறீலங்கா (SRI LANKA) என்றே எழுதுவர். ஸ்ரீ லங்கா என்றால் ஒளிமிகு இலங்கை என்று பொருள்.
இந்தியாவில் ஸர் (SIR) பட்டம் பெற்றோர்:
ரவீந்திரநாத் தாகூர், ஜகதீஷ் சந்திர போஸ், சி.பி.ராமஸ்வாமி அய்யர், அண்மையில் சசின் டெண்டூல்கர் மற்றும் பலர்.
திரு அல்லது ஸ்ரீ அடை மொழி உடைய நூல்கள், ஊர்கள் (சில எடுத்துக்காட்டுகள் மட்டும்):-
ஸ்ரீ சைலம், ஸ்ரீ நகர், ஸ்ரீ பெரும்புதூர்

திருவாரூர், திருவையாறு முதலிய 400 பாடல் பெற்ற சிவ, விஷ்ணு தலங்கள்.
திருவாசகம், திருக்கோவையார் முதலிய நூல்கள்
ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம்
–Subham–
You must be logged in to post a comment.