
Written by London swaminathan
swami_48@yahoo.com
Date: 13 April 2019
British Summer Time uploaded in London – 8-19 am
Post No. 6260
Pictures shown here are taken by london swaminathan. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) i never take picures of Mulasthanam-Main shrine.
‘மலைவையாவூரில்………..’. என்று துவங்கும் பாடல் வரிகளைக் கேட்டது (SPB?) முதல் அந்தத் தலத்துக்குச் சென்று பெருமாளைத் (விஷ்ணு) தரிசிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. ஆகையால் லண்டனிலிருந்து சென்னைக்குச் சென்ற அடுத்த நாள் மலைவையாவூருக்குச் சென்றோம். சிறிய மலைதான். அதன் உச்சியில் வெங்கடேசப் பெருமாள் எழுந்தருளி இருக்கிறார். அருகில் அலர்மேல் மங்கை சந்நிதி.
மலைக்குச் செல்ல ரோடும், படிகளும் உள்ளன. நடந்து சென்றால் அடிவாரத்திலிருந்து உச்சிக்குச் செல்ல சுமார் 500 படிகள். காரில் சென்றால் கோவிலுக்கு மிக அருகில் காரை நிறுத்தலாம். மிகவும் சிறிய சந்நிதி.
இது சென்னையிலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் வேடந்தாங்கல் பறவைகள் புகலிடத்துக்கு அருகில் உள்ளது. ஆகையால் வேடந்தாங்கல் செல்வோர் பெருமாளையும் தரிசிப்பது வழக்கமாக உளது.
கோவிலை ராமாயண ஹனுமானுடன் தொடர்பு படுத்தும் பல கதைகள் உண்டு. ஆயினும் அவை தெரியாவிட்டாலும் மலையின் ரம்யமான சூழ்நிலையும், பெருமாளின் அருள் சுரக்கும் முகமும் எவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
மழைக்காலம் முடிந்து பல நாட்டுப் பறவைகள் வேடந்தாங்கலுக்குப் பறந்து வருகையில் இந்த இடம் இன்னும் அழகாகக் காட்சி தரும் என்று ஊகிக்க (மார்ச் மாத வெயிலில்) முடிந்தது.
நான் 24-3-2019 எடுத்த புகைப்படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.










–subham–