
Huge Navagraha Inscription
Written by LONDON SWAMINATHAN
Date: 18 JUNE 2018
Time uploaded in London – 10-47 am (British Summer Time)
Post No. 5124
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
ஸந்யாஸி செய்த ஒரு லக்ஷம் பொம்மைகள்! (Post No.5124)
ஜப்பானிய புத்த மத சந்யாஸி (Enku) என்கு (1632- 1695) ஒரு லட்சம் பொம்மைகள் செய்து உலக சாதனை படைத்தார். அவரது வாழ்க்கை அற்புதமான ஒன்று.
என்கு(Enku) என்பவர் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவர் ஒரு புத்தமதத் துறவி. இந்துக்கள் லக்ஷார்ச்சனை, லக்ஷ தீபம், லக்ஷ ஹோமம் என்றெல்லாம் செய்து இறைவனைப் போற்றுவர். ஒரு இலக்ஷம் முறை ராம நாமம் அல்லது ஓம் நம சிவாய எழுதுவதாக வேண்டிக் கொள்வர். இதே பாணியில் என்கு என்ற சாதுவும் நான் மரத்தில் ஒரு லக்ஷம் புத்தர் உருவங்களைச் செய்யும் தவத்தை மேற்கொள்வேன் என்று சபதம் செய்தார்; அந்த சபதம் நிறைவேற அவருக்கு 28 ஆண்டுகள் ஆயின. போகும் போதும் வரும்போதும் பார்த்த மரத்துண்டுகளை எல்லாம்
உளியால் செதுக்கி புத்தர் உருவங்களை உருவாக்கினார்.
ஒரு லக்ஷம் புத்தர் உருவங்களை செதுக்கியபோது கடைசி பொம்மையின் பின்புறத்தில் அவரே எழுதினார்- ‘ஒரு லக்ஷம் புத்தர்கள் நிறைவு பெற்றது- என்று. எத்தகைய அரிய தவம் பாருங்கள். அத்தோடு அவர் நிற்கவில்லை. அவர் புத்தர் உருவங்களை செதுக்கிக் கொண்டே இருந்தார்.

பொம்மை செய்வது ‘சாகாரம்’ என்னும் முதல் படிதான்; தவத்தின் அடுத்த படியில் ஏற முயன்றார்.அது ‘நிராகாரம்’ ஆகும்; அதாவது புத்தமத பாஷையில் சமாதி அடைதல். இது அடையாளபூர்வ சமாதி ஆகும்.
நாகரா நதியின் கரையில் ஒரு குழி வெட்டும்படி கூறினார். அதற்குள் இறங்கிக் கொண்டு ஒரு மூங்கில் குழாய் மூலம் சுவாஸிக்க ஏற்பாடு செய்துகொண்டார். குழாய் தவிர மற்ற எல்லா இடமும் குழியை மூடச் செய்தார். பூமிக்கடியில் உண்ணாவிரதம், ஜபம், மணி அடித்தல் மூலம் அவர் இருப்பது மற்றவர்களுக்குத் தெரியும். அப்படியே பல ஆண்டுகள் கழித்து சமாதி ஆனார்.
அவர் சமாதி உள்ள இடத்தில் மிக உயர்ந்த ஓக் மரங்களும் செர்ரி மரங்களும் பூங்கொடிகளும் அமைதியாகத் தவழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அந்த செடிகொடிகளைத் தொட யாரையும் அனுமதிப்பதில்லை. யாரேனும் அவைகளை வெட்டினால் அதிலிரு ந்து ரத்தம் வரும் என்பர்.
புகழ்பெற்ற துறவி என்கு Enku , ஒரு கவிஞரும் கூட. பல கவிதைகளை இயற்றியுள்ளார்.
அவர் எழுதிய ஒரு கவிதையின் வரிகள்:–
“நாள் தோறும் தூய்மை பெறுகிறது மனது
வானத்தில் உலவும் நிலவும் நானும்
வட்டமாகி முழுமை பெறுகிறோம்”.
அவரது பௌர்ணமி நிலவு ஒளி இன்றும் வீசிக் கொண்டே இருக்கிறது!

Homa (Havan) Kunda in Japan
துறவிக்கு ஸம்ஸ்க்ருதம் கற்றுத் தந்தாள் ஸரஸ்வதி தேவி!
ஜப்பானில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த துறவியின் பெயர் ஜியுன் சோஞ்சா (Jiun Sonja1718-1804). அவர் குணக் குன்று. அவரை ‘ஆர்ய’, ‘அர்ஹத்’ என்ற அடைமொழிகளுடன் அழைப்பர்.
(ஆர்யன் என்றால் ‘பண்பாடுமிக்கவன்’ என்று பொருள்; பாரதியார் பாடல் முழுதும் ‘ஆரிய’ என்பது இப்பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது; மாக்ஸ்முல்லர், கால்டுவெல் போன்ற மதப் பிரசாரகர்களின் பொருள் அன்று.)
ஜப்பானில் கிடைக்கும் எல்லா ஸம்ஸ்க்ருத சுவடிகளின் தொகுப்பை ஆயிரம் பகுதிகளாக வெளியிட அவர் விரதம் பூண்டார். அவைகளில் 300 பகுதிகள் கோகிஜி (Kokiji) பௌத்த மடாலயத்தில் இருக்கின்றன. அவர் தமிழ் தாத்தா உ.வே. சுவாமிநாத அய்யர் போல ஹோர்யூஜி, ஷோர்யோஜி, சுய்செஞ்சி முதலிய மடாலயங்களில் உள்ள சம்ஸ்க்ருத சுவடிகளைத் திரட்டினார். அவைகளில் 59 பகுதிகளை இந்திய- ஜப்பானிய அறிஞர் லோகேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.
ஜியுன் சோஞ்சா தன்னைப் பற்றிச் சொல்லுவது அற்புதமான விஷயங்களாகும்.
“ஸரஸ்வதி தேவியே எனக்கு ஸம்ஸ்க்ருதம் கற்பித்தாள்; அவள் ஸம்ஸ்க்ருதம் சொல்லுவது என் காதுகளில் விழும். என் பேனாவைக் கையில் எடுத்தால் நான் எழுதுவது ஸம்ஸ்க்ருதம் ஆகத்தான் இருக்கும்”.
சித்தம் லிபியில் அவர் ஸம்ஸ்க்ருதம் எழுதினார். தர்ம அலைகள் ஜியுன் சோஞ்சா என்ற கரையில் மோதின என்றால் மிகப் பொருத்தமே. சாந்தமான சொற்கள் அவருடைய இறகுப் பேனா வழியே பாய்ந்தன .இது இந்திய- ஜப்பானிய உறவுப் பாலமாகத் திகழ்கின்றது என்றால் மிகையாகாது.

அவருடைய ஆயிரம் பகுதி ஸம்ஸ்க்ருதம் கலை க்களஞ்சியத்துக்கு ‘போங்காக்கு ஷின்ரியோ’ என்று பெயர் (ஜப்பானிய மொழியில் ஸம்ஸ்க்ருதம் பெயர் போங்கோ). கந்தல் ஆடையுடன் காட்சி தந்த துறவி மூலம் ஸ் தேவியே ஸம்ஸ்க்ருத நூல்களைப் பரப்பியதாக ஜப்பானியர் நம்புகின்றனர். கோகிஜி மடாலயத்தில் முப்பது ஆண்டுகள் தங்கி அறப்பணி ஆற்றினார். இன்றும் அந்த மடத்தில் ஸரஸ்வதி வியே பிரதான தெய்வம். ஆண்டுதோறும் அவளுக்கு விழா எடுக்கின்றனர்.
-Subham–