வள்ளுவப் பைத்தியம் தேர்வு செய்த முறை! (Post No.5044)

Written by S NAGARAJAN

 

Date: 25 MAY 2018

 

Time uploaded in London –  12-39   (British Summer Time)

 

Post No. 5044

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

நடைச்சித்திரம் : மேலாண்மை நகைச்சுவை

 

 

வள்ளுவப் பைத்தியம் ஹெச்.ஆர்.டி அதிகாரியாகி தேர்வு செய்த முறை!

 

.நாகராஜன்

 

வள்ளுவரின் குறளின் பால் தீவிர ஈடுபாடு கொண்ட ‘வள்ளுவப் பைத்தியம்’ ஒருவர் ஹ்யூமன் ரிசோர்ஸ் டெவலப்மெண்ட் – (HUMAN RESOURCE DEVELOPMENT) மனித வள மேம்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

 

குறளின் வழி செல்லும் அவர் தெரிந்து வினையாடல் அதிகாரத்தில் வரும் இரு குறள் காட்டும் வழியின் படி செயல் பட முயன்றார்.

 

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு

எய்த உணர்ந்து செயல் (குறள் 516)

செய்பவனைப் பற்றி நன்கு ஆராய்ந்து, செய்யும் செயலையும் ஆராய்ந்து, செய்யத் தகுந்த காலத்தோடு பொருந்திச் செயலைச் செய்ய வேண்டும்.

 

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்    (குறள் 517)

 

இந்தப் பணியை இப்படிப்பட்ட கருவிகளாலும் வழிமுறைகளாலும் இவன் முடிக்கக் கூடியவன் என்பதனை நன்கு ஆராய்ந்து அந்தப் பணியை அவனிடம் தருதல் வேண்டும்.

 

அவர் பணியாற்றிய பெரிய நிறுவனத்தில் பல் வேறு பிரிவுகளுக்கும் ஆட்கள் தேவை.

 

நமது அதிகாரி புதிதாக வேலைக்கு வருபவர்களைத் தேர்ந்தெடுத்த விதத்தைப் பார்ப்போம்.

 

  1. 400 செங்கல்களை ஒரு அறையில் வைத்து மூடினார்.
  2. வேலை கேட்டு வந்தவர்களை அந்த அறைக்குள் அனுப்பினார். கதவைத் தாழிட்டார்.
  3. பின்னர் ஆறு மணி நேரம் கழித்துத் திரும்பினார்.
  4. அவர்கள் செங்கற்களை எண்ணிக் கொண்டிருந்தால், அக்கவுண்ட்ஸ் பிரிவுக்கு அவர்களை அனுப்பினார்.
  5. அவர்கள் செங்கற்களை மறு எண்ணிக்கை செய்து கொண்டிருந்தால் அவர்களை ஆடிடிங் பிரிவுக்கு அனுப்பினார்.
  6. எல்லாச் செங்கல்களையும் கன்னாபின்னாவென்று குளறுபடி செய்திருந்தால் அவர்களை எஞ்சினியரிங் பிரிவுக்கு அனுப்பினார்.

 

  1. அவர்கள் செங்கல்களை விசித்திரமான முறையில் அடுக்கிப் பார்த்துக் கொண்டிருந்தால் அவர்களை பிளானிங் பிரிவுக்கு அனுப்பினார்.
  2. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் செங்கல்லை வீசி எறிந்து கொண்டிருந்தால் அவர்களை ஆபரேஷன்ஸ் பிரிவுக்கு அனுப்பினார்.
  3. அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தால் அவர்களை செக்யூரிடி பிரிவுக்கு அனுப்பினார்.
  4. அவர்கள் செங்கல்களை உடைத்துத் துண்டு துண்டாய் ஆக்கிக் கொண்டிருந்தால் அவர்களை இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி பிரிவுக்கு அனுப்பினார்.
  5. அவர்கள் சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தால் அவர்களை ஹ்யூமன் ரிசோர்ஸஸ் டெவலப்மெண்ட் பிரிவுக்கு அனுப்பினார்.

  1. அவர்கள் செங்கற்களை வைத்து வெவ்வேறு விதமாக அழகு பார்த்து, இன்னும் செங்கற்கள் கிடைக்குமா என்று பார்த்தவாறு இருந்து, ஒரு செங்கல்லையும் நகர்த்தாவிடில் அவர்களை விற்பனைப் பிரிவுக்கு அனுப்பினார்.
  2. அவர்கள் ஏற்கனவே இடத்தைக் காலி செய்து அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தால் அவர்களை மானேஜ்மெண்ட் பிரிவுக்கு அனுப்பினார்.
  3. அவர்கள் அறையின் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அவர்களை ‘ ஸ்ட்ராடஜிக் ப்ளானிங்’ பிரிவுக்கு அனுப்பினார்.
  4. அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே இருந்து ஒரு செங்கல்லையும் தொடாமலோ நகர்த்தாமலோ இருந்தால் அவர்களை டாப் மேனேஜ்மெண்ட் பிரிவுக்கு – உயரிய மேலாளர் பதவிப் பிரிவுக்கு – அனுப்பினார்.

 

 

அவரை யார் தான் பாராட்டாமல் இருப்பார்கள்? இதனை இதனால் இவன் முடிக்கும் என்பதனை நன்கு கண்டு பிடித்தவர் அல்லவா அவர்!

குறள் வழி எப்போதுமே சிறந்த வழி தானே!

 

ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர்க்கு இதோ ஆங்கில மூலம்:

 

A suggestion from a Human Resources Manager:

HOW TO PROPERLY PLACE NEW EMPLOYEES . . .

1. Put 400 bricks in a closed room.
2. Put your new hires in the room and close the door.
3. Leave them alone and come back after 6 hours.
4. Then analyze the situation:
If they are counting the bricks, put them in the Accounting Department.
b. If they are recounting them, put them in Auditing.
c. If they have messed up the whole place with the bricks, put them in Engineering.
d. If they are arranging the bricks in some strange order, put them in Planning.
e. If they are throwing the bricks at each other, put them in Operations.
f. If they are sleeping, put them in Security.
g. If they have broken the bricks into pieces, put them in Information Technology.
h. If they are sitting idle, put them in Human Resources.
i. If they say they have tried different combinations, they are looking for more, yet not a brick has been moved, put them in Sales.
j. If they have already left for the day, put them in Management.
k. If they are staring out of the window, put them in Strategic Planning.
l. If they are talking to each other, and not a single brick has been moved, congratulate them and put them in Top Management.

****