Picture of 12 Disciples of Jesus Christ
WRIITEN BY london swaminathan
Date : 13 September 2015
Post No. 2153
Time uploaded in London: – 10-47 am
(Thanks for the pictures)
பிரபல ஹாலிவுட் டைரக்டர்கள் பற்றிய சில சுவையான சம்பவங்கள்:
ரஷ்யாவின் புகழ் பெற்ற டைரக்டர் கான்ஸ்டன் டின் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி. அவரைச் சந்தித்த அமெரிக்க நடிகர் ஜான் பாரிமோர், ஒரு கேள்வி கேட்டார்: “அன்பரே, நீங்கள் எப்படி அருமையான நடிகர்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்? இதன் ரஹசியம் என்ன?”
இப்படி அவர் கேள்வி கேட்கும் போதே ஸ்டானிஸ்லாவ்ஸ்கி, ஒரு குண்டூசியைக் கையில் எடுத்துக்கொண்டார். கொஞ்சம் வெளியே போங்கள் – என்று நடிகர் பாரிமோரிடம் கூறினார். அவரும் வெளியே சென்றார்.
அடுத்த நிமிடமே, நீங்கள் இப்போது உள்ளே வரலாம் – என்று ஸ்டானிஸ்லாவ்ஸ்கி அழைத்தவுடன் பாரிமோர் உள்ளே வந்தார். குண்டூசி ஒன்றைப் போட்டுவிட்டேன்; கண்டுபிடித்துத் தாருங்கள் – என்றார்.
பாரிமோர் தேட ஆரம்பித்தார். மேஜையின் மீதிருந்த கோப்பைகளை எல்லாம் தூக்கிப் பார்த்தார். டேபிள் கிளாத் மீது கையால் தடவிப் பார்த்தார். பின்னர் அதன் ஒரு முனையைப் பிடித்துக் கொண்டு தூக்கிப் பார்த்தார். இப்படி தேடத் துவங்கியவுடன், ஸ்டானிஸ்லாவ்ஸ்கி சொன்னார்: நீங்கள் நல்ல நடிகர்; என் படத்தில் ‘சான்ஸ்’ கொடுக்கிறேன் என்றார்.
பின்னர், நடிக்க ஆசைப்பட்டு வருவோருக்கு இப்படித்தான் நான் சில வேலைகளைக் கொடுப்பேன். யார் ஒருவர் இயல்பாக, உண்மையில், தான் இழந்த ஒரு பொருளைத் தேடும் பாணியில், தேடுகிறார்களோ அவரையே நான் சிறந்த நடிகன் என்பேன். மிகைப்படுத்தி, அதிகப் பிரசங்கித்தனமாக இங்கும் அங்கும் ஆடி, ஓடி குண்டூசியைத் தேடியிருந்தால் அவருக்கு என்னிடம் நடிகர் வேலை கிடைக்காது என்றார்.
Baarymore (USA) Stanislavski (Russia) Stamps
உதவாக்கரைகளை வீட்டுக்கு அனுப்புவது எப்படி?
ஆங்கில நடிகரும் தியேட்டர் மானேஜருமான சர் ஹெர்ப்ர்ட் ட்ரீயிடம் ஒரு இள நடிகர், வேலை கேட்டு வந்தார். மேடையில் அவர் தோன்றியபோது, “ஒரு இரண்டடி பின்னால் போங்கள்” – என்றார். கொஞ்சம் நேரம் அவரை உன்னிப்பாகக் கவனித்தபோது “இன்னும் கொஞ்சம் பின்னால் போங்கள்” — என்றார். அவரது நடிப்பையெல்லாம் பார்த்தபோது “இன்னும் இரண்டடி பின்னால் போங்கள்” — என்றார். உடனே அவர், “ஸார், இனிமேல் நான் பின்னால் போனால், மேடையில் இருக்கமாட்டேன்; கீழேதான் இருப்பேன்” – என்றார்.
அது எனக்குத் தெரியும்; அதைத்தான் நான் சொன்னேன் – என்றார் ட்ரீ!
நடிக்கத் திறமையில்லை, வீட்டுக்குப் போங்கள் என்று சொல்ல பல வழிகள் உண்டு; அதில் இது ஒன்று!
கிறிஸ்துவுக்கே 12 சீடர்கள்தான்!
ஹாலிவுட் டைரக்டர்களில் புகழ்பெற்ற ஜோசெப் வான் ஸ்டான்பெர்க்கிடம்- பிரபல நடிகர் சாம் ஜெப் நடிக்கவந்தார். தி ஸ்கார்லெட் எம்ப்ரஸ் என்ற திரைப்படம் உருவாகிக் கொண்டிருந்தது. நடிகருக்கும், டைரக்டருக்கும் எப்போது பார்த்தாலும் சண்டைதான். சில உத்தரவுகள் நடிகருக்குப் பிடிக்கவில்லை. அதைத் தான் செய்யமுடியாது என்று மறுத்துவிட்டார்.
உடனே ஸ்டான்பெர்க் உரத்தகுரலில், “ என்னை யார் என்று உனக்குத் தெரியாதா? எனக்கு 10,000 சீடர்கள் (ரசிகர்கள்) இருக்கிறார்கள்; உனக்குப் புரிகிறதா? என்று சத்தம் போட்டார்.
உடனே சாம் ஜெப், அப்படியா! நீங்கள் உண்மையிலேயே பெரிய அதிர்ஷ்டசாலிதான்! ஏசு கிறிஸ்துவுக்கே 12 சீடர்கள்தான்!!! என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
–சுபம்—




You must be logged in to post a comment.