நான் கண்ட சுனாமி அதிசயம் ! அலைகளில் ஆதி சேஷன்!! (Post No. 2722)

adisesha

 

tsunami snake

 

sesha, pullaboothangudi

Written by london swaminathan

Date: 14 April, 2016

 

Post No. 2722

 

Time uploaded in London :– காலை 6-19

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

நான் வாகன ஆராய்ச்சி செய்பவன். பல வாகன ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி, இதே பிளாக்கில் வெளியிட்டிருக்கிறேன். அப்படி நாக வாஹன படம் ஒன்றை எனது பைலில் ‘சேவ்’ செய்துவிட்டு அடுத்த நிமிடம் ஒரு சுனாமி படத்தைப் பார்த்தவுடன் அசந்தே போய்விட்டேன். ஏனெனில் அதே நாக வாஹனம் அந்த ஆழிப் பேரலைகளில் இருந்தது. இதை கண்கள் காணும் மாயத்தோற்றம் – ஆப்டிகல் இல்லூஷன் OPTICAL ILLUSION – என்பதா அல்லது இந்து மதம் கூறும் விஞ்ஞான உண்மை என்பதா என்பதை கட்டுரையைப் படித்துவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்.

 

15 நாடுகளில் 2004-ஆம் ஆண்டிலும், ஜப்பானில் 2011 ஆம் ஆண்டிலும் சுனாமி என்னும் ராட்சதப் பேரலைகள் தாக்கிப் பல லட்சம் மக்கள் உயிரிழந்தை நாம் அறிவோம். இதில் வரும் ராட்சதப் பேரலைகள் பாம்பு உருவத்தில் வருகின்றன. ஆயிரம் தலையுடைய ஆதி சேஷனின் படுக்கையில், பால் கடலில் பள்ளி கொண்ட பரமனை இந்து மத நூல்கள் துதி பாடுகின்றன. இந்த ஆதி சேஷன் ஒரு கல்பத்தின் முடிவில் விஷம் கக்கி உலகை அழிப்பான் என்று நமது புராணங்கள் சொல்லும். அது மட்டுமல்ல பாதாள உலகத்தின் அரசன் நாக தேவன் என்றும் நமது நூல்கள் செப்பும். (கல்பம் என்பது ஒரு பிரம்மாவின் ஆயுள்).

Wave

உலகில் நாகம் பற்றிக் குறிப்பிடாத மதமோ கலாசாரமோ கிடையாது. ஆஸ்திரேலிய வானவில் பாம்பு—ரெயின்போ ஸ்னேக்- பற்றி எனது ஆஸ்திரேலியப் பயணக்கட்டுரைகளில் எழுதி இருக்கிறேன். இந்தியாவில் அர்ஜுனனும் கிருஷ்ணனுன் காண்டவ வனத்தை (கோண்ட்வானா லாண்ட்) எரித்து வெளியேற்றிய மய தானவன் துவக்கிய கலாசாரம்தான் தென் அமெரிக்க மாயன் பண்பாடு என்றும் மூன்று ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதியுள்ளேன். பைபிளில் பாம்பு உள்ளது; ரிக் வேதத்தில் பாம்பு உள்ளது. ரிக் வேதத்தில் உள்ள பாம்பு ராணியைத் தான் மினோவன், சிந்து சமவெளிகளில் அப்படியே படமாகக் காட்டியுள்ளனர் என்று இன்னுமொரு ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிட்டேன்.

காண்க: (Please read my post Serpent Queen: Indus Valley to Sabarimalai – posted on 17th June 2012)

 

velli naga asana

 

wavesp57arch

 

யுக முடிவில் ஆதி சேஷன் விஷம் கக்கி உலகம் அழியும் என்பதை, சுனாமி பேரலைகள் கக்கி உலகம் அழியும் என்று பொருள் கொண்டு சுனாமிப் படங்களைப் பார்த்தால் இன்னும் நன்கு விளங்கும்.

 

ஏனெனில் உலகில் இது வரை எந்த விஞ்ஞானியும், உயிரியல் அறிஞனும் பல தலைகளைக் கொண்ட பாம்புகளைக் கண்டதில்லை. மிக மிக அதிசயமாக இரண்டுதலை ஒட்டிப் பிறந்த பாம்புகள் மட்டுமே உண்டு. அவையும் உடனே இறந்து விடும். இது மனிதர்களுக்குப் பிறக்கும் சயாமிய இரட்டைக் குழந்தை வகை Siamese Twins. பேஸ்புக், பத்திரிக்கை முதலியவற்றில் நாம் காணும் பல தலை பாம்புகள் வெறும் ரப்பர் பொம்மைகள், கம்ப்யூட்டர் ஏமாற்று வித்தைகள் என்பதை கற்றோரும் மற்றோரும் அறிவர். பின்னர் ஏன் இந்துமத நூல்கள் ஆயிரம்தலை ஆதிசேடன் பற்றிப் பகருகின்றன? என்னை (ஏனெனில்), சுனாமிப் பேரலைகளின் படங்களைக் கூர்ந்து நோக்கினால் ஆயிரம் பாம்புத் தலைகளுடன் சுனாமி அலைகள் , நிலப் பகுதிக்குள் ஆக்ரோஷத்துடன் – சீற்றத்துடன் – பிரவேசிப்பதைப் பார்க்கலாம்.

 

உலகில் நாகர் பற்றிப் பகராத பண்பாடு இல்லை என்று முன்னரே சொன்னேன். ஆயினும் ரிக் வேத காலம் முதல், சிந்து சமவெளியில் கிடைத்த பாம்புராணி முத்திரை முதல்– இன்று சபரிமலையில் உள்ள நாகராணி வரை— தொடர்ச்சியாக நாக வழிபாடு உள்ள மதம் – கலாசாரம் இந்துமதம் மட்டுமே. இமயம் முதல் குமரி வரை கோவில்களில் உள்ள நாகர்கள் சிலை பல லட்சம்! ஆயிரம் தலையுடைய வகனத்தைச் செய்ய முடியாதென்பதால் நமது கோவில் நாக வாஹனத்தில் 5, 7, 9 தலைகள்மட்டுமே சித்தரிக்கப் பட்டிருக்கும் – வடிவமைக்கப் பட்டிருக்கும்.

 

ஸ்னேக் (ஸ்+நாக), செர்பெண்ட் (ஸர்ப்ப) என்ற ஆங்கிலச் சொற்கள் சம்ஸ்கிருதத்திலிருந்து வந்தவை என்பதையும் நோக்குக. சுருக்கமாகச் சொன்னால், ரிக்வேத நாகர் வழிபாடு இன்று நாகர்கோவில், நாக்பூர், நாகாலாந்து வரை இருப்பது நம் பண்பாட்டில் மட்டுமே. மறைபொருளில்—நான் ‘மறை’ பாடிய ரிஷிகள், பாம்பு வடிவ சுனாமிப் பேரலைகளையே ஆதி சேடன் – ஆயிரம் தலையுடைய ஆதி சேடன் – என்று பாடினரோ என்று வியக்க வேண்டியுள்ளது. எக்காலத்திலும் இப்படிப்பட்ட பாம்பு இல்லாததால், நமது நூல்களை நாம் விஞ்ஞான முறையில் அனுகினால் அது சுனாமி பாம்பு அலைகள்தான் என்பது விளங்கும். அகத்தியர் கடல் நீரைக் குடித்தது, பகீரதன் கங்கையை திசை திருப்பிவிட்டது முதலிய பல ‘எஞ்சினீயரிங்’ பணிகளையும் மனதிற்கொண்டு பார்த்தால் நமது “மறை”மொழி விளங்கும்

nagadevata,tamil uma,fb

 

tsunami snake2

(எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் புராதன பாரதத்தின் எஞ்ஜினீயர்கள் – அகத்தியன், பகீரதன், பலராமன் – பற்றிப் படிக்கவும்).

–சுபம்–