
Written by S NAGARAJAN
Date: 1 May 2017
Time uploaded in London:- 6-20 am
Post No.3867
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
ஜோதிடமே துணையாகும்
விதி விளக்கம் என்னும் இந்த நூலை எனக்கு அனுப்பி உதவியவ்ர் எனது சம்பந்தி திரு ஆர்.சேஷாத்திரிநாதன் அவர்கள். ஏராளமான அருமையான பழைய நூல்களை அவ்வப்பொழுது எனக்கு அவர் அனுப்புவது வழக்கம். அவருக்கு எனது நன்றி.
நாடி கிரந்தங்கள் ஏன் சரியில்லை? : விதி விளக்கம் – 2
ச.நாகராஜன்
- நாடி கிரந்தங்கள் ஏன் சரியில்லை?
நூலாசிரியர் மிட்டா முனுசாமி நாடி கிர்ந்தங்களைப் பற்றிய தனது ஆராய்ச்சியை முதல் அத்தியாயத்திலேயே தெரிவிக்கிறார். அதன் சாரத்தைக் கீழே பார்ப்போம்.
நவகிரகங்கள் ஓயாது சுற்றிக் கொண்டே இருக்கின்றன. அவைகளின் ஓயாத இந்த சர கதியினால் பன்னிரெண்டு ராசிகளிலும் ஒரு காலத்தில் ஒரு ஜாதகத்தில் அவை ஒருவாறு அமைந்துள்ளதாகக் கொள்வோமாகில், அதே நிலையில் “ராசியில்” பின் ஒரு காலத்தில் சர கதியினால் அவை அமையக் கூடும். ஆனால் இந்த நவக்கிரகங்கள் நட்சத்திர நிலையிலாவது அல்லது அம்ச நிலையிலாவது வருவது அசாத்தியம். இதுவே சிருஷ்டியின் மஹிமை.
இப்படி ஒருவேளை அமையக்கூடும் பட்சத்தில் முன்னொரு காலத்தில் ஜனித்த ஒருவர் மற்றொரு காலத்திலும் தோன்றியதாக ஆகக் கூடும். ஆனால் ஒவ்வொருவருடைய அனுபவத்தின் அடிப்படையிலும் சுருதி, ஸ்மிருதி ஆகியவற்றின் சாட்சியங்களின் அடிப்படையிலும் இவ்வாறு நேரிட்டதாகக் காண முடியவில்லை.
ஆகவே நாடிக் கிரந்தங்கள் ஸ்தூல பலனில் மட்டுமே நமக்குப் பயனளிக்குமே தவிர நித்திய அல்லது மாத ரீதியாக அல்லது வருஷ பலனை அறிய் இடம் கொடுக்க மாட்டா.
அல்லாமலும் ஒரு மனிதரைப் போல இன்னொரு மனிதர் சகல விதத்திலும் ஒத்தவ்ராகப் பிறத்தல் அரிது.
. நவக்கிரகங்களும் வேறு வேறு நிலைமையுள்ளனவாகச் சஞ்சரிக்கும் அற்புதம் சிருஷ்டி மஹிமை. பன்னிரண்டு ராசிகளில் ஒரு வகையில் நவக்கிரகங்கள் ஒரு காலத்தில் அமைந்து அதே நிலையில் மற்றொரு காலத்தில் ராசியிலும் நட்சத்திர நிலையிலும் அமைவதில்லை. அதே நிலையில் பத்தாயிரம் வருடங்கள் சென்றாலும் அமைவது அசாத்தியம்.
இப்படிப்பட்ட சிருஷ்டி அமைப்பு இருப்பதினால், அவரவர்க்கு நித்திய அல்லது மாதத்திய அல்லது வ்ருஷத்திய பலனைத் தெரிந்து கொள்வதற்கு ஜோதிடர் அவசியம். நாடிக் கிரந்தங்கள் முழுமையாகப் பயன்பட மாட்டா. இது திண்ணம்.
அது மட்டுமன்றி அப்போதைக்கப்போது நாளுக்கு நாள் அமையும் நிலைமைக்கும், ஒரு வித சமப்ந்தத்தினால் வேறு வேறு பலன்கள் நடந்து கொண்டு வருவதை நாம் கண்ணாரக் காண்கிறோம்.
ஆனால் ஜனன கால நிலைக்கும் தற்கால நிலைக்கும் இருக்கும் நிலையை யூகித்துப் பலாபலனைக் கண்ட்றிவதே ஜோதிடர் பணி. ஆகவே ஜோதிடர் அவசியம்.
இன்றைய ஜோதிடர்கள் ஒருவருடைய பலனைத் தீர்க்கமாகக் கண்டறிய முடியாதபடி இருக்கும் காரணம் திதியினால் ஏற்படும் ஜாதக பலாப்லன்கள் இன்னதென்று அவர்களுக்குத் தெரியாததால் தான்.
நம் முன்னோர்கள் 1) ஒரு மனிதர் இறந்தால் திதியையே அனுஷ்டிக்க வேண்டும் 2) விரதாதிகள் அனைத்தும் அநேகமாய் திதியை அனுஷ்டித்தே செய்யப்பட வேண்டும் 3) திதிக்கும் நட்சத்திரத்திற்கும் இருக்கும் பேதத்தில் திதியே முக்கியம் என்று இப்ப்டி திதியின் முக்கியத்துவத்தை அனுஷ்டானத்தில் காட்டியுள்ளனர்.
“ஜனன காலம் முதல் ஆயுளுடன் ஜீவிக்கும் வரையில் நட்சத்திரம் முக்கியம். பெயரிடுவதும் விசேஷ காலங்களும் நட்சத்திரத்தின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும்.” என நம் முன்னோர்கள் நட்சத்திரத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டி விட்டு, இறந்தது முதல் திதியே பிரதானம் என்று அனுஷ்டான வகையில் காட்டியுள்ளனர்.
ஆனால் திதியினால் ஏற்படும் பலாபலத்தின் விசேஷம் ஜாதகத்தில் அனுஷ்டிப்பதில்லை. திதியைப் பார்த்துப் ப்லன் சொல்ல வேண்டுமென்று சொல்லும் ஜோதிட நூல்களும் இல்லை.
இந்த நிலையைச் சுட்டிக் காட்டி விட்டு திதியே மிக முக்கியமானது என்று மிட்டா முனுசாமி தன் ஆராய்ச்சிகளின் மூலமாகக் கண்டறிந்துள்ளதாக விதி விளக்கம் நூலில் கூறுகிறார்.
இனி பஞ்சாங்கத்தில் வரும் பஞ்ச அம்சங்க்ளான வாரம், திதி,நட்சத்திரம்,யோகம், கரணம் ஆகியவை பற்றி நூலாசிரியர் விவரிப்பதை அடுத்துப் பார்ப்போம்.
– தொடரும்