ஜீரண சக்தி அதிகரிக்க 5 விஷயங்கள்!

agastyanepal-carole-r-bolon

Written by london swaminathan

 

Date: 15 March 2016

 

Post No. 2633

 

Time uploaded in London :–  9-36

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

எச்சரிக்கை: இது மருத்துவக் கட்டுரை அல்ல; ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை!

saturn

சம்ஸ்கிருதத்தில் பல அழகான ஸ்லோகங்கள் உள்ளன. அவைகளில் மூன்று பாக்களில் எந்தெந்த ஐந்து விசயங்களை நினைவிற் கொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளன. அவைகளில் ஜீரண சக்திக்கான ஐந்து பேர்கள் விநோதமாகவுள்ளன. அதில் ஒன்று சனிக் கிரகம். அட, ஜீரண சக்திக்கு அஷ்ட சூர்ணம் சாப்பிடு, த்ரிபலா சூர்ணம் சாப்பிடு என்று சொல்லாமல் கீழ்கண்ட ஐந்து பேரை நினை என்று சொல்லுகிறது அந்த செய்யுள்:

 

அகஸ்திம் கும்பகர்ணம் ச சனிம்  ச வடவானலம்

ஆஹாரபரிபாகார்த்தம் ஸ்மராமி ச வ்ருகோதரம்

அகஸ்தியர், கும்பகர்ணன், சனி, வடவைத் தீ, பீமன் (வ்ருகோதரன்) ஆகிய ஐந்து பேரை நினைத்தால் ஜீரணம் எளிதாகும் என்கிறது இந்தப் பா!

அகஸ்தியர்: இல்வலன் என்ற அசுரன் எல்லோரையும் கொல்லப் பயன்படுத்தும் தந்திரத்தை அகஸ்தியரிடமும் பயன்படுத்த முயன்றபோது அவர் “வாதாபி ஜீர்ணோ பவ” என்று சொல்லி வயிற்றைத் தடவவே, இல்வலனின் சகோதரனான வாதாபி ஜீர்ணமாகி விடுகிறான் என்பது புராணக் கதை. அகஸ்தியர் கடலைக் குடித்தார், அகஸ்தியர் கமண்டலத்திலிருந்து காவிரி வந்தது, அகஸ்தியர் விந்தியமலையை கர்வபங்கம் செய்தார், அகஸ்தியரை மக்கட் தொகைப் பெருக்கத்தால் சிவபெருமான் தெற்கே அனுப்பிவைத்தார் என்பன எல்லாம் விஞ்ஞான பூர்வ அல்லது வரலாற்று ரீதியிலான விஷயங்கள்- வெறும் புராணக் கதைகள் அல்ல என்பதை முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் விளக்கிவிட்டேன்.

கும்பகர்ணன்:- ராவணனின் தம்பியான கும்பகர்ணன் ஆறு மாதம் சாப்பிட்டுவிட்டு ஆறுமாதம் நிம்மதியாகத் தூங்குவான். அவனுக்கு ஒரு உடற்  பிரச்சனையும் ஏற்படவில்லை. நல்ல ஜீரண சக்த்திக்கு நிம்மதியான உறக்கம் தேவை!

 

வடவைத்தீ: கடலுக்கடியில் சீறும் எரிமலைகளால் சுனாமி போன்ற ஆபத்துகளும், பெரும் தீயும் உண்டாகி பேரழிவை உண்டாக்குவதை நாம் அறிவோம். ஆந்திரத்தில் ஏற்பட்ட புயலில் மர்மத் தீ உண்டானது பற்றியும் பல ஆயிரம் பேர் உயிரிழந்தது பற்றியும் ஏற்கனவே எழுதியுள்ளேன்.

பீமன்/வ்ருகோதரன்: பீமனின் அசுரப் பசி உலகிற்கே தெரிந்ததுதான். பகாசுரனுக்காக பல வண்டிகளில்  வைக்கப்பட்டிருந்த உணவை ஒரே நேரத்தில் சாப்பிட்டவன் அவன். ஒரு அஜீரணக் கோளாறு அவனுக்கு ஏற்பட்டதில்லை.

 

சனி: இந்தப் பட்டியலில் மிகவும் புரிந்துகொள்ள கடினமானது சனிக் கிரகம் தான். அதற்கும் ஜீரணத்துக்கும் என்ன தொடர்பு என்று வியப்போம். சனிக் கிரஹம், உடலுறுப்புகளில் பாதத்துக்கும் பெருங்குடலுக்கும் அதிபதி. உலோகங்களில் இரும்புக்கு அதிபதி. இரும்புச் சத்து ரத்தத்தில் குறைந்தால் எல்லா உறுப்புகளும் ஜீரண சக்தியும் பாதிக்கப்படும். ஹீமோக்ளோபின் என்ற இரத்தச் சிவப்பணுக்களுக்கு இரும்பு தேவை என்பதை எனது நண்பர் கல்யாண குருக்கள் சுட்டிக்காட்டினார். மேலும் சனிக் கிரஹமே ஆயுள்காரகன். ஒருவன் இறப்பதும், இருப்பதும் சனியின் வேலையே.ஆக சனிக்கும் ஜீரணத்துகுமுள்ள தொடர்பு சரியே!

 

xxxx

 

indonesia-gifts-saras

வேதக் கல்வியில் முன்னேற கீழ்கண்ட 5 பேரை நினைவு கொள்வது அவசியம்:-

கணநாத சரஸ்வதீ ரவிசுக்ர ப்ருஹஸ்பதீன்

பஞ்சைதானி ஸ்மரேந்நித்யம்  வேத வாணீப்ரவ்ருத்தயே

 

கணநாதன் என்பது முதற்கடவுளான கணபதியையும், சிவனையும் குறிக்கும். சரஸ்வதி, கல்விக்கு அதிதேவதை. வியாழனும் (ப்ருஹஸ்பதி), வெள்ளியும் (சுக்ரன்) தேவ, அசுர கணங்களுக்கு ஆசிரியர்கள். ஆக  இவர்களை நினைப்பது வேதம் கற்க உதவும் என்பதில் பொருளுண்டு.

 

Xxx

 

india00015

தினமும் நினைக்க வேண்டிய ஐவர்:

அம்மா, அப்பா, ஆசிரியர், தாய்நாடு, தர்மத்தை உபதேசிக்கும் குரு (வியாசர் போன்றோர் அல்லது ஒவ்வொருவருக்கும் மந்திரம் முதலியன கற்பிக்கும் ஆசிரியர்). இதை விளக்கத் தேவையே இல்லை. இது ஒவ்வொரு இந்துவின் ரத்தத்திலும் ஊறிய கருத்து!

ஜனனீ ஜன்மதாதா ச சுவித்யாம்  ப்ரததாதி ய:

ராஷ்ட்ரம் தர்மோபதேஷ்டா ச பஞ்சகம் சந்ததம் ஸ்மரேத்

 

–சுபம்–