பருவ நிலை மாற்றத்தால் அழிந்தது சிந்து நதி தீர நாகரீகம் (Post 8648)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8648

Date uploaded in London – –8 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பருவ நிலை மாற்றத்தால் அழிந்தது சிந்து நதி தீர நாகரீகம் ;விஞ்ஞானி  அறிவிப்பு

உலகப் புகழ்பெற்ற சிந்து- சரஸ்வதி நதி தீர நாகரிகம் அழிந்ததற்கு பருவ நிலை மாற்றமே காரணம் என்று அமெரிக்காவின் ரோசஸ்டர் இன்ஸ்டிட்யூட் ஆஃ ப்  டெக்னாலஜி (ROCHESTER INSTITUTE OF TECHNOLOGY) விஞ்ஞானி நிஷாந்த் மாலிக் நிரூபித்துள்ளார் . அவரது ஆராய்ச்சி முடிவுகள் கேயாஸ் (CHAOS) என்ற பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

பிரித்தாளும் சூழ்ச்சசியிலும் மதமாற்றத்திலும் ஈடுபட்ட  வெளிநாட்டோரும் அவர்களுக்கு அடிவருடிய திராவிடப் புரட்டர்களும் , மார்கசிய சதிகாரர்களும் சரஸ்வதி- சிந்து நதி தீர நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட அடுத்த நிமிடமே, அதற்கு முன் அவர்கள் சொல்லி வந்த, ஆரிய படையெடுப்பு வாதத்தைப் புகுத்தினர். இப்படி விஷ  வித்துக்களைத் தூவியதால் இது வரை உலகில் படிக்க முடியாத ஒரே எழுத்தாக சிந்து சமவெளி எழுத்துக்கள் (UNDECHIPERABLE LANGUAGE)  இருக்கின்றன. கடந்த 25 ஆண்டுகளாக வெளிவரும் அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் ஆரிய- திராவிடப் பிரிவினைவாதிகளுக்கு சாவு மணி அடித்து வருகிறது.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க விண்வெளி அமைப்பான  நாஸா (NASA) எடுத்த விண் வெளிப் புகைப்படங்கள் பழங்கால சரஸ்வதி நதி ஒடி, வறண்டு, மறைந்து போன, வழித்தடத்தைக் காட்டின. அதே  நேரத்தில், பாபா அணுசக்தி கேந்திர (BARC) விஞ்ஞானிகள் நடத்திய நிலத்தடி நீர் ஆய்வுகளும் சரஸ்வதி நதி பிரமாண்டமான அளவில் ஓடி வற்றிப்போய் மறைந்ததைக் காட்டின. ஹரப்பா, மொஹஞ்சதாரோவுக்குப் பின்னர் 1500 இடங்களில் பழைய  நாகரீக தடயங்கள் காணப்பட்டதால் உ லகின் மிகப்பெரிய நாகரீகம்— ரிக்வேதம் குறிப்பிடும் சரஸ்வதி- சிந்து நதி தீர  நாகரீகம்— என்பது தெளிவாகியது.

சங்க இலக்கியத்திலும், பிற்காலத் தமிழ் நூல்களிலும் சிந்து நதி பற்றிய குறிப்புகளே இல்லாததாலும் சிந்து வெளியில் கிடைத்த எலும்புக்கூடுகள் பஞ்சாபிய ஆரிய எலும்புக்கூடுகள் என்பதாலும்  தமிழர்களுக்கும் இதற்கும் எள்ளளவும் தொடர்பு இல்லை என்பதும் தெரியவந்தது. கங்கை, யமுனை , பாடலிபுத்திரம் பற்றிப் பேசும் சங்க இலக்கியத்துக்கு, சிந்து பிரதேசம் பற்றிய அறிவு கொஞ்சமும் இல்லை என்பதையும் அறிஞர்கள் சுட்டிக்காட்டினர். சிந்து சமவெளி எழுத்துக்கள் திராவிட எழுத்துக்களைப் போல ஒட்டு மொழி எழுத்து (AGGLUTINATIVE) என்று 60 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்ன பின்னிஷ்- ரஷ்ய (FINNISH- SOVIET) அறிஞர்கள் வாயிலும் வாக்கரிசி போட்ட பிற அறிஞர்கள் உலகில் திராவிட மொழி தவிர பல மொழிகள் இந்த அமைப்பைக் கொண்டுள்ளதைக் காட்டி வாயடைத்தனர்.

கடந்த வாரம் இந்தியா முழுதும் ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியான செய்தியும் பருவ நிலை நிலை மாற்றமே (CLIMATIC CHANGES) நாகரீக மறைவுக்கான காரணம் என்று காட்டிவிட்டன ; இதன் விவரம் பின்வருமாறு:–

NAGA RANI IN INDUS VALLEY

கடந்த 5700 ஆண்டுகளாக வட இந்தியாவில் பருவநிலையும், குறிப்பாக நகர்ந்து/ மாறி  வரும் பருவக்காற்றும் (shifting monsoon)  என்ன செய்தது, எப்படி இருந்தது என்பதை கணித முறையில் கம்பியூட்டரில் (mathematical model) கண்டறிந்தார் இந்திய வம்சாவளி அறிஞர் நிஷாந்த் மாலிக் (Nishant Malik). இதே கணித மாடலை எல்லா நாகரீகங்களுக்கும் பயன்படுத்த முடியும்.

கேயாஸ் என்ற ஆராய்ச்சிப் பத்திரிகையில் வெளியான அவரது கட்டுரை மேலும் ஒரு செய்தியையும் கூறுகிறது. தெற்காசியாவில் பல குகைகள் உள்ளன. அவற்றில் பழங்காலத்தில் பெய்த மழைத்துளிகள் குகை ஓட்டை வழியாக ஒழுகி ஸ்டாலக்மைட்  (stalagmites) என்னும் வடிவங்களை உருவாக்கியுள்ளன (இது போன்ற குகைகள் இன்று உலகெங்கிலும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து இழுக்கும் இயற்கை அதிசயத் தலங்களாகத் திகழ்கின்றன).

இந்த ஸ்டாலக்மைட் வடிவங்களை ஆராய்வதன் மூலம் நமக்கு பழங்கால பருவ நிலை தெரியும். இதை அவர் ஆராய்ந்ததில் சிந்து- சரஸ்வதி நாகரீகம் துவங்குவதற்கு முன்னர் அங்கே மழை   கொட்டி வளமாக்கியதும், பின்னர் கொஞ்சம்  கொஞ்சமாக அது மாறி வறண்டு போனதும் தெரியவந்தது. நாகரிகத்தின் தோற்றமும் அழிவும் மழை அளவு அதிகரிப்பு குறைவுடன்  தொடர்புடையதாகக் காணப்படுகிறது. ஆக முந்தைய ஆரிய படையெடுப்புக் காரணங்கள், பூகம்பக் காரணங்கள் எல்லாம் தவறானவை; பருவ நிலை மாற்றமே நாகரிக மறைவுக்கு காரணம் என்கிறார் நிஷாந்த் மாலிக்.

 இதை மேற்கொண்டும் ஆராய்ந்து தடயங்களை, சாட்சியங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். ஏனெனில் இது கம்பியூட்டரில் உருவாக்கப்பட்ட கணித மாதிரியின் (mathematical model research findings)  முடிவுகள். அந்த இடத்திலேயே இதற்கான தடயங்களைக் கண்டுபிடிக்கவேண்டும் என்றும் முடிக்கிறார்

*******

என் கருத்து

அந்த இடத்திலேயே நிகழ்த்திய பாபா அணுசக்தி கேந்திர நிலத்தடி நீர் ஆய்வுகளும் பிரம்மாண்டமான சரச்வதி நதி வற்றிப்போனதைக் காட்டுகிறது.

நாசாவின் (NASA) புகைப்படங்களும் வற்றிய நதியின் வழித்தடத்தைக் காட்டுகிறது.

சிந்து-சரஸ்வதி  சமவெளி வறட்சி காரணமாக வெளியேறிய ஸாரஸ்வத (சரஸ்வதி நதி தீர  )பிராமணர்கள் இன்றும் கொங்கண ,மஹாராஷ்டிர பிரதேசங்களில் வசிக்கின்றனர். புராணங்களும் உத்தர பிரதேசத்திலுள்ள பிரயாகையில் கங்கை -சரஸ்வதி- யமுனை சங்கமம் ஆவதாக இயம்புவதால்  இன்றும் இந்துக்கள்  புனித ஸ்நானம் செய்கின்றனர். அந்த ஊரின் பெயரே ‘த்ரிவேணி சங்கம்’; தமிழில் முக்கூடல் – மூன்று நதிகளின் கூடுதல் . இப்போது பிரயாகையில் சரஸ்வதி நதி பாதாளத்தில் பாய்வதாகக் கூறுவர்.

tags– பருவ நிலை மாற்றம் , சிந்து- சரஸ்வதி நதி தீர நாகரிகம் ,நிஷாந்த் மாலிக், ROCHESTER INSTITUTE OF TECHNOLOGY