

Post No. 8524
Date uploaded in London – 17 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
“மாடு செத்தா மனுஷன் தின்னான்
தோல வச்சு மேளம் கொட்டுடா
கூத்து கட்டி மேளம் கொட்டுடா
அட்ரான்னா நாக்கு மூக்கே,
அடரான்னா நாக்கு மூக்கே
நாக்கு மூக்கே, நாக்கு மூக்கே,
நாக்கு மூக்கே, நாக்கு மூக்கே”
(இதே வார்த்தைகள் 72 தடவைகள்,
கடைசியில் ஒரு பெண் சொல்கிறாள் – மொத்தம் 73 தடவைகள்)
லாரி சோனா, லாரி சோனா -இதே பதங்கள் – 42 தடவைகள்
……..உங்களுக்குப் புரிந்ததோ இல்லையோ எனக்குக் கொஞ்சம் கூடப் புரியவில்லை………
எத்தனை நாக்கு மூக்கே, எத்தனை லாரி சோனா???
இதை எண்ணும்போது என் பெண் கேட்டாள் எத்தனை தடவை
போட்டுப் போட்டு எண்ணிக் கொண்டிருப்பாய்..?????
இதற்கு சாமி பேரைச் சொல்லியிருந்தாலும் புண்ணியம் உண்டு!
பஞ்சாங்கத்தைப் பார்த்தாலும் உங்களுக்கு இப்படித்தான்
இருக்கும்……….
நாக்கு மூக்கே மாதிரி – சில விஷயங்கள் புரியாது…………
அதை விளக்கவே இந்தக் கட்டுரை.
ஒரு விளம்பரம் இல்லாமல், ஒரு நோட்டீஸ் இல்லாமல்
எப்படி இவ்வளவு கூட்டம் லட்சக்கணக்கில்??????
ஒரு வெள்ளைக்காரர் கேட்டார்.
அருகிலிருந்த ஒரு இந்தியர் சொன்னார், “எங்கள்ஊரில் பஞ்சாங்கம் என்று ஒன்று உண்டு.
எந்தந்த நேரங்களில் எந்தந்த ஊரில் என்ன என்ன விழா நடக்கும் என்று போட்டிருக்கும்.
அதைப் பார்த்து நாங்கள் வந்து விடுவோம்”………..
ஆனல் இன்று பஞ்சாங்கம் நிறைய பேர் வீட்டில் வாங்குவதில்லை.
முக்கால்வாசி விஷயம் கம்ப்யூட்டரில், மீதி விஷயம் நாட்காட்டியில்!!!
முதலில் பாம்புப் பஞ்சாங்கத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்
இல்லை என்றால் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் – என்றும் உபயோகப்படும்.
அரை சென்டிமீட்டர் அகலத்திற்கு 11 மெல்லிய கோடுகள் உயரம் உயரமாக
பிறகு இரண்டு அல்லது மூன்று தமிழ் எழுத்துக்கள் பிறகு நம்பர்கள்
மீண்டும் இரண்டு எழுத்துக்கள் மீண்டும் நம்பர்கள்………….
சரி என்னன்ன வார்தைகள் அங்கு இருக்கும்,
அதற்கு பொருள் என்ன? ……..
உதாரணமாக பாம்புப் பஞ்சங்கத்தை எடுத்துக் கொள்வோம்
1.யோகம்- இன்று என்ன யோகம் சித்த யோகம், மரண யோகம்
அமிர்த யோகம்.அதாவது ஒரு குறிப்பிட்ட திதியும், குறிப்பிட்ட நட்சத்திரமும் சேர்ந்தால் உள்ள பலன்.
2.ஆனி மாத பக்கத்துக்கு வாருங்கள். மிதுன இருப்பு என்றபோட்டிருக்கிறதா,
அதாவது மிதுன ராசி எவ்வளவு பாக்கி எனபதை 5 நாழிகை18 வினாடி என்று காண்பிக்கிறது.
3.அஹஸ் – என்றால் பகல் நேரம்.
4.சிரார்த்த திதி இறந்தோருக்கு திதி் அதாவது ஓரே திதி 2 நாட்களுக்கு
இருக்கும் அப்போது எதை எடுப்பது என்ற சந்தேகத்தைப் போக்கும்.
5 யோகினி- பிரயாணம் எந்த திசையில் செல்லலாம்.
6 நேத்- நேத்திரம்
7 ஜீவ- ஜீவன்
8 துலு – முஸ்லீம்களின்மாதம்/ நாள்
9 சக வருடம் மாதம் தேதி
10.ஆங்கில மாதம் தேதி
11.தமிழ் மாதம் தேதி
இனிமேல் வரிசையாக உள்ளவைகளைப் பார்ப்போம்
கிழமை, திதி, நடசத்திரம், யோகம், கரணம் வரிசையாக இருக்கும்
அவற்றைப் பார்ப்போம்
*****
பஞ்சாங்கம் என்றால் என்ன???
1. வாரம்- கிழமை ஞாயிறு முதல் சனி முடிய 7 நாட்கள்
இதைப் பார்ப்பதினால் ஆயுள் விருத்தி.
2.நட்சத்திரம்-மொத்தம்-27 அஸ்வினி முதல் ரேவதி முடிய
இதைப் பார்ப்பதினால் பாவம் குறையும்.
3.திதி-வானில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரத்தை
குறிக்கிறது. இதை தெரிந்து கொள்வதினால் செல்வம் பெருகும்
4.யோகம்-வானில்ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனும்
சந்திரனும் செல்லும் மொத்த தூரமாகும். இதை தெரிந்து கொள்வதினால் நோய் வராது.
5.கரணம்- திதியில் பாதி கரணம். இதை தெரிந்து கொள்வதினால்
தொடங்கும் எல்லா காரியங்களும் சித்தியாகும்
****
(மேலும் தொடரும்)

tags — பஞ்சாங்க ரகசியம் -1, பஞ்சாங்கம் ஏன்?
