வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் (Post No3876)

Written by S NAGARAJAN

 

Date: 4 May 2017

 

Time uploaded in London:-  6-28 am

 

 

Post No.3876

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

ஜோதிடமே துணையாகும்

வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் – பஞ்ச அங்க விளக்கம் : விதி விளக்கம் – 3

 

by ச.நாகராஜன்

 

  1. வாரம், திதி,நட்சத்திரம்,யோகம், கரணம் : பஞ்ச அங்க விளக்கம்

நூலாசிரியர் மிட்டா முனிசாமி செட்டி ராகு காலம், குளிகை ஆகியவற்றை இன்றும் பார்த்து வரும் அன்பர்கள் பஞ்ச அங்கங்களை ஏன் கவனிப்பதில்லை என்று வியக்கிறார்.

அவர்  பஞ்ச அங்கங்களைப் பற்றி விளக்குகிறார்.

அவற்றில் சில பகுதிகள் இதோ:

 

 

வாரம்

வாரங்களில் திங்கள்,புதன்,வெள்ளி ஆகியவைகள் சகல சுபங்களுக்கும் அனுகூலமானவை.

செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு ஆகியவை அவ்வளவு சிரேஷ்டமாக தினசரி அனுஷ்டானத்திற்கு எடுக்கவில்லை.

 

ஆனால் செவ்வாய், ஞாயிறு, வியாழன் ஆகியவற்றில் விவாகம் முதலிய சுபங்கள் நடந்தால் மேல் சொல்லிய சுப வாரங்களின் மஹிமை குறைவதில்லை.

 

 

,திதி

சூரியன், சந்திரன் இவைகள் ஒன்றுக்கொன்று இருக்கின்ற நிலையினால் பூமிக்கு ஏற்படும் ஒரு வித சுபாவ நிலையைக் குறிப்பது திதி.

 

திதியினால் சூரியனும் சந்திரனும் இருவரும் சேர்ந்து தங்கள் சர கதியினால் சக்தியை ஆகர்ஷணம் செய்து மனிதர்களுக்குப் பல வேளைகளிலும் , பல் இடங்களிலும் அவரவர் பிராரப்தம் போலவும், ஜெனன கால நவக்கிரக பிரசாத ஈடு போலவும் இயக்கி மண்மகனைப் பிணமகனாக்கலும் போன்ற அநேக பல்ன்களளச் செய்கின்றனர்.

கிரகண காலத்தில் மனிதர்களுக்கு வியப்பையும் பயங்கரத்தையும் ப்ரவச் செய்து தங்கள் சக்தியைக் காண்பிக்கின்றனர்

 

 

நட்சத்திரம்

 

நட்சத்திரம் சந்திரனுடைய நித்ய சரகதி நிலையைக் காண்பிக்கிறது.மற்ற கிரகங்களை விட பூமிக்கு மிகவும் ச்மீபத்தில் சஞ்சரிப்பதினால், சந்திரன் தின பலனை மனிதர்கள் யூகிப்பதற்கு உதவியாக இருக்கின்றான்.

 

 

யோகம்

 

இதுவும் நட்சத்திரத்தைப் போல 27 வகை உள்ளதென்றாலும் நட்சத்திரத்தைப் போல நாழிகை ஆதியந்தம் எடுத்து ஜெனனகால விசேஷம் கணக்கிட்டு , அந்த நாழிகையை வருடமாகவும், விநாடியை மாதமாகவும் வைத்துக் கவனித்தால் ஒவ்வொருவருடைய யோகம் மாறுவது போல, பூவுலகில் தங்கள் தங்கள் அனுபவ யோகம் எப்படி மாறி வருகின்றது என்பதைக் கவனிக்கலாம்.

 

நட்சத்திரத்தைக் கொண்டு திசை கணக்கிடுகிறோம்.

ஆனால் யோகம் ஸ்தூலமாக வாழ்நாள் யோகக் கூறுபாட்டை, ஜெனன சேஷ வருஷம் மாதம் வரையில் ஒவ்வொருவர் ஆயுள் காலத்தில், தெரிவிப்பதாக்த் தற்கால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

 

கரணம்

 

கரணம் தீர்க்கமாக ஆயுள் பரியந்தம் ந்டக்கும் ஆன்ம சுபாவத்தைத் தெரிவிக்கிறது.

இது யோகத்தைப் போல மாறி வருவதில்லை.

 

இனி பஞ்ச அங்கங்களைப் பற்றிச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

 

வாரம்

 

  1. வார சூன்யம் : வாரமும் நட்சத்திரமும் கூடிய தினத்தன்று நன்மை உண்டாகாது. அப்படிப்பட்ட நாள்கள் சுபத்திற்கும் ஆகாது. எவ்வித காரியத்தையும் அன்று ஆரம்பிக்கக் கூடாது.

ஞாயிறு : – அனுஷம், கேட்டை, மகம், பூரட்டாதி, கார்த்திகை, விசாகம்

திங்கள் :- பூராடம்,அனுஷம், மகம், பூரட்டாதி, கார்த்திகை, விசாகம்

செவ்வாய்:- அவிட்டம், திருவோணம், சதயம்,கேட்டை, திருவாதிரை

புதன் :- மூலம், திருவோணம்,கார்த்திகை,அவிட்டம், அசுவினி, பரணி

வியாழன் – மிருகசீரிஷம்,பூராடம்,ரேவதி, புனர்பூசம்

வெள்ளி – பூசம், விசாகம், ரோகிணி, அவிட்டம்,மிருகசீரிஷம், ஹஸ்தம், அனுஷம்

சனி – ஹஸ்தம்,பூசம், புனர்பூசம், உத்திரம், ரேவதி

இவை பொது விதி. திதி,யோகம் ஆகியவற்றால் மேற்காட்டிய வாரசூனயம் நன்மையாக முடியும்.

தெய்வ அனுகூலத்தினால் மனித யத்தனமின்றி விசேஷ காரியங்களும் சுபங்களும், இஷ்ட பிராப்தியும் உருவாகலாம்.

 

  1. கிழமை பிறந்த ( நாள் என்று குறிப்பிடப்படும்) நட்சத்திரம் கூடிய வாரங்களில் செய்கின்ற கருமம் எல்லாம் தீமையாக முடியும்.

இது தினசரி அன்றாடம் கடைப்பிடிப்பதற்காக ஏற்பட்டது.

இது பின் வருமாறு

ஞாயிறு – பரணி

திங்கள் – சித்திரை

செவ்வாய் – உத்திராடம்

புதன் – அவிட்டம்

வியாழன் – கேட்டை

வெள்ளி – பூராடம்

சனி – ரேவதி

இது சிறப்பு விதி. இதை நிச்சயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

 

அடுத்து நட்சத்திரங்களைப் பற்றிச் சற்று விளக்கமாகக் காண்போம்.

– தொடரும்