பழைய தமிழ் நாவல்கள் பற்றிய சில விநோதச் செய்திகள்!- பகுதி 1

IMG_3645 (2)

Research Article No. 2083

Written by London swaminathan

Date : 19 August  2015

Time uploaded in London :–  9-18 am

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான தமிழ் புதினங்களை லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் வாங்கிப் பார்த்தபோது சில விநோதமான வேறுபாடுகள் புலப்பட்டன.

இன்று நாவல்களுக்கு முன்னுரை எழுதுவதில்லை; அன்றைய நாவலகளில் முன்னுரை இருக்கிறது. இதில், நாவலாசிரியர்களே அதை எழுதியதற்காக காரணங்கள் சூழ்நிலையை விளக்குகின்றனர்.

இப்போது நாவல்களுக்குப் பொருளடக்கம் இருப்பதில்லை. அன்றைய நாட்களில் நாவல்களுக்குப் பொருளடக்கம் எழுதினர். வேதநாயகம் பிள்ளை எழுதிய தமிழின் பழைய நாவலான “பிரதாப முதலியார் சரித்திரம்” முதல் பல நாவல்களில் இதைக் காணலாம்.

எல்லா நாவல்களிலும் அட்டையில் படம் இருக்காது. அட்டையில், ஆங்கிலத்தில் நாவல் பற்றிய விவரங்கள், தலைப்பு எல்லாம் இருக்கும். இதற்கு அடுத்த பக்கத்தில்தான் தமிழில் கதைத் தலைப்பு, எழுதிய ஆசிரியர் பெயர்கள் இருக்கும். பிரிட்டிஷார் ஆண்ட காலத்தில் பாரதியார் போன்றோர் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ப் போர்க்கொடி உயர்த்தி பல பத்திரிக்கைகளை நடத்தியதாலும், ஸ்வதேச கீதங்கள் என்ற பெயரில் பாரதியார் (1908ல்) பாடல் புத்தகம் மூலம் தேசபக்தத் தீக்கனலை எரியவிட்டதாலும் இந்தத் தேவை ஏற்பட்டது. தங்களுக்கும் அந்த தேசபக்தர்களுக்கும் அல்லது அவரது புத்தகங்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை அறிவிக்கும் முகத்தான் இப்படி ஆங்கிலத்தில் விவரங்களை வெளியிடும் அவசியம் ஏற்பட்டது போலும்.

நாவல்கள் அனைத்தும் இறை வணக்கப் பாடல் அல்லது ஸ்தோத்திரங்களுடன் துவங்குகின்றன. இன்றைய நாவல்களில் இப்படி இறைவனைப் பற்றிய பிரஸ்தாபங்கள் இல்லை.

நாவல்கள் எல்லாம் சுபமாகவே முடியும் (தமிழ் திரைப் படங்கள் போல)! சுபம் என்ற சொல்லும் இறுதியில் இருக்கும்.

நாவல்களை எழுதுவோர் புனைப் பெயர்களைப் பயன்படுத்தாமல் தன் சொந்தப் பெயர்களை, சகல விருதுகளுடன் பயன்படுத்தினர்!

ஆண்களோடு போட்டி போட்டுக் கொண்டு பெண்களும் தமிழ் நாவல்களை எழுதினர் (இதன் பட்டியலைத் தனியாகத் தருகிறேன்)

கடைசி பக்கத்திலும் பின் அட்டையிலும் அதே ஆசிரியர் எழுதிய பிற நூல்கள் பற்றியோ அல்லது வேறு ஆசிரியரின் நூல்கள் பற்றியோ விளம்பரம் இருக்கும்.

பிரதாப முதலியார் சரித்திரம் – என்னும் முதல் தமிழ் நாவலில் கடைசியில் அதுபற்றி வந்த ஆங்கில விமர்சனங்கள், கடிதங்கள் ஆகியனவும் சேர்க்கப் பட்டுள்ளன. அத்தனையும் புகழுரைகள்!

பெரும்பாலும் குடும்பக் கதைகளாகவும், இந்துமதப் பின்னணிக் கதைகளாகவும் இருக்கின்றன.

எல்லா ஜாதி எழுத்தாளர்களும் கதைகள் எழுதினர். பிள்ளையார் சுழி போட்டு தெய்வ பக்தியுடன் நாவலைத் துவக்குகின்றனர். உள்ளே படங்கள் என்பதே இராது. நிறைய சம்ஸ்கிருதச் சொற்களையும் நாவலில் பயன்படுத்துகின்றனர். நாவல்களின் விலை 3 அணா முதல் ஒரு ரூபாய் 4 அணா வரை விலையிட்டனர்! ((ஒரு ரூபாயில் 16 அணாக்கள்)). அக்காலத்தில் மாத சம்பளமே எட்டு ரூபாய், பத்து ரூபய் இருந்தபோது இவ்வளவு விலை உயர்ந்த நாவல்களைப் பணக்காரர்களும், நூல்நிலையங்களும் மட்டுமே வாங்கியிருக்க முடியும். ஆனால் 1000 காப்பிகள் வரை அச்சிட்டிருக்கின்றனர்.நீண்ட நாவல் 400 பக்கம் வரை சென்றுள்ளது.

சில வங்காள நாவல்களின் மொழி பெயர்ப்புகளும் வந்துள்ளன.

இத்துடன் கீழே இணைத்துள்ள பக்கங்களைக் காணவும்:–

IMG_3646 (2)

IMG_3647 (2)

IMG_3648 (2)

IMG_3649 (2)

IMG_3652 (2)

IMG_3653 (2)

IMG_3654 (2)

IMG_3656 (2)

IMG_3658 (2)

IMG_3663 (2)

IMG_3667 (2)

to be continued……………..