வேப்ப மரம் பற்றிய 4 பழமொழிகள் கண்டுபிடியுங்கள் (Post No.8080)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8080

Date uploaded in London – 31 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

விடை

1.வேப்பம் பழம் சிவந்தாலும் விரும்புமா கிளி ?
2.வேப்பெண்ணை விற்ற காசு கசக்குமா
3.வே ம்பும் சரி , வேந்தனும் சரி
4.வேம்பில் தேனை விட்டால் கசப்பு நீங்குமா
Source book :–
பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு.

–subham–

tags –வேப்ப மரம் ,பழமொழிகள்

தென்னை மரம் பற்றிய 3 பழமொழிகள் கண்டுபிடியுங்கள் (Post No.8073)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.8073

Date uploaded in London – 30 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

விடை

1.தென்னை மரத்திலே தேள் கொட்ட பனை மரத்தத்திலே நெறி கட்டினது போல

2.தென்னை மரத்திற் பாதி, என்னை வளர்த்தாள் பாவி

3.தென்ன மரத்தில் ஏண்டா ஏறினாய் , கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க ,,

தென்ன மரத்தில் புல்  ஏத டா, அதுதான் கீழே இறங்குகிறேன்.

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

tags –தென்னை மரம் , பழமொழிகள்

–subham–

வளமான வாழ்வு பற்றிய 30 பழமொழிகள் (Post No.8071)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8071

Date uploaded in London – 30 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜூன் மாத 2020 நற்சிந்தனை  காலண்டர்

விழா நாட்கள் – ஜூன் 4 வைகாசி விசாகம் , 28 ஆனி உத்தரம் .

அமாவாசை – ஜூன் 20, பௌர்ணமி -ஜூன் 5; ஏகாதசி விரத நாட்கள்- 2, 17.

சுப முஹுர்த்த தினங்கள் – 1, 3, 7, 10,11, 12, 24

நலமான வாழ்வு, வளமான வாழ்வு பற்றிய 30 பழமொழிகள் ஜூன் மாத நற்சிந்தனை காலண்டரை அலங்கரிக்கின்றன.

ஜூன் 1  திங்கட் கிழமை

அநிர்வேதஹ ஸ்ரியோ மூலம் – வால்மீகி ராமாயணம் 5-12-11, விதுர நீதி 6-16

உற்சாகமே வளமான வாழ்வின் அஸ்திவாரம் /ஆணிவேர்

***

ஜூன்  2 செவ்வாய்க்  கிழமை

ந சோக பரிதாபேன  ஸ்ரேயசா  யுஜ்யதே ம்ருதஹ-  வால்மீகி ராமாயணம் 4-25-2

இறந்தோர் பற்றி, வாழும் மக்கள் வைக்கும் ஒப்பாரியால் மட்டும் அவர்கள் பெரியோர் ஆகிவிடமாட்டார்கள் .

***

ஜூன்  3 புதன்  கிழமை

ந சாஹச மனாராப்ஸ்ரேயஸ முபலப்யதே – ஸம்ஸ்க்ருத பழமொழி

வளமான வாழ்வு வேண்டும் என்றால் ஆபத்துக்களையும் எதிர்நோக்கத் தயாராக வேண்டும்

***

ஜூன்  4 வியாழக்  கிழமை

உத்திஷ்ட , யசோ லப – பகவத் கீதை 11-33

எழுந்திரு, புகழ் அடை

***

ஜூன்  5 வெள்ளிக்  கிழமை

ந ஸ்வகர்ம வினா ஸ்ரேயஹ ப்ராப்னுவந்தீஹ மானவாகா -யோக வாசிஷ்டம் 5-48-69

தன் முயற்சி இன்றி நல்வாழ்வு கிட்டாது

xxx

ஜூன்  6 சனிக்  கிழமை

பொருளல்லவரை ப் பொருளாகச் செய்யும்

பொருளல்லது இல்லை பொருள் – குறள் 751

ஒருவனை ஒருபொருட்டும் மதிக்கமுடியாவிட்டாலும் பொருள் சேர்ந்துவிட்டால் உலகம் அவனை மதிக்கும் .ஆகையால் பொருளை விட சிறப்புடையது எதுவும் இல்லை

***

ஜூன்  7 ஞாயிற்றுக்  கிழமை

நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும்; குலம் வேண்டின்

வேண்டுக யார்க்கும் பணிவு – 960

உலகில் நன்மை எல்லாவற்றையும் பெற வெட்கம் வேண்டும்; அதாவது தீய செயல்களைச் செய்ய வெட்கப்படவேண்டும் . வீட்டின் பெருமையைக் காக்க வேண்டுமானால் பணிவு வேண்டும் .அப்படியில்லாவிடில் அவனுடைய அப்பா, அம்மா வளர்த்த முறையை எண்ணி குலத்தைப் பழிப்பார்கள்

***

ஜூன் 8 திங்கட் கிழமை

ஞாலம் கருதினும் கைகூடும்  காலம்

கருதி இடத்தாற் செயின் – குறள் 483

உலகமே வேண்டுமானாலும் கிடைக்கும் . தக்க காலத்தில், தக்க இடத்தில் செய்தால்.

***

ஜூன்  9 செவ்வாய்க்  கிழமை

நித்யஸ்ரீ நித்ய மங்களம் – கஹாவத்ரத்னாகர

பொங்கும் மங்களம் என்றும் தங்குக

***

ஜூன்  10 புதன்  கிழமை

புஷ்டிர்ஹி ப்ரதமா ரதிஹி – பழமொழி

நல்வாழ்வு கிடைப்பதே பெரும் பாக்யம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

***

ஜூன்  11 வியாழக்  கிழமை

பூர்வாதீரிதம் ஸ்ரேயஹ துக்கம் ஹாய் பரிவர்த்ததே – சாகுந்தலம்

அதிர்ஷ்ட தேவதையை ஒருமுறை நிந்தித்தால் பின்னர் கஷ்டம்தான்

***

ஜூன்  12 வெள்ளிக்  கிழமை

ப்ரதாப மா த்ரோபனதா  விபூ தியஸ் சிரன்ன திஷ்டதி ப்ரோபதா பினாம்  – சுபாஷிதா வளி

மற்றவர்களை வஞ்சித்து பெற்ற செல்வம் தங்காது .

***

ஜூன்  13 சனிக்  கிழமை

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் -குறள் 659

மற்றவர்களை அழும்படி செய்து பெற்ற செல்வம் உன்னை அழ , அழ வைத்து விட்டு ஓடிவிடும்

***

ஜூன்  14 ஞாயிற்றுக்  கிழமை

ப்ரதிபக் னாதி ஹி   ஸ்ரேயஹ  பூஜ்யபூஜா வ்யதிக்ரமஹ – ரகு வம்சம் 1-79

வணங்கத் தக்கவர்களை வணங்காமல்  இருப்பது நல் வாழ்வுக்கு தடைகளாக நிற்கும்                               

***

ஜூன் 15  திங்கட் கிழமை

விபூதி ரஹிதம் கேஹம் ந ராஜதே — ப்ருஹத் கதா மஞ்சரி

செல்வமில்லாத வீடு ஒளி இழந்து காணப்படும்

***

ஜூன்  16 செவ்வாய்க்  கிழமை

வினைநலம் வேண்டிய எல்லாம் தரும் -குறள் 651

செய்யும் செயலின் தூய்மை அவன் விரும்பியவற்றை எல்லாம் கொடுக்கும்

***

ஜூன்  17 புதன்  கிழமை

ஸ்ரேயாம்சி லப்துமசுகானி வினாந்தராயைஹி – கிராதார்ஜுனிய

பெருஞ் சாதனைகள் கஷ்டங்களைச் சந்திக்காமல் நிகழ்ந்தவை அல்ல.

***

ஜூன்  18 வியாழக்  கிழமை

எதிரதாக் காக்கும் அறினார்க்  கில்லை

அதிர வருவதோர் நோய்- குறள் 429

முன்கூட்டியே அறிந்து காக்க வல்ல அறிவுள்ளவர்க்கு, பின்னர் நடுங்கச் செய்யும் துன்பம் வராது .

***

ஜூன்  19 வெள்ளிக்  கிழமை

ஸதாசாரஹ ஸ்ரியோ மூலம் — ராமாயண மஞ்சரி

நன்னடத்தையே எல்லா நலத்துக்கும் ஆணிவேர்

***

ஜூன்  20 சனிக்  கிழமை

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்  – குறள் 505

அவரவர் செய்யும் செயலே புகழ்ச்சி, இகழ்ச்சி ஆகியவற்றைக் காட்டும் உரைகல்

***

ஜூன்  21 ஞாயிற்றுக்  கிழமை

ஸ்ரேயாம்சி பஹுவிக்னானி – ராமாயண மஞ்சரி

நல்ல காரியம் எல்லாம், தடைக்கற்களைச் சந்திக்கவேண்டிவரும்

***

ஜூன் 22  திங்கட் கிழமை

ஸாஹசே கலு ஸ்ரீர்  வசதி – மிருச்ச கடிக & சாருதத்த

தடைகளைத் தகர்க்கும் உறுதி கொண்டோரே வெற்றி அடைவர்

***

ஜூன்  23 செவ்வாய்க்  கிழமை

மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு – 595

மக்களின் உள்ளத்துக்கேற்ப ஒருவர் உயர்வர்; மனம் போல மாங்கல்யம்

***

ஜூன்  24 புதன்  கிழமை

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்கமுடையானுழை -594

சோர்வு இல்லாத ஊக்கமுடையவன் வீட்டுக்கு செல்வம் வழி யைகேட்டுக்கொண்டு வந்து சேரும்- 21

***

ஜூன்  25 வியாழக்  கிழமை

உத்தரேத் ஆத்மநாத்மானம் – பகவத் கீதை 11-33

உன்னையே நீ உயர்த்திக் கொள்ளவேண்டும்

***

ஜூன்  26 வெள்ளிக்  கிழமை

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் .

உயர்வடையும் சிந்தனையே உள்ளத்தில் கொப்புளிக்கவேண்டும் -596

***

ஜூன்  27 சனிக்  கிழமை

கைக்குருவியைக் கொண்டு காட்டுக்கருவியைப் பிடிக்கவேண்டும் ; சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கனும்.

***

ஜூன்  28 ஞாயிற்றுக்  கிழமை

அலை மோதும் போதே தலை முழுகு ; காற்றுள்ள போதே தூ ற்றிக்  கொள் ; பருவத்தே பயிர் செய்

***

ஜூன் 29  திங்கட் கிழமை

திரைகடலோடியும் திரவியம் தேடு – கொன்றைவேந்தன்

செல்வம் சேரவேன்டுமானால் வெளிநாடு செல்லவும் தயங்கக்கூடாது

***

ஜூன்  30 செவ்வாய்க்  கிழமை

சீரைத் தேடின்  ஏரைத் தேடு

வளமான வாழ்வுக்கு விவசாயத்தைச் செய்க.

***

BONUS QUOTATION

நாவக்ஞா ஹி  பரே கார்யா ய இச்சேச்ரேய  ஆத்மநஹ- வால்மீகி ராமாயணம் 7-33-22

ஒருவர் நலத்துக்காக பிறரை இகழக் கூடாது

tags-

ஜூன் 2020 , காலண்டர்,
நலமான , வளமான வாழ்வு ,பழமொழிகள்

—SUBHAM —–

3 மாம்பழம் , மாங்காய் , பழமொழிகள் கண்டுபிடியுங்கள் (Post No.8049)

மாம்பழம், மாங்காய்  – மூன்று

பழமொழிகள்  கண்டுபிடியுங்கள் (Post No.8049)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8049

Date uploaded in London – 26 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மாம்பழம் , மாங்காய் 3 பழமொழிகள் – இதில்  மா, பழம் போன்ற சொற்கள் பல பழமொழிகளில் வந்திருந்தாலும் இங்குள்ள கட்டத்தில் ஒரு முறையோ இரு முறையையோ மட்டும் வரக்கூடும் .

விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது

விடை

1.மாம்பழத்திலிருக்கும் வண்டே, மாமியாருக்கும் மரு மக ளுக்கும் சண்டை,

2.மாதா ஊட்டாத அன்னம் மாங்காய்  ஊட்டும்

3.மா மரம் பழுத்தால் கிளிக்கு ஆகும்; வேம்பு பழுத்தால் கா க்கைக்கு ஆகும்

Source book :Kazaka Pazamozi Akara Varisai, Kazaka Veliyidu

tags – மாம்பழம் , மாங்காய் , பழமொழிகள்

மீன் பற்றிய 3 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் (Post No.8011)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.8011

Date uploaded in London – 20 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மீன் பற்றிய 3 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள்.

விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது


விடைகள்

1.மீன் குஞ்சுக்கு நீ ச் சுப் பழ க்க வே ணுமா?

2.மீ னை மீன் விழு ங்கி  னாற் போல

3.சின் ன மீனை வச்சு த்தான் பெ ரிய மீ னை ப் பிடி க்க னும்

TAGS மீன், பழமொழி

இரண்டு எறும்பு பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் (Post No.7956)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7956

Date uploaded in London – 11 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது

விடைகள்

எறும்பூரக் கல்லும் தேயும்

எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை  பெய்யும்.

tags — எறும்பு ,முட்டை, கல், பழமொழி

‘உள்ளுர்ப் பெண்ணும் அயலூர் மண்ணும் ஆகாது’ (Post No. 7510)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No.7510

Date uploaded in London – 29 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பிப்ரவரி 2020 காலண்டர்  (விகாரி- தை/மாசி)

பண்டிகை நாட்கள் — 1 ரத சப்தமி,  2 பீஷ்ம அஷ்டமி ,  8 தைப் பூசம், வடலூர் ஜோதி தரிசனம்  , 21 மஹா சிவராத்திரி , 25  ராமகிருஷ்ண பரமஹம்சர்  ஜயந்தி  .

பௌர்ணமி– 8/ 9, அமாவாசை -22/23

ஏகாதசி விரதம்  – 5,19

முகூர்த்த நாட்கள்  – 5, 7, 12, 14, 20, 21, 26

மனிதனுடைய குணநலன்களை சித்தரிக்கும் 29 பழமொழிகள், இந்த பிப்ரவரி 2020 காலண்டரில் இடம்பெறுகின்றன.


உலகில் முதல் முதலில் அக்யூ பங்க்சர்
 (Acupuncture) சக்தியை அறிமுகப்படுத்திய பீஷ்மரின் நினைவு நாள் 
பீஷ்ம அஷ்டமி ஆகும்

பிப்ரவரி 1 சனிக் கிழமை 

இக்கரைக்கு அக்கரை  பச்சை

பிப்ரவரி 2 ஞாயிற்றுக் கிழமை

ஆரால் கேடு ? வாயால் கேடு

பிப்ரவரி 3 திங்கட் கிழமை

உள்ளுர்ப் பெண்ணும் அயலூர் மண்ணும் ஆகாது

பிப்ரவரி 4 செவ்வாய்க் கிழமை

ஆரம்ப சூரத்தனம்

பிப்ரவரி 5 புதன் கிழமை

ஆணை அடித்து வளர்க்க, பெண்ணைப் போற்றி வளர்க்க

பிப்ரவரி 6 வியாழக் கிழமை

ஆயிரம் நற்குணம் ஒரு லோப குணத்தால் கெடும்

பிப்ரவரி 7  வெள்ளிக் கிழமை

ஆண்  அண்டத்தை ஆளுகிறான், ஆணைப் பெண் ஆளுகிறாள்

பிப்ரவரி 8  சனிக் கிழமை 

ஆயிரம் வித்தைகள் கற்றாலும் உலகத்தில் ஆடம்பரங்கள் வேண்டும்

பிப்ரவரி 9 ஞாயிற்றுக் கிழமை

ஆயுசு பலமாக இருந்தால் ஆற்றில் போனாலும் பிழைப்பான்

பிப்ரவரி 10 திங்கட் கிழமை

ஆறு வரவு, நூறு செலவு

பிப்ரவரி 11 செவ்வாய்க் கிழமை

ஆற்று மணலிலே தினம் புரண்டாலும் ஒட்டுகிறதுதான் ஓட்டும்

பிப்ரவரி 12  புதன் கிழமை

இட்டுக்  கெட்டார் எங்கனுமே இல்லை

பிப்ரவரி 13 வியாழக் கிழமை

பழமை பாராட்ட வேண்டும்

பிப்ரவரி 14  வெள்ளிக் கிழமை

பருப்புச் சோற்றுக்குப் பதின் காதம் போவான்

பிப்ரவரி 15 சனிக் கிழமை 

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்

பிப்ரவரி 16 ஞாயிற்றுக் கிழமை

பழிக்கு அஞ்சு, பாவத்துக்குக் கெஞ்சு

பிப்ரவரி 17 திங்கட் கிழமை

புலி அடிக்கு முன்னே கிலி அடிக்கும்

பிப்ரவரி 18 செவ்வாய்க் கிழமை

பெருங்காயம் இருந்த பாண்டம் வாசனை போகாது

பிப்ரவரி 19 புதன் கிழமை

பை  எடுத்தவனெல்லாம் வைத்தியனா ?

பிப்ரவரி 20 வியாழக் கிழமை

மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் கொட்டம் அடங்க வேண்டும்

பிப்ரவரி 21  வெள்ளிக் கிழமை

பழம் நழுவில் பாலில் விழுந்தது, அதுவும் நழுவி வாயில் விழுந்தது

பிப்ரவரி 22 சனிக் கிழமை 

மண் காசுக்கு சாம்பல் கொழுக்கட்டை

பிப்ரவரி 23  ஞாயிற்றுக் கிழமை

பால் ஆறாய் ஓடினாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்

பிப்ரவரி 24 திங்கட் கிழமை

வேளை அறிந்து பேசு, நாளை அறிந்து பயணம் செய்

பிப்ரவரி 25 செவ்வாய்க் கிழமை

தேனை வழித்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா ?

பிப்ரவரி 26 புதன் கிழமை

வைரத்தை வைரம்கொண்டே அறுக்க வேண்டும் 

பிப்ரவரி 27 வியாழக் கிழமை

அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே

பிப்ரவரி 28  வெள்ளிக் கிழமை

மவுனம் உடையார்க்கு வாராது சண்டை

பிப்ரவரி 29 சனிக் கிழமை 

வாய் சர்க்கரை,   கை கருணைக் கிழங்கு

xxx

Bonus Proverbs

மனப் பேயேயொழிய மற்ற பேய் இல்லை

இரண்டு பெண்டாட்டிக்காரன்பாடு திண்டாட்டம்

வேண்டாப்  பெண்டாட்டியின் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்

Xxxx subham xxxx

ஆடு பற்றிய 30 பழமொழிகள்! (Post No.7161)

Goat Therapy

நவம்பர் 2019 நற்சிந்தனை காலண்டர்

WRITTEN  by  London Swaminathan

swami_48@yahoo.com

Date: 31 OCTOBER 2019

Time  in London – 16-42

Post No. 7161

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

ஆடுகள் பற்றிய 30 பழமொழிகள் இந்த மாத காலண்டரில் இடம் பெறுகின்றன.

பண்டிகை நாட்கள்:–

நவம்பர் 2- சூர சம்ஹாரம்/ கந்த சஷ்டி; 9- துளசி விவாகம்; 12- குருநானக் ஜயந்தி, அன்னாபிஷேகம் (வட நாட்டில் கார்த்திக் பௌர்ணமி; தென்னாட்டில் டிசம்பர் 10 கார்த்திகை பௌர்ணமி; 16 — கோபி அஷ்டமி; 18- சகல சிவாலயங்களிலும் சங்காபிஷேகம்; 23- சத்ய சாய் பாபா பிறந்த தினம்; 24- சீக்கிய குரு தேஜ் பஹாதூர் உயிர்நீத்த தினம்.

அமாவாசை – 26, பௌர்ணமி — 12

ஏகாதஸி விரத தினங்கள் — 8 & 22/23

சுப முகூர்த்த நாட்கள்– –  November 1,3, 10, 15, 22, 24.

நவம்பர் 1 வெ:ள்ளிக்கிழமை

ஆடு கிடந்த இடத்தில் நெல்லை விதை.

நவம்பர் 2 சனிக் கிழமை

ஆடு இருக்க இடையனை விழுங்குமா?

கிழமை  3 ஞாயிற்றுக் கிழமை

ஆடு திருடிய கள்ளனைப் போல விழிக்கிறான்.

நவம்பர் 4 திங்கட் கிழமை

ஆடு எட்டுதான் , ஆனாலும் கோட்டை குட்டிச் சுவர் ஆகிவிட்டது

நவம்பர் 5 செவ்வாய்க் கிழமை

ஆடு கடிக்குமென்று இடையன் உறியேறிப் பதுங்குவானாம்

நவம்பர் 6 புதன் கிழமை

ஆடு கெட்டவன் ஆடித் திரிவான் , கோழி கெட்டவன் கூவித் திரிவான்.

நவம்பர் 7 வியாழக் கிழமை

ஆடு கொழுக்கிறது எல்லாம் இடையனுக்கு லாபம்

நவம்பர் 8 வெ:ள்ளிக்கிழமை

ஆடு கொடாத இடையன்  ஆவைத் கொடுப்பானா?

நவம்பர் 9 சனிக் கிழமை

ஆடு தின்பாளாம் 2 ஆடு தின்பாளாம், ஆட்டைக் கண்டால் சீ சீ என்பாளாம்

நவம்பர் 10 ஞாயிற்றுக் கிழமை

ஆடு தீண்டாப் பாளையை மாடு தீண்டுமா?

நவம்பர் 11 திங்கட் கிழமை

ஆடு நனைகிறது என்று ஓநாய் (கோநாய்) கூவி கூவி அழுகிறதாம்

நவம்பர் 12 செவ்வாய்க் கிழமை

ஆடு நனைந்தாலும் குட்டி நனையாது

நவம்பர் 13 புதன் கிழமை

ஆடு பயிர் காட்டும், ஆவிரை நெல் காட்டும்.

நவம்பர் 14  வியாழக் கிழமை

ஆடு பகையும் குட்டி உறவுமா?

ஆடு பிடிக்க கரடி அக்ப்பட்டது போல்

நவம்பர் 15 வெ:ள்ளிக்கிழமை

ஆடு பெருத்தால் கோனானும் பெருப்பான்

நவம்பர் 16 சனிக் கிழமை

ஆடு மிதியாக் கொல்லையும் ஆளானில்லாப் பெண்ணும் வீண்

கிழமை 17 ஞாயிற்றுக் கிழமை

ஆட்டில் ஆயிரம், மாட்டில் ஆயிரம், வீட்டில் கரண்டிப் பால் இல்லை

நவம்பர் 18 திங்கட் கிழமை

ஆடுக்கடா சண்டையில் நரி செத்தது போல்

நவம்பர் 19 செவ்வாய்க் கிழமை

ஆட்டுக்கு ஆறு மாதம் அம்மாவுக்கு எட்டு மாதம்

நவம்பர் 20 புதன் கிழமை

ஆட்டுக் குட்டிக்கு ஆனையைக் காவு  கொடுக்கிறதா?

நவம்பர் 21 வியாழக் கிழமை

ஆட்டுக்குத் தோற்ற கிழப் புலியா?

நவம்பர் 22 வெ:ள்ளிக்கிழமை

ஆட்டுக் குட்டி மேல் ஆயிரம் பொன்

நவம்பர் 23 சனிக் கிழமை

ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, இந்த மதி கெட்ட மாட்டுக்கு  மூனு கொம்பு.

கிழமை 24 ஞாயிற்றுக் கிழமை

ஆட்டுக்கு வால் அளவறுத்து வைத்திருக்கிறது

நவம்பர் 25 திங்கட் கிழமை

ஆட்டு மந்தை போல

நவம்பர் 26 செவ்வாய்க் கிழமை

ஆட்டுக் குட்டியைத் தோளிலே வைத்து நாடெங்கும் தேடினது போல

நவம்பர் 27 புதன் கிழமை

ஆட்டுக் கிடையிலே கோனாய் (தோண்டான்) புகுந்தது போல

நவம்பர் 28 வியாழக் கிழமை

ஆட்டுக் கடா முறைக்கிறது போல முறைக்கிறான்

நவம்பர் 29 வெ:ள்ளிக்கிழமை

ஆட்டு வெண்ணை ஆட்டு மூளைக்கும் காணாது

நவம்பர் 30 சனிக் கிழமை

ஆட்டுரம் ஓராண்டு நிற்கும், மாட்டுரம் ஆறாண்டு நிற்க்கும்

bonus proverb 

ஆடு பிடிக்க கரடி அகப்பட்டது போல்

xxxxxxxxxxxxx

 

November 23:- Baba;       

November 12: Guru Nanak
November 9 :-Tulsi Vivaham

November 2 Kantha Sashti:–
bonus proverb 


ஆடு பிடிக்க கரடி அகப்பட்டது போல்

–subham–

நாய் பற்றிய பத்து தமிழ்ப் பழமொழிகள் (Post No.5708)

 

WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 27 November 2018


GMT Time uploaded in London –17-55

Post No. 5708


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

இந்தக் கட்டத்தில் நாய் பற்றிய பத்து தமிழ்ப் பழ மொழிகள்  கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் தமிழ் அறிவைச் சோதித்துப் பாருங்களேன். ஒரு மணி நேரத்துக்குள் செய்ய முடியவில்லையானால் விடையைப் பார்த்து விடுங்கள்

answers

நாய்த் தோல் செருப்பு ஆகுமா?

நாய் நன்றியுள்ள பிராணி

நாயை அடிப்பானேன் ஃஃஃஃ சுமப்பானேன்

நாய் குரைத்து விடியுமா? கோழி கூவி விடியுமா?

நாய்க்குத் தெரியுமா தேங்காய் ருசி?

நாய் அடிக்க குறுந்தடியா?

நாய் விற்ற காசு குலைக்குமா?

நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

நாயைக் கண்டால் கல்லைக் காணும், கல்லைக் கண்டால் நாயைக் காணும்

நாய் நாலு காதம் ஓடினாலும் குதிரை வேகம் ஆகுமா?

நாய் பட்ட பாடு

Tags–நாய், பழமொழிகள்

—subham–

வீடு பற்றிய 30 பழமொழிகள் (Post No.4861)

Picture posted by Lalgudi Veda

COMPILED by London Swaminathan 

 

Date: 29 MARCH 2018

 

Time uploaded in London –  6-58 am (British Summer Time)

 

Post No. 4861

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

ஏப்ரல் 2018 காலண்டர்

(2018 பங்குனி-சித்திரை மாத நற்சிந்தனை காலண்டர்;

ஹேவிளம்பி- விளம்பி காலண்டர்)

 

முக்கிய விழாக்கள் ஏப்ரல் 14-தமிழ்ப் புத்தாண்டு; 18-அக்ஷய த்ருத்யை; 20- சங்கர ஜயந்தி; 29-சித்ரா பௌர்ணமி; புத்த பௌர்ணமி; ஏப்ரல் 1- ஈஸ்டர், 2- ஈஸ்டர் திங்கள் விடுமுறை

 

 

பௌர்ணமி ஏப்ரல் 29

அமாவாசை ஏப்ரல் 15

ஏகாதஸி விரதம்—ஏப்ரல் 12, 26

சுப முகூர்த்த தினங்கள்:- 5, 20, 22, 25, 27

 

ஏப்ரல் 1 ஞாயிற்றுக் கிழமை

வீடு அசையாமல் தின்னும், யானை அசைந்து தின்னும்

ஏப்ரல் 2 திங்கட்கிழமை

வீடு கட்டுகிறது அரிது, வீடு அழிக்கிறது எளிது

ஏப்ரல் 3 செவ்வாய்க்கிழமை

 

வீடு கட்டும் முன்னம், கிணறு வெட்ட வேண்டும்

ஏப்ரல் 4 புதன்கிழமை

வீடு நிறைந்த விளக்குமாறு

ஏப்ரல் 5 வியாழக்கிழமை

வீடு பற்றிக் கொண்டு  எரியும்போது, சுருட்டுக்கு நெருப்புக் கேட்டானாம்.

 

ஏப்ரல் 6 வெள்ளிக்கிழமை

வீடு பற்றி எரியும்போதா கிணறு வெட்டுவது?

ஏப்ரல் 7 சனிக்கிழமை

வீடு போ போ என்கிறது காடு வா வா என்கிறது

 

ஏப்ரல் 8 ஞாயிற்றுக் கிழமை

வீடு வெறும் வீடாய் இருந்தாலும் மணியம் ஏழு ஊர்

ஏப்ரல் 9 திங்கட்கிழமை

வீட்டிலிருக்கிற பூனையை அடித்தால், மேட்டிலிருக்கிற எலியைப் பிடிக்கும்

ஏப்ரல் 10 செவ்வாய்க்கிழமை

வீட்டுக்கு ஏற்றின விளக்கு விருந்துக்கும் ஆகும்

 

ஏப்ரல் 11 புதன்கிழமை

வீட்டைக் கட்டிப் பார், கலியாணம் செய்து பார்

 

ஏப்ரல் 12 வியாழக்கிழமை

வீட்டைக் காத்த நாயும் காட்டைக் காத்த நரியும் வீண்போகா

ஏப்ரல் 13 வெள்ளிக்கிழமை

வீட்டுக் கருமம் நாட்டுக்குரையேல்

ஏப்ரல் 14 சனிக்கிழமை

வீட்டுக் காரியம் பார்க்காதவன் நாட்டுக் காரியம்  பார்ப்பானா?

 

ஏப்ரல் 15 ஞாயிற்றுக் கிழமை

வீட்டுக்கு அடங்காத பிள்ளையை ஊரார் அடக்குவார்கள்

வீட்டில் அடங்கதவன் ஊரில் அடங்குவான்

ஏப்ரல் 16 திங்கட்கிழமை

வீட்டுக்கு அலங்காரம் பெரிய குடி.

வீட்டுக்கு அலங்காரம் மனையாள்.

வீட்டுக்கு அலங்காரம் விளக்கு.

வீட்டுக்கு அலங்காரம் வேளாண்மை.

ஏப்ரல் 17 செவ்வாய்க்கிழமை

வீட்டுக்கு இருந்தால் வெண்கலப் பெண்டாட்டி, வீட்டுக்கு இல்லாமற் போனால் தூங்கற் பெண்டாட்டி

ஏப்ரல் 18 புதன்கிழமை

வீட்டுக்கு ஒரு மெத்தை, கேட்டுக்கொள்ளடி மாரியாத்தை

ஏப்ரல் 19 வியாழக்கிழமை

வீட்டுக்கு ஒரு வாசற்படி, பூட்டுக்கு ஒரு திறவு கோல்

 

ஏப்ரல் 20 வெள்ளிக்கிழமை

வீட்டுக்கு சோறில்லை சிவனறிவான், நாட்டுக்குச் செல்லப் பிள்ளை நானல்லவா?

ஏப்ரல் 21 சனிக்கிழமை

வீட்டுக்குப் புளி, காட்டுக்குப் புலி

 

ஏப்ரல் 22 ஞாயிற்றுக் கிழமை

வீட்டுக்கு வாய்த்தது எருமை, மோட்டுக்கு வாய்த்தது போர்

 

ஏப்ரல் 23 திங்கட்கிழமை

வீட்டைக் கட்டிக் குரங்கை குடிவைத்தது போல

 

ஏப்ரல் 24 செவ்வாய்க்கிழமை

வீட்டுக்கு வீரன் காட்டுக்குக் கள்ளன்

 

ஏப்ரல் 25 புதன்கிழமை

வீட்டுப் பாம்பு காட்டுக்குப் போனால் அதுவும் காட்டுப் பாம்பாகும்.

வீட்டு மூதேவியும் காட்டு மூதேவியும் சேர்ந்து உலாவுகின்றன

 

ஏப்ரல் 26 வியாழக்கிழமை

வீட்டுக்குள் கஞ்சித் தண்ணீரைக் குடித்துவிட்டு, மீசையில் வெள்ளையைத் தடவிக்கொண்டு புறப்படுகிறது

ஏப்ரல் 27 வெள்ளிக்கிழமை

வீட்டுப் பெண்சாதி வேம்பு, நாட்டுப்     பெண்சாதி                 கரும்பு

 

ஏப்ரல் 28  சனிக்கிழமை

வீட்டுக்கு வீடு  வாசற்படி.

வீட்டுக்கு வீடு எதிர் வீடு ஆகாது.

வீட்டுக்கு வீடு மண் வீடுதான்.

 

ஏப்ரல் 29 ஞாயிற்றுக் கிழமை

வீட்டுச் செல்வம் மாடு, தோட்டச் செல்வம் முருங்கை

 

ஏப்ரல் 30 திங்கட்கிழமை

வீட்டுக்குள்ளே வேட்டை நாயை உசுப்புவானேன்

 

BONUS PROVERBS ON HOUSE/HOME

வீட்டிளக்காரம் வண்ணான் அறிவான்

வீட்டைக் கொளுத்தி வேடிக்கை பார்க்கிறதா?

வீட்டில் அழகு வேம்படியாகும்

 

–SUBHAM–