
கடலை விரட்டிய தமிழ் மன்னன் ; தண்ணீர் மீது நடந்த அதிசயங்கள் (Post No.5035)
WRITTEN by London Swaminathan
Date: 22 May 2018
Time uploaded in London – 7-30 am (British Summer Time)
Post No. 5035
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
பழங்காலத்தில் கீழை நாடுகளில் ஒரு நம்பிக்கை இருந்தது. ஒருவர் சத்தியத்தின் பெயரில் சூளுரைத்து கடலை விரட்டலாம். தண்ணீர் மீது நடக்கலாம்; நதிகளை ஓடாமல் செய்யலாம் என்று நம்பினர். இந்தக் கதைகள் சிலப்பதிகாரம், திருவிளையாடல் புராணம், புத்த, ஜைனமத நூல்களில் உள்ளன. மோஸஸ் கடலைக் கடந்த கதை, ஜீஸஸ் சிஷ்யன் கடலைக் கடந்த கதை எல்லாவற்றுக்கும் மூலம் ரிக்வேதம் என்று முதல் கட்டுரையில் நேற்று காட்டினேன்.
தமிழர்களைப் போலவே சீனாவிலும் மன்னன் செய்த செயலைப் பார்க்கையில் இரு ஒரு பழங்காலச் சடங்கோ என்று எண்ணத் தோன்றுகிறது.
திருவிளையால் புராணத்தில் ஒரு கதை இருக்கிறது; அதன் தலைப்பு “கடல் சுவற வேல்விட்ட படலம்”. 96 அஸ்வமேத யாகம் செய்த உக்கிரகுமார பாண்டியன் மீது இந்திரன் பொறாமை அடைந்தான். ஏனெனில் எவரேனும் 100 அஸ்வமேத யாகம் செய்தால் இந்திரன் பதவி பறிபோய்விடும் இதனால் இந்திரன் மதுரை நகர் மீது கடல் தண்ணீர் பாயும்படி ஏவிவிட்டனன். இது தமிழ்ச் சங்கம் இருந்த தென் மதுரையாக இருக்கலாம். பாண்டிய மன்னன் சிவ பக்தன் என்பதால் சிவபெருமானே அவன் கனவில் தோன்றி கடலைக் கட்டுக்குள் வைக்க அனுப்பினான் என்பது கதை. உடனே அவன் இரவோடு இரவாக கடல் மீது வேல் ஒன்றை எறிய அது பின்வாங்கியது.
உண்மை பேசுவோர், நியாயமான ஆட்சி நடத்துவோருக்கு இப்படிப் பட்ட அபூர்வ சக்திகள் இருந்ததாக மக்கள் நம்பினர். நல்லாட்சி நடக்கும் நாட்டில் பயிர்கள் தாமாகவே செழித்து வளரும் என்று வள்ளுவனும் செப்புவான்.

சீனாவில் நடந்த அதிசயம்
மிலிந்த பன்னா என்னும் நூலில் ஒரு கதை வருகிறது:–
“மன்னாதி மன்னா! சீனாவில் ஒரு மன்னன் நாலு மாதங்களுக்கு ஒரு முறை, கடலுக்குக் காணிக்கை செலுத்துவதற்காக சபதம் செய்கிறான். அவன் தேரில் ஏறி கடலுக்குள் ஒரு லீக் ( மூன்றரை மைல்) தொலைவு செல்வான் அவன் உள்ளே நுழைந்தவுடன் கடல் பின் வாங்கி விடும். அவன் தேர் வெளியே வந்தவுடன் கடல் அந்த இடத்தில் பாய்ந்து முழுகடித்துவிடும்”.
இது புத்தமத நூலில் உள்ள கதை. ஆக பரசுராமன் கோடரியை எறிந்து கேரள பூமியை மீட்ட கதை, மஹாவம்சம் எனும் இலங்கை நூலில் உள்ள கதை ஆகியன எல்லாம் ஸத்தியத்தின் மூலம் சபதம் செய்து தண்ணீரைக் கட்டுப்படுத்த முடியும் என்று காட்டுகின்றன; நிலம் தரு திருவில் பாண்டியன், கடல் சுவற வேல் விட்ட உக்கிரப் பெருவழுதி அல்லது உக்கிர குமாரன் அகியோர் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்திலும் உண்டு.
From my earlier post:–

மஹாவம்சக் கடல் கதை
சுனாமி/ கடல்கோள்
அத்தியாயம் 22-ல் ஒரு காதல் கதை வருகிறது. இது காகவனதீசன் மன்னன் காலத்தில் நடந்தது.
கல்யாணி என்னும் நகரில் தீசன் என்ற மன்னனின் மனைவிக்கு (ராணிக்கு) ஜய உதிகன் என்பவன் ஒரு காதல் கடிதத்தை புத்த பிக்கு போல வேடம் அணிந்த ஒருவர் மூலம் அனுப்புகிறான். அவன் ராஜா ராணி வரும் போது அதை ராணியின் முன்னால் போடுகிறான். சத்தம் கேட்டுத் திரும்பிய தீசன், ராணிக்கு வந்த காதல் கடிதத்தைப் படித்துவிட்டுக் கோபம் அடைகிறான். கோபத்தில் உண்மையான தேரரையும், தேரர் வேடத்தில் இருந்த போலியையும் வெட்டி வீழ்த்துகிறான். இதனால் கடல் (அரசன்) கோபம் கொண்டு பொங்கி நாட்டுக்குள் புகுந்தது. இது கி.மு 200க்கு முன் நடந்தது.
இது போன்ற சுனாமி தாக்குதல் கதைகள் பல தமிழ் இலக்கியத்திலும் உண்டு. கடல்மேல் வேல் எறிந்து கடலின் சீற்றத்தை அடக்கிய பாண்டியன் கதைகளை திருவிளையாடல் புராணத்தில் (கடல் சுவற வேல் எறிந்த உக்ர பாண்டியன்) காணலாம். ராமனும் கடல் பொங்கியவுடன் வருண பகவானுக்கு எதிராக கடலில் அம்புவிட்டதை ராமாயணத்தில் படிக்கிறோம்.
உடனே கடலின் சீற்றத்தை அடக்குவதற்காக, தீசன் தன் மகளை ஒரு தங்கக் கலசத்தில் வைத்து அனுப்புகிறான். அது கரை ஒதுங்கியபோது காகவனதீசன் அவளைக் கண்டு கல்யாணம் செய்துகொள்கிறான்.
இதில் நமக்கு வேண்டிய விஷயம் கடல் பொங்கிய (சுனாமி) விஷயமாகும். இதன் காலத்தை ஆராய்தல், முதல் இரு தமிழ்ச் சங்கங்களை விழுங்கிய கடற்கோள்களின் (சுனாமி) காலத்தை அறிய உதவலாம். சிலப்பதிகாரத்தில் ஒரு கடற்கோள் பற்றி நாம் படிக்கிறோம்.
வடிவேல் எறிந்த வான் பகை பொறாது
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி!
-காடுகாண் காதை, சிலப்பதிகாரம்
இதை ஒப்பிட்டால் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் மற்றும் முதல் இரு தமிழ்ச் சங்கங்களில் ஒன்றின் காலம் ஆகியன உறுதிப்படலாம். இலங்கை கடற்கோள் நடந்தது கி.மு.200–க்கு முன்.
xxx

சம்பந்தர் செய்த அற்புதம்
தேவாரம், திவ்யப் பிரபந்தம் போன்ற பாடலகளைப் பாடிய நாயன்மார்கள், ஆழ்வார்கள் மற்றுமுள்ள ஏனைய சிவனடியார்கள் வாழ்விலும் நதி நீர் , கடல் நீர் முதலியவற்றை அடக்கி ஆண்ட செய்திகள் உள. திருஞான சம்பந்தர் காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடிய போது படகோட்டிகளும் பயந்து தயங்கி நின்றதாகவும் அவர் அடியார்களுடன் படகில் ஏறி தேவாரம் பாட, படகு அமைதியாக தவழ்ந்து மறு கரை சேர்ந்ததாகவும் ஸ்தல புராணங்கள் நுவலும். கொள்ளம்புதூரில் வெட்டாறு வெள்ளப் பெருக்கெடுத்தபோது சம்பந்தர் நதி கடந்த அதிசயம் சைவ வரலாற்றில் உள்ளது
கொள்ளம்புதூரில் ஆண்டுதோறும் ஓட (படகு) விழா நடப்பதோடு அந்த ஆற்றுக்கே ஓடம்போக்கி ஆறு என்றும் பெயர் வைத்துவிட்டனர்.
to be continued…………….
–subham–